60 வயதில் காதல் திருமணம் செய்த வேலு பிரபாகரன்

60 வயதில் காதல் திருமணம் செய்த வேலு பிரபாகரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Velu Prabakaran and sherlieசர்ச்சையான படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர் இயக்குதர் வேலு பிரபாகரன்.

இவர் இயக்கியுள்ள ஒரு இயக்குனரின் காதல் டைரி என்ற படம் நேற்று வெளியானது.

இதன் சிறப்பு காட்சியை இன்று திரையிட்டனர்.

அப்போது பத்திரிகையாளர்களுக்கு முன்பு திடீரென திருமணம் செய்து கொண்டார்.

அவர் இயக்கிய படத்தின் முன்னாள் நாயகியை மணந்தார்.

அந்த பெண்ணுக்கு வயது 35. இவருக்கு வயது 60 என்பது குறிப்பிடத்தக்கது.

‘பேவாட்ச் படத்தை குட்டீஸ் பார்க்காதீங்க…’ பிரியங்கா சோப்ரா வார்னிங்

‘பேவாட்ச் படத்தை குட்டீஸ் பார்க்காதீங்க…’ பிரியங்கா சோப்ரா வார்னிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Priyanka chopraஇந்திய நடிகை பிரியங்கா சோப்ரா நடித்துள்ள முதல் ஹாலிவுட் படம் ‘பேவாட்ச்’.

இது தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு நேற்று (ஜீன் 2) இந்தியா முழுவதும் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை தமிழில் ஹியு பாக்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சேத் கோர்டன் இயக்கியிருக்கும் இதில் ஹாலிவுட்டின் முன்னணி நடிகர் வெய்ன் ஜான்சன், ஜாக் எப்ரான், அலெக்ஸான்டர் டட்டாரியோ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தில் ஆக்சனை தவிர்து, கிளாமர் காட்சிகள் நிறைந்து இருக்கிறதாம்.

எனவே, குழந்தைகள் யாரும் இப்படத்தை பாரக்க வேண்டாம் என மும்பை மீடியாக்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா.

பிரியங்கா சோப்ராவின் லேட்டஸ்ட் தகவல்கள்…

அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த பிரியங்கா சோப்ரா அங்குள்ள பீச்சில் பிகினி உடையணிந்து குளியல் போட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

மேலும் பிரதமர் மோடியுடன் குட்டி பாவாடை போட்டு அமர்ந்திருந்து, இது எங்கள் குடும்ப வழக்கம் என அவர் தெரிவித்து இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.

‘அந்த’ படம் ரிலீஸாக கமல்-சூர்யா மனசு வைக்கனும் – சீனுராமசாமி

‘அந்த’ படம் ரிலீஸாக கமல்-சூர்யா மனசு வைக்கனும் – சீனுராமசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director seenu ramasamyகூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை உள்ளிட்ட தரமான படங்களை இயக்கியவர் சீனுராமசாமி.

இதனிடையில் விஜய்சேதுபதி, விஷ்னு, நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரை வைத்து இடம் பொருள் ஏவல் என்ற படத்தை இயக்கியிருந்தார்.

இயக்குனர் லிங்குசாமி தயாரித்த இப்படம் தயாராகி ஒரு வருடம் ஆகிவிட்ட போதிலும் இன்னும் திரைக்கு வரவில்லை.

எனவே, இந்தப்படம் எப்போது திரைக்கு வரும் என ரசிகர் ஒருவர் சீனுராமசாமியிடம் கேட்டுள்ளார்.

அதற்கு ட்விட்டரில் இப்படி பதில் அளித்துள்ளார் சீனுராமசாமி. (கீழே பார்க்கவும்)

Seenu Ramasamy‏Verified account @seenuramasamy
Seenu Ramasamy Retweeted s karthik prasanna

இடம் பொருள் ஏவல் படம் வெளியே வர வேண்டுமென்றால் ‘உத்தமவில்லன்’ திரு,கமல் அய்யாவும் அஞ்சான் திரு,சூர்யாவும் மனது வைத்தால் ஒருவேளை வெளிவரலாம்.

உத்தமவில்லன் மற்றும் அஞ்சான் ஆகிய படங்களை லிங்குசாமி தயாரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு-அனுஷ்கா போல் ரிஸ்க் எடுக்காத கீர்த்தி சுரேஷ்

சிம்பு-அனுஷ்கா போல் ரிஸ்க் எடுக்காத கீர்த்தி சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu anushkaஇஞ்சி இடுப்பழகி படத்திற்காக தனது உடல் எடையாக 90 கிலோவுக்கு மேல் ஏற்றினார் நடிகை அனுஷ்கா.

அதன்பின்னர் அவர் குறைக்க பாடுபட்டது நாம் அறிந்த ஒன்றுதான்.

அதுபோல் நடிகர் சிம்புவும் தன் உடல் எடையை AAA படத்திற்காக, 95 கிலோ வரை ஏற்றினார்.

மதுரை மைக்கேல் என்ற ஒரு கேரக்டருக்காக, அவர் மாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரி கேரக்டரில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

இதற்காக அவரது உடல் எடையை கொஞ்சம் கூடுதலாக ஏற்ற சொன்னார்களாம்.

ஆனால் ரிஸ்க் எடுக்க விரும்பாத கீர்த்தி, கிராபிக்ஸில் அட்ஜஸ்ட் செய்ய சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது.

Keerthy suresh dont want to take risk like Simbu and Anushka

ரூ. 400 கோடியில் உருவான ‘ஆளவந்தான்’ மீண்டும் வருகிறான்

ரூ. 400 கோடியில் உருவான ‘ஆளவந்தான்’ மீண்டும் வருகிறான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamals Aalavandhan digital version will be released soonசுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல் இரு வேடங்களில் மிரட்டிய திரைப்படம் ஆளவந்தான்.

இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்து மிகப்பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்தார்.

மனீஷா கொய்ராலா மற்றும் ரவீணா தாண்டன் நாயகிகளாக நடித்த இப்படம் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியானது.

இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், இதில் கமலின் அர்ப்பணிப்பும் தொழில்நுட்பமும் அதிகளவில் பேசப்பட்டது.

தற்போது இப்படம் டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் இன்று தொடங்கவுள்ளதாக போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.

மேலும், அந்த போஸ்டர்களில் இன்றைய மதிப்பில் அன்றைய தினத்தில் ரூ. 400 கோடியில் உருவாக்கப்பட்ட திரைப்படம் என குறிப்பிட்டுள்ளனர்.

Kamals Aalavandhan digital version will be released soon

aalavandhan stills

‘15 மொழி; 15000 தியேட்டர்…’ அசர வைக்கும் 2.0 ரிலீஸ்

‘15 மொழி; 15000 தியேட்டர்…’ அசர வைக்கும் 2.0 ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini shankarசில வருடங்களுக்கு முன்பு வரை இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயர் ஷங்கரிடம் இருந்தது.

ஆனால் அவரை மிஞ்சும் வகையில் பாகுபலி, பாகுபலி 2 என பிரம்மாண்ட படங்களை எடுத்து, வசூலிலும் மிரட்டிவிட்டார் இயக்குநர் ராஜமௌலி.

எனவே தற்போது ரஜினியை வைத்து இயக்கிவரும், 2.0 படத்தில் மிகப்பிரம்மாண்டத்தை காட்ட முடிவு செய்து, அதற்கான பணியில் முழு மூச்சியில் இறங்கிவிட்டாராம் ஷங்கர்.

எனவே படத்தின் ரிலீஸையும் இந்தியாவே வியக்கும் வகையில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறதாம் இதன் தயாரிப்பு நிறுவனம் லைக்கா.

அடுத்த 2018 வருடம் ஜனவரி 26ஆம் தேதி இப்படத்தை உலகம் முழுவதும் 15 மொழிகளில் 80க்கும் அதிகமான நாடுகளில் வெளியிட உள்ளனர்.

அன்றைய தினமே சீனாவிலும் வெளியிட திட்டமிட்டு இருப்பதால், உலகம் முழுவதும் தியேட்டர்களின் எண்ணிக்கை மட்டும் 15,000த்தை தாண்டும் என சொல்லப்படுகிறது.

Lyca production plans to release 2pointO movie in 15 languages

More Articles
Follows