தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபு நடித்த நாளை மனிதன் என்ற திகில் படத்தை இயக்கி தன் திரையுலக பயணத்தை ஆரம்பித்தவர் வேலு பிரபாகரன்
இதனைத் தொடர்ந்து, கடவுள், புரட்சிக்காரன், சிவன் உள்ளிட்ட பகுத்தறிவு படங்களையும் இயக்கியிருந்தார்.
இதில் பெரியார் ரேஞ்சுக்கு பல கருத்துக்களையும் பேசியிருந்தார். ஆனால் இதன்பின்னர் அவர் இயக்கிய படம்தான் இவரை பற்றிய கருத்துக்களை புரட்டிப்போட்டது.
கடந்த 2009ஆம் ஆண்டில் இவர் இயக்கிய, வேலு பிரபாகரனின் காதல் கதை என்ற படம் மிகவும் பரபரப்பை உண்டாக்கியது.
இதில் ஆண்கள் போல, பெண்கள் மேலாடை இல்லாமல் இருக்கலாமே என்றார். மேலும் பொத்தி பொத்தி வைப்பதினால்தான் ஆர்வம் அதிகமாகிறது என்றும் பேசி பரபரப்பை கிளப்பியிருந்தார்.
இந்நிலையில் தற்போது 8 வருடங்களுக்கு பிறகு இவர் இயக்கியுள்ள ஒரு இயக்குனரின் காதல் டைரி என்ற படம் நேற்று வெளியானது.
இதற்கான சிறப்பு காட்சி இன்று சென்னையில் உள்ள லீ மேஜிக் லேண்டர்ன் திரையரங்கில் திரையிடப்பட்டது.
அப்போது எவரும் எதிர்பாராத வகையில் பத்திரிக்கையாளர்களின் முன்னிலையில் வேலு பிரபாகரனின் காதல் கதை படத்தில் நடித்த நடிகை ஷெர்லியை மணந்து கொள்ளப் போவதாக அறிவித்து, அங்கேயே மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டார்.
இதுகுறித்து ஷெர்லியிடம் கேட்டபோது… “நடிப்பது பிடிக்கவில்லை. எனவே படங்களில் தொடரவில்லை. வேலு பிரபாகரனின் நேர்மை பிடித்திருந்தது. எனவே திருமணத்திற்கு ஒப்புக் கொண்டேன்” என தெரிவித்தார்.
“உங்கள் மனசாட்சிப்படி சொல்லுங்கள். இது சரியான திருமணமா?” என்று பத்திரிகையாளர் ஒருவர் வேலு பிரபாகரனிடம் கேட்க, அதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.
நடிகை ஷெர்லிக்கு 35 வயதுதான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Do u know Why ‘Kadhal Kadhai’ fame Shirley married 60 aged director Velu Prabhakaran?
ஒரு இயக்குனரின் காதல் டைரி படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி கீழே…