தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சமுத்திரக்கனி எழுதி, இயக்கி, தயாரித்து நடித்துள்ள படம் அப்பா.
இவருடன் தம்பி ராமையா, நமோ நாராயணன் மற்றும் பள்ளிக் குழந்தைகள் பலரும் நடித்துள்ளனர்.
இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
வருகிற ஜீலை 1ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.
இப்படம் குறித்து சமுத்திரக்கனி கூறியுள்ளதாவது…
“இதில் நிறைய அப்பாக்களை பற்றி கூறியிருக்கிறேன். தன் மகனின் ஆசையை தானாகவே தெரிந்து கொண்டு நிறைவேற்றும் ஒரு அப்பா.
குழந்தை பிறந்தது முதல் படிப்பு, திருமணம் வரை திட்டமிடும் ஒரு அப்பா.
மகனே உனக்கு என்ன தோனுதோ அதை செய்யிடா என்று சொல்லும் ஒரு அப்பா என அப்பாக்களை காட்டியுள்ளேன்.
+2 தேர்வில் 1040 மார்க் எடுத்தும் தைரியலட்சுமி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். அந்த செய்தியை படித்த முதல் 3 நாட்கள் என்னால் மீளமுடியவில்லை.
எனவே அன்றுமுதல், நான் பத்தாம்வகுப்பு, +2 தேர்வு முடிவுகள் வந்தால் சிலநாட்களுக்கு பேப்பர் படிப்பதில்லை.
அதன்பின்னர் என் உதவியாளர்களை களப்பணியாற்றி இதுபோன்ற எல்லாம் தகவல்களையும் சேகரிக்க சொன்னேன்.
நானும் குழந்தைகள் பற்றிய செய்திகளை சேகரித்தேன். இந்தியாவில் தற்கொலையில் தமிழ்நாடுதான் முதலிடம் என அப்போது தெரிய வந்தது.
எனவே 3 வருடங்களாக இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கினேன். இப்படத்திற்கு பாடல்கள் தேவைப்படவில்லை.
குழந்தைகளிடத்தில் குறையில்லை. அவர்களின் பெற்றோர்கள் மற்றும் கல்வி முறையில் தான் பிரச்சினை உள்ளது. அதில் மாற்றம் செய்ய வேண்டும்.
இப்படத்தை திரைப்பட விழாக்களுக்கும் அனுப்ப இருக்கிறேன்.”
இவ்வாறு தெரிவித்துள்ளார் சமுத்திரக்கனி.