என் ‘அப்பா’…. பேச முடியாமல் தவிக்கும் அபிநயா (வீடியோ)

என் ‘அப்பா’…. பேச முடியாமல் தவிக்கும் அபிநயா (வீடியோ)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Abhinaya Speaks About her Fatherசமுத்திரக்கனி, தம்பி ராமையா நடிப்பில் உருவாகியுள்ள அப்பா என்ற படம் விரைவில் வெளியாகவுள்ளது.

எனவே தற்போது இப்படத்தின் புரோமோசன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் திரையுலகின் பிரபலங்கள் பலரும் தங்கள் அப்பா பற்றி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அண்மையில் மோகன்லால், சூர்யா, ஏஆர் முருகதாஸ், கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்டோர் தங்கள் அப்பா பற்றி கருத்து தெரிவித்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில் நாடோடிகள் அபிநயா தனது அப்பாவை பற்றி பேசியுள்ளார்.

அவரால் வாய் திறந்த பேச முடியாது என்பதால் அவர்களின் உணர்வுகளை தனது மொழியில் தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோ காட்சியை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் நிச்சயம் நீங்கள் கலங்கி போவீர்கள் என்பது மட்டும் உண்மை.

அந்த வீடியோ இதோ உங்களுக்காக…

எம்ஜிஆருக்கு அடுத்து ரஜினிதான்.. கபாலி இன்னொரு தீபாவளி..!

எம்ஜிஆருக்கு அடுத்து ரஜினிதான்.. கபாலி இன்னொரு தீபாவளி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Malaysia Rajini Fans Talks about Kabali Releaseகோலிவுட் முதல் பாலிவுட் வரை ரஜினிக்கு இருக்கும் செல்வாக்கு நாம் அறிந்ததே.

ஆனால் விரைவில் வெளியாகவிருக்கும் கபாலி முதன்முறையாக மலாய் மொழியில் டப் செய்யப்பட்டுள்ளதால் மலேசியாவில் இதன் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இதற்கு முன்பு எம்.ஜி.ஆர் நடித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்திற்கு இப்படி ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்ததாம்.

அதன்பின்னர் 42 ஆண்களுக்கு பின்னர் ‘கபாலி’ படத்திற்குதான் இப்படி ஒரு மாபெரும் வரவேற்பு உள்ளதாம்.

கபாலி ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் அங்குள்ள ரசிகர்கள் தங்கள் கார் உள்ளிட்ட வாகனங்களிலும் கபாலி டிசைனை வரைந்து அசத்தி வருகின்றனர்.

இவையில்லாமல் பெரிய பெரிய பேனர்கள், கட்அவுட்களை மலேசிய தலைநகர் கோலாம்பூர் மற்றும் பினாங்கு பகுதிகளிலும் அதிகம் காண முடிகிறதாம்.

இதில் ஹைலைட்டாக ரசிகர்கள் கூறியது என்ன தெரியுமா? இந்த வருடம் ரெண்டு தீபாவளியாம்.

அதாவது கபாலி வரும் நாள் அவர்களின் மற்றொரு ‘தீபாவளி” என்றே குறிப்பிடுகின்றனர்.

இந்த கபாலி இன்னும் எத்தனை ஆச்சரியங்களை தரப்போகிறதோ?

‘ரெமோ’ நிலைமை என்ன..? காத்திருக்கும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்..!

‘ரெமோ’ நிலைமை என்ன..? காத்திருக்கும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Remo's 1st Look and Theme Music Updatesபாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்த வரும் படம் ரெமோ.

ரூ. 35 கோடியில் தயாரிக்கப்பட்டு வரும் இப்படத்தை சிவகார்த்திகேயனின் நண்பர் ஆர் டி ராஜா தயாரித்து வருகிறார். அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் இம்மாதத்திற்குள் முடிவடைந்து விடும் என தகவல்கள் வந்துள்ளன.

ஆனால் இதில் நிறைய கிராபிக்ஸ் பணிகள் இருப்பதால், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தாமதம் ஆகும் எனவும் கூறப்படுகிறது.

வருகிற ஜீன் 23ஆம் தேதி ரெமா படத்தின் பர்ஸ்ட் லுக்கும், ஜீலை 1ஆம் தேதி செஞ்சிட்டாளே என்ற சிங்கிள் ட்ராக்கும் வெளியாகவுள்ளது.

ரஜினியுடன் இணைய மறுத்து விக்ரமுடன் இணையும் சிம்பு..!

ரஜினியுடன் இணைய மறுத்து விக்ரமுடன் இணையும் சிம்பு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu May joins with Chiyaan Vikramநீண்ட மாதங்களுக்கு பிறகு வந்தாலும் சிம்புவின் இது நம்ம ஆளு படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

எனவே தனது அடுத்த படத்தை விரைவில் வெளியிடவிருக்கிறார் சிம்பு.

கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்துள்ள அச்சம் என்பது மடமையடா படத்தின் பாடல்கள் நாளை வரவிருப்பதாக கூறப்படுகின்றது.

எனவே, இப்படத்தை அடுத்த ஜீன் மாதம் 17ஆம் வெளியிடவிருந்தனர்.

அந்த சமயம் ரஜினி நடித்துள்ள கபாலி வெளிவரவுள்ளதால் இப்படத்தை ஒத்தி வைத்துவிட்டார்களாம்.

இதன்படி ஆகஸ்ட் மாதம் 2வது வாரத்தில் ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளாராம்.

விக்ரமின் இருமுகன் படமும் ஆகஸ்ட் 2ஆம் வாரத்தில் வெளியாகவிருப்பதால், இருவரும் இணைந்தே வரக்கூடும் எனத் தெரிகிறது.

‘மாகாபா நஹி… ‘மாணிக்’ பாட்ஷா…’ அசத்தும் ஆனந்த்..!

‘மாகாபா நஹி… ‘மாணிக்’ பாட்ஷா…’ அசத்தும் ஆனந்த்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ma Ka Pa Anand's Maanic Poojai on June 16ரஜினிகாந்த்… இந்த பெயரில் மட்டுமில்லை இந்த மனிதனிடமும் காந்தம் இருப்பது உண்மைதான்.

அதனால்தான் ரசிகர்கள் முதல் நட்சத்திரங்களும் இவரது ஸ்டைலையே பின்பற்றி வருகின்றனர்.

தற்போது விஜய் டி.வியின் பிரபல தொகுப்பாளரான மா.கா.பா ஆனந்தும் இந்த வரிசையில் இணைந்துள்ளார்.

இவர் சினிமாவில் அறிமுகமான ‘வானவராயன் வல்லவராயன்’ தோல்வி அடைந்தது.

‘நவரச நிலகம்’ படமும் சொல்லும்படியாக அமையவில்லை.

எனவே ரஜினி வழிதான் என் வழி என முடிவெடுத்து தற்போது களத்தில் இறங்கியுள்ளார்.

இவர், அடுத்து நடிக்கவுள்ள படத்திற்கு ‘மாணிக்’ எனப் பெயரிட்டுள்ளனர்.

இதில் ‘பாட்ஷா’ படத்தில் இடம்பெற்ற ரஜினி ஸ்டைல் ஸ்டில்களை தற்போது வெளியிட்டுள்ளனர்.

மார்ட்டின் இயக்கவுள்ள இப்படத்திற்கு பழனிகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நாயகியாக ‘எதிர்நீச்சல்’ படத்தில் நடித்த சூசாகுமார் நடிக்கிறார்.

தரண்குமார் இசையமைக்கவுள்ள இப்படத்தின் சூட்டிங் நாளை மறுநாள் (ஜீன் 16) ஏவிஎம் ஸ்டூடியோவில் பூஜையுடன் தொடங்குகிறது.

‘கபாலி ஓவர்; இனிமே ‘ராணி’தான்…’ தன்ஷிகாவின் தைரியமான முடிவு..!

‘கபாலி ஓவர்; இனிமே ‘ராணி’தான்…’ தன்ஷிகாவின் தைரியமான முடிவு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanshika's New Movie "RANI" Pooja held at Thiruvanamalaiபேராண்மை படத்தில் ஜெயம் ரவியுடன் ஐந்து நாயகிகள் நடித்திருந்தாலும் அதிக கவனம் ஈர்த்தவர் தன்ஷிகா.

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களை தேர்ந்தெடுத்து ஆக்ஷன் காட்சிகளிலும் அசத்தி வருகிறார் இவர்.

மேலும் சிலம்பம் உள்ளிட்ட கலைகளையும் கற்று வைத்திருக்கிறாராம்.

இதனால் இவரை தைரியமான நாயகி என்றே கோலிவுட்டில் அழைக்கின்றனர்.

இவரது நடிப்பில் கபாலி, காத்தாடி உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன.

இந்நிலையில் இன்று திருவண்ணாமலையில் தன்ஷிகாவின் புதிய படமான ராணி படத்திற்கு பூஜை போடப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

மேலும் விவரங்களுக்கு எங்கள் தளத்தில் தொடர்பில் இருங்கள்.

More Articles
Follows