முட்டி போட்ட வகுப்பறையை முத்தமிட்டேன்.; ஆசிரியர்களின் ஆசிபெற்றேன்.. மாரிசெல்வராஜ்

முட்டி போட்ட வகுப்பறையை முத்தமிட்டேன்.; ஆசிரியர்களின் ஆசிபெற்றேன்.. மாரிசெல்வராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mariசினிமாவில் முதல் படத்திலேயே மாபெரும் வெற்றிபெற்றதுடன் பல்வேறு விழாக்களில் விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்றுவருகிறது பரியேறும் பெருமாள்.

இந்நிலையில் இயக்குனர் மாரிசெல்வராஜ் தான் படித்த பள்ளிக்கூடத்திற்க்கு பல வருடங்களுக்குப்பிறகு சென்று தனது பள்ளி ஆசிரியர்களை சந்தித்திருக்கிறார்.

திருநெல்வேலி அருகில் உள்ள கருங்குளம் அரசு மேல் நிலைப்பள்ளி க்கு சென்ற இயக்குனர் இந்த சந்திப்பைப்பற்றி கூறுகையில்…

பதினாறு வருடங்களுக்கு பிறகு பள்ளிகூடத்திற்கு போயிருந்தேன். என்னை பார்த்தவுடன் பத்மா டீச்சர் சிரித்த சிரிப்பும் அடைந்த கொண்டாட்டமும் போதும் நான் எடுத்த சினிமா என்னை எல்லாருக்குமே மீட்டெடுத்து கொடுத்திருக்கிறது அந்த முழு நாளும் என் ஆசிரியர்களின் உள்ளங்கையில் குளிர்ந்து இருந்தேன் நான்.

என் கனவு என் தவறுகளை அங்கீரத்தது
முட்டி போட்ட வகுப்பறையை முத்தமிட வைத்தது
உடைத்து நொறுங்கிய பெஞ்சுகளை எல்லாம் தேடி போய் தேம்பி அழ வைத்தது.
கசிந்துருகிய கண்ணீரில் தெரிந்துகொண்டேன்
என்னை விட என் கனவு என்னை அதிகம் நேசிக்கிறது
என்கிறார்.

தனது ஆசிரியர்களோடு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு அவர்களிடம் வாழ்த்துக்களை பெற்றது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது என்கிறார் மாரிசெல்வராஜ்.

நான் இன்னும் ராமின் உதவி இயக்குனர்தான்.; பேரன்பில் நெகிழும் மாரிசெல்வராஜ்.

நான் இன்னும் ராமின் உதவி இயக்குனர்தான்.; பேரன்பில் நெகிழும் மாரிசெல்வராஜ்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mari selvarajபிப்ரவரி -1
இன்னும் நான்கு நாட்களில்
இயக்குநரின் நான்காவது படமாக பேரன்பு வெளியாக இருக்கிறது.
நான் உதவி இயக்குநராக வேலை செய்த படம்.

இன்னும் உதவி இயக்குநராகவே வேலை செய்யும் படம்.

இந்தியாவின் ஆகசிறந்த நடிகர் மம்முட்டியின் பக்கத்திலிருந்து அவரது உடல் அசைவிலிருந்து குட்டி குட்டி சிரிப்பிலிருந்து சிந்தாத கண்ணீரிலிருந்து எப்போதாவது விரியும் அவருடைய கண்களிலிருந்து பெரும் திரைக்கான நடிப்பு எப்படி இருக்க வேண்டும் என்று கற்றுகொண்ட படம்.

இதயத்திலிருந்து ஒரு சினிமா எடுப்பது என்பது நம் காதலி விரும்பி அதோ அது என்று அடையாளம் காட்டி அடம்பிடித்து கேட்ட ஒரு பட்டாம்பூச்சியை துரத்தி பிடிப்பதற்கு சமமானது என்பதை இயக்குநரின் அர்ப்பணிப்பான உழைப்பிலிருந்து கற்றுகொண்ட படம்.

ஒரு சிட்டுகுருவி பறப்பதை ஏன் காட்சிபடுத்த வேண்டும்?
அங்கே ஒரு வெள்ளக்குதிரை உருண்டு புரள்கிறது.
ஒரு வீடு இருட்டில் இருப்பதை ஏன் காட்சிபடுத்த வேண்டும்?
அங்கே ஒரு காடு தன் ஆதி இருட்டோடே வாழ்கிறது.

ஒரு ஓடம் மட்டுமே மிதப்பதை ஏன் காட்சிபடுத்த வேண்டும்?
அங்கே ஒரு ஏரி தனித்து கிடக்கிறது.
அந்த வீட்டுக்குள் நெயில்பாலிஸ் கொட்டிக்கிடப்பதை ஏன் காட்சிபடுத்தவேண்டும்?
அந்த வீட்டுக்குள் ஒரு மகள் வளர்கிறாள்.
ஒரே ஒரு கல்லில் ஒரே ஒரு மகள் அமர்ந்திருப்பதை ஏன் காட்சிபடுத்த வேண்டும்?
அங்கே ஒரே ஒரு மலையில் ஒரே ஒரு அப்பா அமர்ந்திருக்கிறார்.

இன்னும் நட்சத்திரங்களை எண்ணுவதை ஏன் காட்சிபடுத்த வேண்டும்?
இன்னும் நிமிர்ந்து பார்த்தால் வானம் தான் தெரிகிறது. அதில் நட்சத்திரங்கள் தான் கிடக்கிறது.

இன்னும் அப்பா மகள் அன்பை ஏன் காட்சிபடுத்த வேண்டும்?
இன்னும் அப்பாவுக்கு ஒரு மகள் கிடைக்கிறாள், மகளுக்கு ஒரு அப்பா கிடைக்கிறார்.

இதயத்திலிருந்து கேட்கும் இப்படியான நிறைய கேள்விகளும் பதில்களும் தான் நிறைந்து உறைந்து கிடைக்கிறது இயக்குநரின் பேரன்பில்.

இதுவரை வந்த ஹாரர் படங்களிலிருந்து இது வேறுபட்ட படைப்பாக இருக்கும் ‘பேச்சி’ படத்தின் இயக்குனர் ராமச்சந்திரன்

இதுவரை வந்த ஹாரர் படங்களிலிருந்து இது வேறுபட்ட படைப்பாக இருக்கும் ‘பேச்சி’ படத்தின் இயக்குனர் ராமச்சந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pechi movie stillsஇப்படத்தை படக்குழு அடர்ந்த காடுகள் கொண்ட வன பகுதிகளில் படமாக்கவுள்ளது. 30 நாட்களில் ஒரே ஷெட்யூலாக வன பகுதிகளில் படக்குழுவினர் படமாக்கவுள்ளனர். இதுவரை வந்த ஹாரர் படங்களிலிருந்து இது வேறுபட்ட படைப்பாக இருக்கும். இப்படத்துக்காக இயக்குனர் பில்லி , சூனியம் பற்றி மிக நுணுக்கமாக அதிக நாட்கள் செலவழித்து ஆராய்ச்சி செய்து கதையை உருவாக்கியுள்ளார். இது ரசிகர்களுக்கு புதுமையான அட்வெஞ்சர் ட்ரீட்டாக இருக்கும் என்கிறார் இயக்குனர். இத்திரைப்படம் மக்களுக்கு புதுமையான அனுபவமாக இருக்கும்.

வெயிலோன் எண்டெர்டெயின்மெண்ட் சார்பாக ஆர். பரந்தாமன் , விக்னேஷ் செல்வராஜன் , விஜய் கந்தசாமி தயாரிக்கும் இப்படத்துக்கு இசை ஜஸ்டின் பிரபாகரன் , ஒளிப்பதிவு பார்த்திபன் , கலை குமார் கங்கப்பன் , படத்தொகுப்பு இக்னேஷியஸ் அஸ்வின்.

இந்த படத்தின் first look Poster-யை நடிகர் சூர்யா, விஜய் சேதுபதி, மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டனர். போஸ்டர் பலத்த வரவேற்பை பெற்றது.

தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் ‘இளையராஜா 75’ விழாவை தமிழக ஆளுநர் ஸ்ரீ பன்வாரிலால் புரோஹித் துவக்கி வைக்கிறார்

தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் ‘இளையராஜா 75’ விழாவை தமிழக ஆளுநர் ஸ்ரீ பன்வாரிலால் புரோஹித் துவக்கி வைக்கிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ilayarajaதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் இளையராஜாவுக்கு, ‘இளையராஜா 75’ விழாவிற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடக்கும் இரண்டு நாள் விழாக்களுக்கான டிக்கெட் விற்பனை சூடுபிடித்துள்ளது. ஏற்கனவே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமலஹாசன் ஆகியோரின் வருகையும் உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், திரைப்பட துறையில் உள்ள முக்கிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் விழாவை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

இதில், இன்னொரு சிறப்பம்சமாக, தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், பொது செயலாளர்கள் கதிரேசன் மற்றும் SS துரைராஜ் ஆகியோர் ராஜ்பவனிற்கு சென்று ஆளுநரை நேரில் சந்தித்து விழாவை துவங்கி வைக்க அழைத்தனர்.
அவர்களின் அழைப்பை ஏற்று, பிப்ரவரி 2-ஆம் தேதி இவ்விழாவை மரியாதைக்குரிய தமிழக ஆளுநர் ஸ்ரீ பன்வாரிலால் புரோஹித் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைக்கிறார். மேலும், ‘இளையராஜா 75’ என்ற விழா மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றவிருக்கிறார்.

கலைஞர்கள், பின்னணி பாடகர்கள் மற்றும் பலரும் பார்வையாளர்களைக் கவரும் வகையில் பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை நடத்தவிருக்கிறார்கள். மேலும், பிப்ரவரி 2-ம் தேதி முன்னணி கதாநாயகிகளின் நடன நிகழ்ச்சிக்கான ஒத்திகையும், அரங்க ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. திரைத்துறையின் அனைத்து நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் இசைஞானி இளையராஜாவிற்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், அவருடைய 75வது பிறந்த நாளைக் குறிப்பிடும் வகையிலும் இவ்விழாவை நடத்துகிறார்கள். பிப்ரவரி 3-ஆம் தேதி பத்ம விபூஷன் இசைஞானி இளையராஜா நேரடி இசை விருந்து அளிக்கிறார்.

இசை நிகழ்ச்சியால் லண்டன் மக்களை கவர்ந்த ஸ்ருதிஹாசன்

இசை நிகழ்ச்சியால் லண்டன் மக்களை கவர்ந்த ஸ்ருதிஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

shruti haasanதன்னுடைய 6 வயதில் தொடங்கிய இசை பயணத்தின் மீது கவனத்தை திருப்பியுள்ளார் நடிகை, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவரான ஸ்ருதி ஹாசன்.

இதுவரை 100-க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் தன்னுடைய திறமையால் மக்களை கவர்ந்த இவர், தன் வாழ்நாள் கனவான லண்டனில் இருக்கும் டரவ்படூர் (Troubadour) எனும் இசைக்கச்சேரி இடத்திலும் சமீபத்தில் பாடினார்.

இந்த வருடம் வெளிவர இருக்கும் அவரது சில சிங்கிள் டிராக் பாடல்களை அவர் இந்நிகழ்ச்சியில் பாடினார்.

உலகின் மிக சிறந்த இசையமைப்பாளர்களில் சிலராக கருதப்படும் பாப் டைலான், எல்டான் ஜான், அட்லே, எட்ஸீரன் போன்றார் ” The Troubadour ” எனும் இவ்விடத்தில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பகழ்பெற்ற அரங்கு1954-ல் ஒரு Coffee House-ஆக தொடங்கப்பட்டது.

தி நெட் ( The Ned ) என்ற பெயரில் லண்டனில் உள்ள இடத்தில் கடந்த வருடம் செப்டம்பரில் நடந்த ஸ்ருதி ஹாசனின் இசை நிகழ்ச்சி சிறப்பான விமர்சனங்களை பெற்றது.

மேலும் நியூ யார்கில் உள்ள மேடிஷன் அவென்யூவில் ஆகஸ்ட் 15-ம் தேதி 2018-ம் ஆண்டு நடந்த The Indian Day Parade எனும் உலகின் மிகப்பெரிய சுதந்திர தின கூட்டத்தில் இவர் முழங்கிய வந்தே மாதரம் என்ற முழக்கம் அனைவரின் பாராட்டைப்பெற்றது.

மேலும் இந்த நிகழ்வு அந்நாட்டு பத்திரிக்கைகளில் தலைப்பு செய்தியாகவும் இடம் பெற்றது.

சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி இருக்கும் இவரது இசை நிகழ்ச்சி வீடியோக்களை ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.

கமல் மாறவே இல்லை..; அவரை பார்க்க யாரும் வரல.. : டெல்லிகணேஷ்

கமல் மாறவே இல்லை..; அவரை பார்க்க யாரும் வரல.. : டெல்லிகணேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal and delhi ganeshஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார். இப்படத்தை லைகா தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இதன் சூட்டிங் கடந்த ஜனவரி 18ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.

இப்படத்தில் முக்கிய கேரக்டரில் பிரபல குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் இணைந்துள்ளார். அவர் கமல் பற்றி கூறியதாவது…

கமல் தற்போது அரசியலில் இறங்கியுள்ளார். அதனால நிறைய பேர் அவரைப் பார்க்க வருவாங்கனு எதிர்பார்ப்போம். ஆனால், அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை.

சூட்டிங் என்றால் சூட்டிங்தான். அங்க யாரும் வரக்கூடாதுனு கண்டிப்பாக சொல்லிட்டார்.

எங்கள் ஆரம்ப காலத்தில் நானும், கமலும் எப்படி பேசிட்டு இருந்தோமோ இன்னும் அப்படியேதான் இருக்கோம்’ என டெல்லி கணேஷ் தெரிவித்துள்ளார்.

More Articles
Follows