குப்பை பொறுக்கி ‘பைசா’வை எடுத்த விஜய் பட இயக்குனர்..!

குப்பை பொறுக்கி ‘பைசா’வை எடுத்த விஜய் பட இயக்குனர்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Paisa Movie Stillsவிஜய், முன்னாள் உலக அழகி ப்ரியங்கா சோப்ரா நடித்த தமிழன் படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் அப்துல் மஜீத்.

இப்படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தை தொடர்ந்து ஓரிரு படங்களை எடுத்திருந்தார்.

தற்போது இவரே தயாரிப்பாளராக அவதாரமெடுத்து இயக்கியுள்ள படம் பைசா.

இப்படத்தை Confident Film Cafe நிறுவனம் சார்பாக தயாரிக்கிறார்.

இப்படத்தில் பசங்க, கோலி சோடா புகழ் ஸ்ரீராம் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக ஆரா, தீபிகா நடித்துள்ளனர்.

இவர்களுடன் நாசர், மயில்சாமி, சென்ட்ராயன், மதுசூதன் ராவ், ராம்ராஜ் உள்ளிட்டோர் நடிக்க ஜே.வி. இசையமைத்துள்ளார்.

இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இப்படம் குறித்து இயக்குநர் மஜீத் கூறியதாவது…

“இப்படம் குப்பை பொறுக்கி வாழும் மனிதர்களை பற்றியதுதான். நாம் குப்பை போடுபவர்களை விட, அதை பொறுக்குபவர்களைத்தான் கேவலமாக பார்க்கிறோம்.

அவர்கள் ஒரு நாளில் மட்டும் ரூ. 500-700 வரை சம்பாதிக்கிறார்கள். காலை 6 மணி முதல் 10 மணிவரை. பின்னர் மாலை 3 முதல் 6 மணி வரை மட்டுமே வேலை செய்கிறார்கள்.

இதில் துய்மை இந்தியா பற்றிய ஒரு நல்ல கருத்தும் உள்ளது. படம் பார்த்தபின் நாமும் நம்மை சுற்றியுள்ள இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வரும்.” என்று பேசினார்.

மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் ஸ்ரீதிவ்யா..!

மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் ஸ்ரீதிவ்யா..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sridivyas Special Appearance in Remoவருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் ஸ்ரீதிவ்யா.

இப்படத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் காக்கி சட்டை படத்தில் இணைந்தார்.

இப்படமும் வெற்றிப் பெறவே, இந்த ஜோடி ராசியான என கூறப்பட்டது.

தற்போது மீண்டும் 3வது முறையாக இவர்கள் இணையவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

அதாவது சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறாராம்.

காக்கி சட்டை படத்தில் இவர் நர்ஸாக நடித்திருந்தார்.

எனவே இதிலும் சில காட்சிகளில் நர்ஸ் ஆக சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி ஜோடியுடன் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

‘நீ அக்கா, தங்கச்சியோட பொறக்கலையா..?’ சதீஷை திட்டிய சிவகார்த்திகேயன்!

‘நீ அக்கா, தங்கச்சியோட பொறக்கலையா..?’ சதீஷை திட்டிய சிவகார்த்திகேயன்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Here is Sivakarthikeyan and Sathish Conversations in Twitterஎன்னடா இது சிவகார்த்திகேயன், சதீஷ் ரெண்டு பேரும் நல்ல க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் ஆச்சே. ஏன் சிவா இப்படி திட்டிட்டாரு பார்க்குறீங்களா..?

அவர்கள் இருவருக்கும் சற்றுமுன் ட்விட்டரில் நடந்த சுவையான உரையாடல்களை பாருங்களேன்.

நேற்று ரெமோ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. அதில் சிவகார்த்திகேயன் லேடி நர்ஸ் வேடம் போட்டிருந்த போஸ்டர் வெளியானது.

இதை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இதை பார்த்து சதீஷ் கூறியது….

சதீஷ் : எனக்கே உன்ன லவ் பண்ண தோனுதுமா. செமயா இருக்கா.

சிவகார்த்திகேயன் : யோவ்…

சதீஷ் : என்னடி செல்லம் கோவிச்சிக்கீறரே?.

சிவகார்த்திகேயன் : ச்சீ.. பொறுக்கி நீயெல்லாம் அக்கா தங்கச்சியோட பொறக்கலையா…?

சதீஷ் : நாத்தனார், மாமியார் எல்லாம் பொறுமையா பாத்துக்கலாம். அவசரப்படாதடி செல்லக்குட்டி.

சிவகார்த்திகேயன் : அப்போ உனக்கு கல்யாணம் டவுட்டிதான்டி…

இவர்களின் உரையாடலை கவனித்த நடிகர் விஷ்ணு விஷால் கூறியதாவது… “தலைவா சிவா.. சதீஷ் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க” என்று தெரிவித்துள்ளார்.

களை கட்டும் கபாலி… இலவசங்களை கொடுக்கும் ரஜினி ரசிகர்கள்..!

களை கட்டும் கபாலி… இலவசங்களை கொடுக்கும் ரஜினி ரசிகர்கள்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Fans Ready to Celebrate Kabali Movieரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படத்தை ஜூலை 15ல் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலாய் ஆகிய நான்கு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிடுகின்றனர்.

தயாரிப்பு தரப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக பணியாற்றி வந்தாலும், அவர்களை மிஞ்சும் வகையில் ரஜினி ரசிகர்கள் களமிறங்கியுள்ளனர்.

முக்கியமாக சென்னை ரசிகர்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், கபாலி படம் பிரின்ட் செய்யப்பட்ட பனியன், டீ சர்ட், கையில் கட்டும் பேன்ட் வளையம் உள்ளிட்ட பொருட்களை இலவசமாக கொடுத்து வருகின்றனர்.

மேலும் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சாதனை படைத்த நிலையில், கபாலி படமும் சரித்திரம் படைக்கும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் இவர்கள்.

ரெமோ விழாவில் சிவகார்த்திகேயன் பேசிய முழுவிவரம்..!

ரெமோ விழாவில் சிவகார்த்திகேயன் பேசிய முழுவிவரம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan Speech at RemoFirstLook Launchரெமோ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது…

“என் அசிஸ்டென்ட் பாக்யராஜ் ஒருவரிடம் ஒரு கதை இருக்கு கேள் என்றார் அட்லி. அது பெண் வேடம் என்றார்.

என்னெயெல்லாம் பையனாக பார்ப்பதே பெருசு. இதுல பெண் வேஷமா என மறுத்துவிட்டேன்.

மறுபடியும் அட்லி சொல்வே பாக்யராஜ் கண்ணனை அழைத்து கதை கேட்டேன்.

ஒரு க்யூட்டான காமெடி கதை. ஆனால் லேடி கெட்டப் என்பதால் பலமுறை யோசித்தேன்.

கிட்டதட்ட 10 மாதத்தில் 8 முறை கதை கேட்டேன். சார் நீங்கதான் இப்படத்தை செய்யனும் என்றார் பாக்யராஜ்.

ஒருவேளை பில்டப் கொடுக்கிறாரே? என கூட நினைத்தேன். இறுதியாக ஓகே சொல்லிவிட்டேன்.

இதுபோல கேரக்டருக்கு எருமையை விட பொறுமை அவசியமாக என முடிவு செய்தேன்.

மேக்கப் போடும் போது தலையில் மட்டும் 50 ஹேர்பின்கள் இருக்கும். எவனோ பின்னாடி இருந்து குத்துற போல இருக்கும்.

10 மாதம் எனக்காக வெயிட் செய்தார். எனவே பாக்யராஜிக்காக 1 வருடத்தை ஒதுக்கி கொடுத்தேன்.

பி.சி.ஸ்ரீராம் சார் ஒளிப்பதிவின் பிதாமகன். அவர் இந்த கதைக்குள் வந்தபின்தான் சின்ன ரொமோவாக இருந்த இப்படம் ஷங்கர் சார் படம் போன்ற பெரிய ரெமோவாக மாறிவிட்டது.

என் கண்களுக்கு கூட சிறிய லைட்டிங் வைத்தார். நானே என்னை பார்த்து சைட் அடித்து காதலித்தேன். “அட சே..நீதான்டா அது” என்று அடித்துக் கொண்டேன்.

நிறைய பெண் வேடங்களை போட்டு பார்த்தோம். கடைசியாக நிக்கி, ரேச்சல், அனு மேடம் மூவரும்தான் சரியான மேக்கப் போட்டு என்னை தயார் செய்தார்கள்.

 

Remo 1

 

பெண்கள் பாவம். எப்படிதான் THREADING, WAXING எல்லாம் பண்றாங்க தெரியல.

புருவத்துல ஒவ்வொரு முடியா புடுறாங்க. வலி தாங்கல.

செட்டுக்கு கூப்பிடும்போது வாம்மா.. வாம்மா கூப்பிடுவாங்க… யோவ் அப்படியெல்லாம் கூப்பிடாதீங்க. சொல்வேன்.

ஸ்ரீராம் சார் முதல் ஷாட் வைச்ச பிறகுமான் என் ப்ரேமில் எனக்கே நம்பிக்கை வந்தது.

கீர்த்தி சுரேஷ் இப்படத்தின் நாயகி என்று சொன்ன உடனே நான்தான் முதல் ஆளாக வேண்டாம் என்று சொன்னேன்.

தொடர்ச்சியாக 2 படங்கள் இணைந்து செய்தால் கிசுகிசு வந்துவிடும். மேலும் அடுத்தடுத்து படங்கள் என்பதால் மறுத்தேன்.

நானே அவரிடம் நல்ல ஹீரோயின் இருந்தா சொல்லுங்கள் அப்படின்னு கேட்டேன். ஆனால் நிறைய பேர் மறுத்துவிட்டனர்.

இதில் நாயகியாக நடிக்க முடியாது என்று சொன்ன அந்த நாயகிகளுஙக்கு தேங்க்ஸ். ஏனென்றால் கீர்த்தி சுரேஷின் நடிப்பு அழகாக இருந்தது.

 

Remo 3

 

‘3’ படத்தின் போது அனிருத் எப்படி இருந்தாரோ, அப்படியே இருக்கிறார். ஒரு நலம் விரும்பியாக, நண்பராக, சகோதரனாக இருக்கிறார்.

அவருடைய பணத்துக்கும் புகழுக்கும் அவர் இந்த படத்தை செய்யாமல் இருந்திருக்கலாம்.

நான் எப்போது கேட்டாலும், கதையே கேட்காமல் இசையமைக்க ஓகே சொல்லிடுவார்.

நானும் அந்த நம்பிக்கையில் அவரிடம் நல்ல படங்களை கொடுத்து வருகிறேன்.

சினிமாவுக்கு நீ சின்சியராக இல்லேன்னா சினிமா உன்னை தூக்கி போட்டுடும் அப்படின்னு ஷங்கர் சார் சொல்லியிருக்கிறார்.

அந்த மந்திரத்தைதான் தயாரிப்பாளர் ராஜா பின்பற்றி வருகிறார்.

 

Remo 2

 

என் படத்தைப் நம்பி பார்க்க வரும் மக்கள், ரசிகர்களால்தான் நான் இந்தளவுக்கு வந்திருக்கிறேன்.

எனக்கு பின்னால் யாரும் கிடையாது. எனக்கு முன்னால் இருக்கும் நீங்கள்தான் எனக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

நான் ஒரு நடிகராக ஆகிவிட்டேனா என்பது இதுவரை தெரியாது. ஆனால் நடிகராக ஆவதற்கு முதல் அடியை இப்போ எடுத்து வைச்சிட்டேன்.

இதுவரை நான் எந்த இடத்திலும் சொன்னது இல்லை. இப்போது சொல்கிறேன்.

நான் கிட்டதட்ட 18 மணி நேரம் உழைத்துவிட்டு வருவேன். 5 மணிநேரம் மட்டும்தான் உறங்குவேன்.

அந்த நேரத்திலும் எந்தவித தொந்தரவு கொடுக்காமல் என்னை பார்த்துக் கொள்வார். என் மனைவி ஆர்த்திக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்”

இவ்வாறு பேசினார் சிவகார்த்திகேயன்.

‘ரெமோ’-வில் செகன்ட் ஹீரோயினாக மாறிய கீர்த்தி சுரேஷ்..!

‘ரெமோ’-வில் செகன்ட் ஹீரோயினாக மாறிய கீர்த்தி சுரேஷ்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Keerthy Suresh at RemoFirstLook Launchசிவகார்த்திகேயன் நடித்து வரும் ரெமோ படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வருகிறார்.

பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் பேசிய ஒரு சிலர், கீர்த்தி சுரேஷ் படத்தின் இரண்டாவது நாயகி என்றனர்.

அதற்கு காரணம்… இதில் சிவகார்த்திகேயன் லேடி கெட்டப் (பெண் வேடம்) இடுவதால், சிவா கீர்த்தியை விட அழகாக இருப்பதாகவும் எனவே சிவகார்த்திகேயன் தான் முதல் நாயகி என்றனர்.

இதனால்தான் கீர்த்தி சுரேஷை செகன்ட் ஹீரோயின் என்றார்களாம்.

More Articles
Follows