தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘தொடரி’.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், கணேஷ் வெங்கட்ராம், ராதாரவி, நாசர், தம்பி ராமையா, கருணாகரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இமான் இசையமைக்க, சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.
இதில் படக்குழுவினருடன் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.
இவ்விழாவில் பேசிய பலரும் தனுஷை இளைய சூப்பர் ஸ்டார் என புகழ்ந்தனர். முக்கியமாக தம்பி ராமையா, ஜாக்குவார் தங்கம், பாபு கணேஷ், ஆர் வி உதயகுமார் என பலரும் இதையே கூறினார்கள்.
இதனைத் தொடர்ந்த தனுஷ் பேசியதாவது….
நான் இப்படத்தில் நடிக்க கதை கேட்கவில்லை. சூட்டிங் தொடங்கி 4 நாட்களுக்கு பிறகுதான் கதை கேட்டேன்.
பிரபு சாலமன் மீது இருந்த நம்பிக்கைதான் காரணம். அதுபோல் கதை கேட்ட பிறகும் அந்த நம்பிக்கை அதிகமானது.
இங்கு பேசிய பலரும் என்னை ரொம்ப பாராட்டினார்கள். சொல்லப்போனால் என் தகுதிக்கு மீறிய பாராட்டு அது. அவர்களின் அன்புக்கு நன்றி.
ஆனால் அவர்கள் புகழும்போது எனக்கு ரொம்ப கூச்சமாக இருந்தது” என்று நெளிந்தபடியே பேசினார் தனுஷ்.