கேப்டன் மில்லர் படப்பிடிப்பிற்காக திருநெல்வேலி சென்றடைந்தார் தனுஷ்

கேப்டன் மில்லர் படப்பிடிப்பிற்காக திருநெல்வேலி சென்றடைந்தார் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு இரண்டு வாரங்களுக்கு முன்பு முறையான பூஜையுடன் தொடங்கியது.

1980 களின் பின்னணியில் எடுக்கப்படும் ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் ‘டாக்டர்’ & ‘டான்’ பட நடிகை பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக நடிகர் தனுஷ் திருநெல்வேலி சென்றுள்ளார் என்பது இப்போதைய லேட்டஸ்ட் அப்டேட்.

மேலும் நடிகர் தனுஷ் மூன்று வித்தியாசமான தோற்றங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வட இந்தியாவில் சோழர் வரலாறை கேட்டு தெரிஞ்சிக்கிறாங்க.– நடிகர் கார்த்தி

வட இந்தியாவில் சோழர் வரலாறை கேட்டு தெரிஞ்சிக்கிறாங்க.– நடிகர் கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இந்தப் படத்தில் வந்திய தேவனாக நடித்துள்ள கார்த்தி பத்திரிகையாளர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்தார்..

அப்போது அவர் பேசியதாவது…

“எனக்கு களைப்பாக இருந்தபோதும், இங்கு வந்து உங்களை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. மூன்று வருட உழைப்பிற்கு பலன் கிடைக்கும் தருணம் மகிழ்ச்சியாக உள்ளது.

அதிலும், பத்திரிகையாளர்கள் நீங்கள் இப்படத்தைப் பற்றி மிக ஆழமாக கேள்விகள் கேட்டு இப்படத்திற்கான மதிப்பை அதிகப்படுத்தியிருக்கிறீர்கள்.

பிற மாநிலங்களில் போனியின் செல்வன், போனியின் செல்வம் என்று கூறியவர்கள் இப்போது போனியின் செல்வன் அல்ல பொன்னியின் செல்வன் கல்கி எழுதியது என்று எல்லோருக்கும் தெரிகிறது.

அதுமட்டுமில்லாமல், பத்திரிகையாளர்களான நீங்கள் இதைப் பற்றி நிறைய கட்டுரைகள் எழுதியிருக்கிறீர்கள்.

அது இப்படத்திற்கு ஆர்வத்தை அதிகரித்துள்ளது. மேலும், படத்திற்கான ஆர்வத்தோடு நம் நாட்டு கலாச்சாரம், அந்த காலத்தில் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள்? எப்படி ஆட்சி நடத்தினார்கள்? என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

வெளியூர் செல்லும் போது சோழர்களின் வரலாறை கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள்.

மேலும், உங்களுடைய வாழ்த்துகள் எப்படி இருக்கும் என்று தெரியும். நேரில் வந்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி.

ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் அனைவருடனும் பணியாற்றியது புது அனுபவமாக இருந்தது. முக்கியமாக படிக்கும் பழக்கம் அதிகரித்திருக்கிறது. சோழர்கள் காலத்தில் இருந்த கலாச்சாரத்தை ஆழமாக ஆராய்ச்சி செய்து எழுதியிருந்தார் கல்கி.

அதேபோல், மணி சார் காதல், அரசியல் என்ற எந்த மாதிரியான படம் இயக்கினாலும் காட்சியில் உயர்தரம் இருக்கும். இப்படத்திலும் அந்த தரம் நிச்சயம் இருக்கும்” என்றார்.

மீண்டும் ‘கைதி’ கூட்டணி.; கார்த்திக்கு வில்லனாகும் ‘புஷ்பா’ பட டெரர் வில்லன்

மீண்டும் ‘கைதி’ கூட்டணி.; கார்த்திக்கு வில்லனாகும் ‘புஷ்பா’ பட டெரர் வில்லன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி ஆகிய படங்களை இயக்கியவர் ராஜூ முருகன்.

இதில் ‘ஜோக்கர்’ படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது.

இந்த நிலையில் ட்ரீம் வாரியர்ஸ் மற்றும் ராஜமுருகன் கூட்டணி மீண்டும் இணைய இந்த படத்தில் கார்த்திக் நாயகனாக நடிக்க உள்ளார்.

ஏற்கனவே கார்த்தி நடித்த ‘கைதி’ படத்தை இதே ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்த புதிய படத்தில் கார்த்திக்கு வில்லனாக தெலுங்கு நடிகர் சுனில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என கூறப்படுகிறது.

கடந்த வருடம் 2021ல் வெளியான ‘புஷ்பா’ படத்தில் வில்லனாக அல்லு அர்ஜூனை மிரட்டியிருந்தார் சுனில் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜமெளலி இயக்கிய ‘மரியாதை ராமண்ணா’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார் சுனில். (இந்தப் படம் தான் சந்தானம் நடிப்பில் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற பெயரில் தமிழில் ரீமைக்கானது.)

‘டான்’ இயக்குனரின் படத்தில் ரஜினி.; கோடிகளை கொட்டி கொடுக்கும் லைக்கா

‘டான்’ இயக்குனரின் படத்தில் ரஜினி.; கோடிகளை கொட்டி கொடுக்கும் லைக்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இந்த படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக சென்னையில் உள்ள ஆதித்யராம் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

ரஜினிகாந்த் அமர்ந்திருக்கும் சில காட்சிகளும் அவர் நடந்து செல்லும் சில காட்சிகளும் இணையதளத்தில் லீக் ஆனது.

இந்தப் படம் அடுத்த ஆண்டு 2023 கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்பின்னர் ரஜினி நடிக்கவுள்ள அவரின் 170-வது படத்தை ‘டான்’ பட டைரக்டர் சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் டிசம்பர் 12 ரஜினியின் பிறந்தநாளில் இதன் அறிவிப்பு வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் நடிக்க ரஜினிக்கு ரூ.125-130 கோடி வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

‘பொன்னியின் செல்வி-யாக மாறிய அதிதி ஷங்கர்.; ஓ இதான் விஷயமா.?

‘பொன்னியின் செல்வி-யாக மாறிய அதிதி ஷங்கர்.; ஓ இதான் விஷயமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்தி நடித்த ‘விருமன்’ படத்தில் அவரது நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அதிதி ஷங்கர்.

வெளிநாட்டில் டாக்டருக்கு படித்து மாடர்ன் பெண்ணாக வளர்ந்த இவர் ‘விருமன்’ படத்தில் அசல் கிராமத்து பெண்ணாகவே நடித்து பலரின் பாராட்டையும் பெற்று இருந்தார்.

மேலும் அந்த படத்தில் யுவன் இசையில் ஒரு பாடலையும் பாடியிருந்தார்.

இதனையடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ படத்தில் நாயகியாகவும் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில் ‘பொன்னின் செல்வன்’ படத்தில் வரும் ஐஸ்வர்யா ராய் & த்ரிஷாவை போல அலங்காரம் செய்து ஒரு போட்டோ சூட் நடத்தியுள்ளார் அதிதி.

அந்த புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த போட்டோ சூட் நவராத்திரிக்காக எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார் இந்த அதிதி ஷங்கர்.

மீண்டும் அவதாரமெடுக்கும் ‘ஆளவந்தான்’.; கமலை நம்பி களமிறங்கும் தாணு

மீண்டும் அவதாரமெடுக்கும் ‘ஆளவந்தான்’.; கமலை நம்பி களமிறங்கும் தாணு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

22 வருடங்களுக்கு முன் தாணு – கமல்ஹாசன் – சுரேஷ் கிருஷ்ணா கூட்டணியில் உருவான படம் ‘ஆளவந்தான்’.

இதில் கமல் வில்லன் & ஹீரோ என இரண்டு வேடங்களில் நடித்திருந்தார்.

இவர்களுடன் ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த படம் டெக்னிக்கலாக பாராட்டைப் பெற்றாலும் மோசமான தோல்வியை தழுவியது.

இதனால் தயாரிப்பாளர் தாணுவிற்கு பெரும் நஷ்டம் ஏற்ப்பட்டது. கமலால் படத்தில் ஏகப்பட்ட பிரச்சினை. எனவே தான் இந்த தோல்வி என பல பேட்டிகளை கொடுத்திருந்தார் தாணு.

இந்த நிலையில் இப்படத்தை டிஜிட்டலில் மெருகேற்றி மறுபடியும் ரீ- ரீலீஸ் செய்ய உள்ளதாக தாணு தெரிவித்துள்ளார்..

அந்த பேட்டியில்…

“1990களில் கமல் அமைத்த திரைக்கதை சரியாக பொருந்தவில்லை.

தற்போது இந்த சூழலுக்கு பொருந்தும்.

இப்போது படம் வெளியானால் நான் இழந்த பணத்தை கூட மீட்க வாய்ப்புள்ளது.” எனத் தெரிவித்துள்ளார் தாணு.

More Articles
Follows