7 நாட்கள் பட பாடல்களை வெளியிட்டார் தனுஷ்

Dhanush launched 7 Naatkal movie songsமில்லியன் டாலர் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில், கார்த்திக் மற்றும் கார்த்திகேயன் தயாரிக்க, அறிமுக இயக்குனர் கௌதம் V.R. இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 7 நாட்கள்.

இயக்குனர் P. வாசுவின் மகன் சக்தி கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக நிகிஷா பட்டேல் மற்று அங்கனா ராய் நடிக்கின்றனர்.

உன்னைப் போல் ஒருவன் படத்தின் மூலம் பிரபலமான கணேஷ் வெங்கட்ராமன் இப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர்களுடன் பிரபு கணேஷன், நாசர், எம்.எஸ். பாஸ்கர் மற்றும் ராஜீவ் கோவிந்தபிள்ளை ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகரின் இசையில் உருவான இப்படத்தின் பாடல்களை தனுஷ் அவர்கள் வெளியிட்டார்.

இப்படத்தின் ஒரு பாடலான, புடிச்சிருக்க பெண்ணே சொல்லிபுடு மதன் கார்க்கி வரிகளில், டி. ராஜேந்தர் பாடிய பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இப்படத்திற்கான இசையை நடிகர் தனுஷ் அவர்கள் வெளியிட்டார். இப்படத்தை வருகின்ற மே மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Dhanush launched 7 Naatkal movie songs

Overall Rating : Not available

Related News

அபியும் நானும் படம் மூலம் தமிழ்…
...Read More

Latest Post