சமந்தாவின் யு-டர்ன் கூட்டணியில் இணைந்தது ஏன்..? – தனஞ்செயன் விளக்கம்

U turn movie“யு டர்ன்”படம் அறிவிக்க பட்ட நாளில் இருந்தே இந்த படத்தில் சமந்தாவின் பங்களிப்பு மிக மிக பெரிதாக இருக்கும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பு. சமீபத்திய டிரெய்லர்களில் நாம் பார்த்தபோது ஒரு அற்புதமான படமாக ‘யு-டர்ன்’ வந்திருப்பது தெரிகிறது. இது மொத்த குழுவுக்கும் கிடைத்த ஒரு மிகப்பெரிய வரம்.

கிரியேட்டிவ் என்டர்டெய்ன்மெண்ட்ஸ் மற்றும் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சார்பில் தனஞ்செயன் யு-டர்ன் படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்கிறார்.

இந்த படத்தின் விநியோக உரிமையை பெற்றுள்ள ஜி தனஞ்செயன் இது குறித்து கூறும்போது, “எங்கள் நிறுவனமான BOFTAல் எப்போதும் உலகளாவிய பார்வையாளர்களுக்கான தரமான படங்களை எடுக்க ஆர்வமாக உள்ளோம். யு-டர்ன் தயாரிப்பாளர்களுடன் வியாபார ரீதியில் இணைந்தது நிச்சயமாக BOFTAக்கு மிகப்பெரிய சாதனையாகும். குறைந்த காலத்திலேயே யூடியூபில் அதிக பார்வையாளர்களை கொண்ட இந்த படத்தின் சிறப்பான ட்ரைலர் முதல், இந்த படம் சம்பந்தப்பட்ட எல்லாமே ரசிகர்களை கவர்ந்திழுக்கும் விஷயங்களை கொண்டது. புதுமையான அணுகுமுறையுடன் இந்தத் திரைப்படத்தை முன்னெடுத்துச் செல்ல சிறந்த முயற்சிகளை நாங்கள் மேற்கொள்வோம். இந்த வாய்ப்பை அளித்த தயாரிப்பாளர்களான ஸ்ரீனிவாச சித்தூரி (ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்) மற்றும் ராம்பாபு பண்டாரு (ஒய்.வி கம்பைன்ஸ் மற்றும் BR8 கிரியேஷன்ஸ்) ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தயாரிப்பாளர் ஸ்ரீனிவாச சித்தூரி கூறும்போது, “இந்த திரைப்படத்திற்காக தனஞ்செயன் போன்ற ஒரு அனுபமிக்க தயாரிப்பாளருடன் இணைந்தது எங்களுக்கு ஒரு பெரிய கௌரவம். அவரது திரைப்படங்களை மேம்படுத்துவதற்காக புதுமையான வழிமுறைகளை கண்டுபிடிப்பதற்கான ஒரு உத்வேகம் அவர். அவரிடம் இருந்து இந்த ” யு-டர்ன்” படத்தை சிறந்த முறையில் கொண்டு சேர்க்க கூடுதலாக விஷயங்களை பெறும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்” என்றார். தயாரிப்பாளர் ராம்பாபு பண்டாரு கூறும்போது, “நாங்கள் மொத்த குழுவும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இருக்கிறோம். தனஞ்செயன் அவர்களின் புதுமையான அணுகுமுறை அவரது மிகப்பெரிய யு.எஸ்.பி. அது இப்போது எங்கள் படத்துக்கும் கிடைத்ததை மதிப்புமிக்க தருணமாக நினைக்கிறேன்” என்றார்.

சமந்தா, ஆதி, நரேன், ராகுல் ரவீந்திரன் மற்றும் பூமிகா சாவ்லா நடித்துள்ள மர்ம திரில்லர் படம் தான் ‘யு-டர்ன்’. பூர்ணசந்திர தேஜஸ்வி (இசை), சிங்க் சினிமா (ஒலி), பீம் (வசனம்), சுரேஷ் ஆறுமுகம் (எடிட்டிங்) நிகேத் பொம்மி (ஒளிப்பதிவு) ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகியிருக்கிறது.

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Latest Post