யு-டர்ன் படத்தில் என் கேரக்டர் புதுமையாக இருக்கும்..: பூமிகா சாவ்லா!

யு-டர்ன் படத்தில் என் கேரக்டர் புதுமையாக இருக்கும்..: பூமிகா சாவ்லா!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Bhumika Chawla shares her U Turn movie working experienceஇருபது ஆண்டுகள் கடந்தாலும்,தன் அழகால் நம்மை இன்றும் கவர்ந்து இழுக்கிறார் நடிகை பூமிகா சாவ்லா.

அவசர அவசரமாக நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்று அவர் ஒருபோதும் நினைத்ததும் இல்லை, அதே நேரத்தில் புதுமையான தன்னை கவர்கின்ற கதாப்பாத்திரங்கள் அமையும் போது அவற்றை தவற விட்டதும் இல்லை.

எவ்வளவு பெரிய கதாபாத்திரம் என்பதை விட, குறைந்த நேரமே வந்தாலும் தாக்கத்தை ஏற்படுத்தும் கதாபாத்திரங்களின் மீது மிகுந்த நம்பிக்கை உடையவர். அதற்கு மிகச்சிறந்த ஒரு உதாரணம் தான் செப்டம்பர் 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் ‘யு-டர்ன்’.

இந்த படம் வெறும் நட்சத்திர பட்டாளத்தை தாண்டி, மிகச்சிறந்த நடிகர்களையும் கொண்டிருப்பது படத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கிறது.

இந்த படத்தை பற்றி அவர் கூறும்போது, “ஒரு திரைக்கலைஞர் வித்தியாசமான மற்றும் சவாலான கதாபாத்திரங்களை செய்யும்போது அங்கீகாரம் பெறுவார், அவரும் அதனால் திருப்தி அடைவார்.

‘யு டர்னில்’ என் கதாபாத்திரம் நான் கடந்த காலங்களில் செய்ததை போல் அல்ல. என் நடிப்பை ரசிகர்கள் எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள் என்பதை பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்றார் பூமிகா.

பல முன்னணி கதாநாயகிகளுடன் ஒரே படத்தில் சேர்ந்து நடித்த ஒரு சில நடிகைகளில் பூமிகாவும் மிக முக்கியமானவர். உண்மையில், அவரது நட்பான, நல்ல மனது பலரது இதயங்களை வென்றுள்ளது.

உடன் நடிப்பவர்களின் நடிப்பை அவர் ஒருபோதும் பாராட்ட தவறியதே இல்லை. “சமந்தா ஒரு பிரமாதமான நடிகை, படப்பிடிப்பில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார். இந்த படத்தில் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார் என்று யு-டர்ன் படத்தில் சமந்தாவின் நடிப்பை பாராட்டியுள்ளார் பூமிகா.

தற்போது பெண்களை மையப்படுத்தி உருவாகும் படங்களின் போக்கை பற்றி அவர் கூறும்போது, “நானும் பெண்களை மையப்படுத்திய திரைப்படங்களில் இடம் பெற்றுள்ளேன், மேலும் இந்த வகையிலான திரைப்படங்கள் கணிசமாக அதிகரித்து வருகின்றன. திரைக்கதை எழுத்தாளர்கள் இது போன்ற திரைப்படங்கள் மற்றும் கதாபாத்திரங்களை தொடர்ந்து எழுத வேண்டும்” என்றார்.

“தமிழ் திரைப்படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் என்னை தேடி வருகின்றன. ஆனால், கதை மற்றும் படக்குழுவும் சரியாக அமைய வேண்டும். அப்போது தான் அது சரியாக ரசிகர்களிடம் சென்று சேரும்.

நான் 1999 ஆம் ஆண்டில் சினிமாவில் அறிமுகமானேன், கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஆகின்றன. என் பெற்றோர் வெற்றி, தோல்வியை எவ்வாறு சமமாக அணுகுவது என்று கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அதனால் வெற்றி, தோல்வி எதுவும் என்னை பாதிப்பதில்லை” என்று தன்னம்பிக்கையோடு முடிக்கிறார் பூமிகா சாவ்லா.

Actress Bhumika Chawla shares her U Turn movie working experience

மிஸ்டுகால் கொடுத்து 2.0 பட டீசரை இலவசமா தியேட்டரில் பாருங்க

மிஸ்டுகால் கொடுத்து 2.0 பட டீசரை இலவசமா தியேட்டரில் பாருங்க

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Just give Missed Call and watch 2point0 Teaser in theatersலைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரூ. 500 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள படம் 2.0.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் ரஜினிகாந்த், எமிஜாக்சன், அக்‌ஷய்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நீண்டகால தயாரிப்பில் இருந்த இப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகிவிட்டது.

நவம்பர் மாதம் 29ம் தேதி உலகமெங்கும் இப்படம் வெளியாகிறது.

முதன்முறையாக 3D தொழில்நுட்பத்தில் ரஜினியின் 2.0 டீசர்

இதன் டீசரை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 13ம் தேதி 2டி மற்றும் 3டி தொழில்நுட்பங்களில் வெளியிடவுள்ளனர் என்பதை பார்த்தோம்.

தற்போது இந்த டீசரை பிவிஆர் மற்றும் சத்யம் திரையரங்குகளில் இலவசமாக பார்க்க படக்குழு ஏற்பாடு செய்துள்ளது.

அதாவது +91 9099949466 இந்த நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்தால் 2.O டீசரை தியேட்டரில் இலவசமாக பார்க்கலாம் என அறிவித்துள்ளனர்.

Just give Missed Call and watch 2point0 Teaser in theaters

செம ஃபிட் சூர்யா; இணையத்தில் வைரலாகும் சூர்யா-37 படங்கள்

செம ஃபிட் சூர்யா; இணையத்தில் வைரலாகும் சூர்யா-37 படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya 37 shooting spot photos goes viralசெல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே படத்தில் நடித்து வந்தார் சூர்யா.

ட்ரீம் வாரியர் தயாரித்து வரும் இப்படத்திற்கு யுவன் இசையைமத்து வருகிறார்.

இந்தாண்டு இறுதியில் இப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது.

இதனையடுத்து தற்போது கே.வி. ஆனந்த் இயக்கும் படத்தில் நடித்துவருகிறார்.

மோகன்லால்-சூர்யா உடன் நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்

இப்படத்தில் மோகன்லால், அல்லு சிரிஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் உள்ள சூர்யாவின் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதில் சூர்யா செம ஃபிட்டாக இருக்கிறார்.

Suriya 37 shooting spot photos goes viral

தினமும் 10 மணிநேரம் சைக்கிள் ஓட்டிய வருண் – அனுஷ்கா ஷர்மா

தினமும் 10 மணிநேரம் சைக்கிள் ஓட்டிய வருண் – அனுஷ்கா ஷர்மா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Varun Anushka cycled for 10 hours daily in summer heatவருண் தவான் – அனுஷ்கா ஷர்மா ஆகியோர் முதன் முதலாக இந்த படத்திற்ககாக ஜோடி சேர்ந்துள்ளனர்.2018 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படவரிசையில் இப்படம் அமைந்துள்ளது.மேலும் தேசிய விருது வெற்றி கூட்டணியான இயக்குனர் சரத் கட்டாரியா இப்படத்தை இயக்கியுள்ளார். மணீஷ் சர்மா படத்தினை தயாரித்துள்ளார்.

வருண் தவான் இந்த படத்தில் மௌஜி என்ற கதாபாத்திர பெயரில் நடுத்துள்ளார். சைக்கிள் என்பது சிறிய கிராமங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் வாகனம். வருண் கதாபாத்திரத்திற்கு இந்த சைக்கிளை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார் சரத் கட்டார்யா .

“மௌஜி சைக்கிளை பெரும் அளவில் விரும்புவான் .எங்கு சென்றாலும் சைக்கிளை பயன்படுத்துவான் .கிராமப்புற பகுதிகளுக்கு சைக்கிள் எளிமையான வாகனம் .சைக்கிளில் நானும் அனுஷ்காவும் பயணம் செய்த காட்சிகள் அருமையாக வந்திருக்கிறது. படப்பிடிப்பிற்காக 15 நாட்கள் ,தினமும் 10 மணி நேரம் சைக்கிள் ஓட்டினேன்” என நடிகர் வருண் தவான் தெரிவித்துள்ளார்.

‘வருண் சைக்கிள் ஓட்டும் காட்சிகளில் அவருடன் முன்பக்கம் நான் அமர்ந்திருக்கும் காட்சிகள் இருக்கும்.வெகு நேரம் படப்பிடிப்பிற்காக அமர்ந்திருப்பது கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் எனக்கு இந்த அனுபவம் பிடித்திருந்தது “என அனுஷ்கா தெரிவித்துள்ளார்.

‘யாஷ் ராஜ் பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள – ” சுய் தாகா – மேட் இன் இந்தியா ” என்ற இந்த படம் இந்த வருடத்தில் செப்டம்பர் மாதம் 28 ஆம் காந்தி ஜெயந்திக்கு முன்னதாகவே வெளியாக இருக்கிறது.

Varun Anushka cycled for 10 hours daily in summer heat

நான் பொறுக்கி; எனக்கு தேவை மூணு தல; விக்ரம் புதுபன்ச் டயலாக்

நான் பொறுக்கி; எனக்கு தேவை மூணு தல; விக்ரம் புதுபன்ச் டயலாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikramஇவர்களுடன் பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்க்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

மாபெரும் வெற்றி பெற்ற சாமி படத்தின் 2ஆம் பாகமாக இது உருவாகுவதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது.

இதனிடையில் இதன் ட்ரைலர் வெளியானது.

அதில்… ‘நான் தாய் வயத்தில பொறக்கல… பேய் வயத்தில பொறந்தேன். நான் சாமி இல்ல… பூதம்’ போன்ற வசனங்கள் இடம் பெற்றது.

இது அனைவராலும் கிண்டலுக்கு உள்ளானது. இதனால் சாமி 2 படக்குழுனிர் அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில் இதன் 2ஆம் ட்ரைலர் நேற்று வெளியானது. இதில் விக்ரம் புது பன்ச் டயலாக்குகள் பேசியுள்ளார்.

எனக்கு தேவை மூணு தல, நான் போலீஸ் இல்ல… பொறுக்கி… என்ற வசனங்களை பேசியுள்ளார். இது ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது.

காமெடி பீஸ் நான்; ஹீரோ வேஷம் செட்டாகாது..; யோகிபாபு பீலிங்ஸ்

காமெடி பீஸ் நான்; ஹீரோ வேஷம் செட்டாகாது..; யோகிபாபு பீலிங்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

yogi babuகவுண்டமணி, வடிவேலு, விவேக், சந்தானம் ஆகிய காமெடி நடிகர்கள் தற்போது ஹீரோவாக வலம் வருகிறார்கள்.

இவர்களைத் தொடர்ந்து காமெடியன் யோகி பாபுவும் ஒரு படத்தில் நாயகனாக நடிப்பதாக வந்த தகவல்களை பார்த்தோம்.

டார்லிங், எனக்கு இன்னொரு பேர் இருக்கு ஆகிய படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கும் புதிய படத்தில் அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

முழுக்க நகைச்சுவை பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் முக்கிய கேரக்டருக்கு யோகி பாபு பொருத்தமானவராக இருப்பார் என்பதால் அவரை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்பட்டது.

ஆனால், யோகி பாபு இதை மறுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்…

வெளிநாட்டுக்காரர் ஒருவருக்கும் நாய்க்கும் இடையிலான கதைதான் அந்தப் படம். தான் அதில் கூர்க்கா வேடத்தில் நடிப்பதாகவே தெரிவித்துள்ளார்.

அந்தப் படத்தில் தான் ஒரு காமெடியனாக மட்டுமே நடிக்கிறார் என்றும் தனக்கு ஹீரோவாக நடிக்கும் ஆசை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இது காமெடி மூஞ்சி. ஹீரோவுக்கு எல்லாம் செட்டாகாது” என தெரிவித்துள்ளார்.

More Articles
Follows