தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜெய் – ஐஸ்வர்யா ராஜேஷ் – ஷிவதா மூவரும் இணைந்து நடித்துள்ள படம் ‘தீராக் காதல்’. ரோகின் வெங்கடேசன் இயக்கியுள்ள இந்த படத்தை லைகா தயாரித்துள்ளது.
மே 26 ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் செய்தியாளர்களை படக்குழுவினர் சந்தித்தனர்.
இந்த நிகழ்வில் டான்ஸ் மாஸ்டர் ராதிகா பேசியதாவது…
முதன் முதலாகப் படத்திற்கான வேலைக்குப் போகும்போதே எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது, ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் நன்றாக நடனம் ஆடுபவர்கள் எனவே கலக்கி விடலாம் என நினைத்தேன். இயக்குநர் எனக்கு ரெண்டு விதிகள் விதித்தார்.
ஒன்று டான்ஸ் இருக்க கூடாது மற்றொன்று ஒருவரை ஒருவர் தொட்டு நடிக்கக் கூடாது. இதைக் கேட்டதும் எனக்கு ஒன்றும் புரியவில்லை ஆனாலும் நானும் இயக்குநரும் சேர்ந்து பேசி இந்தப் படத்திற்கான பாடல்களை வடிவமைத்தோம், சூப்பராக வந்துள்ளது. இப்படத்திற்கான வாய்ப்பை அளித்த இயக்குநருக்கு நன்றி.
dance master Radhika speech at Theera Kaadhal press meet