‘சிங்காரச் சென்னை 2.0’.. முதல்வர் ஸ்டாலின் போடும் அடுத்த ஸ்கெட்ச்

singara chennai stalin‘சிங்காரச் சென்னை’ என்ற பெயர் வரக் காரணமாக இருந்தவர்கள் கருணாநிதியும் ஸ்டாலினும் தான்.

27 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை மேயராக முக ஸ்டாலின் பதவி வகித்த காலக்கட்டம் அது.

அப்போது ​ ‘சிங்காரச் சென்னை’ என்ற அழகான திட்டத்தைத் தொடங்கினார்.

அதன் பிறகு, தமிழகத்தை ஆண்ட ஜெயலலிதாவின் அதிமுக அரசு அந்த திட்டத்தைக் கண்டுக் கொள்ளவே இல்லை.

இந்த நிலையில் தற்போது முக ஸ்டாலினே தமிழக முதல்வராக உள்ளார்.

எனவே தன் கனவுத் திட்டமான சிங்காரச் சென்னை திட்டத்தை மீண்டும் செயல்படுத்தப்பட உள்ளார்.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி தலைமையில், சிங்கரா சென்னை 2.0 திட்டப் பணி ஆலோசனை கூட்டத்தை நடத்தி இருக்கிறார் முதல்வர்.

அதன்படி சென்னையை அழகுபடுத்தல், பாரம்பரியத்தை பேணுதல், கலாச்சாரம் மற்றும் கலைகளை மேம்படுத்துதல் மற்றும் கல்வி, சுகாதாரம் ஆரோக்கியம், போக்குவரத்து மற்றும் இயக்கம், நகர்ப்புற இடங்களை மறுபரிசீலனை செய்தல் என முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசித்துள்ளனர்.

இந்த நகரத்தை அழகுபடுத்தலில் ‘Project Blue’ முக்கியமானதாய் பார்க்கப்படுகிறது.

மேலும் சென்னையில் உள்ள மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் மற்றும் ரவுண்டானாக்கள், அண்ணா டவர் பூங்காவை மறுவடிவமைப்பு போன்ற பாரம்பரிய அடையாளங்கள் புதுப்பிக்கப்பட உள்ளது.

பூங்கா, அறிவியல் பூங்கா மற்றும் பல விளையாட்டு வளாகங்களும் உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Corporation to launch Singara Chennai 2.0

Overall Rating : Not available

Latest Post