ஸ்டாலின் – ரஹ்மான் நடித்த செஸ் ஒலிம்பியாட் வீடியோ.. ரஜினி வெளியிட்டார்.; நெட்டிசன்கள் கண்டனம்

ஸ்டாலின் – ரஹ்மான் நடித்த செஸ் ஒலிம்பியாட் வீடியோ.. ரஜினி வெளியிட்டார்.; நெட்டிசன்கள் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓடியாடி தெருக்களில் விளையாடும் போட்டிகளை விட வீட்டில் அமர்ந்தபடியே செஸ் விளையாட பலருக்கும் ஆர்வம் உண்டு.

அதுவும் கொரோனா லாக்டவுன் காலத்தில் செஸ் விளையாட்டை நிறைய பேர் கற்றுக் கொண்ட விளையாடினர்.

தற்போது செஸ் ஆர்வலர்களுக்கு ஒரு சிறப்பான செய்தி கிடைத்துள்ளது.

இந்திய வரலாற்றில் முதன்முறையாக தமிழ்நாட்டில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி விரைவில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியானது மாமல்லபுரத்தில் ஜூலை 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில் சர்வதேச அளவில் 185 நாடுகளைச் சேர்ந்த 2100-க்கும் மேற்பட்ட செஸ் வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இதில் பிரபல நடன கலைஞர்களுடன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் ஏ ஆர் ரஹ்மான் நடித்திருந்தனர்.

இந்த பாடல் டீசரை நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு ட்விட்டரில் வெளியிட்டார்.

தனது ட்விட்டர் பதிவில்.. ”கொரோனா தொற்றினால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டும்.

44-வது FIDE செஸ் ஒலிம்பியாட் போட்டி முதல் முறையாக இந்தியாவில் அதுவும் நம் தமிழகத்தில் நடைபெற இருப்பது நமக்கெல்லாம் பெருமை.

அதனை எதிர்வரும் 28-ம் தேதியன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருக்கிறார்.

போட்டி குறித்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வீடியோ தயாரித்துள்ளனர். அதன் டீசரை வெளியிடுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி” என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இந்த செஸ் பாடல் நாம் தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் ஒரு நிகழ்வாக இருந்தாலும் நம் இந்தியாவிற்கே பெருமை சேர்த்த இரண்டு கலைஞர்களை இந்த வீடியோவில் காட்டாதது நெட்டிசன்களிடையே கடும் கண்டனத்தை உருவாக்கியுள்ளது..

இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் என்று அழைக்கப்படும் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் இளவயது சாதனையாளர் சிறுவன் பிரக்ஞானந்தா ஆகியோரையும் இந்த செஸ் போட்டி தொடர்பான வீடியோக்களில் நிச்சயம் நடிக்க வைத்திருக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அரசாங்க செலவில் தங்களுக்கு மட்டும் விளம்பரம் தேடிக் கொள்கிறார்களோ ஆட்சியாளர்கள்? என்ற சந்தேகத்தையும் அவர்கள் எழுப்பி உள்ளனர்.

தற்போது வெளியாகி உள்ளது வெறும் 45 நொடி டீசர் மட்டுமே.. ஒருவேளை முழு பாடலில் அவர்கள் இடம் பெற்றாலும் ஆச்சரியம் இல்லை.

நெட்டிசன்களின் நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்படுமா.? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

Netizens criticized Chess Olympiad video starring Stalin – Rahman Posted by Rajini

‘ஃபாரஸ்ட் கெம்ப்’ ரீமேக் : அமீர்கான் – கரீனா படத்தையும் வாங்கினார் உதயநிதி

‘ஃபாரஸ்ட் கெம்ப்’ ரீமேக் : அமீர்கான் – கரீனா படத்தையும் வாங்கினார் உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட்டின் நடிகரான அமீர்கான், அவரது கனவு படைப்பான ‘லால் சிங் சத்தா’ எனும் திரைப்படத்தை, இந்தியா முழுவதும் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் சென்றடைய செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார்.

அதனடிப்படையில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ‘லால் சிங் சத்தா’ படத்தை தமிழில் வழங்குவதுடன், தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.

அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ படத்தின் முன்னோட்டம் வெளியாகி, சாதனை படைத்து வருகிறது.

அவரின் உலக அளவிலான ரசிகர்கள், அவரது கதாப்பாத்திரத்தை திரையில் காண ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இப்படத்தின் பாடல்களும் வெளியாகி, இணையத்தில் பெரிய அதிர்வை ஏற்படுத்தி, ட்ரெண்டிங்கில் தொடர்ந்து இருக்கிறது.

மேலும் படக்குழுவினர், படத்தின் ஆத்மார்த்தமான உணர்வை தாங்கியிருக்கும் பாடல்களை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த இசையில் பங்களிப்பை வழங்கியிருக்கும் பாடலாசிரியர்கள், இசைக்கலைஞர்கள், இசையமைப்பாளர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு இன்று பொதுவெளியில் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

அமீர்கான் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கிரண் ராவ் மற்றும் வயாகம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் ‘லால் சிங் சத்தா’ படத்தில், அமீர்கானுடன் கரீனா கபூர் கான், மோனா சிங், சைதன்யா அக்கினேனி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படம் ஆங்கிலத்தில் வெளியான ‘ஃபாரஸ்ட் கெம்ப்’ எனும் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காகும்.

இந்த திரைப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

Udhayanidhi Stalin to present and distribute Laal Singh Chaddha in Tamil through his company Red Giant Movies

மீண்டும் ஸ்ரீதிவ்யாவுடன் இணைந்து ‘ரெய்டு’-க்கு ரெடியான விக்ரம் பிரபு

மீண்டும் ஸ்ரீதிவ்யாவுடன் இணைந்து ‘ரெய்டு’-க்கு ரெடியான விக்ரம் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அசுரன்’ பட நடிகர் தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவான ‘டாணாக்காரன்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீசாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் கந்தன் மாறனாக நடித்துள்ளார் விக்ரம் பிரபு.

இந்த படம் செப்டம்பர் 30ல் தியேட்டர்களில் ரிலீசாகவுள்ளது.

இந்த நிலையில் விக்ரம் பிரபுவின் அடுத்த பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர்.

கார்த்திக் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு இயக்குநர் முத்தையா திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.

‘வெள்ளைக்கார துரை’ படத்துக்கு பிறகு விக்ரம் பிரபு – ஸ்ரீவித்யா இணைந்து இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

சாம் சிஎஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

ஒளிப்பதிவு கதிரவன்… எடிட்டிங் மணிமாறன்.. தயாரிப்பு கனிஷ்க் & மணிகண்ணன்

இந்தப் படத்தின் பர்ஷ்ட் லுக் போஸ்டரை இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் வெங்கட் பிரபு இணைந்து இன்று வெளியிட்டனர்.

ரெய்டு படம் 2022 செப்டம்பரில் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.

Raid First Look

Vikram Prabhu is ready for ‘Raid’ again with Sridivya

‘வரலாறு முக்கியம்’ அப்டேட் : ‘ஜிமிக்கி கம்மல்’ பிரபலத்தின் அடுத்த அதிரடி ‘மல்லு கேர்ள்’

‘வரலாறு முக்கியம்’ அப்டேட் : ‘ஜிமிக்கி கம்மல்’ பிரபலத்தின் அடுத்த அதிரடி ‘மல்லு கேர்ள்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ஜீவாவின் “வரலாறு முக்கியம்” திரைப்படத்திலிருந்து ஷான் ரஹ்மான் இசையமைத்து பாடியுள்ள இரண்டாவது சிங்கிள் டிராக் – ‘மல்லு கேர்ள்’ வெளியாகி, பரபரப்பான வெற்றியைப் பெற்றுள்ளது.

அனைத்து வகை ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்தமான நடிகர் ஜீவா, தனது திரைப்படங்களின் மூலம் ரசிகர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கை தருவதில் எப்போதும் தவறியதில்லை.

அவரது முந்தைய படங்களைப் போலவே, அடுத்ததாக அவரது நடிப்பில் வரவிருக்கும் ‘வரலாறு முக்கியம்’ படத்தின் மீதும், ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கிறது.

இப்படத்திலிருந்து வெளியான முதல் சிங்கிள் பாடலான – பொத்தி பொத்தி வளத்த புள்ள, பாடல் படம் 100% குடும்பங்கள் கொண்டாடும் பொழுதுபோக்கு திரைப்படம் என்பதை, உறுதிப்படுத்துவதாக இருந்தது.

தற்போது இரண்டாவது சிங்கிளான – ‘மல்லு கேர்ள்’ பாடல், இந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

இசையமைப்பாளர் ஷான் ரஹ்மான் தென்னிந்திய இசைத்துறையின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர், குறிப்பாக அவரது சூப்பர் ஹிட்டான ‘ஜிமிக்கி கம்மல்’ ஒரே இரவில் வரலாறு காணாத வெற்றியடைந்தது.

பெப்பியான இசை மற்றும் ஆற்றல்மிகு குரலுக்காக அவர் பரவலான பாராட்டுக்களை பெற்றுள்ளார்.

அதிரா A நாயரின் அட்டாகச குரலுடன் இணைந்து அவர் பாடியுள்ள இப்பாடல் பெரும் வசீகரமாக அமைந்துள்ளது. இம்மாதிரி பெப்பி பாடல்களில் ஜீவாவின் நடனம் மேலும் அழகானதாக இருக்கும். ஆகவே இப்பாடலின் விஷுவலை காண ரசிகர்கள் இப்போதே ஆவலுடன் காத்திருக்க ஆரம்பித்து விட்டனர்.

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில், இயக்குநர் சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ள வரலாறு முக்கியம் திரைப்படத்தில், ஜீவா மற்றும் காஷ்மீரா பரதேசி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரக்யா நாக்ரா, VTV கணேஷ், K.S.ரவிக்குமார், மொட்ட ராஜேந்திரன், ஷாரா சரண்யா, சித்திக் மற்றும் பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். சக்தி சரவணன் (ஒளிப்பதிவு), ஸ்ரீகாந்த் N.B. (எடிட்டிங்), மோகன் (கலை), சக்தி சரவணன் (ஸ்டண்ட்ஸ்), பிருந்தா (நடனம்), மற்றும் சுரேஷ் சந்திரா-ரேகா D’One (மக்கள் தொடர்பு ) பணிகளை செய்துள்ளனர்.

Varalaru Mukkiyam 2nd single Mallu Girl has becomes a sensational hit

தொழில்நுட்பத்திற்கேற்ப திருட்டும் புதிய வடிவங்களாகிவிட்டது.; ‘தமிழ் ராக்கர்ஸ்’ குறித்து அருண் விஜய்

தொழில்நுட்பத்திற்கேற்ப திருட்டும் புதிய வடிவங்களாகிவிட்டது.; ‘தமிழ் ராக்கர்ஸ்’ குறித்து அருண் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் ராக்கர்ஸ் தொடர் பைரஸி சைபர் க்ரைம் பின்னால் இருக்கும் இருள் பக்கங்களை காட்சிப்படுத்தும் ஒரு க்ரைம் தொடராகும். பைரஸியுடனான திரைத்துறையின் போரை இந்த தொடர் காட்சிப்படுத்தியுள்ளது.

தமிழ் ராக்கர்ஸ், ருத்ரா என்ற காவல்துறை அலுவலரின் கதையைப் பற்றியது, அவர் கட்டுக்கடங்காத ரசிகர்கள் கொண்ட நடிகரின், மிகப்பெரும் பட்ஜெட் படம், இணைய திருடர்களினால் இணையத்தில் வெளியிடப்படுவதை எதிர்த்து போராடுகிறார். அதன் பின்னணியை கண்டுபிடிக்க முயல்கிறார்.

அருண் விஜய் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இந்த தொடரில் நடிகை வாணி பஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம் பெருமாள், வினோதினி வைத்தியநாதன் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

அறிவழகன் இயக்கும் இந்த தொடரை, மனோஜ் குமார் கலைவாணன் எழுத, புகழ்மிகு ஏவிஎம் புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இத்தொடர் குறித்து நடிகர் அருண் விஜய் கூறுகையில்..

“பைரஸி திருட்டானது பொழுதுபோக்கு துறையில் ஒரு நிலையான போராக இருந்து வருகிறது. டிஜிட்டல் முன்னேற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் வேகமாக வளர்ந்து வரும் உலகில், திருட்டும் புதிய வடிவங்களை எடுத்துள்ளது.

இந்த தொடர் இந்த போரை, அதன் பின்னணியை அற்புதமான விவரங்களோடு சித்தரிக்கிறது. ருத்ரா போன்ற ஒரு கதாபாத்திரம் கிடைப்பது அரிது. இப்பாத்திரம் எனக்கு கிடைத்து மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இத்தொடரின் மையம் தனித்தன்மை வாய்ந்தது, தற்போதைய சூழ்நிலைக்கு இது மிகவும் பொருத்தமான ஒன்றாகும்.

இயக்குநர் அறிவழகன் மற்றும் ஏவிஎம் புரடக்சனுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பெரும்பான்மையான மக்களிடம் இத்தொடரை கொண்டு செல்ல SonyLIV மிகப்பெரும் பாலமாக இருக்கும். ரசிகர்களின் கருத்துக்களை அறிய ஆவலோடு உள்ளேன் என்றார்.

SonyLIV தளத்தில் இத்தொடரை 2022, ஆகஸ்ட் 19 முதல் கண்டுகளிக்கலாம்.

The intriguing trailer of #TamilRockerz, a SonyLIV Tamil Original is out now!

#TamilRockerzOnSonyLIV

@arunvijayno1 @dirarivazhagan @avmproductions @vanibhojanoffl @ishmenon @DopRajasekarB @EditorSabu @vikasbadisa @manojkumarkalai
@arunaguhan_ @thaen_tharunsk

Technology has become new forms of theft. Arun Vijay on ‘Tamil Rockers’

கமல் அலுவலகத்தில் மறைந்த இயக்குனர் கே பாலசந்தரின் பிறந்தநாள் விழா

கமல் அலுவலகத்தில் மறைந்த இயக்குனர் கே பாலசந்தரின் பிறந்தநாள் விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் சிகரம் அமரர் கே.பாலசந்தர் அவர்களின் 92-வது பிறந்தநாளை முன்னிட்டு, “கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கத்தின் தலைவர், நடிகர் கலைமாமணி ராஜேஷ் அவர்களின் அனுமதியுடன் ஒளிப்பதிவாளர் பொதுச் செயலாளர் கவிதாலயா வீ.பாபு இணை செயலாளர் பி.பழனி, இவர்களின் மேற்பார்வையில் கமலஹாசனின் அலுவலகமான ராஜ் கமல் இண்டர்நேஷ்னல் வளாகத்தில் அமைக்கப் பட்டிருந்த அமரர் கே.பி.அவர்களின் திருவுருவ சிலைக்கு “இயக்குநர் சிகரம்” அவர்களின் புதல்வி புஷ்பா கந்தசாமியும் மருமகன் கந்தசாமியும் தலைமை தாங்கி, கே.பி. அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, கேக் வெட்டி சிறப்பித்தார்கள்.

இவ் விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் வசந்த் செலைக்ட் எஸ்.குமார், இசையமைப்பாளர், ரேஹோன் இயக்குநர், ரிஷி, கவிதாலயா நிறுவனத்தை சார்ந்த ராஜேந்திரன், ரோஷன், கே.பி.அவர்களின் கார் ஓட்டுனர் ஆர்.கோவிந்தராஜன், எடிட்டர்கள் அசோக், ஆனந்த்,”கே.பா.ர.சங்க பொருளாளர், எம்.முகமது இலியாஸ், செயற்குழு உறுப்பினர்கள், நடிகர், கலைமாமணி, டாக்டர் பூவிலங்கு மோகன் எடிட்டர் ராமமூர்த்தி, இணை செயலாளர் கண்ணப்பன் ராஜ்கமல் இண்டர்நேஷ்னல் நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் பலரும் கலந்துக் கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

மேலும், வளசரவாக்கத்தில் அமைந்துள்ள *அக்க்ஷையா முதியோர் இல்லத்தில் இருக்கும் முதியவர்களுக்கு மதியம் 12.30-அளவில் உணவு வழங்கப்பட்டது.

Late director K Balachander’s birthday party at Kamal’s office

More Articles
Follows