சிவகார்த்திகேயனை அடுத்து உதயநிதியுடன் இணையும் ‘குக் வித் கோமாளி’ பிரபலம்

சிவகார்த்திகேயனை அடுத்து உதயநிதியுடன் இணையும் ‘குக் வித் கோமாளி’ பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

cook with comali sivangiசூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வந்தாலும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் பிலபலமானார் ஷிவாங்கி.

தனது சின்னப்புள்ளத் தனமான அரட்டைகளால் டிவி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் சிவாங்கி.

மனோரமா, கோவை சரளா, ஆர்த்திக்கு பிறகு காமெடி நடிகைகள் என யாரும் பெரிதாக சினிமாவில் இல்லை.

இதனால் சிவாங்கிக்கு காமெடி வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம்.

ஏற்கெனவே சிவகார்த்திகேயனின் படத்தில் நடிக்கு ஒப்புக் கொண்டுள்ளார் சிவாங்கி.

தற்போது அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள உதயநிதியின் ‘ஆர்டிகள் 15’ பட ரீமேக்கில் நடிக்கவுள்ளார் சிவாங்கி.

இப்படத்தின் படப்பிடிப்பு திருப்பூர், கோவை, பொள்ளாச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Cook with comali fame Sivaangi is part of Udhayanidhi’s next

விவேக் மரணத்தில் மக்களுக்கு ஏற்பட்ட சந்தேகம்தான் மன்சூருக்கும் வந்தது.; அரசின் அடக்குமுறைக்கு எஸ்.டி.பி.ஐ. கண்டனம்!

விவேக் மரணத்தில் மக்களுக்கு ஏற்பட்ட சந்தேகம்தான் மன்சூருக்கும் வந்தது.; அரசின் அடக்குமுறைக்கு எஸ்.டி.பி.ஐ. கண்டனம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tamil actor mansoor ali khanநடிகர் விவேக் திடீர் மரணத்தால் கொரோனா தடுப்பூசி சந்தேகத்தை வெளிப்படுத்தினார் நடிகர் மன்சூர் அலிகான்.

அவர் மீது பல்வேறு 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதை கண்டித்து ஜனநாயகம் வழங்கிய கருத்துரிமைக்கு எதிரான அடக்குமுறைக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…

தமிழ்த் திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான் அவர்கள் தனது சக கலைஞனான நடிகர் விவேக் அவர்களுக்கு ஏற்பட்ட துயர நிகழ்வை கண்டு, விவேக் அவர்களின் மரணத்திற்கு முந்தைய நாள் எடுத்துக்கொண்ட கொரோனா தடுப்பூசி குறித்து ஒளிவு மறைவின்றி தனது உள்ளத்தில் எழுந்த சந்தேகங்களை தனது கருத்துரிமை மூலம் வெளிப்படுத்தினார்.

அவர் வெளிப்படுத்திய விதம் வேண்டுமானால் கரடுமுரடாக இருக்கலாம் ஆனால் அவர் வெளிப்படுத்திய சந்தேகங்கள் அனைத்து பொதுமக்களுக்கும் ஏற்பட்ட ஒன்றுதான்.

இந்நிலையில், பாஜகவினர் சிலர் அளித்த புகாரின் பேரில் நடிகர் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஜனநாயகம் வழங்கிய கருத்துரிமையை நசுக்கும் காவல்துறையின் போக்கு கண்டிக்கத்தக்கது.

நடிகர் விவேக் அவர்களை பொறுத்தவரை அவர் கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை மக்களுக்கு உணர்த்தவே ஊசி போட்டுக் கொண்டார்.

ஆனால், அதன் பிறகான அவரின் உடனடி மரணம் அவரின் விழிப்புணர்வுக்கு எதிராக அமைந்துவிட்டது என்பதை மறுக்க முடியாது. அவரின் மரணம் தொடர்பாக அரசு தரப்பில் என்னதான் விளக்கம் கொடுத்தாலும் பொதுமக்களுக்கு எழுந்த சந்தேகத்துக்கு உரிய முறையில் விடை கிடைக்கவில்லை.

நடிகர் மன்சூர் அலிகான் உள்பட பொதுமக்களுக்கு ஏற்பட்ட இந்த சந்தேகத்தை அதற்குரிய வகையில் தீர்க்க நடவடிக்கை எடுக்காமல் சந்தேகத்தை ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக தெரிவித்தவரை வழக்கு கைது என மிரட்டுவது ஏற்புடையதல்ல.

இத்தகைய போக்கு தொடர்ந்தால் எதிர்காலத்தில் இனி யாரும் தங்களது கருத்தை வெளிப்படுத்த இயலாத சூழல் ஏற்பட்டுவிடும்.

உலக சுகாதார நிறுவனத்தின் தடுப்பூசி தொடர்பான பக்க விளைவுகளை கண்காணிக்கும் கமிட்டியான AEFI எனப்படும் Adverse Events Following Immunization தடுப்பூசி போட்டுக் கொண்ட 30 நாட்களுக்குள் எந்த ஒரு மனிதருக்கும் ஏற்படும் உடல் உபாதைகள், உடலில் தோன்றும் மாற்றங்கள் அல்லது மரணங்கள் ஆகியவை பதிவு செய்யப்பட்டு ஆய்வுக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்கிறது.

இந்தியாவில் 30 நாட்கள் என்பது 14 நாட்களாக்கப்பட்டுள்ளது. அந்த 14 நாட்களில் தடுப்பூசிகளால் ஏற்படும் விளைவுகளையாவது பதிவு செய்ய வேண்டும்.

தடுப்பூசி பாதகங்களை சரியான ஆவணங்களுடன், மரணம் என்றால் உரிய பரிசோதனைகள் செய்ய வேண்டும். அதாவது பிரேத பரிசோதனை முதல் இரத்த பரிசோதனை, தசை மாதிரி பிரசோதனை என பல்வேறு ஆய்வு முடிவுகளுடன் சமர்பிக்க வேண்டும்.

அதன் பிறகு, மாவட்ட, மாநில, மத்திய அளவிலான கமிட்டிகள் இவற்றை அடுத்தடுத்து முறையாக பரிசீலித்து வகைப்படுத்துவர்.

இது அனைத்து வகையான தடுப்பூசிக்கும் பொருத்தும். 2020 டிசம்பரில் உலக சுகாதார நிறுவனம் இதுபற்றி விவரமான வழிகாட்டுதல்களை கொடுத்துள்ளது.

ஆனால், இத்தகைய வழிமுறைகள் எதையும் நடிகர் விவேக்கின் மரண விவகாரத்தில் பின்பற்றாமல் அது தொடர்பாக சந்தேகங்களை வெளிப்படுத்திய நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது ஜனநாயகத்திற்கு முற்றிலும் எதிரானது.

ஆகவே கோடிக்கணக்கான மக்களின் சந்தேகத்தை தனது குரலின் மூலம் வெளிப்படுத்திய நடிகர் மன்சூர் அலிகான் மீதான வழக்குகளை வாபஸ்பெற வேண்டும்.

மேலும் கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் மக்கள் மத்தியில் ஏற்படும் சந்தேகங்களை அடக்குமுறையில் அல்லாது அறிவியல் பூர்வமாக உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி அரசு தீர்க்க முன்வர வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

SDPI party on Mansoor Ali Khan arrest

முதல்வர் பழனிச்சாமி & திமுக ஸ்டாலினை வம்புக்கு இழுக்கும் அஜித் ரசிகர்கள்

முதல்வர் பழனிச்சாமி & திமுக ஸ்டாலினை வம்புக்கு இழுக்கும் அஜித் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajithமே 1ஆம் தேதி நடிகர் அஜித் தன் 50வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்.

அவரை வாழ்த்தி அவரது ரசிகர்கள் இப்போதே போஸ்டர் அடித்து ஒட்டி வருகின்றனர்.

மதுரையில் உள்ள அஜித் ரசிகர்கள் ஒரு படி மேலே சென்று பரபரப்பான வாசகங்களை போஸ்டரில் அடித்துள்ளனர்.

அதில் திமுக & அதிமுக கட்சிகளின் தேர்தல் வாசகங்களை கிண்டலடித்துள்ளனர்.

அதாவது… வெற்றி்நடை போட்டாலும் சரி.. விடியல் தருவதாக இருந்தாலும் சரி.. அது எங்கள் தல அஜித் மட்டுமே சாத்தியம்” என வாசகங்கள் அடித்துள்ளனர்.

இதனால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் “வெற்றி நடை போடும் தமிழகமே” என்ற வாசகமும் திமுக தேர்தல் பிரச்சாரத்தில் “ஸ்டாலின் தான் வார்றாரு விடியல் தர போறாரு” என்ற வாசகமும் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Ajith fans stick controversy poster in Madurai

சினிமா சான்ஸ் தேடி அலையும் நபரா நீங்கள்..? இதோ சூப்பர் சான்ஸ் தர்றார் ஜேஎஸ்கே..

சினிமா சான்ஸ் தேடி அலையும் நபரா நீங்கள்..? இதோ சூப்பர் சான்ஸ் தர்றார் ஜேஎஸ்கே..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

JSKதமிழ் சினிமாவில் பிரபலமான பட தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார்.

தனது ஜேஎஸ்கே புரொடக்ஷன் சார்பில் ஏராளமான படங்களை விநியோகித்தும் தயாரித்தும் உள்ளார்.

தரமணி, இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், தங்க மீன்கள் உள்பட பல படங்களை தயாரித்துள்ளார்.

மேலும் இவர் தயாரித்துள்ள அண்டாவ காணோம் மற்றும் வா டீல் ஆகிய படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

சமீபகாலமாக நடிக்கவும் ஆரம்பித்துள்ளார் JSK.

விஜய் ஆண்டனி உடன் அக்னி சிறகுகள் படத்தில் நடித்து வருகிறார்.

இவரின் ஜேஎஸ்கே புரொடக்ஷன் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு 15 வருடங்கள் ஆகிவிட்டது.

இதனை முன்னிட்டு புதிய இயக்குனர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பை வழங்கியுள்ளார்.

நல்ல கதை வைத்திருக்கும் இயக்குனர்கள் இவரை தொடர்பு கொள்ளலாம் என சற்றுமுன் அறிவித்துள்ளார்.

15-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் #JSKFILMCORPORATION ….
மகிழ்ச்சியான இத்தருணத்தில் புதிய இயக்குனர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..! Grab this opportunity….Talenters..

whatsapp. 98843 18883 or mail [email protected]

@onlynikil @divomovies @JSKfilmcorp https://t.co/qEVaEgx3QK

JSK film corporation offers to young directors

அஜித்தால் வேலை போச்சு.. அவரின் மேனேஜர் சுரேஷ் சந்திராவும் ஏமாத்திட்டாரு..; போலீசில் பெண் புகார்

அஜித்தால் வேலை போச்சு.. அவரின் மேனேஜர் சுரேஷ் சந்திராவும் ஏமாத்திட்டாரு..; போலீசில் பெண் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith at Apollo hospitalகடந்த 2020 ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது நடிகர் அஜித் & அவரது மனைவி ஷாலினியுடன் மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று இருந்தார்.

அவர்கள் இருவரும் மருத்துவமனைக்குள் வரும் போது எடுக்கப்பட்ட வீடியோ அப்போது இணையத்தில் வைரலானது.

மருத்துவமனைக்கு வருபவர்களை அனுமதியின்றி வீடியோ எடுப்பது அறத்திற்கு புறம்பான செயல் என்பதால், வீடியோ எடுத்த ஊழியர் ஃபர்ஸானாவை வேலையைவிட்டு நீக்கியது மருத்துவமனை நிர்வாகம்.

ஆனால், ஃபர்ஸானாவோ இந்த பிரச்சினையை அஜித் பக்கம் திருப்பினார்

”அஜித்தால் வேலை போய்விட்டது, அவர் நினைத்தால் எனக்கு வேலை கிடைக்கும்.

ஆனால் உதவி செய்வதாக கூறி ஏமாற்றிவிட்டார்” என அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தற்போது, தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு ஃபர்ஸானா கொடுத்த பேட்டியில் ஷாலினியிடமும், நடிகர் அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திராவிடமும் அவர் பேசிய போன் ஆடியோவை வெளியிட்டு மீண்டும் சர்ச்சை உருவாக்கினார்.

இது குறித்து “மருத்துவமனை நிர்வாகம் எடுத்த முடிவில் நாங்கள் தலையிட முடியாது என்றிருக்கிறார் சுரேஷ் சந்திரா.

வேலை இல்லாத காரணத்தினால் தன் குழந்தைகள் படிப்பு செலவுக்கு கஷ்டப்படுவதாக ஃபர்ஸானா கூறியதால் தன் மேனேஜரிடம் பள்ளிக் கட்டணத்தை கட்ட சொல்லியிருக்கிறார் அஜித்.

நேரடியாக குழந்தை உடைய பள்ளி முகவரி & வங்கி கணக்கை கேட்டதற்கு, ஃபர்ஸானாவோ தன்னுடைய சொந்த கணக்கிற்கு பணத்தை அனுப்ப சொல்லிருக்கிறார்.

பணத்தை நேரடியாக ஃபர்ஸானா கணக்கிற்கு அனுப்ப மறுத்துள்ளார் சுரேஷ் சந்திரா.

இதனால் இருவருக்கும் பிரச்னை உருவானது.

இதனையடுத்து அஜித்தின் மேலாளர் உதவி செய்கிறேன் எனக்கூறிவிட்டு செய்யவில்லை’ என வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் ஃபர்ஸானா.

போலீஸார் விசாரணையில், சுரேஷ் சந்திரா நடந்தவற்றை விளக்கியுள்ளார்.

இதெல்லாம் அஜித்தின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்க இதுபோல சிலர் இப்படி செய்கிறார்கள்” எனவும் தெரிவித்தனர்.

Dismissed hospital staff misuses Thala Ajith’s name to grab media attention

டிவி சீரியல்களுக்கு முழுக்கு போடும் ‘ரோஜா’ சீரியல் நடிகர் அர்ஜுன் சிபு

டிவி சீரியல்களுக்கு முழுக்கு போடும் ‘ரோஜா’ சீரியல் நடிகர் அர்ஜுன் சிபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Roja serial (2)பெங்களூருவைச் சேர்ந்தவர் சிபு சூரியன்.

இவர் முதலில் மாடலிங் துறையில் இருந்தார். இதன் மூலம், கன்னட டிவி சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

கன்னட சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த போதே தமிழ் சீரியலில் நடிக்க வாய்ப்பு வரவே சென்னை வந்துவிட்டார்.

தற்போது சன் டிவி-யில் கடந்த மூன்றரை ஆண்டாக ஒளிபரப்பாகி வரும் ‘ரோஜா’ சீரியலில் அர்ஜூன் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் சிபு சூரியன்.

இவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டமும் உள்ளது.

இந்த நிலையில் இவர் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

அது என்னவென்றால் ‘ரோஜா’ சீரியலே இவரின் கடைசி சீரியல் என தெரிவித்துள்ளார்.

OTT வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்த திட்டமிட்டு் இருக்கிறாராம்.

இசையமைப்பாளர்-இயக்குனர் ஹம்சலேகா இயக்கும் ‘சகுந்தலா’ என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் தமிழிலும் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

அந்த படத்தில் அரசியல்வாதியாக நடிக்கிறாராம்.

வாழ்த்துக்கள் ப்ரோ…

Roja will be my last serial on Television says Arjun Sibbu

More Articles
Follows