தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்திய சினிமாவின் திரைக்கதை மன்னன் என்ற பெயர் இயக்குனரும் நடிகருமான கே. பாக்யராஜீக்கு உண்டு.
தாம்பத்ய சமாச்சாரமாக இருந்தால் கூட அதை நகைக்சுவையாகவும் அதே நேரம் யாருடைய மனதையும் புண்படுத்தாத விதமாக திரைக்கதை அமைத்து தான் இயக்கிய படங்களில் காட்சியாக வைத்திருப்பார்.
சமீபத்தில் சில படங்களை பார்த்து வேதனைப்படுவதாக ஒரு விழா மேடையில் பேசியிருந்தார்.
அதாவது.. “இன்றைய தமிழ் சினிமாவில் தரமற்ற படங்கள் வெளியாகி வருகிறது. இதுபோன்ற மோசமான படங்களை நாம் (மக்கள்) தவிர்க்கவில்லை என்றால் இதுபோன்ற படங்கள் தொடர்ந்து வரும்.
எனவே தானும் மோசமான படங்கள் வெளியானால் பொதுநல வழக்கு தொடுக்கலாம் என நினைக்கிறேன்” என பேசியிருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் டிசம்பர் 10ஆம் தேதி புளு சட்டை மாறன் இயக்கிய ஆன்டி இண்டியன் படம் ரிலீசானது. இந்த படம் வெளியாவதற்கு 2 நாட்களுக்கு முன்னர் பாரதிராஜா, பாக்யராஜ், சேரன் உள்ளிட்ட இயக்குனர்கள் படத்தை ஆஹா ஓஹோ என புகழ்ந்து தள்ளினர்.
இவர்களின் பேச்சை நம்பி பலரும் இந்த படத்தை பார்த்தனர். ஆனால் ஆன்டி இண்டியன் படத்தில் அப்படி ஒன்றும் விசேஷமில்லை.
மேலும் அந்த படம் ஒரு வட இந்திய படத்தின் காப்பியாகும். இவையில்லாமல் ஒரு குறும்படத்தின் காப்பி என சம்பந்தப்பட்ட படக்குழு தெரிவித்துள்ளது.
இந்த விஷயங்களை எல்லாம் மறைத்து ஆன்டி இண்டியன் படத்தை என்னவோ தன்னுடைய சொந்த கதை போல பேசியிருந்தார் புளு சட்டை மாறன். படத்தை பார்த்த ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மோசமான படங்களை பார்த்தால் வழக்கு போடுவேன் என்று சொன்னாரே பாக்யராஜ்.
அதன்படி இவர் பாராட்டிய ஆன்டி இண்டியன் படம் மற்றும் இவர் நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் படங்கள் மீது வழக்கு போடுவாரா? என ரசிகர்கள் எதிர்பார்க்க தொடங்கிவிட்டனர்.
(இதை படிக்கும் பாக்யராஜ் ரசிகர்கள் சிலர் விவாதத்திற்கு வரலாம்.. அதாவது… அவரது பார்வையில் நல்ல படமாக தெரிந்த ஒன்று மற்றவர்கள் பார்வையில் மோசமான படங்களாக தெரியலாம்.
அதுபோல ஒருவேளை மற்றவர்கள் பார்வைகளில் நல்ல படங்களாக தெரிந்த ஒன்று பாக்யராஜ் பார்வையில் மோசமான படமாக தெரியலாம். அப்படியிருக்கையில் பாக்யராஜ் என்ன அளவுகோல் வைத்துள்ளார் எனத் தெரியவில்லை.)
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.. பெரும்பாலான மக்களுக்கு முருங்கைக்காய் சிப்ஸ் மற்றும் ஆன்டி இண்டியன் படங்கள் பிடிக்கவில்லை. எனவே பாக்யராஜ் எப்போது வழக்கு போடுவார்? என காத்திருக்கிறார்கள்.
Common man question to director Bhagyaraj ?