ரஜினி-திமுக-அதிமுக மீது மறைமுக தாக்கு.; சென்சாரில் 38 CUTS.. ‘ஆன்டி இண்டியன்’ படத்திற்கு மீண்டும் தடை.!

ரஜினி-திமுக-அதிமுக மீது மறைமுக தாக்கு.; சென்சாரில் 38 CUTS.. ‘ஆன்டி இண்டியன்’ படத்திற்கு மீண்டும் தடை.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

blue sattai maranசர்ச்சைக்குரிய திரைப்பட விமர்சகர் ‘ப்ளூ சட்டை’ மாறன் முதன்முறை கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இசையமைத்து, இயக்கியுள்ள படம் “ஆன்டி இண்டியன்”.

2021 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சென்சார் குழுவினர் இத்திரைப்படத்தை பார்த்தனர்.

ஆட்சேபகரமான வசனங்கள் அல்லது காட்சிகள் இருந்தால், அவற்றை மாற்றவோ அல்லது நீக்கவோ சொல்வது சென்சார் குழுவினரின் வழக்கம். ஆனால் ‘ஆன்டி இண்டியன்’ படத்தை முழுமையாக நிராகரித்து தடை செய்தனர்.

அதன் பிறகு ரிவைசிங் கமிட்டி என்று சொல்லப்படும் மறு தணிக்கைக்கு இப்படம் அனுப்பப்பட்டது. பெங்களூரில் பிரபல இயக்குநர் நாகபரணா தலைமையில் பத்து பேர் கொண்ட குழுவினர் படத்தைப் பார்த்தனர்.

படம் பார்த்து முடித்த பிறகு படம் மிகவும் சிறப்பாக உள்ளதென ஒட்டுமொத்த குழுவினரும் பாராட்டினர்.

‘இந்தப்படம் கண்டிப்பாக வெளியே வரவேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். அதேநேரம் நாங்கள் சொல்லும் சில காட்சிகள் மற்றும் வசனங்கள் நீக்க அல்லது ம்யூட் செய்யவேண்டும்.

குறிப்பாக “ஆன்டி இண்டியன்” எனும் டைட்டிலை மாற்றிவிட்டு வேறு டைட்டில் வைக்க வேண்டும்.

நடிகர் கபாலி எனும் வசனம் அடிக்கடி வருகிறது. அப்பெயரைக் கொண்ட வசனம் வரும் காட்சிகள் அனைத்தையும் நீக்க வேண்டும்.

கமுக, அகமுக என்று வரும் இரண்டு கட்சிகளின் பெயர்களையும் நீக்கவேண்டும்.

இப்படத்தில் வரும் தேசியக்கட்சி அரசியல்வாதி கேரக்டர் ஒன்றின் பெயர் ‘ராஜா’ என்று இருக்கிறது.

அந்த பெயரையும் நீக்க வேண்டும்’ என்று அக்குழுவினர் பத்து பேரும் ஒரே முடிவாக கூறினர்.

‘நாங்கள் தரும் 38 கட்களையும் ஏற்றுக்கொண்டு, படத்தில் அவற்றை எடிட் செய்து மறு தணிக்கைக்கு உட்பட்டால் U/A சான்றிதழ் தருகிறோம்’ என்றனர் ரிவைசிங் கமிட்டியினர்.

“உட்தா பஞ்சாப்”, “பத்மாவதி” போன்ற ஹிந்தி படங்களுக்கு அடுத்து அதிகப்படியான கட்களை வாங்கிய திரைப்படம் “ஆன்டி இண்டியன்” என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ட்ரிபியூனல் கமிட்டி மத்திய அரசால் கலைக்கப்பட்டு விட்டதால், Re – Revising என்று சொல்லப்படும் மேல் மறுதணிக்கைக்கு “ஆன்டி இண்டியன்” படத்தை அனுப்ப படத்தரப்பினர் முடிவு செய்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் மோஷன் போஸ்டர் ‘தமிழ் டாக்கீஸ்’ யூ ட்யூப் சேனலில் வெளியானது.

மூன்று மதங்கள் மற்றும் சமகால அரசியலை மையமாகக் கொண்டு வெளியாகியுள்ள இந்த மோஷன் போஸ்டர் திரைப்பட ரசிகர்களின் மத்தியில் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டியுள்ளது.

இதில் உள்ள குறியீடுகள் மற்றும் நையாண்டிகள் சர்ச்சையைக் கிளப்பும்படி உள்ளதென சினிமா ஆர்வலர்கள் பலர் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

இந்நிலையில் ‘ஆன்டி இண்டியன்’ படத்திற்கு 38 கட்களை மறுதணிக்கை குழுவினர் தந்துள்ளனர். இத்தனை கட்களை செய்தால் அவை படத்தின் மையக்கதை, காட்சிகள் சீராக நகரும் தன்மை மற்றும் முக்கிய காட்சிகளையும் பாதிக்கும்.

ஆகவே ரீ ரிவைசிங் கமிட்டி அல்லது கோர்ட்டில் மேல் முறையீடு செய்யவிருக்கிறோம். அங்கே சாதகமான தீர்ப்பு வரும் எனும் நம்பிக்கை உள்ளது. இப்படம் எவ்வித சேதமும் இன்றி திரையரங்குகளில் வெளியாக வேண்டுமென்பதே எங்கள் விருப்பம். அது நிச்சயம் நடக்கும்’ என்று “மூன் பிக்சர்ஸ்”- ன் தயாரிப்பாளர் ஆதம் பாவா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Blue Sattai Maran’s Anti Indian film is on trouble?

சினிமாவை விட்டு விலகும் நடிகை காஜல் அகர்வால்..?

சினிமாவை விட்டு விலகும் நடிகை காஜல் அகர்வால்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kajal aggarwalதமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால்.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் காஜல் அகர்வால் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

சூட்டிங்கில் விபத்து, கமல் கட்சி பணி, கொரோனா ஊரடங்கு, விவேக் மரணம் உள்ளிட்ட பல காரணங்களால் இதன் சூட்டிங் தொடங்கப்படாமலே உள்ளது.

இதனிடையில் நடிகை காஜல் திருமணம் செய்துக் கொண்டார்.

எனவே அவர் சினிமாவில் தொடர்வாரா? என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்தது.

இது தொடர்பான ரசிகரின் கேள்விக்கு காஜல் பதிலளித்துள்ளார்.

அவர் கூறியதாவது..

“என் கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.

இதனால் சினிமாவில் எளிதாக கவனம் செலுத்த முடிகிறது.

ஆனால் எவ்வளவு காலம் படங்களில் நடிப்பேன் என தெரியாது.

என் கணவர் கெளதம் சினிமாவை விட்டு விலக சொல்லும் போது, படங்களில் நடிப்பதை நிறுத்துவேன்” என காஜல் தெரிவித்துள்ளார்.

Kajal Aggarwal to quit cine industry?

தடுப்பூசி போட்டால் மட்டுமே சூட்டிங் ஸ்பாட்டில் பெர்மிஷன்..; பெஃப்சி ஆர்டர்

தடுப்பூசி போட்டால் மட்டுமே சூட்டிங் ஸ்பாட்டில் பெர்மிஷன்..; பெஃப்சி ஆர்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rk selvamaniகொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடெங்கிலும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் நடத்த அனுமதியில்லை.

ஊரடங்குக்கு பின்னர் மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கப்படவுள்ளது.

அப்போது படப்பிடிப்பு தளத்துக்கு வரும் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று பெஃப்சி சங்கம் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் தடுப்பூசி எடுத்துக் கொண்டால் மட்டுமே படப்பிடிப்பு தளத்திற்குள் அனுமதி் என தெரியவந்துள்ளது.

ஒருவேளை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள் (உடல் பிரச்னைகள்) அதற்கான காரணத்தை மருத்துவரின் கடிதத்தை அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாம்.

Vaccinated people only allowed for movie shoot

கொரோனா நிவாரணத்திற்காக வேலம்மாள் கல்வி அறக்கட்டளை ரூ. 1 கோடி 25 லட்சம் நிதியுதவி

கொரோனா நிவாரணத்திற்காக வேலம்மாள் கல்வி அறக்கட்டளை ரூ. 1 கோடி 25 லட்சம் நிதியுதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Velammal Donationகொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பிரபலங்கள் பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வேலம்மாள் கல்வி அறக்கட்டளையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்கள் சார்பாக அறக்கட்டளையின் தலைவர் எம். வி. முத்துராமலிங்கம் அவர்களும், அறக்கட்டளையின் இயக்குநர்கள் எம்.வி. ஸ்ரீராம், மற்றும் திரு. எம்.வி. விவேக் ஆனந்த் ஆகியோர்களும் இணைந்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் ஒரு கோடியே இருபத்தைந்து இலட்சத்திற்கான காசோலையைத் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களிடம், 2021 மே 19 அன்று தலைமைச் செயலகத்திற்கு நேரில் சென்று வழங்கினர்.

தொற்றுத் நோயை எதிர்த்துத் திறம்பட போராடும் இந்த நெருக்கடியான சூழ்நிலையில், தமிழக முதலமைச்சருடன் இணைந்து செயல்பட வேலம்மாள் கல்வி அறக்கட்டளை இந்த முயற்சியை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

Velammal institution donated Rs 1 crore to corona relief fund

12ம் வகுப்பு பொது (அலகு) தேர்வை வாட்ஸ் அப்-பில் நடத்த தமிழக அரசு திட்டம்

12ம் வகுப்பு பொது (அலகு) தேர்வை வாட்ஸ் அப்-பில் நடத்த தமிழக அரசு திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

12th students tnமே 3 ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த தமிழக அரசு நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

பொதுத் தேர்வு தள்ளிப் போகுமே தவிர ரத்து செய்யப்பட மாட்டாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அன்பில் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் 12ஆம் வகுப்பு மாணவர்களைப் பொதுத் தேர்வுக்குத் தயார்படுத்தும் அலகு தேர்வை, வாட்ஸ் அப் மூலமாக நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஒரே வகுப்பு மாணவ-மாணவியருக்கு என தனித்தனியாக வாட்ஸ் அப் குரூப் ஏற்படுத்த வேண்டும்.

மாணவர்கள் விடைகளை தனித் தாளில் எழுதி, அதில் பெற்றோர் கையொப்பம் பெற்று, அதை PDF ஆக மாற்றி அனுப்ப வேண்டும்.

அந்த விடைத்தாளில் மாணவர் பெயர், தேர்வுத் துறையால் வழங்கப்பட்டுள்ள பதிவு எண் ஆகியவை கட்டாயம் எழுதியிருக்க வேண்டும்.

வாட்ஸ் அப் குழுவில் வினாத்தாள், விடைத்தாள் தவிர வேறு செய்திகள், ஆடியோ, ஸ்டிக்கர்ஸ், மீம்ஸ், வீடியோக்கள் ஆகியவற்றை பதிவிடக் கூடாது.

மாணவர்களின் விடைத்தாள்களை ஆசிரியர்கள் வாட்ஸ் அப் மூலம் திருத்தி அதற்கான மதிப்பெண்களை வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

12th exams to conduct in whatsapp

கமலை கழுவி ஊற்றிய முருகானந்தம்… மநீம பொதுச்செயலாளர் உட்பட 15 பேர் விலகல்..; முழு தகவல் இதோ..

கமலை கழுவி ஊற்றிய முருகானந்தம்… மநீம பொதுச்செயலாளர் உட்பட 15 பேர் விலகல்..; முழு தகவல் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Muruganandamநடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கமல் கட்சி மக்கள் நீதி மய்யம் படு தோல்வியை சந்தித்தது.

கமீலா நாசர் கட்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.

தேர்தல் தோல்விக்கு பின்னரும் கமல் அணுகுமுறையில் மாற்றமில்லை எனக்கூறி மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து துணை தலைவர் மகேந்திரன் விலகினார்.

தமிழகத்தை சீரமைப்பதற்கு முன்னர் அவர் தன் கட்சியை சீரமைக்க வேண்டும். அவர் விரும்பினால் நண்பராக தொடர்வேன்” என அறிக்கை விட்டு பிரஸ் மீட் வைத்து கட்சியில் இருந்து விலகினார்.

இவரை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பல நிர்வாகிகள் விலகி வருகின்றனர்.

(கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா செய்து விட்டதாகவும் கட்சியை சீரமைக்கும் அதிகாரம் கமலிடம் கட்சி வழங்கியுள்ளதாக அதன் துணைத் தலைவர் பொன்ராஜ் சமீபத்தில் கூறியிருந்தார்.)

இதன்பின்னர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு விலகுவதாக அறிவித்தார்.

“மக்கள் நீதி மய்யம் கட்சியில் தான் வகித்த பதவியிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகுகிறேன். என்றார்.

அதே நாளல் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த மநீம வேட்பாளர் பத்ம பிரியா கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

(மநீம கட்சியை புனரமைக்கும் வகையில், துணை தலைவர் பொன்ராஜ், பாண்டிச்சேரி துணைத் தலைவர் தங்கவேலு, பொதுச் செயலாளர்கள் சந்தோஷ்பாபு, சி.கே.குமரவேல், முருகானந்தம், மவுரியா மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர் உமாதேவி ஆகியோர் பதவி விலகலுக்கான கடிதத்தை அளித்து இருந்தனர்)

இந்த நிலையில், மநீம கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திருச்சி முருகானந்தமும் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கட்சித் தலைவரான கமல்ஹாசன் மீது குற்றம் சாட்டி 6 பக்கம் கடிதம் அனுப்பி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த முருகானந்தம் திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது…

“எந்த நிர்வாகிகளிடமும் கலந்தாலோசிக்காமல் பலவீனமான கட்சிகளுடன் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்தார் கமல்.

நூறுக்கும் அதிகமான இடங்களை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது தான் தோல்வி அடைய காரணம்.

கட்சியின் உயர்மட்ட குழு கூட்டத்தில் பல்வேறு கேள்விகளை நான் கமல்ஹாசனிடம் எழுப்பினேன் ஆனால் அவர் எதற்கும் பதில் சொல்லவில்லை.

கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை. சர்வாதிகாரம் தலை தூக்கி விட்டது.

நமது கட்சி என்பதை மறந்து, அது என்னுடைய கட்சி என கூற ஆரம்பித்து விட்டார் கமல்.

கமல் தன்னுடைய புகழுக்காக செயல்பட்டாரோ என்கிற சந்தேகம் இருக்கிறது.

மக்கள் நீதி மய்யத்தின் தலைமை சரியான தலைமை அல்ல, சரியான பாதையில் அந்த கட்சி வழி நடத்தப்படவில்லை.

தோல்வியை கமல் ஏற்றுக்கொள்ளாமல் எங்கள் மீது திருப்பி விட்டார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் நான் வகித்த பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகுகிறேன்.

என்னுடன் சேர்ந்து கட்சியில் இன்னும் சில நிர்வாகிகளும் விலகி விட்டனர்.

வரும் நாட்களில் மேலும் சிலர் விலகுவார்கள்” என்றார் முருகானந்தம்.

இவருடன் கட்சியின் மாநில செயலாளர் வீரசக்தி, மாநில துணை செயலாளர் அய்யனார், பி.ஏ. விஸ்வநாத், மாவட்ட பொருளாளர் சுவாமிநாதன் உள்பட 15 பேர் தங்களுடைய உறுப்பினர் & பொறுப்புகளில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளனர்.

கடந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் முருகானந்தம் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்களுடன் சேர்ந்து திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட 414 வாக்குச் சாவடிகளில் நியமிக்கப்பட்ட கிளை செயலாளர்களில் சுமார் 200 பேர், 2000 கிளை செயற்குழு உறுப்பினர்கள் உள்பட 2,200 பேரும் உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளதாக முருகானந்தம் குழுவினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Makkal Needhi Maiam General Secretary Muruganandam quits the party… He says there is dictatorship in the MNM party.

More Articles
Follows