‘மிடில் கிளாஸ்’ படத்திற்காக கோலிவுட்டின் அடுத்த ‘காந்த்’ நடிகரும் ஹீரோவானார்.!

‘மிடில் கிளாஸ்’ படத்திற்காக கோலிவுட்டின் அடுத்த ‘காந்த்’ நடிகரும் ஹீரோவானார்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

munishkanthகோலிவுட் சினிமாவில் ரஜினிகாந்துக்கு பிறகு நிறைய காந்த் நடிகர்கள் உருவாகிவிட்டனர்.

விஜயகாந்த், நளினிகாந்த், ஸ்ரீகாந்த் என பல காந்த் நடிகர்கள் உள்ளனர்.

முண்டாசுப்பட்டி படத்தில் முனீஷ்காந்த் என்ற கேரக்டரில் நடித்தார் ராமதாஸ்.. ஆனாலும் அவரை முனீஸ்காந்த் என்றே பலரும் அழைக்கின்றனர்.

பல படங்களில் காமெடியனாக நடித்த அவர் தற்போது ஹீரோவாகிவிட்டார். அந்த படம் தொடர்பான தகவல்கள் இதோ…

‘அறம்’ & ‘டாக்டர்’ தொடங்கி சமீபத்திய ‘க/பெ ரணசிங்கம்’ வரை எப்போதுமே புதுமையான நம்பிக்கைக்குரிய கதைகளுக்குக் கைகொடுக்கும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ் ‘மிடில் கிளாஸ்’ என்ற படத்தை தயாரிக்கவுள்ளார்.

அவருடன் இணைந்து ‘டோரா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான தாஸ் ராமசாமியின் கெளஷ்துப் எண்டர்டையின்மெண்ட் நிறுவனமும் தயாரிக்கிறது.

யதார்த்தத்துடன் கூடிய கலகலப்பான இந்தக் கதை எழுதி, இயக்கவுள்ளார் கிஷோர் எம்.ராமலிங்கம்.

இவர் ‘களவாணி’ படத்தின் உதவி இயக்குநராக பணிபுரிந்தது மட்டுமன்றி ‘இது வேதாளம் சொல்லும் கதை’ மற்றும் ‘பூமிகா’ ஆகிய படங்களில் இணை இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளார்.

‘மிடில்கிளாஸ்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு தீபாவளி முடிந்தவுடன் தொடங்கவுள்ளது.

இதில் முனீஸ்காந்த் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

‘கலக்கப் போவது யாரு’ ராமர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதர நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விரைவில் ஆச்சரியமூட்டும் நடிகர்கள் பட்டியல் வெளியாகும் என்கிறது படக்குழு.

நல்ல கதைக்கு, வலுவான தொழில்நுட்ப கலைஞர்கள் அமைந்துவிட்டால் வெற்றி உறுதி என்பார்கள். அப்படி பல்வேறு படங்களுக்கு தனது ஒளிப்பதிவால் அழகூட்டிய ஆர்வி ஒளிப்பதிவாளராகவும் பணிபுரியவுள்ளார். இசையமைப்பாளராக சந்தோஷ் தயாநிதி, எடிட்டராக ஆனந்த் ஜெரால்டின், கலை இயக்குநராக ஏ.ஆர்.மோகன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

தற்போது படப்பிடிப்பு தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

‘மிடில்கிளாஸ்’ படக்குழுவினர் விவரம்

தயாரிப்பு நிறுவனம் – கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ், கெளஷ்துப் எண்டர்டையின்மெண்ட்
தயாரிப்பாளர் – கே.ஜே.ஆர் ராஜேஷ், தாஸ் ராமசாமி
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – கிஷோர் எம்.ராமலிங்கம்
நிர்வாக தயாரிப்பாளர் – டி.ஏழுமலையான்
தயாரிப்பு ஒருங்கிணைப்பு – மனோஜ் குமார்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – சி.ஆர்.மணிகண்டன்
ஒளிப்பதிவாளர் – ஆர்வி
இசையமைப்பாளர் – சந்தோஷ் தயாநிதி
எடிட்டர் – ஆனந்த் ஜெரால்டின்
கலை இயக்குநர் – ஏ.ஆர்.மோகன்
ஆடை வடிவமைப்பாளர் – கீர்த்தி வாசன்
ஸ்டில்ஸ் – நரேந்திரன்
பி.ஆர்.ஓ – யுவராஜ்

Comedy actor Munishkanth turns a hero

க/பெ ரணசிங்கம் பட இயக்குனருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர் ராஜேஷ்

க/பெ ரணசிங்கம் பட இயக்குனருக்கு காரை பரிசளித்த தயாரிப்பாளர் ராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

KJR Studios நிறுவனம் சார்பாக KJ ராஜேஷ் அவர்கள் தயாரிப்பில் விஜயசேதுபதி & ஐஸ்வர்யா ராஜேஸ் நடிப்பில் வெளியான படம் க/பெ ரணசிங்கம்.

அரியாநாச்சி என் பெண் கேரக்டரில் வாழ்ந்திருந்தார் ஐஸ்வர்யா.

ஜிப்ரான் இசையமைக்க விருமாண்டி என்பவர் இந்த படத்தை மண் மாறாமல் இயக்கியிருந்தார்.

வசனங்களின் ஊடே இன்றைய சில அரசியல் நிலவரங்களையும் அழுத்தமாக சொல்லியிருந்தார் டைரக்டர்.

ஆன்லைனில் வெளியான இந்த திரைப்படம் மக்களின் ஏகோபித்த பாராட்டுக்களை பெற்றது.

விமர்சகர்களும் நல்ல மதிப்பெண் கொடுத்தனர். நம் filmistreet சார்பாக 3.5/5 மதிப்பெண் கொடுத்திருந்தோம்.

படத்தின் வெற்றி மற்றும் படக்குழுவின் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக தயாரிப்பாளர் KJ ராஜேஷ் இயக்குனர் பெ.விருமாண்டிக்கு Maruti XL car ஐ பரிசாக அளித்துள்ளார்.

Ka Pae Ranasingam producer gifted a new car to director

ka pae ranasingam

IMG_20201104_190317

சுதா கொங்கரா மகள் திருமண விழா..; சூப்பர் கெட் அப்பில் வந்து சூர்யா வாழ்த்து.!

சுதா கொங்கரா மகள் திருமண விழா..; சூப்பர் கெட் அப்பில் வந்து சூர்யா வாழ்த்து.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சூரரைப்போற்று’.

இந்த திரைப்படம் நவம்பர் 12-ம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் ரிலீசாக இருக்கிறது.

இந்நிலையில் சுதா கொங்கராவின் மகள் உத்ராவுக்கும், விக்னேஷ் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.

இந்ம திருமண விழாவிற்கு சூப்பரான கெட் அப்பில் வந்து நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நியூ கெட் அப்பில் அசத்தலாக வந்திருந்தார்.

மேலும் இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Actor Surya flaunts his new look at Sudha Kongara’s daughter’s wedding

suriya

suriya at sudha kongara daughter wedding

2020-11-05

BREAKING அரசியல் கட்சி தொடங்கும் விஜய்.? தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார்..?

BREAKING அரசியல் கட்சி தொடங்கும் விஜய்.? தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay in politicsநடிகர் விஜய்க்கு தமிழகத்தில் உள்ள ரசிகர் பட்டாளம் நாம் அறிந்த ஒன்றுதான்.

ஆயிரக்கணக்கான ரசிகர் மன்றங்கள் அவருக்கு உள்ளன.

மேலும் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரிலும் அவரின் ரசிகர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரை தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய் பதிவு செய்திருக்கிறாராம்.

கட்சி தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளர் ஷோபா என விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

இதனால் விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு உருவானது.

இந்த தகவல் குறித்து அவரது PRO தரப்பில் விசாரித்த போது விஜய் பற்றிய செய்தி தவறானது என விளக்கமளித்துள்ளார்.

விஜய் மௌனம் கலைப்பாரா?

The news spreading about Thalapathy Vijay political party registered today is untrue

பாக்கெட்டை நிரப்பும் பிரபலங்களுக்கு மக்கள் மீது அக்கறையில்லையா..? ஐகோர்ட் கேள்வி

பாக்கெட்டை நிரப்பும் பிரபலங்களுக்கு மக்கள் மீது அக்கறையில்லையா..? ஐகோர்ட் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரம்மி எனப்படும் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மட்டும் 10 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தற்கொலைக்கு காரணமான சூதாட்டத்தை தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த சூதாட்ட விளம்பரத்தில் பிரபலங்கள் நடிப்பதால் இளைஞர்கள் இதில் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் புகார்கள் வருகின்றன.

இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த முகமது ரஸ்வி என்பவர் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டும் எனவும் . விளம்பர தூதுவர்களாக உள்ள பிரபலங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில்…

பிரபலமானவர்களில் பலர் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் அவரவர் பாக்கெட்டுகளை நிரப்புவதில் கவனம் செலுத்தி விளம்பரம் செய்கின்றனர்.

பொது மக்கள் அவர்களைப் பின்பற்றுவார்கள் என அறிந்தும் இவ்வாறு செயல்படுவது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினர்.

மேலும் இந்த வழக்கில், மத்திய, மாநில அரசுகள், கிரிக்கெட் வீரர்கள் விராட்கோலி, கங்குலி, நடிகை தமன்னா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் நவம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Madras High Court issues notice to Virat Kohli, Ganguly and Tamannah in PIL against online games

kohli ganguly tamannah

செகன்ட் மேரேஜ் சர்ச்சை..; பாய் ப்ரெண்ட் மீது கேஸ் போடும் அமலாபால்

செகன்ட் மேரேஜ் சர்ச்சை..; பாய் ப்ரெண்ட் மீது கேஸ் போடும் அமலாபால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் விஜய்யை காதலித்து திருமணம் செய்தார் அமலாபால்.

ஆனால் சில மாதங்களிலேயே இருவருக்கும் விவாகரத்து ஆனது.

தற்போது 2வது திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார் விஜய்.

ஆனால் அமலாபால் படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் மும்பையைச் சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங்கை அமலாபால் 2வதாக திருமணம் செய்துள்ளதாக போட்டோஸ் வெளியானது.

அந்தப் படங்களை பவ்னிந்தர் சிங் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பின்னர் சில மணி நேரங்களில் அதை நீக்கி விட்டார்.

ஆனால் அப்போது அமைதியாக இருந்தார் அமலாபால்.

தற்போது சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார் அமலா.

அதில், ‘எக்ஸ் பாய் ப்ரெண்ட் பவ்னிந்தர் சிங், தனக்கும் அவருக்கும் திருமணம் ஆகிவிட்டதாக குறிப்பிட்டு சில படங்களை வெளியிட்டுள்ளார்.

அவற்றை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும், அவர் மீது அவதூறு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என அமலாபால் கேட்டு இருந்தார்.

இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வரவே பவ்னிந்தர் சிங்க்கு எதிராக அவதூறு வழக்கு தொடர அமலாபாலுக்கு அனுமதியளித்துள்ளார்.

Amala Paul to file case against her ex boy friend

Amala-Paul-wedding-photos-3

More Articles
Follows