யோகி பாபுவை அடுத்து போண்டா மணியும் ஹீரோவாகிறார்

யோகி பாபுவை அடுத்து போண்டா மணியும் ஹீரோவாகிறார்

yogi babu bonda maniஇலங்கையை பூர்விகமாக கொண்டவர் நடிகர் போண்டா மணி.

சென்னையில் சினிமா வாய்ப்பு தேடிய போது இயக்குனர் கே.பாக்யராஜ் கண்ணில் பட்டு நடிகரானார்.

வடிவேலுவின் காமெடி கேங்கில் இவர் நிச்சயம் இடம் பெற்றிருப்பார்.

போண்டா மணியை பார்த்து… மூக்கு முடைப்பா இருந்தா இப்படிதான் யோசிக்க தோனும் என ஒரு படத்தில் வடிவேலு சொல்வார்.

இந்த நிலையில் போண்டா மணியும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறாராம்.

சின்ன பண்ணை பெரிய பண்ணை படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

இவருடன் ஆதேஷ்பாலா, இயக்குனர் பகவதி பாலா, ஷர்மிளா, பிரமோஸ் தாஸ், கண்ணாயிரம், கேபிள் சங்கர், செளந்தர் உள்பட பலர் நடிக்கின்றனர்.

எஸ்.பிலிம்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை எஸ்.பகவதி பாலா இயக்குகிறார்.

காமெடியனாக வலம் வந்த வடிவேலு, சந்தானம், யோகி பாபு உள்ளிட்டோர் தற்போது நாயகனாக நடித்து வருவதும் இங்கே கவனிக்கத்தக்கது.

comedy actor bonda mani turns hero

இதான் தலைவர்.. பாசிட்டிவ் எண்ணம்.. லவ் யூ தலைவா… – லாரன்ஸ்

இதான் தலைவர்.. பாசிட்டிவ் எண்ணம்.. லவ் யூ தலைவா… – லாரன்ஸ்

raghava lawrence rajinikanthமும்பையைச் சேர்ந்த ரஜினி ரசிகரான முரளி என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இனி தான் உயிர் பிழைப்போமா? என்ற சந்தேகம் அந்த ரசிகருக்கு வரவே தன்னுடைய ட்விட்டரில்.. ‘தலைவா எனது இறுதி ஆசை. 2021 தேர்தலில் வெற்றிப்பெற்று தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த தலைவனாகவும் ஆன்மீக குருவாகவும் வீர நடைபோட்டு அடித்தட்டு மக்களின் தனிநபர் வருமானம் 25,000 ரூபாய் என்ற நிலையை உருவாக்கிக் கொடுங்கள்.

உன்னை அரியணையில் ஏற்ற விடாமல் போகிறேனே என்ற ஒரே வருத்தம் தான் எனக்கு உள்ளது என தன் மகன் (தர்ஷன்) ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார் முரளி.

இதனையறிந்த நடிகர் ரஜினிகாந்த்.. தைரியமாக இருங்கள். உங்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். நீங்க நலமுடன் வீடு திரும்பியவுடன் எனது வீட்டிற்கு வாருங்கள்’ என்று ஆடியோ அனுப்பியிருந்தார்.

இந்த செய்தியை நம் தளத்தில் பார்த்தோம்.

இந்த ஆடியோவை நடிகர் ராகவா லாரன்ஸ் தன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார், அதில்..

இதுதான் எங்கள் தலைவர். தலைவரின் ஆடியோவை கேட்கும்போதே பாசிட்டிவான எண்ணத்தையும் பாசத்தையும் ஊட்டுகிறது. இதைக் கேட்ட அந்த ரசிகர் அதனை எப்படி உணர்ந்திருப்பார் என்று கற்பனை செய்து பாருங்கள். லவ் யூ தலைவா! குருவே சரணம்’ என்று நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார் லாரன்ஸ்.

Raghava lawrence praises Rajinikanth

சூர்யாவை செருப்பால் அடித்தால் பரிசு.; செருப்பு மாலை அணிவிக்க முயற்சி

சூர்யாவை செருப்பால் அடித்தால் பரிசு.; செருப்பு மாலை அணிவிக்க முயற்சி

hindu makkal katchiகடந்த வாரம் நீட் தேர்வு தொடர்பாக அறிக்கை வெளியிட்டு இருந்தார் நடிகர் சூர்யா.

மாணவர்களின் உயிரை பறிக்கும் நீட் தேர்வை தடை செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி இருந்தார்.

அவரின் அறிக்கை நீதிமன்றத்தை அவமதித்ததாக சிலர் கருத்து தெரிவித்தனர்.

ஆனால் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, சூர்யா மீது எந்த அவமதிப்பு வழக்கும் தேவையில்லை என்று முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் சூர்யா அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து இளைஞர் முன்னணி சார்பில், திருப்பூர் குமரன் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சூர்யா மாணவர்களை தவறாக வழி நடத்துவதாகவும், நீட் தேர்வை அரசியலாக்க முயல்வதாகவும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடதிதினர்.

மேலும் சூர்யாவின் படத்தை கிழித்து, செருப்பால் அடித்து, செருப்பு மாலை அணிவிக்க முயன்றனர்.

இதனை பார்த்த போலீசார் அவர்களை தடுத்து செருப்பு மாலைகளை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சி துணை பொதுச்செயலாளர் தர்மா என்பவர் சூர்யாவை விமர்சித்துள்ளார்.

நடிகர் சூர்யாவை யாரேனும் செருப்பால் அடித்தால் அந்த நபருக்கு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் ஒரு லட்சம் ரூபாய் பரிசு கொடுப்பார் எனவும் பேசியிருக்கிறார்.

One lakh reward announced by hindu makkal katchi if trashing actor surya

டபுள் மீனிங் படத்தில் கிராமத்து இளைஞனாக நடிகர் சிம்பு..?

டபுள் மீனிங் படத்தில் கிராமத்து இளைஞனாக நடிகர் சிம்பு..?

simbuவெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள ’மாநாடு’ படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு.

இந்த படத்தின் சூட்டிங் கொரோனா பிரச்சினைக்கு பிறகு தொடங்கவுள்ளது.

இந்த படத்திற்கு சிம்புவை இயக்கவுள்ள ஓரிரு இயக்குனர்கள் காத்திருக்கின்றனர்.

அந்த வரிசையில் தற்போது சுசீந்திரன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சுசீந்திரன் சொன்ன கிராமத்து கதை சிம்புவை கவர்ந்துவிட்டதாகவும் விரைவில் அந்த படத்தில் நடிப்பார் எனவும் தகவல்கள் வந்துள்ளன.

இப்படத்தை டபுள் மீனிங் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் என்று கூறப்படுகிறது.

சிம்புவின் படங்கள் பெரும்பாலும் சிட்டி சப்ஜெக்ட் படங்களாவே இருக்கும்.

சிம்பு நடிப்பில் கோவில் மற்றும் சிலம்பாட்டம் உள்ளிட்ட ஒரு சில படங்கள் மட்டுமே கிராமத்து படங்களாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

STR – Susenthiran new movie updates

நிஜத்தில் ஆண்; சீரியலில் பெண்… பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமாவின் குழந்தை ரகசியம்

நிஜத்தில் ஆண்; சீரியலில் பெண்… பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமாவின் குழந்தை ரகசியம்

pandian stores meena babyசீரியல் என்றாலும் சரி.. ரியால்ட்டி ஷோ என்றாலும் சரி… பிக்பாஸ் என்றாலும் சரி.. ரசிகர்களை கவருவதில் விஜய் டிவி வித்தியாசமான ஒன்றுதான்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு ரசிகர்கள் ஏராளம்.

அதில் மீனா என்ற கேரக்டரில் நடிப்பவர் நடிகை ஹேமா.

இந்த தொடரின் கதைப்படி ஹேமா கர்ப்பம் தரித்தார். அதுவே அவரின் நிஜ வாழ்க்கையில் நடந்தது. எனவே அவருக்கு வளைகாப்பு நடத்தி அதை சீரியலுக்கு பயன்படுத்தினர்.

அந்த ஒரு நாள் மட்டும் வளைகாப்பு நிகழ்ச்சி 3 மணி நேரம் ஒளிப்பரப்பானது.

இது பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

சீரியல் கதைப்படி மீனாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் நிஜத்தில் நடிகை ஹேமாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Pandian Stores Meena blessed with baby boy in real

தன் பழைய பட டைட்டிலையே லோகேஷ் படத்துக்கு வைக்க கமல் முடிவு?

தன் பழைய பட டைட்டிலையே லோகேஷ் படத்துக்கு வைக்க கமல் முடிவு?

kamal guruஓரிரு தினங்களுக்கு முன் கமல்ஹாசன் நடிக்கவுள்ள அவரின் 232வது பட அறிவிப்பு வெளியானது.

இந்த படத்தை கமலே தன் சொந்த பேனரில் தயாரிக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த பட அறிவிப்பு வெளியான போது #எவனென்று நினைத்தாய் என்ற வாசகமும் டிரெண்டிங் ஆனது. ஆனால் இது டைட்டில் இல்லை என அப்போதே நாம் தெரிவித்து இருந்தோம்.

இந்த நிலையில் இப்படத்துக்கு ‘குரு’ என்று டைட்டில் வைக்கவுள்ள கூறப்படுகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய் நடிப்பில் ‘குரு’ என்ற தலைப்பில் வெளியானது.

இவையில்லாமல் 40 வருடங்களுக்கு முன்பே கமல், ஸ்ரீதேவி நடிப்பில் ‘குரு’ என்ற படம் வெளியானது.

அந்த தலைப்பை தான் இப்போது கமல் பயன்படுத்த உள்ளதாக தெரிகிறது.

ஒரே தலைப்பு வேறு நடிகர்கள் என்றால் கூட குழப்பம் வராது. ஆனால் ஒரே தலைப்பு அதே நடிகர் என்றால் கொஞ்சம் குழப்பம் வரத்தானே செய்யும்.

ஒருவேளை குரு (#எவனென்று நினைத்தாய்) என்ற வார்த்தையும் இணைந்து வருவோம் என எதிர்பார்க்கலாம்.

லோகேஷ் தற்போது இயக்கியுள்ள விஜய்யின் மாஸ்டர் என்ற வாசகத்தின் தமிழ் பொருள் குரு என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Lokesh Kanagaraj to repeat Kamalhaasan’s old title

More Articles
Follows