சினிமா உனக்கு தேவையா..? கார்த்தியிடம் கேட்ட நண்பர்கள்

சினிமா உனக்கு தேவையா..? கார்த்தியிடம் கேட்ட நண்பர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karthiமணிரத்னம் தயாரித்து இயக்கியுள்ள காற்று வெளியிடை படத்தில் கார்த்தி, அதிதி ராவ் ஜோடியாக நடித்துள்ளனர்.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சூர்யா தன் தம்பி கார்த்தியை வாழ்த்தினார்.

இவ்விழாவில் கார்த்தி பேசும்போது…

நான் வெளிநாட்டில்தான் படித்தேன். படிப்பு முடிந்த உடன் சினிமாவில் உதவி இயக்குனராக சேர நினைத்தேன்.

இதனை என் நண்பர்களிடம் சொன்னதும், ’உனக்கு ஏன்டா சினிமா? என்று என் நண்பர்கள் கேட்டனர்.

நான் மணிரத்னம் சாரிடம் அசிஸ்டெண்ட் இயக்குனராக சேர வேண்டும் என்று கேட்டதுமே அவர் ஓகே சொல்லிவிட்டார்.

பின்னர் அவரே நீ நடிக்க போய்விடு என்று சொல்லிவிட்டார்.

நான் வேலையில் சின்சியராக உள்ளதற்கு அவர்தான் காரணம்.

இந்த படத்தில் நடிக்க மீசையை எடுத்த ஸ்டோரி பற்றி ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு இருக்கிறது’ என்றார் கார்த்தி.

My friends adviced me not to enter in cinema says Karthi

‘விஜய் 61’ சீக்ரெட்ஸை உடைத்த காஜல் அகர்வால்

‘விஜய் 61’ சீக்ரெட்ஸை உடைத்த காஜல் அகர்வால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay and kajal aggarwalவிஜய் நடிப்பில் உருவாகும் 61வது படத்தை இயக்கி வருகிறார் அட்லி.

இதில் நாயகிகளாக சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் நடித்து வருகின்றனர்.

தற்போது விஜய்யின் கிராமத்து கெட்டப் காட்சிகளை இயக்கி வருகிறார் அட்லி.

இதில் நித்யா மற்றும் எஸ்.ஜே.சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார்.

இந்நிலையில் தன் கேரக்டர் குறித்து காஜல் அகர்வால் கூறியுள்ளதாவது…

இப்படம் ஒரு சமூகம் சார்ந்த பிரச்சினையை சொல்லும்.

இதில் நானும் விஜய் சாரும் தொழில் ரீதியாக சந்திப்பதாகவும் அதனை தொடர்ந்து எங்களுக்கான காட்சிகள் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் கெட்-அப்பை நெருங்கிய சிம்பு

கமல்ஹாசன் கெட்-அப்பை நெருங்கிய சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasan and simbuஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

இப்படத்தில் 3 கெட்டப்புகள் சிம்புக்கு உள்ளதால், இப்படத்தின் தலைப்பை அப்படி வைத்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது 4வது கெட்டப் ஒன்று உள்ளதாக சிம்பு தன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்த நான்காவது கேரக்டர் மிகவும் சர்ப்ரைஸ் ஆன கேரக்டர் என்றும் படத்தில் இந்த கேரக்டர் பெரிதும் பேசப்படும் என்று தெரிவித்துள்ளார்.

பெரும்பாலும் 3 கேரக்டர்களில் நிறைய நடிகர்கள் நடித்துள்ளனர்.

ஆனால் சிவாஜி, கமல் உள்ளிட்டவர்கள் மட்டுமே அதற்கும் மேற்பட்ட கேரக்டர்களை செய்துள்ளனர்.

மைக்கேல் மதன காமராஜ் படத்தில் கமல் நான்கு கேரக்டரில் நடித்திருந்தார்.

தற்போது கமல் கெட்டப்பை சிம்பு நெருங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

‘திறமைகள் நிறைந்த பவர்ஹவுஸ் அஜித்…’ காஜல் அகர்வால்

‘திறமைகள் நிறைந்த பவர்ஹவுஸ் அஜித்…’ காஜல் அகர்வால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith and kajal aggarwalவிஜய், சூர்யா, தனுஷ் ஆகிய முன்னணி நடிகர்களுடன் நடித்த காஜல் அகர்வால் தற்போதுதான் விவேகம் படத்தில் அஜித்துடன் நடித்து வருகிறார்.

சிவா இயக்கிவரும் இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் அஜித்துடன் நடித்தது பற்றி காஜல் அகர்வால் தன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளதாவது…

அஜித் அமைதியானவர். மிகவும் எளிமையான யதார்த்த மனிதர் அவர்.
அவரை திறமைகள் நிறைந்த பவர் ஹவுஸ் என்றே சொல்லலாம்.

விவேகம் படத்தில் நான் ஒரு பாரம்பரிய மிக்க தமிழ் பெண்ணாக நடித்து வருகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக தயாராகும் ‘குட்டி தமிழ்நாடு’

சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக தயாராகும் ‘குட்டி தமிழ்நாடு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth new imagesஷங்கர் இயக்கிவரும் 2.0 படத்தை முடித்துவிட்டு, ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினி.

தனுஷ் தயாரிக்கும் இப்படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.

இதில் முக்கிய வேடத்தில் குஷ்பூ நடிக்கலாம் என சொல்லப்படுகிறது.

இப்படத்தின் கதைக்களமானது மும்பை தாராவியை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளதாக என கூறப்படுகிறது.

இது மிகவும் நெரிசல் பகுதி என்பதால், தாராவி போன்று செட் போட்டு சென்னையிலேயே எடுக்கப்பட உள்ளதாம்.

தாராவி பகுதிக்கு குட்டி தமிழ்நாடு என்ற பெயரும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

‘கபாலி’யிடம் தோற்ற ‘பாகுபலி 2’.?

‘கபாலி’யிடம் தோற்ற ‘பாகுபலி 2’.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Baahubali release theatre count less than Kabali movieசூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கபாலி படம் கடந்த 2016 வருடம் வெளியானது.

உலகளவில் இப்படம் பேசப்படும் வகையில் இதற்கான விளம்பரங்களை செய்திருந்தார் இதன் தயாரிப்பாளர் கலைப்புலி தானு.

கேரளாவில் இதன் வெளியீட்டு உரிமையை பெற்ற மோகன்லால் 306 தியேட்டர்களில் இப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

இது நேரடி தமிழ் படமாகவே அங்கு வெளியானது.

இந்நிலையில் அடுத்த மாதம் ஏப்ரல் 28ஆம் தேதி பாகுபலி 2 வெளியாகவுள்ளது.

இப்படத்தை மலையாள மொழியில் வெளியிடவிருக்கிறார்கள்.

இதுவரை 300 தியேட்டர்களில் இப்படத்தை ரிலீஸ் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை கபாலி எண்ணிக்கையை விட குறைவாகவே உள்ளது பாகுபலி.

இனிவரும் நாட்களில் கபாலியை ஜெயிப்பாரா பாகுபலி என்பதை பார்ப்போம்.

Baahubali release theatre count less than Kabali movie

More Articles
Follows