பாலசரவணன் வீட்டை அடுத்து ப்ரியா பவானி சங்கர் வீட்டிலும் துக்க நிகழ்வு

பாலசரவணன் வீட்டை அடுத்து ப்ரியா பவானி சங்கர் வீட்டிலும் துக்க நிகழ்வு

bala saravanan priya bhavani shankarஓரிரு தினங்களுக்கு முன்பு நடிகர் பாலசரவணன் வீட்டில் ஒரு துக்க நிகழ்வு நடைபெற்றது.

(அன்பு நண்பர்களே…இன்று எனது தங்கையின் கணவர் கொரோணா காரணமாக இறந்துவிட்டார்…32வயது…
தயவு கூர்ந்து மிக கவணமாக இருக்கவும்…நமக்கெல்லாம் வராது என்று நினைப்பது மாபெரும் கோழைத்தனம்…நம்மை பாதுகாக்க நம்மால் மட்டுமே முடியும்…முக கவசம் அணிவீ்ர்…plss)

அவரது தங்கையின் கணவர் (வயது 32) கொரோனா தொற்றால் இறந்து விட்டதாக பதிவிட்டு இருந்தார்.

தற்போது நடிகை ப்ரியா பவானி சங்கர்
தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தாத்தா காலமானது குறித்து உருக்கமாக பாசமாக பதிவு செய்துள்ளார்.

அதில்…

“ஒரு வெற்றிகரமான மனிதர். தனி மனுஷனா ஒன்னுமே இல்லாம வாழ்க்கைய ஆரம்பிச்சி 5 பசங்கள அமோகமா படிக்க வச்சி 10 பேரப் பசங்கள்ல 8 பேர டாக்டராக்கி அவங்களையும் டாக்டர்களுக்கு கட்டிக்கொடுத்து தான் உருவாக்கின ஒரு சிறிய மருத்துவர்கள் சூழ் உலகத்துல பெருமையா வாழ்ந்தவர்.

நான் தாத்தாவோட பிரியம் எல்லாம் இல்ல. சின்னதுலேர்ந்தே ‘என்னமா இவ்ளோ துஷ்டத்தனம் பண்ணுது இது’ 10வது வரை பள்ளி விடுமுறை விட்டா நாய் குட்டி மாதிரி எங்க 8 பேரையும் தாத்தா வீட்ல விட்ருவாங்க. கட்டில்கள், ஊஞ்சல்கள், கைகள், கால்கள், எங்க மண்டைகள்னு உடையாத ஐட்டம் எதுவும் இல்ல. கத்தி குத்து முயற்சி, ஆள் கடத்தல், கொலை முயற்சின்னு குற்றங்களும் இதில் அடக்கம். பட்டம், பம்பரம், கிட்டிப்புள், உண்டிகோல் தொடங்கி பரண்-ல தொங்கர வரைக்கும் அனைத்தும் கற்றது தாத்தா வீட்ல தான்.

ஆனா ராத்திரி தாத்தா வீட்டுக்கு வந்துட்டா கப்சிப் தான். உள்ள வரும் போதே அவரோட முதல் வேலை டிவியை இழுத்து மூடி பூட்டு போடறது தான். அப்போலாம் அந்த டோர் வச்ச டிவி. பெப்சி உங்கள் சாய்ஸ் மட்டும் பாத்துக்கறேன் தாத்தான்னு கெஞ்சினாக்கூட விட மாட்டார். இப்படியாக இளமை புதுமை, நீங்கள் கேட்ட பாடல், திரை விமர்சனம், நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்-னு நாங்க இழந்த ஷோக்கள் ஏராளம். எங்க பாட்டி தான் எங்களுக்கு ராக்ஸ்டார். தாத்தா பயப்படற, பேச்ச கேக்கற ஒரே ஆளு பாட்டி தான்.

இதெல்லாம் தினமும் நியாபகத்துல இருக்கற விஷயம் இல்ல. நேத்து இறந்து போய் அசையாம இருந்த தாத்தாவ பார்க்கும்போது மூளையின் ஓரத்துல எங்கயோ எப்பயோ புதஞ்சி மறந்துபோன ஓரு கோடி நியாபகம். டிவி சினிமாலாம் பார்க்கவே கூடாதுன்னு சொன்ன தாத்தாவோட, மெடிக்கல் காலேஜ் பக்கம் போகாத ஒரே பேத்தி நான். போன வாரம் கடைசியா அவர்கிட்ட பேசிட்டு இருந்தப்போ, உன்னை உங்க அப்பா தைரியமான பொண்னா வளர்த்துருக்காரு. என் பொண்ணை நீ நல்லா பாத்துப்பன்னு தெரியும் சொன்னார். எங்க தாத்தா எங்களுக்கு எந்த சொத்தும் எழுதிட்டுப் போகல, ஆனா என்னோட முதல் சம்பளத்துல 1950ல அன்றைய காசு 24 ரூபாக்கு என் அம்மாக்கு வாங்கின தோடு் இது, இனி நீ வச்சுக்கோன்னு கொடுத்தார்.

இது நாம் நினைத்துப் பார்க்க முடியாத எதையும் விட விலைமதிப்பற்றது என்றும், ஒருமுறை நான் அந்த முதியவரால் மதிக்கப்படுவதையும் ஒப்புக் கொள்ளப்பட்டதையும் உணர்ந்தேன். உங்க அம்மாவோட தோடையும் உங்க பொண்ணையும் மாப்ளையும் என் உயிர விட பத்திரமா பாத்துப்பேன் தாத்தா. சந்தோஷமா போய்ட்டு வாங்க…

இவ்வாறு தாத்தா பற்றிய நிகழ்வுகளை நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார் பிரியா பவானி சங்கர்.

இவர் தற்போது ‘ஹாஸ்டல்’ ’அருண் விஜய் -ஹரி படம், ’ருத்ரன்’ ’இந்தியன் 2’ ’பத்து தல’, ‘குருதி ஆட்டம்’ ’ஓ மணப்பெண்ணே’ ’பொம்மை’ ’.. ஆகிய படங்களில் அவர் நடித்து வருகிறார்.

Celebs Bala Saravanan and Priya bhavani shankar pens a heartfelt note

JUST IN மே 10-24 வரை தமிழகத்தில் ஊரடங்கு – MKS அறிவிப்பு..; எவை செயல்படலாம்.? எவை செயல்படக்கூடாது.? முழு தகவல்கள்

JUST IN மே 10-24 வரை தமிழகத்தில் ஊரடங்கு – MKS அறிவிப்பு..; எவை செயல்படலாம்.? எவை செயல்படக்கூடாது.? முழு தகவல்கள்

TN Lockdownகொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் மே 10 முதல் 24 வரை முழு ஊரடங்கு என அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் முக ஸ்டாலின்.

எனவே இதனை முன்னிட்டு இன்றும், நாளையும் (மே 8 மற்றும் மே 9) அனைத்துக் கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி அளித்துள்ளனர்.

*எதற்கெல்லாம் அனுமதி?*

தமிழகத்திலுள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும் அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. கோயம்பேடு வணிக வளாகம் போன்ற மொத்த காய்கனி வளாகங்களில் சில்லறை விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது.

தமிழக அரசின் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்.

தேநீர்க் (டீ & காபி) கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை மட்டும் வழங்க அனுமதிக்கப்படும்

மளிகை, காய்கறி, இறைச்சிக் கடைகள் நண்பகல் 12 மணி வரை திறந்திருக்க அனுமதி

நியாயவிலைக் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும்

காய்கறி- பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் நண்பகல் 12 மணி வரை அனுமதிக்கப்படும்.

காய்கறி, மீன், இறைச்சி கடைகளில் 50 சதவீதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதி.

நடைபெற்று வரும் கட்டடப் பணிகள் அனுமதிக்கப்படும்.

அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்படலாம்

அத்தியாவசியத் துறைகளைத் தவிர்த்து மாநில அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்காது

மத்திய அரசு அலுவலகங்களுக்கும் கட்டுப்பாடு பொருந்தும்.

அத்தியாவசியப் பணிக்கு செல்வோர் உரிய ஆவணங்களுடன் பயணிக்க அனுமதி

வங்கிகள், ஏடிஎம். மையங்கள், காப்பீடு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்

மின் வணிக நிறுவனங்கள் மூலம் மளிகை, காய்கறி விநியோகிக்க நண்பல் 12 மணி வரை மட்டுமே அனுமதி

திருமணம், நேர்முகத்தேர்வு, வேலை வாய்ப்பு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு செல்பவர்கள் உரிய ஆவணங்களுடன் பயணிக்க அனுமதி

மருத்துவமனைகளுக்கு செல்பவர்களும் உரிய ஆவணங்களுடன் பயணிக்கலாம்

உணவு மற்றும் மளிகை பொருட்கள் விநியோகம் செய்யும் இ காமர்ஸ் நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி

பால், கொரியர் மற்றும் மருத்துவம் சார்ந்த பணிகளுக்கு தொடர்ந்து அனுமதி.

50 பேருக்கு மிகாமல் திருமண நிகழ்வுகளும், 20 பேருக்கு மிகாமல் இறுதி ஊர்வலமும் நடத்த அனுமதி

கிடங்குகளில் சரக்குகளை ஏற்றி, இறக்க, சேமித்து வைப்பது உள்ளிட்ட பணிகளுக்கு அனுமதி

பெட்ரோல், டீசல் பங்குகள் நேரக்கட்டுப்பாடு இன்றி செயல்பட அனுமதி.

*எதற்கெல்லாம் தடை..?*

அனைத்து தனியார் அலுவலகங்கள், ஐ.டி.நிறுவனங்கள் இயங்க முழுமையாக தடை.. ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உடற்பயிற்சிக் கூடங்கள், திரையரங்குகள், கூட்ட அரங்குகள் இயங்க அனுமதியில்லை.

வழிபாட்டு தலங்கள் இயங்கவும், குடமுழுக்கு, திருவிழாக்கள் நடத்தவும் தடை.

பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி நிறுவனங்கள் இயங்கவும் கோடை கால சிறப்பு முகாம்கள் நடத்தவும் தடை.

மொத்த காய்கனி வளாகங்களில் சில்லரை வியாபாரக் கடைகளுக்கு தடை நீடிக்கும்

பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் இயங்க அனுமதி இல்லை

மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர மற்ற நாடுகளில் இருந்து விமானங்கள் வர தடை

வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து விமானம், ரயில் மூலம் வருபவர்களுக்கு இ பதிவு முறை கட்டாயம்

முழு ஊரடங்கு காலத்தில் தமிழக டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது

சாலையோர உணவகங்கள் இயங்க தடை

அனைத்து தனியார் அலுவலகங்களும் இயங்கத் தடை விதிக்கப்படுகிறது

மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான தனியார், அரசுப் பேருந்து போக்குவரத்துக்கு தடை

வாடகை டாக்சி, ஆட்டோக்கள் ஆகியவை இயங்கவும் தடை

தங்கும் விடுதிகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது

மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் முடிதிருத்தும் கடைகள் இயங்கத் தடை.

Tamil Nadu CM Stalin announces complete lockdown from May 10 to 24

#TamilNadulockdown

லூஸ் மோசன் நிக்க்க்க்காம போவூது..; அட வெக்கங் கெட்டவங்களா.. இதையுமா வீடியோ எடுப்பீங்க..; பிரியங்காவை பிரித்து மேயும் நெட்டிசன்ஸ்

லூஸ் மோசன் நிக்க்க்க்காம போவூது..; அட வெக்கங் கெட்டவங்களா.. இதையுமா வீடியோ எடுப்பீங்க..; பிரியங்காவை பிரித்து மேயும் நெட்டிசன்ஸ்

Vijay TV Priyankaவிஜய் டிவியில் பிரபலமான தொகுப்பாளினி பிரியங்கா.

இவரை பல நிகழ்ச்சிகளில் எவ்ளோ கிண்டலடித்தாலும் அதை பொருட்படுத்தவே மாட்டார்.

இவர் ஒரு சாப்பாட்டு ராமன் (ராமி) என்பதை அவரே பல முறை கூறி ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் ரைஸ் மற்றும் பிரியாணி இரண்டும் ஒன்றாக சாப்பிட்டதால் தற்போது வயிற்றுப்போக்கு (லூஸ் மோசன்) 15 முறை போனதாக அவரது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரியங்கா.

பிரியங்கா அதனை நகைச்சுவையாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மருத்துவமனையில் நடந்த வீடியோவை எல்லாம் சூட் செய்து போட்டுள்ளார்.

இதை பார்த்து பிரியங்காவின் ரசிகர்கள் உற்சாகமானாலும் அட வெக்கங் கெட்டவங்களா.. இதையுமா வீடியோ எடுப்பீங்க.. என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Netizens slams Priyanka for her latest video

நட்சத்திர தம்பதிகளின் மகனுடன் ஜாலியாக சுற்றும் ‘பிக்பாஸ்’ ஜூலி..?

நட்சத்திர தம்பதிகளின் மகனுடன் ஜாலியாக சுற்றும் ‘பிக்பாஸ்’ ஜூலி..?

Bigg Boss julie2017ல் இளைஞர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு ஒரேடியாக பிரபலமானவர் ஜூலி.

இதன் பின்னர் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு வந்தது.

இதில் கலந்துக் கொண்டு பிரபலமானார்.

தற்போது ஓரிரு திரைப்படங்களில் நாயகியாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் சமீபகாலமாக பிரபல நடிகரின் மகனுடன் ஊர் சுற்றுவதாக கூறப்படுகிறது.

ரியாஸ்கான் மற்றும் உமா தம்பதியரின் மகனுடன் ஜூலி சுற்றுவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

ரியாஸ்கான் மகன் சாரிக் கானும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

இவர் ஜிவி பிரகாஷ் நடித்த பென்சில் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சாரிக் கான் என்பது குறிப்பிடத்தக்கது.

Bigg Boss julie is in love with Shariq haasan ?

முதல் துரோகியே மகேந்திரன் தான்.. அதான் அவரே விலகிட்டாரு.; கடுப்பான கமலின் முழு அறிக்கை

முதல் துரோகியே மகேந்திரன் தான்.. அதான் அவரே விலகிட்டாரு.; கடுப்பான கமலின் முழு அறிக்கை

kamal mahendranகோவை தெற்கு தொகுதியில் பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசனிடம் தோல்வியுற்றார் மநீம தலைவர் கமல்ஹாசன்.

கட்சி தோல்விக்கு பிறகு நிர்வாகக்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவர் மருத்துவர் மகேந்திரன், பொன்ராஜ் ஆகியோர் விலகல் கடிதத்தை கமலிடம் கொடுத்துள்ளனர்.

மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்கள் கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளனர்.

அதேபோல் பொதுச் செயலாளர்கள் சந்தோஷ்பாபு, சி.கே.குமரவேல், மௌரியா, முருகானந்தம் ஆகியோரும் ராஜினாமா செய்துள்ளனர்.

இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டாக்டர் மகேந்திரன்… ”
கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னதாகவே கமல்ஹாசன் கட்சி நடத்துவதில் ஜனநாயகம் இல்லை.

அவர் கட்சி நடத்தும் நிலைப்பாடு மாறுவதாகத் தெரியவில்லை. எனவே கட்சியில் இருந்து மட்டுமல்ல கட்சியின் அடிப்படை பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன்.

கமல் தமிழகத்தைச் சீரமைக்கிறாரோ இல்லையே மக்கள் நீதி மய்யத்தைச் சீரமைக்க வேண்டும்.

அவர் விரும்பினால் ஒரு நண்பராக எப்பொழுதும் இருப்பேன்.”

இவ்வாறு மகேந்திரன் கூறியிருந்தார்.

இந்நிலையில் இதற்குப் பதிலளிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்…. ” ‘சீரமைப்பும் தமிழகத்தை’ எனும் பெருங்கனவை முன்வைத்து முதலாவது சட்டமன்றத் தேர்தலை சந்தித்தோம். ஒரு பெரிய போரில் திறம்பட செயல்பட்டோம்.

களத்தில் எதிரிகளோடு துரோகிகளும் கலந்து இருந்தார்கள் என்பதைக் கண்கூடாகக் கண்டோம்.

துரோகிகள் களையெடுங்கள் என்பதுதான் அனைவரின் ஒருமித்த குரலாக இருந்தது. அப்படிக் களைய வேண்டியவர்களின் பட்டியலில் முதல் நபராக இருந்தவர் டாக்டர்.ஆர்.மகேந்திரன்.

கட்சியில் ஜனநாயகம் இல்லை என்கிறார். ஜனநாயகமும் சமயங்களில் தோற்றுப் போகும் என்பதற்கு மிகப்பெரிய உதாரணம் இவர்தான்.

முகவரி கொடுத்தவர்களின் முகங்களை எடுத்துக் கொள்ளத் துணிந்தார். கட்சிக்காக உழைக்கத் தயாராக இருந்த பல நல்லவர்களை தலையெடுக்க விடாமல் செய்ததே இவரது சாதனை.

நேர்மை இல்லாதவர்களும், திறமை இல்லாதவர்களும் வெளியேறும்படி மக்கள் நீதி மய்யத்தின் கதவுகள் திறந்தே இருக்கும் என்பதை அனைவரும் அறிவர்.

தன்னுடைய திறமை இன்மையையும், நேர்மை இன்மையையும், தோல்வியையும் அடுத்தவர் மீது பழிபோட்டு அனுதாபம் தேட முயற்சிக்கிறார்.

தன்னை எப்படியும் நீக்கி விடுவார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு புத்திசாலித்தனமாக விலகிக் கொண்டார்.

ஒரு களையே தன்னைக் களை என்று புரிந்து கொண்டு தனக்குத் தானே நீக்கி கொண்டதில் உங்களைப் போலவே நானும் மகிழ்கிறேன்.

இனி நம் கட்சிக்கு ஏறுமுகம்தான். என்னுடைய வாழ்க்கையில் அனைத்து விஷயங்களுமே வெளிப்படையானவை.

நான் செய்த தவறுகளை மறைக்கவோ மறுக்கவோ ஒருபோதும் முயற்சித்தது இல்லை.

என் சகோதர சகோதரிகளான மக்கள் நீதி மய்யத்தின் குடும்ப உறுப்பினர்களுக்கு மனம் தளர வேண்டாம் என ஆறுதல் சொல்ல வேண்டியதில்லை.

உங்களின் வீரமும் தியாகமும் ஊர் அறிந்தவை. தோல்வியின் போது கூடாரத்தைப் பிடித்துக் கொண்டு ஓடும் கோழைகளைப் பற்றி நாம் ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. கொண்ட கொள்கையில் தேர்ந்த பாதையில் சிறிதும் மாற்றம் இல்லை”

இவ்வாறு கமல்ஹாசன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Mahendran a betrayer: Kamal hits back at MNM vice president

எங்கள் நம்பிக்கைகளை உன் கையில் தந்துவிட்டோம்..; முதல்வர் ஸ்டாலினுக்கு பாடலாசிரியர் முருகன் மந்திரம் வாழ்த்து

எங்கள் நம்பிக்கைகளை உன் கையில் தந்துவிட்டோம்..; முதல்வர் ஸ்டாலினுக்கு பாடலாசிரியர் முருகன் மந்திரம் வாழ்த்து

மு.க.ஸ்டாலினுக்கு
பாடலாசிரியர் முருகன் மந்திரம்
வாழ்த்துக் கவிதை, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், பெருங்கிழவன் பெரியாரின் பேரனே,
பேரறிஞர் அண்ணாவின் தம்பியே, கலைஞரின் புரட்சிப் புதல்வனே

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு
பாடலாசிரியர் முருகன் மந்திரம்
வாழ்த்துக் கவிதை!
———————————————————-

தெற்கே
திராவிடமே

“முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்”
என்ற ஒற்றை வாக்கியத்திற்குள்
ஓராயிரம் புதிய வரலாறுகளை
படைக்க வந்த வல்லவனே…
வள்ளுவனே…!

தெரிந்தே தான்
உனக்கு ஸ்டாலின் என்று
பெயர் வைத்திருக்கிறார்,
கலைஞர்.

ஆம்,
ஸ்டாலின்கள் பாசிசத்தை
வீழ்த்தப் பிறந்தவர்கள்.

தமிழகம் மட்டுமல்ல…
இந்தியாவே இப்போது
உன்னை எதிர்பார்க்கிறது.

பூச்சிகளாய் புழுக்களாய்
நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கும்
இந்தியக் குடிமக்கள்…
தெற்கைத் தான்
நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

வடக்கின்
வாடிய முகங்கள்
அத்தனையும்
தெற்குநோக்கி
பார்த்துக்கொண்டிருக்கிறது.

வடக்கின்
பாசிசத்தால் கட்டப்பட்ட
கைகள் அத்தனையும்
தெற்கு நோக்கி
கும்பிட்டுக்கொண்டிருக்கிறது.

பகுத்தறிவே
எம் தமிழ் நிலத்தின்
பண்பாடு என்பதை
இந்தியாவைத் தாண்டி
உலகுக்கே நீ
உணர்த்தி இருக்கிறாய்.

ஜாதகம், ஜோசியம், ராசி, ராசி பலன்….

அத்தனை
மூடநம்பிக்கைகளையும்
தனியொருவனாய்
குப்பையில் அள்ளி
வீசி இருக்கிறாய்.

பெருங்கிழவன் பெரியாரின்
ப்ரியத்துக்குரிய பேரனே…
பேரறிஞர் அண்ணாவின்
பெருமைமிகு தம்பியே…
எங்கள் கலைஞரின்
புரட்சிப் புதல்வனே…

உன்னை
உளமார வாழ்த்துகிறேன்
உடன்பிறப்பே.

தமிழகமே
உன் பின்னால் இருக்கிறது.
அநீதிகளை அடித்து நொறுக்கு.

மதத்தை வைத்து
மடத்தனங்கள் செய்து
மக்களை ஏய்த்து
வன்முறை வெறியாடி
இரத்தம் குடிக்க நினைப்போரை
இரக்கமின்றி சிறைக்கனுப்பு.

வெளியில் வந்து மீண்டும்
அட்டூழியம் செய்யாதிருக்க
நீயே பொறுப்பு.

சாதியை வைத்து
சண்டித்தனங்கள் செய்து
கொலைகளைச் செய்வோரை
கூட்டமாய்
கூண்டுக்குள் அனுப்பு.

மீண்டு வந்து
மீண்டும் செய்யாதிருக்க
பாடம் சொல்லித் தருவதும்
நம் பொறுப்பு.

பெண்களின் மீது
வெறியாட்டம் நடத்துவோரை
குறி வைத்து பிடி.

இனியொருவனுக்கு
இப்படியோர்
எண்ணம் வராதிருக்க
நீ வழங்கும் தண்டனையே
முதல் படி.

பெரியாரிஸம்
அம்பேத்கரிஸம்
கம்யூனிஸம்
ஃபெமினிஸம்

மக்களுக்கான
அத்தனை இசங்களும்
நம்பும் ஒரு முதல்வரை
உன்னால்
பெற்றிருக்கிறது,
நம் தமிழகம்.

ஆனந்தக் கண்ணீரோடு
பரவசப்பட்டுக் கிடக்கிறார்கள்,
அன்னைத் தமிழ்நாட்டின் மக்கள்.

ஒரு முதலமைச்சர்
பதவியேற்பில்
இத்தனைக் கொண்டாட்டங்களை
என் வாழ்நாளில் கண்டதில்லை.

ஒரு முதல்வர்
பதவியேற்கும் நாளில்
இத்தனை மக்கள் கூடி
வாழ்த்துவதையும்
என் வாழ்நாளில் கண்டதில்லை.

ஆகப்பெரிய ஒரு
புரட்சியின் தொடக்கமாகவே
உன் பதவியேற்பை
வரவேற்கிறார்கள் மக்கள்.

ஒரு இரட்சகனைப் போல
உன்னைக் கொண்டாடுகிறார்கள்
தமிழ் மக்கள்.

எம் தலைவனே
எங்கள் முதல்வனே

எங்களின்
அனைத்து நம்பிக்கைகளையும்
இன்றே
உன் கையில் தந்துவிட்டு
நாளை முதல்
நாங்கள்
எங்கள் பிழைப்பை
பார்க்கப் போகிறோம்…

ஆம்…

நாளை முதல்
நாங்கள் பிழைத்திருப்பதை
நீ பார்த்துக் கொள்வாய்…
என்ற பெருநம்பிக்கையில்!

– முருகன் மந்திரம்

@mkstalin @muruganmantiram @Udhaystalin @arivalayam @urkumaresanpro

Lyricist Murugan Manthiram wishes to MK Stalin

MK Stalin (1)

More Articles
Follows