தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த படம் 7ஆம் அறிவு.
இதில் உண்மைத் தமிழரான போதி தர்மன் கேரக்டர் இடம் பெற்றது.
இவர் சீனா நாட்டில் தமிழரின் கலை, பெருமைகளை எடுத்துரைத்தவர் என்பது நாம் அறிந்ததே.
இந்நிலையில் ராம் மாத்வானி இயக்கத்தில் இந்த கேரக்டர் தற்போது ஒரு நீண்ட படமாக உருவாகவுள்ளதாம்.
இயக்குனர் ராம் மத்வானி மற்றும் இந்தி பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள்.
இதில் போதி தர்மரின் முழு வாழ்க்கையும் இடம் பெறும் என கூறப்படுகிறது.
இது போதி தர்மராக நடித்த சூர்யாவுக்கு பெருமை என்றே கூறலாம்.
போதி தர்மர் பற்றிய ஒரு சிறு குறிப்பு…
- போதி தர்மர் கி.பி.6ம் நூற்றாண்டில் வாழ்ந்த பல்லவ இளவரசன். காஞ்சிபுரத்தில் பிறந்தவர்.
- பல்லவ மன்னன் நாகேந்திர பல்லவனின் 3வது மகன். முதல் மகன் மன்னனாவும், இரண்டாவது மகன் தளபதியாகவும் ஆன பிறகு போதி தர்மனை அமைச்சராக பதவியேற்க சொன்னார்கள்.
- ஆனால் புத்தரின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட போதி தர்மன் அரச வாழ்க்கை துறந்து துறவு வாழ்க்கை மேற்கொண்டார். பின்னர் நடை பயணமாகவே சீனாவுக்கு சென்ற போதி தர்மன் தமிழ்நாட்டின் தற்காப்பு கலையை மாற்றம் செய்து ஷாலின் குங்பூவாக அங்கு கற்றுக் கொடுத்தார்.
- சீனாவில் தீராத நோயாக இருந்த அம்மை நோய்க்கு மருந்து கண்டுபிடித்தார்.
- போதி தர்மரின் இயற்பெயர் யாருக்கும் தெரியாது.
- அவரை போதி தர்மர் என்றும் சீன மக்களை காப்பாற்றிய வீரத் துறவி என்றும் அவர் திராவிட நாட்டை சேர்ந்தவர் என்றும் சீன வரலாறு குறிப்பிடுகிறது.
Bodhidharmar Biopic will be produced by Bollywood director Ram