பாபி-கீர்த்தி நடித்த ‘பாம்பு சட்டை’யை வாங்கிய பிரபலம்

பாபி-கீர்த்தி நடித்த ‘பாம்பு சட்டை’யை வாங்கிய பிரபலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bobby simha keerthy sureshமனோ பாலாவை ஒரு இயக்குனராக மற்றும் நடிகராக ரசிகர்களுக்கு தெரியும்.

இவர், சில வருடங்களுக்கு முன், நட்ராஜ் நடித்த, ‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார்.

இதனையடுத்து பாபி சிம்ஹா – கீர்த்தி சுரேஷ், பானு நடித்த அந்த படத்தை ‘பாம்பு சட்டை’ படத்தை தயாரித்தார்.

பல காரணங்களால் இதன் படப்பிடிப்பு தடைப்படவே, படம் நிறுத்தப்பட்டது.

தற்போது இப்படத்தின் உரிமையை பிரபல விநியோகஸ்தர் ‘சினிமா சிட்டி’ கே கங்காதரன் வாங்கியிருக்கிறாராம்.

அபி & அபி நிறுவனமும் இதன் வெளியீட்டில் இணைந்துள்ளது.

எனவே, மீண்டும் படப்பிடிப்பு வேலைகள் முழு வீச்சில் தொடங்கவுள்ளது.

அறிமுக இயக்குனர் ஆடம்ஸ் இப்படத்தை இயக்கி வருகிறார்.

மதுரை மைக்கேல் டீசரை பார்த்த சிம்பு என்ன சொல்கிறார்.?

மதுரை மைக்கேல் டீசரை பார்த்த சிம்பு என்ன சொல்கிறார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aaa movie simbuஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் 3 வேடத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

யுவன் இசையமைக்கும் இப்படத்தில் ஸ்ரேயா, தமன்னா உள்ளிட்டவர்கள் நாயகிகளாக நடிக்கின்றனர்.

இதில் சிம்பு நடிக்கும் மதுரை மைக்கேல் மற்றும் அஸ்வின் தாத்தா ஆகிய இரண்டு கேரக்டர்கள் பற்றிய தகவல்கள் வெளியிட்டுள்ளனர்.

தற்போது 2வது கேரக்டருக்கான சூட்டிங் நடைபெற்று வருகிறது.

விரைவில் மதுரை மைக்கேலுக்கான டீசரை வெளியிடவுள்ளனர்.

இந்நிலையில் இந்த டீசரை பார்த்த சிம்பு கூறியதாவது…

“டீசரை பார்த்தேன். அதில் ஆதிக் ரவிச்சந்திரனின் கடுமையான உழைப்பை பார்க்கும் போது சந்தோஷமாக உள்ளது. அவருக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

கௌதம் கார்த்திக்கு கைகொடுத்த சூர்யா

கௌதம் கார்த்திக்கு கைகொடுத்த சூர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya and gautham karthikமணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக்.

அதன்பின்னர் வந்த என்னமோ ஏதோ படமும் படத்தின் தலைப்புக்கு ஏற்றவாறே அமைந்தது.

இதனையடுத்து வந்த வை ராஜா வை கொஞ்சம் பாஸ் மார்க் பெற்றது.

தற்போது முத்துராமலிங்கம், சிப்பாய், இந்திரஜித் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஆர். கண்ணன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள படம் “இவன் தந்திரன்”

பி.சி. ஸ்ரீராமின் உதவியாளர் வி.என். மோகன் ஒளிப்பதிவு செய்ய, ஆஷா ஸ்ரீ தயாரிக்கிறார்.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சற்றுமுன் சூர்யா வெளியிட்டார்.

பிரபுதேவாவின் ‘தேவி’க்கும் நயன்தாராவுக்கும் என்ன சம்பந்தம்..?

பிரபுதேவாவின் ‘தேவி’க்கும் நயன்தாராவுக்கும் என்ன சம்பந்தம்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

devi movie stillsஇயக்குனர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா தயாரித்து நடித்துள்ள படம் தேவி.

இப்படம் அக்டோபர் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இதில் தமன்னா சினிமா ஹீரோயினாக நடிக்கிறார்.

எனவே இப்படத்திற்கும் நடிகை நயன்தாராவின் நிஜ வாழ்க்கைக்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா? என பிரபுதேவாவிடம் சமீபத்தில் கேட்கப்பட்டது.

ஆனால் இதற்கும் அவருக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என மறுத்துள்ளார் பிரபுதேவா.

தனுஷின் ஒரிஜினல் பெற்றோர் நாங்கள்தான்; புகார் கொடுத்த தம்பதி

தனுஷின் ஒரிஜினல் பெற்றோர் நாங்கள்தான்; புகார் கொடுத்த தம்பதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor dhanush is our son claims new coupleகஸ்தூரி ராஜாவின் மகன், செல்வராகவனின் தம்பி, ரஜினியின் மருமகன் என பல அடையாளங்கள் இருந்தாலும் இவற்றையெல்லாம் மீறி தனக்கான அந்தஸ்தை சமூகத்தில் உருவாக்கி வைத்திருப்பவர் நடிகர் தனுஷ்.

மேலும் திரையுலகின் பல துறைகளிலும் சாதித்து வருகிறார்.

இந்நிலையில் தனுஷை தங்களது மகன் என சிவகெங்கை மாவட்டத்தை சேர்ந்த கதிரேசன் – மீனாள் என்ற தம்பதியினர்தான் சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.

அரசு போக்குவரத்து கழகத்தில் டைம் கீப்பராக பணிபுரிந்து வருகிறார் கதிரேசன்.

இவர் கூறியுள்ளதாவது…

இவருக்கு பிறந்த கலையரசன் என்ற மகன் கடந்த 2002ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படிக்கும்போது தங்களை விட்டு பிரிந்து சென்று விட்டாராம்.

அவர்தான் தற்போது சென்னை சென்று தனுஷ் என்ற பெயரில் நடிகராகி விட்டதாக கூறியுள்ளார்.

அதன்பின்னர் சென்னைக்கு தனுஷை தேடி வந்தபோது கஸ்தூரிராஜா குடும்பத்தினர் தங்களை தடுத்து வருவதாகவும் கூறியுள்ள்ளார்.

மேலும் காவல் நிலையத்திலும் முதலமைச்சரின் தனிப்பிரிவிலும் புகார் கொடுத்துள்ளதாகவும் இந்த தம்பதியினர் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவுடன் மோதுவாரா அல்லது தனித்து வருவாரா ‘போகன்’.?

சூர்யாவுடன் மோதுவாரா அல்லது தனித்து வருவாரா ‘போகன்’.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bogan movie stillsஜெயம் ரவி, அரவிந்த்சாமி, ஹன்சிகா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘போகன்’.

‘ரோமியோ ஜூலியட்’ இயக்குநர் லட்சுமண் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இமான் இசையமைக்க, பிரபுதேவா இப்படத்தை தயாரித்துள்ளார்.

இதில் விக்ரம் என்ற கேரக்டரில் ஜெயம் ரவியும், விக்ரமாதித்யன் என்ற கேரக்டரில் அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர்.

‘தனி ஒருவன்’ படத்தை போன்று இப்படம் இவர்களின் கேரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

இப்படத்தை டிசம்பரில் திரைக்கு கொண்டு வரவிருக்கிறார்கள்.

டிசம்பர் 16ஆம் தேதி சூர்யாவின் எஸ் 3 படம் ரிலீஸ் ஆகிறது.

அதே தேதியில் போகன் வருவாரா? அல்லது தனித்து வருவாரா? என்பதை இன்னும் சில நாட்களில் தெரிந்து கொள்வோம்.

More Articles
Follows