‘பனாரஸ்’ நாயகன் சினிமாவில் நுழைவதை எதிர்த்த குடும்ப அரசியல்வாதி

‘பனாரஸ்’ நாயகன் சினிமாவில் நுழைவதை எதிர்த்த குடும்ப அரசியல்வாதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

”மிகச் சிறிய பட்ஜெட்களில் தயாராகி வந்த கன்னடப்படங்கள் இன்று பான் இந்தியா படங்களாக வளர்ந்திருப்பதோடு அவை இந்திய அளவில் நல்ல வசூல் வேட்டையையும் நடத்தி வருவதை நினைக்கும்போது மிகவும் பெருமையாக உணர்கிறேன்” என்றார் கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரவிச்சந்திரன்.

‘கே.ஜி.எஃப்’, ‘கே..ஜி..எஃப் 2’, ‘777’ சார்லி படங்களின் சூப்பர் ஹிட் வெற்றிகளைத் தொடர்ந்து கன்னடப்படங்களுக்கு இந்திய அளவில் மவுசு அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் அடுத்து மிகவும் எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ள படம் ‘பனாரஸ்’.

‘புயூட்டிஃபுல் மனசுகுலு’,’பெல்பாட்டம்’ ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ள ஜெயதீர்த்தா இயக்கியுள்ள இப்படத்தில் ஜையித் கான் நாயகனாக அறிமுகமாக அவருக்கு ஜோடியாக சோனல் மாண்டீரோ நடித்துள்ளார்.

இப்படத்தின் ஒளிப்பதிவை அத்வைதா குருமூர்த்தி கவனிக்க, அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பிரம்மாண்ட ட்ரெயிலர் வெளியீட்டு விழா பெங்களூருவில் நடைபெற்றது.

அந்நிகழ்வில் பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் ரவிச்சந்திரன், நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கான், பனாரஸ் படத்தின் தயாரிப்பாளர் திலக்ராஜ் பல்லால், நாயகன் ஜையித் கான், நாயகி சோனல் மாண்டீரோ உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் துவக்கத்தில் ‘பனாரஸ்’ படத்தின் ட்ரெயிலரை வெளியிட்டுப் பேசிய நடிகர் ரவிச்சந்திரன்…

,’ சமீப காலமாக கன்னட சினிமா இந்திய அளவிலும் உலகநாடுகளிலும் வெற்றி பெற்று வருவது பெரும் மகிழ்ச்சியை தருகிறது. அந்த வரிசையில் இந்த பனாரஸ் படமும் மாபெரும் வெற்றிபெறும் என்பது இப்படத்தின் ட்ரெயிலரைப் பார்த்தாலே தெரிகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் பெருமை அடைகிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் திலக்ராஜ் பல்லால் பேசும்போது…

’வீட்டிலிருந்து இந்நிகழ்ச்சிக்குப் புறப்பட்டபோது என் மனைவி விழாவில் உணர்ச்சி வசப்படாமல் நடந்துகொள்ளுங்கள் என்று அறிவுரை கூறி அனுப்பினார். ஆனால் என்னால் அப்படி உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை. காரணம் இப்படம் முழுக்க முழுக்க உணர்வுகளைப் பேசும்படம்” என்றார்.

நாயகி சோனல் மாண்டீரோ பேசும்போது…

“ இதற்கு முன் சுமார் 10 படங்களில் நடித்திருக்கிறேன் என்றாலும் இது என் வாழ்வின் முக்கியமான படம். இவ்வாய்ப்பை வழங்கியதற்காக இயக்குநருக்கு என் மனதின் அடி ஆழத்திலிருந்து நன்றி தெரிவிக்கிறேன். விளம்பர டிசைன்களில் நாயகன் பெயர் மட்டும் முன்னிலைப்படுத்தப்பட்டது பற்றி எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அவருக்கு இது முதல் படம் என்பதால் அவரை சற்று கூடுதலாக புரமோட் செய்வதில் தவறில்லை” என்றார்.

இயக்குநர் ஜெயதீர்த்தா பேசும்போது…

,” இதுவரை 7 படங்களை இயக்கியுள்ளேன். ஒவ்வொரு முறையும் ஒரு புது ஜானர் கதைகளைத்தான் எடுத்து வந்துள்ளேன். அதனால் எனக்கு நிரந்தர ரசிகர்கள் இல்லை. இந்த ‘பனாரஸ்’ படமும் அப்படிப்பட்ட முற்றிலும் ஒரு ஜானர் வகையறா படம்தான்.

இது ஒரு டைம்லைன் காதல் கதை. காசியின் அத்தனை அழகையும் படத்தில் அள்ளி வந்துள்ளோம். இதுவொரு யுனிவர்சல் சப்ஜெக்ட் என்பதால் பான் இந்தியா படமாக வருவதற்கு அத்தனை தகுதியும் உள்ள படம்’ என்றார்.

அடுத்து பேசிய ‘பனாரஸ்’ நாயகன் ஜையத் கான்….

” நான் அரசியல் குடும்பத்துப் பிள்ளை என்பதால் சினிமாத் துறைக்கு வருவதற்கு வீட்டில் பலத்த எதிர்ப்பு இருந்தது. குறிப்பாக அப்பா நான் சினிமாவுக்குள் வருவதை கடுமையாக எதிர்த்தார். அவரது நெருங்கிய நண்பர்களை வைத்து கன்வின்ஸ் செய்து இங்கு வந்து சேர்ந்திருக்கிறேன்.

இந்த இடத்திற்கு வருவதற்காக கடுமையாக உழைத்திருக்கிறேன். கடந்த மூன்று ஆண்டுகளாக நான்கு முதல் ஆறு மணி நேரத்திற்கு மேல் தூங்கியதே இல்லை.

முதலில் இப்படத்தின் சில காட்சிகளை மட்டும் காசியில் ஷூட் செய்துவிட்டு மீதியை மற்ற லொகேஷன்களில் மேட்ச் செய்துகொள்ளலாம் என்றுதான் இங்கு வந்தோம். ஆனால் காசியில் விநோதமான சில இடங்களால் ஈர்க்கப்பட்டு மொத்தப்படத்தையும் இங்கேயே முடித்திருக்கிறோம்.

படப்பிடிப்பில் ஒரு பக்கம் நாங்கள் காதல் காட்சி எடுத்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நூற்றுக்கணக்கில் பிணங்களை எரித்துக்கொண்டிருப்பார்கள்.

எவ்வளவு முரணான நிகழ்வு பாருங்கள். ஆனால் அதுதான் நடந்தது. என்னைப் பொறுத்தவரையில் இந்த ‘பனாரஸ்’ படம் என்பது காசியின் புனிதம் கலந்த காதல் கதை” என்றார்.

‘பனாரஸ்’ வரும் நவம்பர் 4ம் தேதியன்று கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது

நாக சைதன்யாவை தொடர்ந்து மற்றொரு மகனுடன் இணையும் நாகார்ஜுனா

நாக சைதன்யாவை தொடர்ந்து மற்றொரு மகனுடன் இணையும் நாகார்ஜுனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நாகார்ஜுனா.

இவர் ஓரிரு நேரடி தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். ‘தோழா’ என்ற படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்திருந்தார்.

இவர் தற்போது நடித்துள்ள தெலுங்கு படம் ‘தி கோஸ்ட்’. நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை சோனல் சவுகான் நடித்துள்ளார்.

இப்படம் அக்டோபர் 5ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் பட புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அவரது மகன்களும் பிரபல நடிகர்களுமான நாக சைதன்யா & அகில் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அப்போது நாகார்ஜுனா பேசியதாவது…

பங்கர்ராஜு படத்தில் நாக சைதன்யாவுடன் நடித்தேன். விரைவில் என் 100வது படத்தில் அகிலுடன் இணைந்து நடிக்க உள்ளேன்” எனப் பேசினார்.

nagarjuna akhil

BREAKING காதல் காமம் ஆரோக்கியம் அரசியல் ரஜினி கமல் விஜய்.; சரவெடியாய் அமைந்த சரத்குமார் சந்திப்பு

BREAKING காதல் காமம் ஆரோக்கியம் அரசியல் ரஜினி கமல் விஜய்.; சரவெடியாய் அமைந்த சரத்குமார் சந்திப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1990களில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சரத்குமார்.

ஹீரோ வில்லன் குணச்சித்திர கேரக்டர் என எந்த வேடம் எடுத்தாலும் தன் முத்திரை பதித்து வருபவர்.

தற்போது சமத்துவ மக்கள் கட்சியை அரசியல் கட்சியை நிர்வகித்து வருகிறார்.

இந்த நிலையில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பெரிய பழவேட்டையராக நடித்துள்ள சரத்குமார் ரிலீசை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

* பொன்னியின் செல்வன் படத்தில் ரஜினி நடிக்க வேண்டும் விருப்பம் தெரிவித்திருந்தார்.

எந்த கேரக்டர் என்றாலும் அதை சிறப்பாக அமைத்துக் கொடுப்பவர் மணிரத்னம். எனவே ரஜினி நடித்திருந்தாலும் அவர் தான் கேரக்டரில் ஜொலித்திருப்பார்.

*கமலுக்கும் எனக்கும் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் வரும்.

ஆனால் அதே நினைத்து கொண்டிருந்தால் பிரச்சனை பெரிதாகும். சமீபத்தில் விக்ரம் படம் பார்க்க அழைத்திருந்தார். அதுபோல விக்ரம் சக்சஸ் பார்ட்டிக்கும் அழைத்திருந்தார். அவரை சந்தித்தேன்.

* வாரிசு படத்தில் விஜயுடன் நடித்தது நல்ல அனுபவம். அருகில் இருந்து அவரது நடிப்பை பார்த்தேன்.

* உடலை கட்டுவதற்காக வைத்திருப்பது எப்போதும் நல்லது. தினமும் உடற்பயிசி செய்ய வேண்டும்.

என் தந்தை புகை மது ஆகியவற்றை பழக வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்லிக் கொடுத்திருந்தார். எனவே எதுவாக இருந்தாலும் அளவோடு இருப்பது நல்லது.

*பாஜக காங்கிரஸ் கட்சியிலும் இருந்து கூட்னணிக்கு எனக்கு அழைப்பு வருகிறது. ஆனால் நான் எந்த முடிவும் எடுக்கவில்லை.

எனது கட்சி பணியிலும் நான் செயல்பட்டு தான் வருகிறேன். இப்போது ஆன்லைன் மூலமாக ஆலோசனைகள் செய்து வருகிறேன்.

* பொன்னியின் செல்வன் படத்தில் காதல் கம்பீரம் எல்லாம் இருக்கும். எனக்கு பிடித்த நடிகைகள் சரோஜாதேவி பத்மினி சாவித்திரி.

*பொன்னியின் செல்வன் படத்தில் எந்த நடிகை பிடிக்கும் என கேட்டு மாட்டி விடாதீர்கள். எனக்கு பிடித்தவர் ராதிகா தான்.

*என் கைவசம் இப்போது இருபதுக்கு மேற்பட்ட படங்களை உள்ளன. இது என்னுடைய ரீ என்ன்ட்ரீ அல்ல. முதல் என்ட்ரீயே முடியவில்லை. அது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

நான் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு விளம்பரத்தில் நடித்தது உண்மைதான். அது தடை செய்யப்படவில்லை. தடை செய்திருந்தால் நான் நிச்சயம் அதை செய்திருக்க மாட்டேன்.

அதுபோல டாஸ்மாக் தடை செய்தால் நல்லது தான்.*” என பல்வேறு கேள்விக்கு பதில் அளித்து நிகழ்ச்சியை கலகலப்பாக்கினார் சரத்குமார்.

Sarthkumar recent press meet high lights

நடிகர் விஷால் வீடு மீது தாக்குதல்.; காவல் நிலையத்தில் கம்ப்ளைண்ட்

நடிகர் விஷால் வீடு மீது தாக்குதல்.; காவல் நிலையத்தில் கம்ப்ளைண்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான விஷால் சென்னை அண்ணாநகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

நேற்று (26/09/2022) இரவு சிவப்பு நிற காரில் வந்த சிலர் நடிகர் விஷால் வீட்டினை கற்கள் கொண்டு தாக்கியுள்ளனர்.

இதில், விஷாலின் வீட்டு கண்ணாடிகள் சேதமாகியுள்ளன.

இவை அனைத்தும் விஷால் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து இன்று நடிகர் விஷால் சார்பில் அவரின் மேனேஜர் ஹரி கிருஷ்ணன் சென்னை கே4 அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றும் அளித்துள்ளார்.

படப்பிடிப்பிற்காக நடிகர் விஷால் வெளியூர் சென்றுள்ள சூழ்நிலையில் இந்த தாக்குதல் நடைப்பெற்றுள்ளது.

5 Years living together.. 2 மாத கர்ப்பம்.; திருமணம் செய்த நட்சத்திர ஜோடிகள்

5 Years living together.. 2 மாத கர்ப்பம்.; திருமணம் செய்த நட்சத்திர ஜோடிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற கேளடி கண்மணி தொடரில் கதாநாயகியாக அறிமுகமானவர் திவ்யா.

அதை தொடர்ந்து மகராசி தொடரில் நடித்தவர், தற்போது செவ்வந்தி என்கிற தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார்

அதேபோல தற்போது செல்லமா என்கிற தொடரில் நாயகனாக நடித்து வருகிறார் நடிகர் அர்ணவ்.

கேளடி கண்மணி தொடரில் நடித்தபோது அதில் கதாநாயகனாக நடித்த அர்ணவ்வுக்கும் இவருக்கும் இடையே நட்பு உருவாகி பின்னர் காதலாக மலர்ந்தது.

கடந்த ஐந்து வருடங்களாக லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்த இவர்கள் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர். அர்ணவ் முஸ்லிம் என்பதால் இந்து மற்றும் இஸ்லாமிய முறைப்படி தங்களது திருமணத்தை நடத்திய இவர்கள் முறைப்படி பதிவுத் திருமணமும் செய்துள்ளனர்.

இந்த நிலையில் தான் இரண்டு மாத கர்ப்பமாக இருப்பதாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் திவ்யா.

Arnav Divya

JUST IN சூப்பர் ஸ்டாரின் மனைவியும் பிரின்ஸ் நடிகரின் தாயாருமான இந்திரா மரணம்

JUST IN சூப்பர் ஸ்டாரின் மனைவியும் பிரின்ஸ் நடிகரின் தாயாருமான இந்திரா மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகர் மகேஷ்பாபு.

இவர் நடித்த பெரும்பாலான சூப்பர் ஹிட் படங்களை தான் தமிழில் விஜய் ரீமிக்ஸ் செய்து நடித்து வந்தார்

இவரை தெலுங்கு திரை உலகின் பிரின்ஸ் என்றும் சூப்பர் ஸ்டார் என்றும் ரசிகர்கள் அழைக்கின்றனர்.

இவர் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவிற்கும், இந்திரா தேவிக்கும் பிறந்தவர்.

இந்த நிலையில் நடிகர் மகேஷ் பாபுவின் தாய் இந்திரா தேவி இன்று காலை 4 மணியளவில் ஹைதராபாத்தில் வயது முதிர்வு மரணமடைந்துள்ளார் எனும் அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

இந்தச் செய்தி மகேஷ்பாபு ரசிகர்களையும் தெலுங்கு திரையுங்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் மகேஷ்பாபுவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

More Articles
Follows