ஏஆர். ரஹ்மான் புகழை இழிவுப்படுத்திய நடிகர் பாலகிருஷ்ணா..; ச்சே.. இப்படியா பேசுவாங்க..

ஏஆர். ரஹ்மான் புகழை இழிவுப்படுத்திய நடிகர் பாலகிருஷ்ணா..; ச்சே.. இப்படியா பேசுவாங்க..

இசைப்புயல் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் ஏ ஆர் ரஹ்மான்.

தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.

இந்திய சினிமாத்துறைக்கு எட்டாக்கனியாக இருந்த ஆஸ்கர் விருதுகளை ஒரே நேரத்தில் 2 முறை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை தேடி தந்தவர் இவர்.

புகழின் உச்சிக்கே போனாலும் *எல்லா புகழும் இறைவனுக்கே…* என்று சொல்பவர். ஆஸ்கர் விருது விழாவில் கூட இந்த வார்த்தைகளை மேடையில் சொன்னார்.

இந்த நிலையில் ஏ ஆர் ரஹ்மானையும் அவர் வாங்கிய ஆஸ்கார் விருதையும் தெலுங்கு நடிகர் பாலைய்யா என்ற பாலகிருஷ்ணா இழிவாக பேசியுள்ளார்.

ஏ ஆர் ரஹ்மான் ஆஸ்கர் விருது வாங்கி இருக்கலாம், ஆனால் அவர் யார் என்றே எனக்கு தெரியாது.

பாரத ரத்னா போன்ற விருதுகள் என்.டி.ஆரின் கால் விரலுக்கு சமம். உயரிய விருதுகள் கூட தன்னுடைய குடும்பம் தெலுங்கு சினிமாவிற்கு செய்த நன்மைக்கு ஈடாகாது,” என ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் பாலகிருஷ்ணா.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாலகிருஷ்ணாவின் இந்த கருத்துக்கு கடும் கண்டனங்களும் எழுந்து வருகின்றன.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் பாலாகிருஷ்ணா.

இவரது படங்களைப் பார்த்தால் பயங்கர காட்டு மிருகங்கள் கூட மிரண்டு போகும். கற்பனைக்கே எட்டாத அளவுக்கு மாஸான காட்சிகள் இருக்கும்.

தமிழ் ரசிகர்களுக்கு போர் அடித்தால் அவரது காட்சிகளை யூடியுப்பில் போட்டு ரசிப்பார்கள். இவரது நடனமும் ஆக்ஷனும் செம காமெடியாத் தான் இருக்கும்.

அப்படிபட்ட ஒரு நடிகர் ஏ.ஆர். ரஹ்மான் பற்றிய கேள்விக்கு இப்படி பதில் சொன்னால் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா..??

Bala Krishna’s controversy speech about AR Rahman

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *