தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர் பாலகிருஷ்ணா. இவரை ரசிகர்கள் பாலைய்யா என்று செல்லமாக அழைப்பதுண்டு. இவருக்கு என தனி ரசிகர் பட்டாளம் அங்கு உண்டு.
இவரது படங்களில் லாஜிக் இருக்கோ இல்லையோ நம்பமுடியாத மேஜிக் இருக்கும். எனவே இவரது படங்கள் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் படு பிரபலம்.
இவரது நடிப்பில் தற்போது திரைக்கு வர தயாராகி உள்ள படம் ‘பகவந்த் கேசரி’.
இப்படத்தில் காஜல் அகர்வால், ப்ரியங்கா ஜவால்கர், ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை அனில் ரவிபுடி இயக்க தமன் இசையமைத்துள்ளார்.
இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதே நாளில் தான் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படமும் திரைக்கு வருகிறது.
எனவே ஒரே நாளில் இரண்டு முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் மோதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Balakrishna and Vijay’s films to clash at box office during october 19