‘விக்ரம்’ டைட்டிலை அடுத்து ‘ரஜ்னி’ டைட்டிலில் நடிக்கும் காளிதாஸ்

‘விக்ரம்’ டைட்டிலை அடுத்து ‘ரஜ்னி’ டைட்டிலில் நடிக்கும் காளிதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நவரசா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் பரப்பரான இன்வெஸ்டிகேசன் திரில்லர் திரைப்படம் “அவள் பெயர் ரஜ்னி”.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமஸ் வெளியிட்டார்.

அவள் பெயர் ரஜ்னி

விக்ரம், நட்சத்திரம் நகர்கிறது படங்களின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் வெளியாகும் அடுத்த திரைப்படம் இதுவாகும்.

தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகியுள்ள இப்படம், நொடிக்கு நொடி திருப்பங்களுடன் ரசிகர்களை இருக்கை நுனியில் வைக்கும், துப்பறியும் வகை திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது.

இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, நமீதா பிரமோத், ரெபா மோனிகா ஜான் மற்றும் சைஜு குருப், அஸ்வின் குமார், கருணாகரன், ஷான் ரோமி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அவள் பெயர் ரஜ்னி

பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ் வெளியிட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஒரு திரில்லர் திரைப்படத்திற்கான கச்சிதமான போஸ்டராக ஆவலை தூண்டும் வகையில் இப்போஸ்டர் அமைந்துள்ளது.

சென்னை பொள்ளாச்சி கொச்சின் ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது.

அவள் பெயர் ரஜ்னி

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமான நடைபெற்று வருகிறது. விரைவில் டீசர் மற்றும் டிரெய்லர் அறிவிப்புகள் வெளியாகும்.

எழுத்து இயக்கம் : வினில் ஸ்கரியா வர்கீஸ்
தயாரிப்பு : ஸ்ரீஜித் K.S மற்றும் பிளெஸ்ஸி ஸ்ரீஜித்
ஒளிப்பதிவு : RR விஷ்ணு
இசை : 4 மியூசிக்ஸ்
எடிட்டர்: தீபு ஜோசப்
வசனங்கள்: வின்சென்ட் வடக்கன், டேவிட் K ராஜன்
கலை இயக்குனர்: ஆஷிக் S
கிரியேட்டிவ் டைரக்டர்: ஸ்ரீஜித் கோடோத்
ஒப்பனை: ரோனெக்ஸ் சேவியர்
ஆடை வடிவமைப்பாளர்: தன்யா பாலகிருஷ்ணன்
ஸ்டண்ட்: ஆக்‌ஷன் நூர், K கணேஷ் குமார், அஷரஃப் குருக்கள்
புரடக்சன் கண்ட்ரோளர் : ஜாவேத் செம்பு
முதன்மை இணை இயக்குநர்கள்: வினோத் PM, விஷக் R வாரியர்
இணை தயாரிப்பாளர்: அபிஜித் S நாயர்
தயாரிப்பு நிர்வாகி: K சக்திவேல்
ஒலி வடிவமைப்பாளர்: ரெங்கநாத் ரவி
DI : ரமேஷ் C P
ஸ்டில்ஸ்: ராகுல் ராஜ் R
புரமோஷன் ஸ்டில்ஸ் : ஷஃபி ஷக்கீர்
மக்கள் தொடர்பு: சதீஷ் (AIM)
டிஜிட்டல்: ரஞ்சித் M
டிசைன்ஸ்: 100 டேஸ்

அவள் பெயர் ரஜ்னி

Aval Peyar Rajni First Look Revealed

தென் ஆப்ரிக்கா ரயிலில் சண்டை போடும் ‘இந்தியன்’

தென் ஆப்ரிக்கா ரயிலில் சண்டை போடும் ‘இந்தியன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார்.

‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பாக தைவான் நாட்டிற்கு கமல்ஹாசன், ஷங்கர் உள்பட படக்குழுவினர் சென்று இருந்தனர்.

இந்த நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட்டை இயக்குனர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

’இந்தியன் 2’ படத்தின் தைவான் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக தெரிவித்து புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

தைவான் படப்பிடிப்பை முடித்துவிட்டு ’இந்தியன் 2’ பட குழுவினர் அடுத்ததாக தென் ஆப்பிரிக்கா செல்ல இருப்பதாகவும் அங்கு அதிரடி ஆக்சன் ரயில் ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

மேலும், தென் ஆப்பிரிக்க படப்பிடிப்புடன் கிட்டத்தட்ட ’இந்தியன் 2’ படப்பிடிப்பு நிறைவு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

kamal’s ‘Indian 2’ movie Taiwan schedule completes

விக்ரம் ரசிகர்களே.. தங்களுக்கு தங்கலானின் தங்கமான அப்டேட் இதோ..

விக்ரம் ரசிகர்களே.. தங்களுக்கு தங்கலானின் தங்கமான அப்டேட் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பா. ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘தங்கலான்’.

இப்படத்தில் பார்வதி திருவோடு, மாளவிகா மோகனன், பசுபதி மாசிலாமணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க, ‘ஸ்டூடியோ கிரீன்’ ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தங்கலான்

தற்போது, கர்நாடக மாநிலத்தில் உள்ள கேஜிஎப் என்று கூறப்படும் கோலார் தங்க வயலில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது வருகிறது.

இந்த நிலையில், கோலார் தங்க வயலில் நடைபெற்ற படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளதாக படக்குழுவினர் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிய உள்ளது என கூறப்படுகிறது.

தங்கலான்

Vikram starrer ‘Thangalaan’ KGF schedule wrapped up

BREAKING மருத்துவமனையில் குஷ்பூ அட்மிட்.; மக்களுக்கு அட்வைஸ்

BREAKING மருத்துவமனையில் குஷ்பூ அட்மிட்.; மக்களுக்கு அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகை, தயாரிப்பாளர், தேசிய மகளிர் ஆணையக் குழு உறுப்பினர் என பன்முகம் கொண்டவர் நடிகை குஷ்பூ.

நடிகை குஷ்பூ காய்ச்சல் மற்றும் உடல் வலி காரணமாக தற்போது ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இந்த நிலையில், குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு அதில், “கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளேன். உடல் நிலை கடுமையாக பலவீனம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.உடலில் ஏற்படும் அறிகுறிகளைச் சற்று உன்னிப்பாகக் கவனியுங்கள், அதனைப் புறந்தள்ளி விடாதீர்கள். கவனிக்காமல் விட்டதால் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி உள்ளேன். விரைவில் குணமடைவேன் என நம்புகிறேன். ஆனால் அது நீண்ட நாட்களாகும் என்று நினைக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

குஷ்பூ விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Khusbhu admitted to the hospital

‘விடுதலை’ படத்தின் தெலுங்கு டைட்டில் & ரிலீஸ் அப்டேட் இதோ

‘விடுதலை’ படத்தின் தெலுங்கு டைட்டில் & ரிலீஸ் அப்டேட் இதோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெற்றி மாறன் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சூரி முக்கிய வேடங்களில் நடித்து வெளியான படம் ‘விடுதலை’.

இப்படத்தில் பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

‘விடுதலை’ படம் மார்ச் 31 அன்று முதல் திரையரங்குகளில் வெளியாகியது.

இப்படத்திற்கு மக்களிடையே நல்ல விமர்சனங்களும், வரவேற்பும், வசூலும் பெற்று வருகிறது.

இந்த நிலையில், ‘விடுதலை’ படத்தை தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர்கள் அறிவித்தனர்.

நேற்று, படத்தின் தெலுங்கு தலைப்பு மற்றும் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள் அறிவித்தனர்.

இப்படம் தெலுங்கில் ‘விடுதலா பார்ட் 1’ என்று பெயரிடப்பட்டுள்ளது, மேலும் இது ஏப்ரல் 15 ஆம் தேதி வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Here’s the Telugu title & release update of ‘Viduthalai’

தமிழக விஞ்ஞானி ஜி டி நாயுடுவின் சுயசரிதையில் நடிக்கும் மாதவன்

தமிழக விஞ்ஞானி ஜி டி நாயுடுவின் சுயசரிதையில் நடிக்கும் மாதவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘இறுதிச்சுற்று’ படம் நடிகர் மாதவனுக்கு இரண்டாவது இன்னிங்ஸை சினிமாவில் தொடங்கி வைத்தது என்று சொன்னால் அது மிகையல்ல.

அது முதலே வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் மாதவன்.

இந்த படத்திற்குப் பிறகு மாதவன் இயக்கி நடித்த நம்பி நாராயணனின் வாழ்க்கை திரைப்படம் ‘தி ராக்கெட்டரி நம்பி எஃபெக்ட்’ மாபெரும் வெற்றி பெற்றது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிகர் மாதவனையும் அழைத்து தனது பாராட்டுகளை தெரிவித்து இருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் தற்போது ஜிடி நாயுடுவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறார் மாதவன். அதன் விவரம் வருமாறு…

தமிழகத்தில் பிறந்த விஞ்ஞானி ஜி. டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகும் பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகனாக மாதவன் நடிக்கிறார்.‌

தமிழ் திரையுலகில் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், தற்போது உலகளவில் பிரபலமான தமிழக விஞ்ஞானி ஜி. டி நாயுடு நாயுடுவின் சுயசரிதையையும், அவரது சாதனைகளையும் தழுவி பெயரிடப்படாத புதிய திரைப்படத்தை தயாரிக்கிறது.

இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும். மேலும் இதற்காக ஜி. டி. நாயுடு பெயரில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனங்களுடன், மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டிருக்கிறது.

நடிகர் மாதவன் தற்போது இயக்குநர் மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கத்தில் தயாராகி வரும் படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.

இதைத் தொடர்ந்து ஜி. டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றில் மாதவன் நடிக்கிறார்.

Madhavan in lead Biopic of Miracle man GD Naidu

More Articles
Follows