ரஜினி பற்றி கேள்வி கேட்டதால் வைகோ ஆவேசம்

ரஜினி பற்றி கேள்வி கேட்டதால் வைகோ ஆவேசம்

Rajinikanth and Vaikoதமிழ்நாடு கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிவாரணம் வேண்டி தமிழக விவசாயிகள் டெல்லியில் கடந்த 12 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனை வடநாட்டு மீடியாக்கள் பெரிதாக கண்டுக் கொள்ளவில்லை.

இந்நிலையில் விஷால், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் டெல்லி சென்று விவசாயிகளை சந்தித்து, ஆதரவு அளித்து மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்தனர்.

அப்போது பத்திரிகையாளர்கள் இவர்களை சந்திக்க வந்ததால், விவசாயிகளை கண்டுக்கொள்ளாத மீடியாக்கள், நடிகர்கள் மட்டும் இப்போது ஏன் கண்டு கொள்கிறது? என சாடியிருந்தார்.

அதுபோல் மதிமுக தலைவர் வைகோ அவர்களும் டெல்லி சென்று விவசாயிகளுக்கு ஆதரவளித்தார்.

அப்போது ரஜினியின் இலங்கை பயணம் ரத்து குறித்தும், இலங்கை மீனவர் பிரச்சினை குறித்தும் ஒரு ரிப்போர்ட்டர் கேள்வி கேட்டார்.

இதனால் ஆவேசமான வைகோ கூறும்போது, விவசாயம், இந்த போராட்டம் பற்றி மட்டும் கேள்வி கேளுங்கள், வேறு எதையும் கேள்வி கேட்காதீர்கள்.” என்றார்.

ரஜினியால் லைக்கா நிறுவனத்திற்கு போலீஸ் பாதுகாப்பு.?

ரஜினியால் லைக்கா நிறுவனத்திற்கு போலீஸ் பாதுகாப்பு.?

lyca policeலைகா நிறுவனம் நடத்தவிருந்த இலங்கை தமிழர்களுக்கு 150 வீடுகள் வழங்கும் விழாவில் ரஜினிகாந்த் கலந்துக் கொள்ளவிருந்தார்.

ஆனால் தமிழக அரசியல்வாதிகளின் எதிர்ப்பால் ரஜினி, அந்த நிகழ்ச்சியை ரத்து செய்து இலங்கைக்கு இம்முறை செல்லவில்லை என தெரிவித்தார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட லைகா அந்த நிகழ்ச்சியை ரத்து செய்வதாக அறிவித்தது.

மேலும், ராஜபக்சேவின் மகன் நாமல், ரஜினி வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

தமிழக அரசியல்வாதிகள் அவரை வரவிடாமல் சூழ்ச்சி செய்கின்றனர் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னையில் உள்ள லைகா நிறுவனத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இது ரஜினி இலங்கை பயணம் ரத்து தொடர்பாக போடப்பட்டு இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

Is Rajini is reason for Police protection to Chennai Lyca office

ரஜினி இலங்கை செல்லாததால் நிகழ்ச்சியை ரத்து செய்த லைக்கா

ரஜினி இலங்கை செல்லாததால் நிகழ்ச்சியை ரத்து செய்த லைக்கா

Rajinikanthலைக்கா நிறுவனம் சார்பில் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் 150 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

இவ்வீடுகளை வழங்கும் விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவிருந்தார்.

ஆனால் ரஜினி இலங்கை செல்லக்கூடாது என்று எதிர்ப்புகள் தமிழகத்தில் உருவாகியதால், தன் இலங்கை பயணத்தை ரத்து செய்து, அறிக்கை வெளியிட்டார் ரஜினி.

இந்நிலையில் இதுகுறித்து, லைக்கா நிறுவனத்தின் துனைத்தலைவர் பிரேம் சிவசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்…

‘தமிழக அரசியல்வாதிகளின் பொய்களை நம்பி ரஜினியின், இலங்கை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் நடந்த போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசியல்வாதிகள் எதுவும் செய்யவில்லை.

நாங்கள் வழங்கப்போகும் வீடுகள் திட்டத்தில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை.

போரில் பாதிக்கப்பட்டவர்களுக்குதான் வீடுகளை வழங்க நினைத்தோம்.

மேலும் ரஜினியின் வருகையின்போது பல நலத்திட்டங்களை தொடங்க இருந்தோம்.

ஆனால் தற்போது ரஜினிகாந்துக்கு தர்மசங்கடமான நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

எங்களது தொழில் போட்டியாளர்களும் எங்களுக்கு எதிரான கட்டுக்கதைகளை பரப்பி வருகின்றனர்.

ரஜினி கலந்துக் கொள்ளவில்ல என்பதால், தற்போது ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறவிருந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டோம்.

ஆனால் ஏப்ரல் 10ஆம் தேதி திட்டமிட்டபடி இலங்கை தமிழர்களுக்கு வீடு வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளனர்.

Lyca Cancelled the house donation function due to Rajinis decision in Srilanka issue

சினிமாவுக்கு தபால் தலை வெளியிட்டு பெருமை தேடித் தந்தார் ஆர்கே

சினிமாவுக்கு தபால் தலை வெளியிட்டு பெருமை தேடித் தந்தார் ஆர்கே

Actor RK launch Postal Stamp for his movie Vaigai Expressபிரபல இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஆர்.கே. தயாரித்து நடித்துள்ள படம் வைகை எக்ஸ்பிரஸ்.

விறுவிறுப்பாக உருவாக்கப்பட்டுள்ள இப்படம் அண்மையில் வெளியாகி வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், தபால் தலை வெளியிடப்பட்டது.

நடிகர் ஆர் கே, நடிகைகள் நீதுசந்திரா, கோமல் சர்மா, வசனகர்த்தா பிரபாகர் ஆகியோர் இணைந்து இந்த தபால் தலையை வெளியிட்டனர்.

இந்த தபால் தலையில் நடிகர் ஆர்.கே மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் தொடர் வண்டியின் படம் இடம்பெற்றுள்ளது.

இதுவரை எந்த சினிமாவுக்கும் கிடைக்காத பெருமையை நம் தமிழ் சினிமாவுக்கு தேடித் தந்துள்ளார் ஆர்.கே.

இதை நாம் அனுப்பும் தபால்களில் ஒட்டி அனுப்பலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor RK launch Postal Stamp for his movie Vaigai Express

RK Neetu chandra starrer vaigai express movie promotion

கமலை தொடர்ந்து ரஜினியை சீண்டிய சுப்ரமணிய சுவாமி

கமலை தொடர்ந்து ரஜினியை சீண்டிய சுப்ரமணிய சுவாமி

subramania swamyஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் நெடுவாசல் போராட்டங்கள் தொடர்பான தன் கருத்துக்களை கமல் தெரிவித்து வந்தார்.

இதனால் கமல் பொறுக்கி என்று குற்றம்சாட்டி வந்தார் சுப்ரமணிய சுவாமி.

இவர்களிடையே மோதல் வலுக்க, பின்னர் இருவரும் அமைதியானார்கள்.

இந்நிலையில் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை தொடர்ந்து, தன் இலங்கை பயணத்தை ரத்து செய்தார் ரஜினிகாந்த்.

ரஜினியின் இந்த முடிவை சுப்பிரமணியன் சுவாமி கிண்டல் செய்துள்ளார்.

எல்லா சினிமா ஸ்டார்களும் கோழைகள் என்றும், ரஜினிகாந்த் மட்டும் விதிவிலக்கு அல்ல என்று தன் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

Super Star Rajini is coward says Subramanian Swamy

புதிய பொறுப்பு கொடுத்த கடவுளுக்கு நன்றி சொன்ன சிம்பு

புதிய பொறுப்பு கொடுத்த கடவுளுக்கு நன்றி சொன்ன சிம்பு

simbuஅண்மைகாலமாக ஆன்மிகத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு.

எந்த விதமான சவால்கள் வந்தாலும் அதை கடவுள் அருளால் முறியடிப்பேன் என ஒவ்வொன்றையும் கடவுள் நம்பிக்கையுடன் கூறி வருகிறார்.

இந்நிலையில் இவரது தங்கை இலக்கியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இவருக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு ஐதராபாத்தை சேர்ந்த அபிலாஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

இதன் மூலம் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் தாத்தாவாகியுள்ளார்.

இதுகுறித்து சிம்பு தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது…

“தாய்மாமன் பொறுப்பு கொடுத்து ஆசிர்வாதமும் மகிழ்ச்சியும் அளித்த கடவுளுக்கு நன்றி.” என்று தெரிவித்துள்ளார்.

Simbu said thanks to God for becoming uncle

More Articles
Follows