குற்றவாளியை பிடிக்க இணைந்த அசோக் செல்வன் – சரத்குமார்

குற்றவாளியை பிடிக்க இணைந்த அசோக் செல்வன் – சரத்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

E4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் மற்றும் எப்ரியஸ் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து அப்ளாஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், ‘போர் தொழில்’ எனும் படத்தினைத் தயாரித்திருப்பதன் மூலம் தமிழ் திரையுலகில் பிரம்மாண்டமாக தடம் பதிக்கிறது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், வெளியீட்டு தேதியையும் தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர்.

அந்த வகையில் இந்த திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் ஒன்பதாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

ஃபர்ஸ்ட் லுக்கில் காவலர்களாக நடித்திருக்கும் அசோக் செல்வன் மற்றும் ஆர். சரத்குமார் ஆகியோர்களின் வித்தியாசமான தோற்றம், ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் புலனாய்வு திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் ‘போர் தொழில்’ எனும் படத்தில் அசோக் செல்வன், ஆர். சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொடர் கொலைகளை நிகழ்த்தும் குற்றவாளியை பிடிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஒரு இளம் காவலரின் கதையாகும்.

இதில் அந்தக் காவலர், மூத்த காவலர் ஒருவருடன் கூட்டணி அமைத்து புலனாய்வு செய்து குற்றவாளியை நெருங்குகிறார். ஆக்சன், சஸ்பென்ஸ் என சுவராசியத்திற்கு குறைவில்லாமல் விறுவிறுப்பான திரைக்கதையுடன் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம், தமிழ் திரையுலக ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று தனி முத்திரையைப் பதிக்கும்.

அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட்

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் என்பது இணைய தொடர்கள், தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள், ஆவணப் படங்கள் மற்றும் அனிமேஷன் எனப்படும் சித்திர படங்களைக் கொண்ட உள்ளடக்கத்தை உருவாக்குவதில் ஒரு முன்னணி நிறுவனம் மற்றும் படைப்புத்திறன் மிகு அரங்கத்தையும் கொண்டது.

ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஒரு முயற்சியாக தொடங்கப்பட்டிருக்கும் இந்நிறுவனத்திற்கு, பொழுதுபோக்கு துறையில் அனுபவசாலியான சமீர் நாயர் தலைமை ஏற்றிருக்கிறார்.

‘ருத்ரா: தி எட்ஜ் ஆஃப் டார்க்னஸ்’ , ‘மித்யா’, கிரிமினல் ஜஸ்டிஸ் , ஸ்கேம் 1992 : தி ஹர்ஷத் மேத்தா ஸ்டோரி’ போன்ற நிகழ்ச்சிகளை அனைத்து மொழிகளிலும் தயாரித்து வெளியிட்டது.

‘உண்டேகி’, ‘பௌக்கால்’ என பலரின் பாராட்டுகளையும் பெற்ற படைப்புகளையும் வழங்கி இருக்கிறார்கள். நடிகை நந்திதா தாஸ் இயக்கத்தில் கபில் சர்மா நடித்த திரைப்படமான ‘ஸ்விகாடோ’ சமீபத்தில் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக பெரும் பாராட்டை பெற்றது.

அபர்ணா சென் இயக்கிய ‘தி ரேப்பிஸ்ட்’, சமீபத்தில் பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, மதிப்புமிகு கிம் ஜிஜோக் விருதை வென்றது.

தற்போது ‘சர்மாஜி கி பேட்டி’ மற்றும் ‘ ஜப் குலீ கிதாப்’ என பல படைப்புகளை திரையரங்கம் மற்றும் டிஜிட்டல் தளங்களில் நேரடியாக வெளியிட கூடிய வகையில் தயாரித்து வருகிறது.

மேலும் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம்- ‘நெட்ப்ளிக்ஸ்’, ‘டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்’, ‘அமேசான் பிரைம் வீடியோ’, ‘சோனி லைவ்’, ‘எம் எக்ஸ் பிளேயர்’, ‘ஜீ 5 ‘மற்றும் ‘வூத் செலக்ட்’ போன்ற முன்னணி டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளங்களுடன் ஆக்கபூர்வமான கூட்டணியை அமைத்துள்ளது.

எப்ரியஸ் ஸ்டுடியோ எல் எல் பி

எப்ரியஸ் ஸ்டுடியோ எல் எல் பி ஒரு ஸ்டார்ட் அப் புரொடக்ஷன் ஸ்டூடியோ. ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஒரு முதலீட்டு வங்கியாளருடன் கடந்த ஆண்டுகளில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், நம்ப முடியாத அளவிற்கு ஆக்கபூர்வமான தொழில் முனைவோராக இதன் தலைவரான சந்தீப் மெஹ்ரா உயர்ந்திருக்கிறார்.

அவரது தலைமையின் கீழ் இந்நிறுவனம் சிண்டிகேஷன் மற்றும் உள்ளடக்கத் தயாரிப்புக்கான மேம்பாட்டில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. மேலும் பல மொழிகளிலான உள்ளடக்கத்துடன் கூடிய தயாரிப்பிற்கு முன்னுரிமை அளித்து வருகிறது.

இந்நிறுவனம் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் இ4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் போன்ற ஸ்டுடியோக்களுடன் உள்ளடக்கத்தை உருவாக்குவதில் பரிபூரணமான ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.

இ4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் எல்எல்பி

தென்னிந்திய திரை உலகில் 45 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன் பயணித்து வரும் முகேஷ் மேத்தா, அனில் ராதாகிருஷ்ணன் இயக்கிய ‘நார்த் 24’, ‘காதம்’ போன்ற படங்களின் உள்ளடக்க விசயங்களில் சாதனை படைத்த சி. வி. சாரதியுடன் இணைந்து செயல்படும் தயாரிப்பு நிறுவனம்.

இந்நிறுவனம் தயாரித்த பல திரைப்படங்கள் தேசிய மற்றும் மாநில விருதுகளை வென்றிருக்கிறது.

துல்கர் சல்மான் நடிப்பில் சமீர் தய்யார் இயக்கிய ‘NAPKCB’, பாசில் ஜோசப் இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடித்த ‘கோதா’, மலையாளத்தில் ஜெய் கிரிஷ் இயக்கத்தில் பிருதிவிராஜ் சுகுமாரன் நடித்த ‘எஸ்ரா’ மற்றும் தமிழில் துருவ் விக்ரம் நடிகராக அறிமுகமான ‘ஆதித்யா வர்மா’ உள்ளிட்ட பல திரைப்படங்களைத் தயாரித்திருக்கிறது.

Ashok Selvan and Sarath Kumar joins for Por Thozhil

ஊட்டியில் 25 நாட்கள் தங்கிய தம்பதிக்கு நடந்தது என்ன.?

ஊட்டியில் 25 நாட்கள் தங்கிய தம்பதிக்கு நடந்தது என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Evolution entertainment நிறுவனம் Blueberry studios உடன் இணைந்து தயாரிக்க, இயக்குநர்கள் சதீஷ் கீதா குமார் மற்றும் நந்தினி விஸ்வநாதன் இணைந்து இயக்க, விஜய் டீவி புகழ் KPY நவீன் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம், காட்டேஜ்.

ஃபர்ஸ்ட் லுக் மூலம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது.

ஒரு காட்டேஜ், ஒரு தம்பதி, அவர்களை அமானுஷ்யமாக பின் தொடரும் ஒரு மனிதன் அப்போது நடக்கும் கொலை, அதை யார் செய்தது என்பதை இருக்கை நுனியில் பரபரப்பாகச் சொல்லும் மர்டர் மிஸ்டரி திரில்லர் தான் காட்டேஜ்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

முழுக்க முழுக்க ஊட்டிப் பின்னணியில், நடக்கும் இப்படத்தின் மொத்தப்படப்பிடிப்பும் ஊட்டியில் 25 நாட்களில் நடத்தி முடித்துள்ளது படக்குழு.

இயக்குநர்கள் சதீஷ் கீதா குமார் மற்றும் நந்தினி விஸ்வநாதன் இணைந்து இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் டிவி புகழ் KPY நவீன் முரளிதர் நாயகனாக அறிமுகமாகிறார்.

ஆரியா செல்வராஜ் நடிக்கிறார். கஜராஜ், தர்மா, விக்னேஷ் ராமமூர்த்தி, ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

தொழில்நுட்ப குழு

தயாரிப்பு நிறுவனம் : Evolution entertainment
இணை தயாரிப்பு : Blueberry studios

எழுத்து & இயக்கம் : சதீஷ் கீதா குமார் & நந்தினி விஸ்வநாதன்
ஒளிப்பதிவு , படத்தொகுப்பு : சதீஷ் கீதா குமார்
இசை : செந்தமிழ்
பாடல்கள் : கு.கார்த்திக்
ஸ்டன்ட் : டேன்ஜர் மணி
கலை : தினேஷ் மோகன்
உடைகள் : அக்‌ஷியா & விஷ்மியா
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

What happened to the couple who stayed in Ooty for 25 days?

SK 21 படப்பிடிப்பு நிறுத்தம் … இதுதான் காரணமா ?

SK 21 படப்பிடிப்பு நிறுத்தம் … இதுதான் காரணமா ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘எஸ்கே 21’ படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினர் 55 நாட்கள் ஷூட்டிங் ஷெட்யூலுக்காக காஷ்மீர் சென்றிருந்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காக படப்பிடிப்பை அரசு அதிகாரிகள் நிறுத்தியதால் துரதிர்ஷ்டவசமாக படக்குழு பத்து நாட்களுக்குள் வீடு திரும்பியுள்ளது.

G20 உச்சி மாநாடு புதுதில்லியில் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது, இதில் பல உலகத் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். காஷ்மீரில் சில நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளதால், திரைப்பட படப்பிடிப்புகள் மற்றும் பிற நிகழ்வுகளுக்கான அனைத்து முன் அனுமதிகளையும் ரத்து செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Reason behind SK 21 movie shoot stopped

ரஜினிக்கு வில்லனாகும் விக்ரம்.. வெளிவந்த சூப்பர் தகவல் இதோ !

ரஜினிக்கு வில்லனாகும் விக்ரம்.. வெளிவந்த சூப்பர் தகவல் இதோ !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைக்கா தயாரிக்கும் லால் சலாம் படத்தில் நடித்து வரும் ரஜினி அடுத்ததாக லைக்கா தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

இதனை ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க சீயான் விக்ரமை படக்குழு அணுகியதாக தெரிகிறது.

முதலில் மறுத்த விக்ரம் படக்கதையை கேட்ட பின் ஒப்பு கொண்டதாக தெரிகிறது . விக்ரமுக்கு லைக்கா தரப்பில் அதிக சம்பளம் கொடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இது விக்ரம் படத்தில் சூரியா நடித்த ரோலெக்ஸ் போன்ற மாஸ் கேரக்டர் என தகவல் வெளியாகி உள்ளது.

Vikram to play negative role in rajinikanths film

தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் விஜய்? வெளிவந்த தகவல் !

தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் விஜய்? வெளிவந்த தகவல் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் சமீபத்திய சில படங்களின் மூலம் அவர் 100 கோடி ரூபாய் மற்றும் 125 கோடி ரூபாய் சம்பளம் பெற்று வருகிறார் என சொல்லப்படுகிறது . அவரது தற்போதைய படமான ‘லியோ’வின் லாபத்தில் சம்பளத்தைத் தவிர பெரும் பங்கைப் பெறுவார் என்று வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும் அடுத்த படமான ‘தளபதி 68’ படத்திற்காக அவருக்கு நூற்றி ஐம்பது கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட உள்ளதாக தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதன் மூலம் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vijay will be the highest paid actor in South India after ‘Thalapathy 68’

‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழா எப்போது ? ரெட் ஹாட் அப்டேட்ஸ் இதோ !

‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழா எப்போது ? ரெட் ஹாட் அப்டேட்ஸ் இதோ !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய திரைக்கு வரவுள்ள படம் ஜெயிலர் . மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் சுதந்திர தின வார இறுதி நாளான ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர்களான சன் பிக்சர்ஸ் சமீபத்தில் அறிவித்தது.

இப்போது, ​​ஜூலை மாதத்தில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் ஜெயிலருக்கான இசை வெளியீட்டு விழாவை
நடத்த தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த பான்-இந்திய நடிகர்கள் மற்றும் குழுவினர் கலந்து கொள்வார்கள் என சொல்லப்படுகிறது.

Exciting red hot updates on ‘Jailer’ audio launch event!

More Articles
Follows