ங்கொப்புரானே..; அம்மு அபிராமிக்கு வரன் பார்க்கும் வைபவம் பாடலானது.!

ங்கொப்புரானே..; அம்மு அபிராமிக்கு வரன் பார்க்கும் வைபவம் பாடலானது.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SKYMOON ENTERTAINMENT & E5 ENTERTAINMENT சார்பில் M.கணேஷ் மற்றும் J.தனுஷ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘கண்ணகி’ பெண்களை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தில் அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் சோயா, கீர்த்தி பாண்டியன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் வெற்றி, ஆதிஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

யஷ்வந்த் கிஷோர் இந்த படத்தை இயக்குகிறார். ராம்ஜி ஒளிப்பதிவை கவனிக்க, சரத் K படத்தொகுப்பை மேற்கொள்கிறார். ஷான் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

தற்போது இந்த படத்தில் இருந்து ‘ங்கொப்புரானே ங்கொப்புரானே’ என்கிற பாடலின் லிரிக் வீடியோ தயாராகி உள்ளது.

கார்த்திக் நேத்தா எழுதிய இந்த பாடலை ஸ்ரீநிதி பாடியுள்ளார். இந்த லிரிக் வீடியோவை ஜீவி மீடியா ஒர்க்ஸ் கோகுல் வெங்கட் ராஜா உருவாக்கியுள்ளார்.

நான்கு பெண்களின் வெவ்வேறு விதமான வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்த படத்தில் அதில் ஒருவராக கலை என்கிற இளம் பெண் கதாபாத்திரத்தில் அம்மு அபிராமி நடித்துள்ளார்.

திருமணத்திற்கு தயாராகும் அம்மு அபிராமி வரன்பார்த்தல் என்கிற அந்த வைபவத்தை எப்படி எதிர்கொள்கிறார் என்கிற கான்செப்டில் இந்த பாடல் உருவாகியுள்ளது.

இந்தப்பாடல் குறித்து இயக்குனர் யஷ்வந்த் கிஷோர் கூறும்போது…

“ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் பெண் பார்த்தல் என்கிற வைபவம் ரொம்பவே முக்கியமானது. அம்மு அபிராமிக்கு அவரது வீட்டினர் திருமணம் செய்ய எடுக்கும் முயற்சியில் இருந்து துவங்குவதாக இந்தப்பாடல் ஆரம்பிகிறது.

பெண் பார்க்க வரும் மணமகன்களில் ஒருவர் என்ன காரணங்களால் நிராகரிக்கப்படுகிறார் இன்னொருவர் எந்த அடிப்படையில் மணமகனாக ஏற்கப்படுகிறார்.

இந்த நிகழ்வில் ஒரு மணப்பெண்ணுக்கே உரிய கட்டுப்பாடுகளும் எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் எப்படி இருக்கின்றன என்பதை கலை என்கிற ஒரு இளம் பெண்ணின் மனதில் இருந்து பிரதிபலிக்கும் விதமாக இந்த பாடல் காட்சி அமைந்துள்ளது” என்கிறார்.

*பாடல் விபரம்*

பாடல் பெயர் : ங்கொப்புரானே ங்கொப்புரானே
இசையமைப்பாளர்: ஷான் ரஹ்மான்
பாடியவர்: ஸ்ரீநிதி
பாடல் வரிகள்: கார்த்திக் நேத்தா
பாடல் வீடியோ – கோகுல் வெங்கட் ராஜா (ஜி.வி. மீடியாவொர்க்ஸ்)

*நடிகர்கள்*

அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் ஜோயா, கீர்த்தி பாண்டியன், வெற்றி, ஆதிஷ்

*தொழில்நுட்ப குழுவினர் விபரம்*
:
தயாரிப்பு நிறுவனம் : SKYMOON ENTERTAINMENT & E5 ENTERTAINMENT
ஒளிப்பதிவு : ராம்ஜி
இசை: ஷான் ரஹ்மான்
எடிட்டர்: சரத்.K
DI : வர்ணா டிஜிட்டல் ஸ்டுடியோஸ்
மக்கள் தொடர்பு: ரியாஸ் K அஹமது
ஒலி மற்றும் வடிவமைப்பு ஒத்திசைவு : ராஜேஷ் சசீந்திரன்
கலை : குமார் கங்கப்பன்
விளம்பர வடிவமைப்புகள் : கபிலன்
இசை லேபிள் : டிப்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (டிப்ஸ் தமிழ்)
பாடல் வரிகள்: கார்த்திக் நேதா
நிர்வாகத் தயாரிப்பாளர்: எஸ்.வினோத்குமார்
தயாரிப்பு : எம். கணேஷ் & ஜே. தனுஷ்
இயக்கம் : யஷ்வந்த் கிஷோர்

Goppurane that focuses on the phenomenon of female gaze out now.

மாஸ்டர் மகேந்திரனுக்கு ‘மாஸ்டர்’ பெற்று தந்த ‘சந்தோஷம்’ விருது

மாஸ்டர் மகேந்திரனுக்கு ‘மாஸ்டர்’ பெற்று தந்த ‘சந்தோஷம்’ விருது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘நாட்டாமை’ படத்தின் மூலம் தமிழக மக்களின் மனங்களில் அழுத்தமான இடத்தைப் பிடித்தவர் மாஸ்டர் மகேந்திரன். தற்போது தமிழில் நாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார்.

வளர்ந்து வரும் இளம் நடிகரான இவருக்கு தளபதி விஜய்யின் “மாஸ்டர்” படத்தில் நடித்த கதாப்பாத்திரம், பெரும் புகழை பெற்றுத்தந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்த ‘மாஸ்டர்‘ படத்தில் விஜய் சேதுபதியின் இள வயது பாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார் மாஸ்டர் மகேந்திரன். இந்த பாத்திரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

பெரும் ப்ளாக்பஸ்டராக மாறிய ‘மாஸ்டர்’ படம் ஆந்திராவிலும் வெற்றிக்கொடி நாட்டியது.

தற்போது ஆந்திராவின் முன்னணி இதழ் வருடாவருடம் வழங்கும் சந்தோஷம் விருது விழாவில், மாஸ்டர் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்றுள்ளார் மகேந்திரன்.

மாஸ்டர் மகேந்திரன்

இது குறித்து மாஸ்டர் மகேந்திரன் கூறியதாவது…

இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம், வளர்ந்து வரும் இளம் நடிகரான எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைப்பது அரிது. இந்த வாய்ப்பை அளித்த தளபதி விஜய் அண்ணாவுக்கும், லோகேஷ் அண்ணாவுக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.

இந்தக் கதாப்பத்திரம் ரசிகர்களின் மனங்களை வென்றது, இப்போது உயரிய விருதுகளை வெல்வது இன்னும் மகிழ்ச்சி தருகிறது. இந்தக்கதாப்பாத்திரத்தை செய்வதற்கு விஜய் சேதுபதி அண்ணா பெரும் ஆதரவாக இருந்தார்.

அவரது பிறந்த நாளில் ஜனவரி 16ல் விருது வென்ற இந்த செய்தியை பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி என்றார்.

நடிகர் மாஸ்டர் மகேந்திரன் தற்போது நீலகண்டா, அர்த்தம், அமிகோ கராஜ், ரிப்பப்பரி, இயல்வது கரவேல் முதலான படங்களில் நடித்து வருகிறார்.

மாஸ்டர் மகேந்திரன்

Master Mahendran wins Santhosham Best Supporting Actor Award for Master

உயிரை பணயம் வைக்கும் ஜல்லிக்கட்டு வீரனுக்கு கார் பரிசா.? – தங்கர் பச்சான் கண்டனம்

உயிரை பணயம் வைக்கும் ஜல்லிக்கட்டு வீரனுக்கு கார் பரிசா.? – தங்கர் பச்சான் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழர்களின் பெருமையை பேசும் ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டுதோறும் பொங்கலை முன்னிட்டு நடந்தேறி வருவது வழக்கமான ஒன்று.

இந்த போட்டியில் வெல்லும் வீரர்களுக்கு இந்த ஆண்டு கார் பரிசு அளிக்கப்பட்டது.

இந்த கார் பரிசை கண்டித்து இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் நடிகருமான தங்கர் பச்சன் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்..

அதில்…

சென்ற ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டும் போட்டியில் வெற்றி பெற்ற ஜல்லிக்கட்டு வீரருக்கு கார் பரிசளித்த போது இதே கோரிக்கையை அரசிடம் அளித்திருந்தேன்.

அதேபோல் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு வீரருக்கும், மாட்டின் உரிமையாளருக்கும் முதல் பரிசாக மகிழுந்து (கார்) வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

வீரர்கள் உயிரைப்பணயம் வைத்து பங்கு பெரும் இப்போட்டிகளை நடத்துவதில் ஒவ்வொரு தமிழரும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகின்றோம்.

இப்போட்டியில் வென்றவர்களை ஊக்குவிக்கும் விதமாக வழங்கப்படும் பரிசுகள் குறித்து இப்பொழுதாவது அரசு சிந்திக்க வேண்டியுள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டுகளில் இதேபோல் காரினைப் பரிசாகப் பெற்ற வீரர்கள் எந்த அளவுக்கு வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறார்கள்?

எந்த மாதிரியான வாழ்க்கையை இப்போது அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

காரின் தொகைக்கு ஈடாக அந்த வீரனுக்கு உழவுத் தொழில் தொடர்பான கருவிகள், மாடுகள், நிலம் இவைகளைத் தந்து அவருடைய வாழ்வுக்கு முன்னேற்றம் ஏற்படுத்தித் தந்தால் இன்னும் கூடுதலான மகிழ்ச்சியை நாம் அடையலாம்.

பரிசு தரும் காரை வைத்துக்கொண்டு (எரிபொருள்) பெட்ரோல் டீசல் விற்கும் விலையில் அதற்கு செலவழிப்பதற்காகவே அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் போராட வேண்டியிருக்கும் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

தயவு கூர்ந்து முதலமைச்சர் இக்கோரிக்கைக் குறித்து சிந்தித்து செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

– தங்கர் பச்சான்
17.01.2023

Thangar Bachan condemns Car gift for Jallikattu winner

செல்வராகவனின் ‘பகாசுரன்’ படத்திற்கு ‘யு/ஏ’ சர்ட்டிபிகேட்…

செல்வராகவனின் ‘பகாசுரன்’ படத்திற்கு ‘யு/ஏ’ சர்ட்டிபிகேட்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செல்வராகவன் தற்போது மோகன் ஜி இயக்கத்தில் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ‘பகாசுரன்’ படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் செல்வராகவன், நடராஜன், ராதா ரவி, மன்சூர் அலிகான், தேவதர்ஷினி, கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், தணிக்கை குழுவில் ‘பகாசுரன்’ படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

‘பகாசுரன்’ படத்தின் ரிலீஸ் தேதியை பட தயாரிப்பாளர்கள் இன்னும் அறிவிக்கவில்லை.

Selvaraghavan’s ‘Bakasuran’ gets U/A certificate

ரசிகர் மரணம்..; அஜித்குமார் செய்ய வேண்டியதை செய்த ‘வாரிசு’ பட நடிகர்

ரசிகர் மரணம்..; அஜித்குமார் செய்ய வேண்டியதை செய்த ‘வாரிசு’ பட நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஜனவரி 11ஆம் தேதி விஜய்யின் ‘வாரிசு’ மற்றும் அஜித்தின் ‘துணிவு’ ஆகிய இரு படங்கள் வெளியானது.

இந்த இரு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவான நிலையில் பல கொண்டாட்டங்களை ரசிகர்கள் செய்திருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக லாரி மீது ஏறி ஆட்டம் போட்ட அஜித் ரசிகர் ஒருவர் தவறி விழுந்து மரணம் அடைந்தார்.

இதனையடுத்து சமூக ஆர்வலர்கள் தங்களின் வருத்தத்தையும் கண்டனங்களையும் தெரிவித்து இருந்தனர்.

சினிமா ரசிகர்கள் ஆர்வம் மிகுதியால் இது போன்ற ஆட்டங்களை தவிர்க்க வேண்டும்.. சினிமாவை விட நடிகர்களை விட உயிரே முக்கியம் எனவும் குரல்கள் எழுந்தன.

மேலும் அஜித் மற்றும் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள்.. ரசிகர்களுக்கு இது போன்ற செயல்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் அந்த ரசிகரின் மரணத்திற்கு அவரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் நடிகர் சரத்குமார் நேரில் சென்று குடும்பத்தாரை சந்தித்தார்.

இந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது. மேலும் சிலர் “அஜித் செய்ய வேண்டியதை சரத்குமார் செய்துள்ளார் இது பாராட்டுக்குரியது” எனவும் தங்களின் கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.

சரத்குமார்

Sarathkumar met Ajith fan family who died at Thunivu celebration

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஃபர்ஹானா’ படத்திற்கு ‘யு/ஏ’ சர்ட்டிபிகேட்..!

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஃபர்ஹானா’ படத்திற்கு ‘யு/ஏ’ சர்ட்டிபிகேட்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ‘ஃபர்ஹானா’ படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, கோகுல் பெனாய் ஒளிப்பதிவு மற்றும் VJ சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்கிறார்கள்.

ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் ஃபர்ஹானா என்ற முஸ்லீம் பெண்ணாக நடிக்கிறார்.

இந்நிலையில், தணிக்கை குழுவில் ‘ஃபர்ஹானா’ படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழுடன் அனுமதி கிடைத்துள்ளது என தெரிய வந்துள்ளது.

இப்படத்தை ஜனவரி 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Aishwarya Rajesh’s ‘Farhana’ gets U/A certificate

More Articles
Follows