‘வா டீல்’ போடுவோம்…; தீபாவளிக்கு ரஜினி-சிம்பு உடன் மோதும் அருண்விஜய்

‘வா டீல்’ போடுவோம்…; தீபாவளிக்கு ரஜினி-சிம்பு உடன் மோதும் அருண்விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தாண்டு 2021 தீபாவளிக்கு ரஜினியின் ”அண்ணாத்த’ & சிம்புவின் ‘மாநாடு’ படங்கள் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.

தற்போது இந்த களத்தில் வா டீல் என களம் இறங்கியுள்ளார் நடிகர் அருண் விஜய்.

ரத்தினசிவா இயக்கத்தில் அருண் விஜய், கார்த்திகா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘வா டீல்’.

ஹேம்நாத் மோகன் தயாரிப்பில் உருவாகியுள்ளது .

இந்தப் படத்துக்குப் பிறகு ரத்தினசிவா இயக்கிய ‘றெக்க’ மற்றும் ‘சீறு’ ஆகிய படங்கள் வெளியாகிவிட்டன.

‘வா டீல்’ படத்தின் மீதான பைனான்ஸ் சிக்கலால் வெளியாகாமல் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் பட ரிலீஸ் தள்ளிப் போனது.

தற்போது 2021 தீபாவளி வெளியீடு என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்தப் படத்தின் விநியோக உரிமையை ஜே.எஸ்.கே நிறுவனம் சார்பாக ஜெ. சதீஷ்குமார் கைப்பற்றியுள்ளார்.

Arun Vijay’s VaaDeal to hit screens for Deepavali

தர லோக்கல் குத்து பாட்டுக்கு ஆட்டம் போட்ட ‘பிக்பாஸ்’ தர்ஷன்

தர லோக்கல் குத்து பாட்டுக்கு ஆட்டம் போட்ட ‘பிக்பாஸ்’ தர்ஷன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் ‘பிக் பாஸ்’ சீசன் 3 புகழ் தர்ஷன் இவர் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமன்றி லஹரி மியூசிக் தயாரிக்கும் மியூசிக் ஆல்பம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்த ஆல்பத்திற்கு இசை அமைக்கிறார் கணேஷ் சந்திரசேகரன்.

இவர் ஏற்கனவே மறைந்த நடிகர் விவேக் நாயகனாக நடித்த ‘எழுமின்’ என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.

எழுமின் படத்திலேயே தனுஷ் அனிருத் போன்ற முன்னணி பிரபலங்களை பாட வைத்தவர் கணேஷ் சந்திரசேகரன்.

அதேபோல் இந்த ஆல்பத்திலேயும் தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்கள் பாடி உள்ளனர்.

அதன் விவரங்கள் அடுத்த கட்டமாக வெளியிடப்படும் என அறிவித்திருந்தார்.

நடனம் ஸ்ரீதர் மாஸ்டர், ஒளிப்பதிவு மாயோன் கவனிக்க ஆல்பத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் க.லோகேஸ்வரன்.

இவர் மாநாடு இயக்குனர் வெங்கட்பிரபு வின் முன்னாள் உதவி இயக்குனர் ஆவார்.

இந்த ஆல்பத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெறுவதால் விரைவில் ஆல்பம் வெளியாகும் என இந்த குழு அறிவித்துள்ளது.

THARSHAN’S THARA LOCAL KUTHU MUSIC ALBUM FOR LAHARI

90s KiDs டார்ச்சர் தாங்க முடியல போல.. இதோ வந்துட்டுல்ல 80s KiDS-க்கு செம பாட்டு.. என்ஜாய்

90s KiDs டார்ச்சர் தாங்க முடியல போல.. இதோ வந்துட்டுல்ல 80s KiDS-க்கு செம பாட்டு.. என்ஜாய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சோஷியல் மீடியா பக்கம் போனாலே… 90s KiDs டார்ச்சர் தான் இருக்கும்… 90s KiDs டார்ச்சர் மீம்ஸ் வைரலாகிட்டே இருக்கும்.

என்னமோ இவர்களுக்கு மட்டும் தான் இன்னும் திருமணமாகாத மாதிரியே பேசுவாங்க… 80s KiDs பலருக்கு கூட இன்னமும் திருமணமாகாமல் இருப்பதை இவர்கள் அறிவதில்லை.

இந்த நிலையில் 80s KiDs ஆதரவாக ஆறுதலாக ஒரு பாடல் வந்திருக்கு.

“அடியே நான் 80s Kid.. தேவையில்ல ஆர்கூட்டு…” என்று அந்த பாடல் தொடங்குகிறது. இந்த பாடலை ரஞ்சித் என்பவர் எழுதியிருக்கிறார்.

‘என்னங்க சார் உங்க சட்டம்’ என்ற படத்தில் தான் இந்த பாடல் இடம் பெற்றுள்ளது.

பிரபு ஜெயராம் இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு குணா இசையமைத்துள்ளார்.

சில தினங்களுக்கு முன், கவிஞர் ஜெகன் கவிராஜ் எழுதி இப்படத்தில் இடம் பெற்றுள்ள “என் ஜீரக பிரியாணி” என்ற பாடல் வெளியாகி வைரலானது.

அந்த பழைய செய்தியின் லிங்க் இதோ..

என்னங்க ஜெகன் உங்க திட்டம்.; பிரியாணி காதலர்களை சிங்கராக மாற்றிய பாடலாசிரியர்

Special song for 80’s kids in Ennanga sir unga sattam

தன் அம்மாவையே வீட்டு வாசலில் காக்க வைத்த நடிகர் விஜய்.? – எஸ்ஏசி (வீடியோ) விளக்கம்

தன் அம்மாவையே வீட்டு வாசலில் காக்க வைத்த நடிகர் விஜய்.? – எஸ்ஏசி (வீடியோ) விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமுத்திரக்கனி நடிப்பில் எஸ்.ஏ.சந்திரசேகர் ‘நான் கடவுள் இல்லை’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த விழாவில் எஸ்ஏசி பேசும்போது…

“விஜய்யின் பெயர் காரணம் குறித்து ஒரு விழாவில் பேசியிருந்தேன். ஆனால் இரண்டு தினங்களில் அதை மாற்றி மாற்றி பேசுகிறார்கள். ஊடகங்கள் உண்மையாக இருக்க வேண்டும்

எனக்கும் விஜய்க்கும் பிரச்னை இருக்கிறது. எந்த வீட்டிலும் அப்பா, மகன் சண்டை போடுவது இல்லையா? சில நாட்களில் அது சரியாகிவிடும்.

அதுபோல தான் நானும் விஜய்யும். இன்று சண்டை போட்டுக்கொள்வோம். நாளை சேருவோம்´´ என பேசினார்.

இந்த நிலையில் இன்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில்…

விஜய் வீட்டு வாசலில் நானும் என் மனைவியும் காரில் இருந்ததாகவும் விஜய் தன் அம்மாவை மட்டும் வீட்டு உள்ளே அழைத்து சென்றதாகவும் நாங்கள் இருவரும் திரும்பி வந்துவிட்டதாகவும் ஒரு வாரப்பத்திரிகையில் தவறான செய்தி வந்துள்ளது.

விஜய்க்கும் அவரது அம்மாவுக்கும் ஒரு பிரச்சினையும் இல்லை. இருவரும் எப்போதும் பேசிக் கொள்கின்றனர்.”

என அந்த வீடியோவில் விளக்கம் அளித்துள்ளார் எஸ்ஏ. சந்திரசேகர்.

Director SAC talks about his family issues

ஒன்றா? இரண்டா? எத்தனை விஜய் மக்கள் இயக்கம்.? தல-யில் அடித்துக் கொள்ளும் தளபதி ரசிகர்கள்..

ஒன்றா? இரண்டா? எத்தனை விஜய் மக்கள் இயக்கம்.? தல-யில் அடித்துக் கொள்ளும் தளபதி ரசிகர்கள்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்தாண்டு 2020ல் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், அமைப்பை தேர்தல் கமிஷனில் பதிவு செய்தார்.

தலைவராக இயக்குனர் சந்திரசேகர், பொருளாளர் ஷோபா உள்ளிட்ட நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர்.

ஆனால் தனது பெயர் மற்றும் புகழை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தி வருவதாக எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா உள்ளிட்ட 11 பேர் மீது விஜய் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேலும் தன் பெயரில் கூட்டங்களை நடத்தவும், கொடி, புகைப்படங்களை பயன்படுத்தவும், தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்கக் கோரி நடிகர் விஜய் தரப்பில் சென்னை நகர 5வது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நேற்று இந்த வழக்கில் நடந்த விசாரணையில் கடந்த வருடம் தொடங்கப்பட்ட அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டுவிட்டதாக விஜய் தந்தை சந்திசேகர் தரப்பினர் கோர்ட்டில் தெரிவித்தனர்.

இத்தரப்பு பிப்ரவரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் இந்த இயக்கத்தை கலைத்துவிட்டோம் என்று எஸ்.ஏ சந்திரசேகர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதனிடையில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் இந்த முறை ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிறது.

9 மாவட்டங்களில் நடக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் நிர்வாகிகள் போட்டியிடுகிறார்கள். ஏற்கனவே விஜய்யின் மக்கள் இயக்கத்தினர் வேட்புமனுவும் தாக்கல் செய்தும் விட்டனர்.

இந்த நிலையில், எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கிய விஜய் மக்கள் இயக்கம் மட்டுமே கலைக்கப்பட்டது எனவும் எனது தலைமையில் இயங்கும் விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்படவில்லை என விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

விஜய் தரப்பில் கூறப்பட்ட இந்த விளக்கத்தால் இப்போது ரசிகர்கள் மத்தியில் குழப்பம் உருவாகியுள்ளது.

அப்படியென்றால் இதுநாள் வரை எங்களுக்கே தெரியாமல் எஸ்ஏசி தலைமையில் ஒரு மக்கள் இயக்கம் & விஜய் தலைமையில் மற்றொரு மக்கள் இயக்கம் என 2 இயங்கி வந்ததா? என தல-யில் அடித்துக் கொள்கின்றனர் தளபதி ரசிகர்கள்.

Vijay Makkal Iyakkam Dissolved: Actor’s Father Informs Chennai Court

டைரக்டர் ரெடி… இளையராஜா இசையில் ஹீரோவும் ரெடி.; தயாரிப்பாளரை தேடி அலையும் சம்பத்ராம்

டைரக்டர் ரெடி… இளையராஜா இசையில் ஹீரோவும் ரெடி.; தயாரிப்பாளரை தேடி அலையும் சம்பத்ராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்திலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமானார் சம்பத் குமார்.

இவர் முதலில் ஸ்டண்ட் நடிகராக தான் சினிமா உலகில் நுழைந்தார்.

தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார்.

காஞ்சனா 3 படத்தில் அகோரியாக நடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது ஹீரோவாக அதுவும் திருநங்கை வேடத்தில் நடிக்க தயாராகவுள்ளார் சம்பத் ராம்.

கள்ளத் துப்பாக்கி எனும் படத்தை இயக்கிய லோகியாஸ் புதிய படத்தை இயக்க தயாராகவுள்ளார்.

இந்த படத்திற்கு ‘சர்வதேசம்’ எனும் தலைப்பிட்டுள்ளனர். இதில் தான் சம்பத் ராம் நாயகனாக நடிக்கவுள்ளார்.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க வேண்டும் என விரும்புகிறாராம் இயக்குனர்.

ஆனால் அனைத்தும் ரெடியாக இருந்தும் தயாரிப்பாளர் இல்லை என சம்பத்ராம் தெரிவித்துள்ளார்.

Actor Sampath Ram’s next with Maestro Ilayaraja

More Articles
Follows