3 படங்கள் OTTல் ரிலீஸ்.; 3 படங்கள் புரொடக்சன்… : JSK அதிரடி அறிவிப்பு

3 படங்கள் OTTல் ரிலீஸ்.; 3 படங்கள் புரொடக்சன்… : JSK அதிரடி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

producer JSKகொரோனா பொதுமுடக்கத்தால் கிட்டத்தட்ட 3 மாதங்களாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

சினிமா படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தற்போதும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்பது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

சென்னையில் AVM ராஜேஸ்வரி உள்ளிட்ட ஓரிரு தியேட்டர்கள் நிரந்தரமாக மூடப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.

எனவே சில தயாரிப்பாளர்கள் நேரடியாக ஆன்லைனில் OTTல் படத்தை ரிலீஸ் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில்… பிரபல தயாரிப்பாளர் ஜே.எஸ். சதீஷ்குமார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ”எங்கள் ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேசன் தயாரித்துள்ள படங்களான ‘அண்டாவக் காணோம்’, ‘வா டீல்’, ‘மம்மி சேவ் மீ’ ஆகிய படங்கள் நேரடியாக OTT ஆன்லைன் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

நாங்கள் அடுத்ததாக தயாரிக்கவுள்ள 3 படங்களின் நடிகர்கள் தொழில்நுட்பக்கலைஞர்களின் அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளோம். உங்கள் ஆதரவு தேவை” என குறிப்பிட்டுள்ளார்.

‘ராஜமாதா’ ரம்யா கிருஷ்ணன் காரில் சரக்கு பாட்டில்கள்.; டிரைவருக்கு ஜாமீன்.!

‘ராஜமாதா’ ரம்யா கிருஷ்ணன் காரில் சரக்கு பாட்டில்கள்.; டிரைவருக்கு ஜாமீன்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actress ramya krishnanசென்னை ECR முட்டுக்காட்டில் உள்ள சோதனைச் சாவடியில் சோதனை செய்துக் கொண்டிருந்தனர் கானத்தூர் போலீஸார்.

அப்போது அங்கு வந்த TN07 CQ 0099 என்ற இன்னோவா காரை மறித்து சோதனையிட்டனர்.

அப்போது நடிகை ரம்யா கிருஷ்ணன், அவரது சகோதரி அபிநயா கிருஷ்ணன் ஆகியோரும் காரில் இருந்தனர்.

படையப்பா படத்தில் நீலாம்பரி, பாகுபலி படத்தில் ராஜமாதா உள்ளிட்ட கேரக்டர்கள் ரம்யா கிருஷ்ணனின் பெயரை என்றும் சொல்லும்.

இந்தச்சோதனையில் அந்தக் காரில் ஏராளமான மதுப்பாட்டில்கள் இருந்தன.

அதில் 97 டின்களில் அடைக்கப்பட்ட பீர் மற்றும் 8 பிராந்தி பாட்டில்களும் இருந்தன.

உடனே போலீஸார் அந்த டிரைவர் செல்வகுமார் என்பவரை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனர்.

கைதான சிறிது நேரத்தில் டிரைவரை நடிகை ரம்யாகிருஷ்ணன் ஜாமீனில் அழைத்துச் சென்றார்.

மதுபாட்டில்களை அவர் பாண்டிச்சேரியில் இருந்து வாங்கி கடத்தி வந்துள்ளாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

சென்னை இனி வேண்டவே வேண்டாம்.; இ-பாஸ் இல்லாமலும் மக்கள் எஸ்கேப்.!

சென்னை இனி வேண்டவே வேண்டாம்.; இ-பாஸ் இல்லாமலும் மக்கள் எஸ்கேப்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chennai policeதமிழகத்தின் தலை நகரம் சென்னை.

வந்தாரை வாழ வைக்கும் சிங்கார சென்னை என்ற பெயரும் இதற்கு உண்டு.

ஆனால் தற்போது சென்னையா? வேண்டவே வேண்டாம் என மக்கள் ஓடத் தொடங்கியுள்ளனர்.

இதற்கு காரணம் கொலைக்கார கொரோனா தான்.

சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வருவதே இதற்கு முக்கிய காரணம்.

சென்னையில் இருந்து ராணிப்பேட்டை வழியாக வேலூர் வரும் வாகனங்கள் தீவிர பரிசோதனை மற்றும் கிருமிநாசினி தெளித்த பிறகு அனுமதிக்கப்படுகின்றன.

இ-பாஸ் இல்லாமல் மக்கள் வெளியேற துவங்கிவிட்டனர்.

வேலூர் வரும் வாகன விவரங்களை பதிவு செய்துகொண்ட பிறகே அந்த பகுதிக்குள் போலீசார் அனுமதிக்கின்றனர்.

பாரதிராஜாவின் கண்கள் என கூறப்படும் ஒளிப்பதிவாளர் கண்ணன் மரணம்

பாரதிராஜாவின் கண்கள் என கூறப்படும் ஒளிப்பதிவாளர் கண்ணன் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

cinematographer kannanதமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா.

இவரது படங்களில் பிரித்து பார்க்க முடியாத கலைஞர் ஒளிப்பதிவாளர் கண்ணன்.

கோலிவுட்டில் மூத்த கலைஞர்களுள் இவரும் ஒருவர்.

பாரதிராஜா இயக்கிய 38க்கும் மேற்ப்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இவர் மொத்தம் 50 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார்.

‘அலைகள் ஓய்வதில்லை’, ‘டிக் டிக் டிக்’, ‘காதல் ஓவியம்’, ‘மண் வாசனை’, ‘முதல் மரியாதை’, ‘கடலோரக் கவிதைகள்’, ‘வேதம் புதிது’, ‘கிழக்குச் சீமையிலே’ நாடோடித் தென்றல், பொம்மலாட்டம் என் பாரதிராஜா இயக்கிய படங்களுக்கு தன் ஒளிப்பதிவால் மெருகூட்டியவர் கண்ணன்.

மேலும் பாரதிராஜாவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர்.

இவரை பாரதிராஜாவின் கண்கள் என்றும் திரையுலகினர் அழைப்பர்.

பாரதிராஜா அளித்த பேட்டியொன்றில், “நான் படப்பிடிப்புக்குச் செல்லும்போது கேமராவை எடுத்துச் செல்வதில்லை. என் கண்ணனுடைய இரண்டு கண்களை மட்டும்தான் எடுத்துச் செல்வேன்.” எனக் கூறியிருக்கிறார்.

கடந்த சில நாட்களாக இதய நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார் கண்ணன்.

இதனையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார் கண்ணன். அவருக்கு வயது 69.

பிரபல இயக்குநர் பீம்சிங்கின் மகனான இவர் எடிட்டர் லெனினின் இளைய சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

தன் நெருங்கிய நண்பரை இழந்துள்ள பாரதிராஜாவுக்கும் ஆறுதல் சொல்லி வருகிறார்கள். கண்ணன் தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தின் செயலாளராகவும் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பாரதிராஜாவும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Attachments area

7ஆம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புக்களுக்கு தடை…; பெற்றோர்கள் மகிழ்ச்சி

7ஆம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புக்களுக்கு தடை…; பெற்றோர்கள் மகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

online classes karnatakaகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடந்த மாதங்களாக பொது முடக்கம் அமலில் உள்ளது.

தற்போது சில தளர்வுகளுடன் வணிக நிறுவனங்களை திறக்க அரசு அனுமதியளித்துள்ளது.

ஆனால் வழக்கமாக ஜீன் மாதம் திறக்கப்படும் பள்ளிகளை திறப்பை ஒத்தி வைத்துள்ளன மத்திய மாநில அரசுகள்.

அதற்கு காரணம் பள்ளிகள் திறக்கப்பட்டால் கொரோனா தொற்று அதிகளவில் பரவக்கூடும் என்பதாலும் சிறுவயது பிள்ளைகள் பாதிக்கப்படும் கூடும் என்பதாலும் பள்ளிகள் திறப்பை இந்திய அரசு ஒத்திவைத்துள்ளது.

இதனால் மாநிலங்களில் பள்ளித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இதனிடையில் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் பாடங்களை நடத்த தொடங்கியுள்ளன.

இந்த நிலையில் கர்நாடகாவில் மாணவர்களின் வயது மற்றும் மனநலம் ஆகியவற்றைக் கருதி மழலையர் குழந்தைகள் முதல் 7ஆம் வகுப்பு வரை, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தக்கூடாது எனக் கர்நாடகா கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமார் தெரிவித்திருந்தார்.

இதனால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

‘சர்கார்’ படத்துக்கு பிறகு கீர்த்தி சுரேஷுக்கு இந்த படம் தான்.. – ஈஸ்வர் கார்த்திக்

‘சர்கார்’ படத்துக்கு பிறகு கீர்த்தி சுரேஷுக்கு இந்த படம் தான்.. – ஈஸ்வர் கார்த்திக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

keerthy sureshத்ரில்லர் படங்கள் என்றாலே எப்போதும் தனி மவுசு தான். ஏனென்றால் அடுத்து என்ன, அடுத்து என்ன என்று நம்மை உன்னிப்பாக கவனிக்க வைத்துக் கொண்டே இருக்கும்.

அந்த வரிசையில் உருவாகியுள்ள படம் தான் ‘பெண்குயின்’. தலைப்பிலேயே வார்த்தை விளையாட்டை உருவாக்கியுள்ள இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் எந்தவொரு இயக்குநரிடமும் பணிபுரியவில்லை, எந்தவொரு குறும்படமும் இயக்கவில்லை.
ஆனால் சமீபத்தில் வெளியான டீஸரின் மூலமே தன்னை இயக்குநராக நிலைநிறுத்திக் கொண்டார். இணையத்தில் பலரும் யார் அந்த மாஸ்க் மேனாக இருக்கும் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

‘சர்கார்’ படத்துக்குப் பிறகு தமிழில் இந்தப் படத்தில் தான் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

கொடைக்கானல் படப்பிடிப்பு அனுபவங்கள், விஜய் சேதுபதியின் உதவி என இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் பகிர்ந்த விஷயங்கள் இதோ:

18 நாளில் ‘பெண்குயின்’ கதை:

ஒரு படம் எப்போது தொடக்கம் என்பது தெரியாமலேயே 6 மாதம் போய்விட்டது. உடனே தான் ‘பெண்குயின்’ கதையை 18 நாட்களில் எழுதிமுடித்தேன். நாயகியை மையப்படுத்தி ஒரு கதை எழுதலாம் என்ற எண்ணோட்டத்தில் தான் எழுதினேன். சாதாரண ஒரு பெண், அசாதாரண சூழலில் மாட்டிக் கொண்டால் என்ன நடக்கும் என்பது தான் ‘பெண்குயின்’. இந்தக் கதையை தயாரிப்பு நிறுவனத்திடம் சொன்னவுடன், கீர்த்தி சுரேஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள். அவர் நடிக்கவில்லை என்றால், வேறு இருவரை அணுகலாம் என்று திட்டமிட்டு இருந்தோம்.

ஆனால், கீர்த்தி சுரேஷிற்க்கு கதையைக் கேட்டவுடனே பிடித்துவிட்டது. குழந்தைக்கு அம்மாவாக நடிக்க வேண்டும். அப்படி கீர்த்தி சுரேஷ் இதுவரை நடிக்கவில்லை என்பதால் அவருக்கு புதுமையாக இருக்கும் என தோன்றியது. அந்தக் கதாபாத்திரத்தில் மிகப் பிரமாதமாக நடித்திருக்கிறார்

20 நிமிடத்துக்கு ஒரு சஸ்பென்ஸ்

இதுவொரு த்ரில்லர் கதை என்பதால், 20 நிமிடத்துக்கு ஒரு சஸ்பென்ஸ் என்று நிறைய கதையில் ஒளித்து வைத்துள்ளேன். ஆகையால் இது தான் கதை என்று என்னால் இப்பொது சொல்ல முடியாது. ஒரு லைனில் சொன்னேன் என்றாலே இது தான் கதை என்று யூகித்துவிட முடியும். ஒரு அம்மா தனது பையன் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் என்பதை இந்தப் படத்தில் காணலாம். அந்த மகனைக் காப்பாற்ற ஒரு அம்மா எந்த எல்லைக்கும் செல்வாள் என்பதை தான் காணவுள்ளீர்கள்.

தேனீக்கள் கடி

கொடைக்கானலில் காட்டில் படப்பிடிப்பு செய்துக் கொண்டிருக்கும் போது லைட்டின் வெளிச்சத்தால் தேன்கூடு ஒன்று கலைந்துவிட்டது. கீர்த்தி சுரேஷ் தொடங்கி ஒட்டுமொத்த படக்குழுவினரையும் கடித்துவிட்டது. அதில் 4 பேருக்கு அதிகமாக கடித்து, மயக்கம் போட்டுவிட்டார்கள்.

ஷுட்டிங்கை பாதியிலேயே நிறுத்தி, மயக்கம் போட்டவர்களை மருத்துவமனையில் சேர்த்தோம். மருத்துவர்கள் வந்து ஒட்டுமொத்த படக்குழுவினரையும் செக் பண்ணி அரை நாள் கழித்து தான் அடுத்து ஷுட்டிங் போனோம்.

மலைப்பகுதியில் படப்பிடிப்பு என்பதால், தொடர்ச்சியாக 5 மணி நேரம் வரை தான் படப்பிடிப்பு செய்யவே முடியும். திடீரென்று மேகங்கள் மூடிவிடும் அல்லது மழை வந்துவிடும். அதற்கு இடையே தான் ஷுட்டிங்கே செய்தோம். நீங்கள் பார்க்கவுள்ள காட்சிகள் எல்லாமே அந்தக் கஷ்டத்துக்கு இடையே படமாக்கியது தான். ஒட்டுமொத்தம் 36 நாட்கள் படப்பிடிப்புச் செய்துள்ளோம்.

படக்குழுவினருக்கே தெரியாத மாஸ்க்மேன்

டீஸரின் இறுதியில் நீங்கள் பார்க்கும் மாஸ்க் மேன் ஷுட்டிங் முடியும்வரை யாருக்குமே தெரியாது. அவர் யார் என்பதை படமாக்கும் போது கூட ரொம்பவே குறைவான ஆட்களை வைத்துத் தான் படமாக்கினோம். இப்போது கூட படப்பிடிப்பு குழுவில் 20% பேருக்கு மட்டுமே அது யார் என்று தெரியும். கீர்த்தி சுரேஷிற்க்கும் ரொம்ப தாமதமாகத் தான் சொன்னோம்.

‘பெண்குயின்’ தலைப்பு ஏன்

‘பெண்குயின்’ என்ற தலைப்பு ஏன் என்றால், பெண்கள் கொண்டாடப்பட வேண்டும் என்ற எண்ணித்தில் தான். அம்மா என்பவரை படத்தில் ஸ்பெஷலாக காட்டுகிறேன். வார்த்தை விளையாட்டு மாதிரி தான் தலைப்பை முடிவு செய்தேன். பெண்கள் எப்போதுமே குயின் தான். யாருமே சளைத்தவர்கள் அல்ல. இது ஒரு ஆணாதிக்க சமூகமாகவே பார்க்கிறேன். அதற்கு இடையில் பெண்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு, உழைத்து முன்னேறுகிறார்கள். ஆகையால் ‘பெண்குயின்’ என்று தலைப்பு வைத்தால் ஆண்ராஜாவுக்கு சமமாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான் வைத்தேன். இந்த தலைப்புக்கு ஒரு பவர் இருக்கும் என்பதால் தான்.

தொழில்நுட்பக் குழுவினரின் உதவி

த்ரில்லர் கதை என்பதால் நிறைய பின்னணி இசைக் கொண்ட காட்சிகள் இருக்கிறது. அதனால் இசையமைப்பாளர் சரியானவராக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து சந்தோஷ் நாராயணனை முடிவு செய்தோம். நாங்கள் எடுத்தக் காட்சிகளை எல்லாம் பின்னணி இசையின் மூலம் அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறார்.

கார்த்திக் பழனி தான் ஒளிப்பதிவாளர். இதர மொழிகளில் படம் செய்திருந்தாலும், தமிழில் இது தான் அவருக்கு முதல் படம். இந்தப் படத்தைப் பார்த்தீர்கள் என்றாலே, அவருடைய ஒளிப்பதிவு எப்படி என்று தெரிந்துக் கொள்வீர்கள். தமிழ்த் திரையுலகிற்கு நல்லதொரு ஒளிப்பதிவாளர் கிடைத்துவிட்டார் என்று சொல்வீர்கள்.
அனில் கிருஷ் தான் எடிட்டர். எங்களுடைய காட்சிகளை எல்லாம் சரியாக எடிட் செய்து, த்ரில்லர் படத்துக்கு தேவையானதைக் கொண்டு வந்துவிட்டார். சக்தி வெங்கட்ராஜ் தான் கலை இயக்குநர். படத்தில் எது செட் என்று உங்களால் யூகிக்கவே முடியாது.

அப்படியொரு பணி. பல்லவி சிங் தான் ஆடை வடிவமைப்பாளர். கொடைக்கானல் பின்னணிக் கொண்ட படம் என்பதால் அதற்கு ஏற்றவாறு ஆடைகளை ஒவ்வொருவருக்கும் தனியாக டிசைன் செய்தார். டீஸரில் வரும் சார்லி சாப்ளினுக்கான உடை எல்லாம் ஸ்பெஷலாக வடிவமைத்தது. இந்தப் படத்தில் சந்தோஷ் நாராயணன் தவிர்த்து மீதி அனைவருமே என்னுடைய நண்பர்கள். ஆகையால், நண்பர்களோடு இணைந்து ஒரு நல்ல த்ரில்லர் படம் பண்ணியிருக்கேன்.

ஓடிடியில் வெளியீடு

தியேட்டரிலேயே படம் பார்த்து வளர்ந்தவன் தான். வெப் சீரிஸ் எல்லாம் கடைசி 3 வருடங்களில் பிரபலமானவை தான். தியேட்டரில் வெளியாக வேண்டும் என்பது தான் ஆசை. ஆனால், இந்த கொரோனா அச்சுறுத்தலால் அமேசானில் வெளியாகிறது. தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் மக்கள் அனைவரும் மீண்டும் பழைய மாதிரி வருவார்களா என்று தெரியவில்லை.

அமேசானில் படம் 200 நாடுகளில் வெளியாகிறது எனும்போது பெரிய விஷயம். நிறையப் பேர் ஓடிடியில் இந்தப் படம் பார்த்தேன். அருமை என்று பலரும் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். தியேட்டரில் படம் பார்ப்பது ஒரு மேஜிக். அதை நான் மறுக்கவில்லை. இப்போதுள்ள சூழல் அப்படியிருக்கிறது.

ஓடிடியில் பாஸ் செய்து, பாஸ் செய்து பார்ப்பார்கள். அப்படி பாஸ் பண்ணிப் பார்க்காத அளவுக்கு என் படம் நிற்கவேண்டும். அதில் மட்டும் வெற்றியடைய வேண்டும்.
விஜய் சேதுபதியின் உதவி
நாடகப் பின்னணியில் பணிபுரிந்துக் கொண்டிருந்தேன். அதிலுள்ள அனுபவங்களால் தான் திரையுலகில் படம் இயக்கியிருக்கிறேன்.

எனது நலம் விரும்பி விஜய் சேதுபதி. அவர் தான் இந்த வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தார். கார்த்திகேயன் சந்தானம் சார் கதையைக் கேட்டுவிட்டு, உடனே தயாரிக்க ஒப்புக் கொண்டார்.

ஆகையால் விஜய் சேதுபதி, கார்த்திகேயன் சந்தானம் இருவருமே எனது திரையுலக வாழ்க்கைக்கு ரொம்பவே முக்கியமானவர்கள். எந்தவொரு அனுபவம் இல்லாமல் வருபவனை நம்புவதற்கு ஒரு தைரியம் வேண்டும். நான் எப்படி இயக்குவேன், எப்படி ஷாட் வைப்பேன் என்று எதுவுமே தெரியாமல் இந்த வாய்ப்பை என்னையும், கதையையும் நம்பிக் கொடுத்தார்கள். அவர்களுக்கு மிகவும் நன்றி!

நட்சத்திரங்கள்…

கீர்த்தி சுரேஷ்
லிங்கா
மாதம்பட்டி ரங்கராஜ்
மாஸ்டர் அத்வைத்
நித்யா கிருபா
ஹரிணி
திலக் ராம்மோகன்
தேஜன்ஜ்

தொழில்நுட்பக் கலைஞர்கள்

பாடல்கள்
விவேக்

ஸ்டன்ட்
பி.சி.

கலை
சக்தி வெங்கட்ராஜ் .M

எடிட்டிங்
அனில் கிருஷ்

ஒளிப்பதிவு
கார்த்திக் பழனி

இசை
சந்தோஷ் நாராயணன்

அசோசியேட் தயாரிப்பு
பவன் நரேந்திரா

நிர்வாக தயாரிப்பு

M. அசோக் நாராயணன்

இணை தயாரிப்பு
கல்ராமன்
S.சோமசேகர்
கல்யாண் சுப்ரமணியன்

தயாரிப்பு
கார்த்திகேயன் சந்தானம்
சுதன் சுந்தரம்
ஜெயராம்

எழுத்து, இயக்கம்
ஈஸ்வர் கார்த்திக்

More Articles
Follows