கனவை நிறைவேற்றும் *பாக்ஸர்* படம்..; ஆனந்தத்தில் அருண்விஜய்

கனவை நிறைவேற்றும் *பாக்ஸர்* படம்..; ஆனந்தத்தில் அருண்விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arun vijayநடிகர் அருண் விஜய் தனது அடுத்த படமான ‘பாக்ஸர்’ படத்தில் நடிக்க முழுமையாக ஊக்கத்தோடு இருக்கிறார்.

குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தை எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார்.

இந்த படத்தை பற்றி அருண் விஜய் கூறும்போது…

“இந்த படத்தின் தொடக்கத்தில் இருந்தே எல்லாமே என்னை கவர்ந்தது. இந்த படத்தின் அறிவுப்பு கூட எனக்கு ஆச்சர்யம் அளித்தது. ஆரம்பத்தில் ஜனவரி 2019 வாக்கில் திட்டமிட்டிருந்தோம்.

ஆனால், தயாரிப்பாளர் வி. மதியழகன் சார் எனக்கு பிறந்த நாள் பரிசாக முன்னதாகவே என் பிறந்த நாளில் படத்தை அறிவித்து என்னை ஆச்சர்யப்படுத்தினார்.

எனக்கு விளையாட்டை மையப்படுத்திய படத்தில் நடிப்பது கனவு என்பதால் இந்த படத்தை திறம்பட செய்வேன். இந்த ஸ்கிரிப்டில் எமோஷன் மற்றும் இன்ஸ்பிரேஷன் விஷயங்கள் நிறைய உள்ளன.

அது என்னை கவர்ந்தது. வழக்கமாக, நாம் இதுவரை பார்த்த விளையாட்டு திரைப்படங்களில் போராடும் நாயகன், இறுதியில் கதாநாயகனாக உயர்ந்து நிற்பான்.

இந்த படத்தில், ஹீரோ ஆரம்பத்திலேயே மிகப்பெரிய குத்துச்சண்டை வீரர். அவர் தனது குறைகளை எதிர்கொண்டு அடுத்த கட்டத்துக்கு செல்வது தான் கதை.

டிசம்பர் மாதம் முதல் மலேசியாவிலும் வியட்நாமிலும் குத்துச்சண்டை பயிற்சி துவங்க இருக்கிறது. இது ஃப்ரீஸ்டைல் குத்துச்சண்டை மற்றும் தற்காப்பு கலை ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது. பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் எனக்கு பயிற்சியாளராக பணிபுரிகிறார்.

இயக்குனர் பாலாவின் முன்னாள் உதவியாளரும், இந்த படத்தின் இயக்குனருமான விவேக் கூறும்போது..

“ஆரம்பத்தில், நான் ஸ்கிரிப்ட் எழுதிய போது, என் மனதில் எந்த ஹீரோவும் இல்லை. ஆனால் பின்னர் இறுதி வடிவம் கொடுத்த பிறகு, அருண் விஜய் சார் அதை 100% முழுமையாகப் பூர்த்தி செய்வார் என்று நம்பினேன்.

அவரின் உடற்பயிற்சி மற்றும் வொர்க்அவுட் பலருக்கும் உத்வேகம் அளித்து வருகிறது. யதேச்சையாக தயாரிப்பாளர் மதியழகன் சாரும் இதே கருத்தை உணர்ந்தார்.

பின்னர் நான் அருண் விஜய் சாரிடம் கதை சொன்னேன். அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார், விளையாட்டை மையப்படுத்திய படத்தில் நடிப்பது அவரது நீண்டகால கனவு என்றும் கூறினார்.

இந்த படம் மிக வேகமான திரைக்கதையில் இருக்கும், காதல், எமோஷனும் இந்த படத்தில் உண்டு.

நடிகர்கள் மற்றும் மற்ற படக்குழுவினர் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. லண்டனை சேர்ந்த மார்கஸ் லுஜுங்பெர்ன் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நாயகியாக பாலிவுட் நடிகையிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

நயன்தாராவின் கொலையுதிர் காலம் படத்தின் மொத்த உரிமைகளை கைப்பற்றியிருக்கும் எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் இந்த படத்தை தயாரிக்கிறது.

அருண் விஜய் நவீன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்து வரும் ‘அக்னி சிறகுகள்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் இதன் படப்பிடிப்பு துவங்கும்.

சன்னி லியோனின் சிஸ்டர் மியா ராய் லியோனும் தமிழுக்கு வருகிறார்

சன்னி லியோனின் சிஸ்டர் மியா ராய் லியோனும் தமிழுக்கு வருகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

miya roy leoneபிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டார். தற்போது வீரமாதேவி என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

இவரைத் தொடர்ந்து இவரின் உறவு முறை சகோதரியும் தமிழுக்கு வருகிறார். அதுபற்றிய விவரம் வருமாறு…

விமல் – ஆஷ்னா ஜவேரி, ஆனந்தராஜ் ,மன்சூரலிகான், சிங்கம்புலி நடிக்க AR முகேஷ் இயக்கத்தில் சர்மிளா மாண்ட்ரே தயாரிப்பில் உருவாகியுள்ள படம் இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படம்..

இந்த படத்தில் சன்னி லியோனின் உறவு முறை சகோதரி மியா ராய் லியோன் முக்கிய வேடத்தில் முதன் முறையாக அறிமுகமாகிறார்.

ஹாலிவுட்டின் அதாவது ஐரோப்பிய பட உலகில் ஆபாச பட நாயகிகளில் முதல் பெயர் இவரது தான். இவரை தமிழில் அறிமுகப் படுத்தி உள்ளனர்.

கவர்ச்சியை வாரி வழங்கி உள்ளார் மியா ராய் லியோன்.

படம் டிசம்பர் 7 ம் தேதி வெளியாகிறது. போலிஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடிக்கிறார்.

ஒளிப்பதிவு – கோபி ஜெகதீஸ்வரன்

இசை – நடராஜன் சங்கரன்

பாடல்கள் – விவேகா

கலை – வைரபாலன்

நடனம் – கந்தாஸ்

ஸ்டண்ட் – ரமேஷ்.

எடிட்டிங் – தினேஷ்

தயாரிப்பு மேற்பார்வை – சுப்ரமணி

தயாரிப்பு நிர்வாகம் – பி.ஆர்.ஜெயராமன்

தயாரிப்பு – சர்மிளா மாண்ரே, ஆர்.சர்வணன்

திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் AR.முகேஷ்.

ரஜினி-முருகதாஸ்-லைகா கூட்டணியில் சந்தோஷ் சிவன்

ரஜினி-முருகதாஸ்-லைகா கூட்டணியில் சந்தோஷ் சிவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

santhosh shivanகடந்த நவ. 29ஆம் தேதி ரஜினிகாந்த் நடித்த 2.0 உலகமெங்கும் வெளியானது.

இதனையடுத்து அவர் நடித்துள்ள பேட்ட திரைப்படம் 2019 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இந்த படங்களை தொடர்ந்து லைகா தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த்.

இப்படத்தை சர்கார் பட இயக்குனர் ஏஆர். முருகதாஸ் இயக்கவுள்ளார் என்பதை பார்த்தோம்.

பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் இதன் சூட்டிங் தொடங்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு முன்பு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி, ஸ்பைடர் படங்களுக்கு சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

மேலும் 1991ல் ரஜினி நடித்த தளபதி படத்திற்கும் சந்தோஷ் சிவன் தான் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

தற்போது 27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணைகிறார் சந்தோஷ் சிவன் என்பது குறிப்பிடத்தக்கது.

கமலுடன் இணையும் காஜலுக்கு மேக்கப் டெஸ்ட் நடத்திய ஷங்கர்

கமலுடன் இணையும் காஜலுக்கு மேக்கப் டெஸ்ட் நடத்திய ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal and kajal2.0 படத்தை அடுத்து இந்தியன் 2 படத்தை இயக்கவுள்ளார் ஷங்கர்.

இன்னும் சில தினங்களில் இதன் சூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசன் நடிக்க இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

நயன்தாரா இப்படத்தில் நாயகியாக நடிப்பார் என்று கூறப்பட்டு வந்த்து. ஆனால் அவர் 6 கோடி வரை சம்பளம் கேட்பதால் தற்போது காஜல் அகர்வால் நாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் காஜலுக்கு பாரீஸ் நகரில் மேக்கப் டெஸ்ட் நடத்தியிருக்கிறாராம் ஷங்கர்.

96 படத்தில் நடித்த சின்ன த்ரிஷா ஹீரோயினாக அறிமுகம்

96 படத்தில் நடித்த சின்ன த்ரிஷா ஹீரோயினாக அறிமுகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

gowriபிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – த்ரிஷா ஜோடியாக நடித்த படம் 96.

தமிழ் சினிமாவில் இதுபோன்ற காதல் காவியத்தை பார்த்து வெகு நாளாச்சு என அனைவரும் பாராட்டிக் கொண்டே இருக்கின்றனர்.

இந்த படத்தில் சிறுவயது த்ரிஷா கேரக்டரில் நடித்தவர் கௌரி கிருஷ்ணன்.

இவரின் நடிப்புக்கும் இளைஞர்களாக அசந்து விட்டனர்.

இந்நிலையில் மலையாளத்தில் சன்னி வெய்ன் என்பவர் நடிக்கும் அனுக்ரகீதன் ஆண்டனி என்கிற படத்தில் நாயகியாக நடிக்க இருக்கிறாராம் கௌரி.

பிரின்ஸ் ஜாய் என்பவர் இப்படத்தை இயக்கவுள்ளார்.

தமிழ் படங்கள்ல நடிச்சிட்டு ஹிந்திக்கு வாங்க…; அக்சய்குமார் அழைப்பு

தமிழ் படங்கள்ல நடிச்சிட்டு ஹிந்திக்கு வாங்க…; அக்சய்குமார் அழைப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

akshay kumarஷங்கர் இயக்கிய 2.0 படத்தில் வில்லனாக நடித்திருந்தார் அக்சய்குமார்.

இப்படத்தின் மேக்அப்பிற்காக இவர் மேற்கொண்ட கடின உழைப்பை அனைத்து தரப்பு மக்களும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் திரையுலகினரை இவர் வெகுவாக பாராட்டியுள்ளார்.

டெக்னாலஜி வசதியில் பாலிவுட்டை விட தென்னிந்திய சினிமா நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது.

இங்குள்ள கலைஞர்கள் சரியான நேரத்திற்கு சூட்டிங்க்கு வருகிறார்கள்.

மேலும் மற்ற கலைஞர்களின் நேரத்தையும் அவர்கள் பொன்னாக மதிக்கிறார்கள்.

எனவே பாலிவுட்டில் அறிமுகமாக விரும்பும் இளம் நடிகர்கள் தமிழில் சில படங்களில் நடித்துவிட்டு பாலிவுட்டுக்கு வரவேண்டும்” என குறிப்பிட்டுள்ளார் அக்சய் குமார்.

More Articles
Follows