பிறந்தநாளில் ரசிகர்களுடன் இணைந்து ரத்த தானம் செய்த அருண்விஜய்

பிறந்தநாளில் ரசிகர்களுடன் இணைந்து ரத்த தானம் செய்த அருண்விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நாயகனாக, முயற்சிக்கு முன்னுதாரணமாக வெற்றி நாயகனாக வலம் வரும் நடிகர் அருண் விஜய் அவர்களின் பிறந்த நாளை 19.11.2021 முன்னிட்டு அவரது ரசிகர்கள் நற்பணி மன்றம் மூலம் மாபெரும் இரத்ததான முகாமை இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நேற்று நடத்தினர்.

அருண் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் ரசிகர்கள் திரளாக கலந்துகொள்ள இராயப்பேட்டையிலுள்ள அரசு மருத்துவமனை இரத்த வங்கியில் இந்நிகழ்வு நடைப்பெற்றது.

இந்த இரத்த தான முகாமில் 40 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டு இரத்தம் வழங்கினார்கள். ரசிகர்களின் இந்த இரத்த தானம் முகாமினை கேள்விப்பட்டு நடிகர் அருண் விஜய் அவர்கள் நேரில் வந்து தானும் இரத்த தானம் செய்து சிறப்பித்தார்.

இந்த ரத்ததான முகாமினை ரசிகர்களுடன் இருந்து முதன்மை ரத்த வங்கி அதிகாரி. டாக்டர். பி. தமிழ்மணி நாராயணன், டாக்டர் உமா, செவிலியர் அமலா,லேப் டெக்னீசியன் மஞ்சுளா, ஜீனியஸ் மகேஸ்வரி, நிர்மலா தேவி, மகாலட்சுமி மற்றும் ஆயாம்மா ராஜேஸ்வரி, விக்ரம் உதவியாளர், ஓட்டுநர் ரமேஷ் ஆகியோர் உடனிருந்து சிறப்பாக நடத்தி கொடுத்தனர்.

இன்றைய இரத்த தான முகாமை தொடர்ந்து ரசிகர்கள் மேலும் ஒரு அரிய செயலை முன்னெடுத்துள்ளனர்.

இன்று இரத்த தானம் செய்ததோடு அல்லாமல், அவசர தேவையாக எப்போது இரத்தம் தேவைப்பட்டாலும், ரசிகர் மன்றம் மூலம், தேவைப்படுவோர்க்கு இரத்த தானம் அளிக்க முடிவு செய்துள்ளனர்.

ரசிகர்களின் இந்த செயலுக்கும் அவர்களின் அன்புக்கும், நன்றியும், பாராட்டும் தெரிவித்தார் நடிகர் அருண் விஜய்.

Arun Vijay donated blood along with his fans

‘ஜெய்பீம்’ சர்ச்சை : இயக்குனர் பாரதிராஜாவுக்கு பாமக அன்புமணி அதிரடி கடிதம்

‘ஜெய்பீம்’ சர்ச்சை : இயக்குனர் பாரதிராஜாவுக்கு பாமக அன்புமணி அதிரடி கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஜெய்பீம்’ சர்ச்சை : மருத்துவர் அன்புமணி இராமதாஸ்
இயக்குனர் பாரதிராஜாவுக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில்…

அன்புள்ள தமிழ் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா அவர்களுக்கு
வணக்கம்!

ஜெய்பீம் சர்ச்சை தொடர்பாக தாங்கள் எனக்கு கடிதம் எழுதியிருந்தீர்கள்.

களப்போராளியாகவும், யாருமே துணியாத காலத்தில் சமூகநீதியை திரைப்படத்தில் பதிவு செய்தவர் என்ற முறையிலும், படைப்பாளியாகவும் எனக்கு கடிதம் எழுதியதாகக் குறிப்பிட்டிருந்தீர்கள், மகிழ்ச்சி.

ஒடுக்கப்பட்ட மக்கள் யாராக இருந்தாலும் அவர்களுடைய உரிமைகளுக்காக போராட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது.

இன்று தமிழ்நாட்டில் அதிகமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி அவர்களுக்கு சமூக நீதியை பெற்றுத் தந்ததில் மருத்துவர் அய்யாவுக்கு நிகராக இங்கு வேறு யாரும் இல்லை.

ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை ((Jai Bhim Controversy) சாதி பிரச்சனை அல்ல, அரசியல் பிரச்சனையும் அல்ல. இது ஒரு சமூகப் பிரச்சனை. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ்நாட்டு மக்களின் உணவு உள்ளிட்ட தேவைகளுக்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் பெருங்குடி சமுதாயமான வன்னியர் சமூகம் திட்டமிட்டு தொடர்ந்து இழிவுபடுத்தப்படுவது தொடர்பான சமூகப் பிரச்சனை.

இந்த பிரச்சனையில் உங்களுக்கும் திரைத்துறையினருக்கும் மிகப் பெரிய புரிதல் இல்லை என்பது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது.

‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் சாதி வெறி பிடித்த கொடுமைக்கார சைக்கோ காவல் உதவி ஆய்வாளர் (வில்லன்) இல்லத்தில் மாட்டியிருக்கும் காலண்டரில் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டம் இல்லாமல் நீங்கள் போற்றி வணங்கும் தேசியமும், தெய்வீகமும் எனது இரண்டு கண்கள் என்று முழக்கமிட்ட தேவர் திருமகனாரின் படம் இருந்தால் நீங்களும், தேவர் சமுதாயமும் சும்மா இருப்பீர்களா? அல்லது கொங்கு மக்களால் கடவுளுக்கு இணையாக வழங்கப்படும் வீரத்தின் விளைநிலம் தீரன் சின்னமலை அவர்களின் உருவப்படம் அச்சிடப்பட்ட நாட்காட்டி இருந்திருந்தால் அவர்கள் கொதித்து எழுந்து இருக்க மாட்டார்களா? அண்ணல் அம்பேத்கரின் புகைப்படம் இருந்திருந்தால் என்னவாகி இருக்கும்? படைப்புச் சுதந்திரம் என்று சும்மா இருந்து இருப்பீர்களா?

ஆனால் ஒன்றை மட்டும் சொல்கிறேன், மேற்கண்டவற்றில் எந்தக் காட்சி அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்தாலும் அதை கண்டித்தும் முதல் குரல் என்னிடமிருந்து தான் வந்திருக்கும்.

வானளாவிய படைப்புச் சுதந்திரம் நடிகர் சூர்யாவுக்கு மட்டும்தானா? இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனுடைய வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க முனைந்த நடிகர் விஜய் சேதுபதிக்கு அந்தப் படைப்பு சுதந்திரம் மறுக்கப்பட்டது ஏன்? கடுமையான கண்டனக் கடிதத்தை தாங்கள்தான் எழுதியிருந்தீர்கள், நினைவு இருக்கிறதா? சமீபத்தில் வெளியான Family Man- II தொடர் முழுவதும் தடை (Ban) செய்ய வேண்டுமென்று கடுமையான எச்சரிக்கை விடுத்தீர்கள்.

அப்பொழுது எங்கே போயிற்று உங்கள் படைப்பு சுதந்திரம்? அண்மையில் வெளியான கர்ணன் படத்தில் 1997-ஆம் ஆண்டு என்று இருந்ததை மாற்றி ’1990-களின் இறுதியில்” என்று போட வைத்தபோது, என்னவாயிற்று உங்கள் படைப்பு சுதந்திரம்.

படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் இழிவு படுத்தும் வகையில் வன்னியர்களுக்கு புனிதமான அக்னி குண்டத்தை வைத்து சத்ரியர் என்ற அடிக்குறிப்பு போட்டு கொலையாளிகளாகக் காண்பித்தால் அதற்கு நீங்களும், திரைத்துறையினரும் ஆதரவு அளிக்கிறீர்களா?

எலி வேட்டை என்ற பெயரில் படத்தை தொடங்கி, தயாரித்து முடிக்கும் தருவாயில் பரபரப்புக்காக ஜெய்பீம் ஆக்கி பெயர் அரசியல் செய்து வியாபாரமாக்கியது நாங்கள் அல்ல. எதற்கும் துணிந்தவர்கள், அந்தோணிசாமி என்று பெயர் வைப்பதற்கு பயந்து குருமூர்த்தி என்று பெயர் அரசியல் செய்து குறவர் சமுதாயத்தை இருளர் சமுதாயமாக மாற்றி, வட தமிழகத்தில் உள்ள இரண்டு பெரிய சமுதாயத்திற்கும் சாதிக் கலவரத்தை தூண்டி பெயர் அரசியல் செய்தது திரையுலகம் தானே தவிர, அந்த இரண்டு சமுதாயங்கள் அல்ல.

தென் மாவட்டத்தைச் சேர்ந்த தாங்கள் சாதிக்கலவரம் குறித்தும், அதனால் ஏற்படும் சமூக பாதிப்புகள் குறித்தும் நன்றாக அறிந்திருப்பீர்கள்.

ஆனால், வட தமிழ்நாட்டில் கடந்த 40 ஆண்டுகளாக அத்தகைய கலவரங்கள் எதுவும் ஏற்படாமல் மக்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ வகை செய்திருப்பவர் மருத்துவர் அய்யா அவர்கள்.

வட தமிழகத்தில் இருந்து வந்த வன்னிய குலத்தில் பிறந்த மருத்துவர் அய்யாவின் சமூக நீதி சாதனைகள் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கலாம், உங்களுடன் நிற்கும் திரைத்துறையினருக்குத் தெரிய வாய்ப்பில்லை. பட்டியலிடுகிறேன் தெரிந்துகொள்ளுங்கள்.

1) குடிதாங்கி என்ற கிராமத்தில் தாழ்த்தப்பட்டவரின் பிணத்தை தன் தோளில் சுமந்து சென்று, ஊர் மக்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி அடக்கம் செய்து சமூக புரட்சி செய்த ரியல் ஹீரோ எங்கள் மருத்துவர் அய்யா தான்.

2) எங்களுக்கு மத்திய அரசில் கிடைத்த முதல் மத்திய அமைச்சர் பதவியை தலித் எழில்மலை என்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்தவருக்கு நாங்கள் கொடுத்தோம். இரண்டாவது முறையும் பொன்னுசாமி என்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவரை மத்திய அமைச்சராக்கினோம்.

3) இந்தியாவில் தொடக்கம் முதலே மறுக்கப்பட்டு வந்,த யாருமே கொடுக்க முன்வராத All India Quota UG and PG மருத்துவ படிப்பு மற்றும் மேற்படிப்பில் கடுமையான எதிர்ப்புகளையும் மீறி SC/ST இட ஒதுக்கீட்டை இந்திய அளவில் 2008-ல்மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்தவன் நான். எனக்கு அதற்காக அன்றே தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் (National Commission for SCs and STs)தலைவர் திரு.பூட்டா சிங் தலைமையில் 32 ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களின் தலைவர்கள் சேர்ந்து சென்னையில் பாராட்டு விழா நடத்தி, பாராட்டு பத்திரமும், விருதும், பட்டமும் வழங்கி கௌரவப்படுத்தினார்கள்.

4) இந்தியாவின் தலைசிறந்த மருத்துவ நிறுவனமான டெல்லி எய்ம்ஸ் (AIIMS) தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு, முன்னேறிய வகுப்பினரால் நடத்தப்பட்ட மோசமான அடக்குமுறைகளை தோரட் கமிட்டி (Thorat Committee) அமைத்து முடிவுகட்டி, சுமூகமாக தீர்வு கண்டவன் நான்.

5) தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த பண்டிதர் அயோத்திதாசரின் பெயரை தாம்பரத்தில் அமைந்துள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்திற்கு சூட்டி, அவரின் திருவுருவச் சிலையும் அங்கே நிறுவியுள்ளேன்.

6) எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி அன்றிலிருந்து இன்று வரை பட்டியலின தலைவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

7) அரியலூர் மாவட்டம், பாப்பாகுடி கிராமத்தில் இருளர் சமுதாயத்திற்கு இருக்க இடமில்லாமல் இருந்த நிலையில் 20 வருடங்களுக்கு முன் மருத்துவர் அய்யாவின் தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.குரு அவர்களின் தொடர் முயற்சிக்கு பின்னர் 62 இருளர் குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வாங்கிக் கொடுத்த நன்றி கடனுக்காக அந்த இடத்திற்கு டாக்டர் அய்யா நகர் என்று நன்றி மறவாமல் பெயர் வைத்துள்ளனர் அன்புள்ளம் கொண்ட இருளர் சமுதாய மக்கள். சந்தேகம் இருந்தால் நேரடியாக களத்திற்குச் சென்று ஆய்வு செய்து கொள்ளவும்.

8) சி.பி.எஸ்.இ பாடத்திட்ட நூலில் நாடார் சமுதாயம் இழிவு படுத்தப்பட்ட போது அதற்காக முதன்முதலில் குரல் கொடுத்ததும் மத்திய அரசிடமும், உயர்நீதி மன்றத்திடமும் வாதாடி சம்பந்தப்பட்ட பகுதிகளை நீக்கியது எங்கள் கட்சி தான்.

9) கோவை தொடர் குண்டு வெடிப்பை தொடர்ந்து கோட்டைமேடு பகுதியில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் இஸ்லாமிய சகோதரிகள் இழிவுக்கும், இன்னலுக்கு ஆளான போது அதற்கு எதிராக சம்பவ இடத்தில் போராடி அவர்களின் துயரைப் போக்கியவர் மருத்துவர் அய்யா தான்.

10) தாமிரபரணி ஆற்றில் தேவேந்திர குல சமுதாய மக்களின் மீது காவல்துறையால் நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது, முதன்முதலில் ஓடோடி அவர்களுக்காக குரல் கொடுத்து, பல போராட்டங்களை அவர்களுக்காக நடத்தியவர் மருத்துவர் அய்யா தான்.

சமூகநீதிக்காகவும், மக்களின் பிரச்சினைகளுக்காகவும் மருத்துவர் அய்யா அவர்கள் இன்னும் ஏராளமான போராட்டங்களை நடத்தி, நீதியும், தீர்வும் பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அவை தமிழகத்தின் சமூகநீதி வரலாற்றில் வலிமையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இவைபோன்ற எத்தனையோ சமூக புரட்சிகளை நிஜவாழ்க்கையில் மருத்துவர் அய்யாவும், எங்கள் இயக்கமும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. இத்தனை செய்தும், அதைப்பற்றிய புரிதல் சற்றும் இல்லாமல், நீங்களும், தாங்கள் சார்ந்த திரைத்துறையினரும் எங்கள் மனதை மிகவும் புண்படுத்தி விட்டீர்கள்.

கொலை செய்யப்பட்டவரும் வன்னியர் அல்ல, கொலை செய்தவரும் வன்னியர் அல்ல, கொலை செய்யப்பட்டவருக்காக வழக்காடியவரும் வன்னியர் அல்ல, உதவி செய்தவர்கள் மட்டுமே வன்னியர்கள் என்று உண்மை நிலவரம் இருக்கும் போது, எதற்கு வன்னியரின் சின்னமான அக்னி குண்டத்தை கொலையாளியின் வீட்டில் நட்ட நடுவில் மாட்டி வைத்தீர்கள்? என்ற நியாயமான கேள்வி கூடவா உங்கள் மனங்களில் எழவில்லை.

வன்னியப் பெருங்குடி மக்களின் மனதை காயப்படுத்தி விட்டீர்கள் என்ற உண்மையை ஒத்துக் கொள்ள மனம் இல்லை என்பதைத்தான் திரைத் துறையினரின் கடிதங்களும், ஊடகங்களின் விவாதங்களும் காட்டுகிறது.

இது வெறும் காலண்டர் தானே, என்று நீங்கள் சாதாரணமாக நினைக்கலாம். சுட்டிக்காட்டிய உடன் அந்த காட்சி நீக்கப்பட்டு விட்டது என்று சப்பை கட்டு கட்டலாம். ஆனால் ஏன் அந்த அக்னி குண்டத்தை அங்கு வைத்தீர்கள்? என்ற கேள்விக்கு இன்னும் பதில் வரவில்லை.

கோடிக்கணக்கான வன்னியப் பெருங்குடி மக்களின் மனதை ஆழமாக புண்படுத்தி விட்டீர்கள் என்று ஏன் உங்களாலும் எங்களை விமர்சனம் செய்கின்ற அவர்களாலும் புரிந்துகொள்ள முடியவில்லை?

ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்கள் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். அதனால் அவர்களின் மனங்கள் காயப்பட்டிருக்கின்றன. இதை சுட்டிக்காட்டி நான் கடிதம் எழுதிய போது, உண்மையை ஒப்புக்கொண்டு வன்னிய மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக படக்குழுவினர் வருத்தம் தெரிவித்திருந்தால், இந்த விவகாரம் அன்றே முடிவுக்கு வந்திருக்கும்.

உங்களுக்கு வீடு கட்டித்தரும் தொழிலாளியாகவும் நீங்கள் பயணிக்கின்ற சாலைகளை போடும் பாட்டாளிகளாகவும், உங்களுக்காக சேற்றில் இறங்கி கடுமையாக உழைத்து உங்களுக்கு சோறு போடும் விவசாயிகளான வன்னிய மக்களை கொலையாளிகளாக சித்தரித்து இருக்கிறீர்கள் அல்லவா? அதனால் தான் எங்கள் மனம் வலிக்கிறது.

இதற்குப் பிறகும் நாங்கள் மௌனமாக இருந்தால் இந்த குற்றச்சாட்டை ஒத்துக் கொள்வதாக ஆகிவிடாதா? திருடியதாக ஒத்துக்கொண்டால் காலத்துக்கும் அந்த திருட்டு பட்டம் தங்கிவிடும் என்று ஜெய்பீம் திரைப்படத்தில் வசனம் வருகிறது. அது அவர்களுக்கு மட்டும் தானா? கொலையாளிகள் வன்முறையாளர்கள் என்ற அவப்பெயர் வன்னியப் பெருங்குடி சமுதாயத்திற்கு காலத்திற்கும் தங்கி விடாதா?

இவை எனது கேள்விகள் மட்டுமல்ல…

கோடிக்கணக்கான வன்னிய மக்களின் மனங்களில் தீயாய் எரிந்து கொண்டிருப்பவை தான் இந்த வினாக்கள். வன்னியர்களின் மனக்காயங்களுக்கு மருந்து போடாமல் அவர்களின் மனத் தீயை அணைக்க முடியாது என்பதை மட்டும் தாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு எங்கள் கைகளில் இல்லை. இவற்றை தெரிவிப்பதற்காகவே இந்தக் கடிதம்.

மிக்க நன்றி!

Anbumani Ramadoss reply to Director Bharathi Raja

1980களில் வாழ்ந்த கடல் அரசனின் வாழ்வியலைச் சொல்லும் ‘கோட்டை முனி’

1980களில் வாழ்ந்த கடல் அரசனின் வாழ்வியலைச் சொல்லும் ‘கோட்டை முனி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ட்ரீம் லைட் பிக்சர்ஸ் (பி) லிமிடெட் சார்பாக சிங்கப்பூர் N. ஹபீப் மிகுந்த பொருட்செலவில் மிகப் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் ‘கோட்டைமுனி’.

புதுமுக இயக்குனரான ந.இளைய பிரபாகரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார்.

1980 காலகட்டத்தில் இராமேஸ்வரம், தனுஷ் கோடி பகுதிகளில் கடல் அரசனாக நிஜத்தில் வாழ்ந்த கோட்டைமுனி என்பவரின் வாழ்க்கையில், இலங்கை தனுஷ் கோடி பகுதிக்கு இடையே கடலில் நடந்த கடத்தல் சம்பவங்களை மையப்படுத்தி கேங்க்ஸ்டர் படமாக ‘கோட்டைமுனி’ திரைப்படம் உருவாகிறது.

இதில் கோட்டை முனியாக முற்றிலும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் R.K.சுரேஷ் நடிக்கிறார்.

நீண்ட நெடுநாளைக்குப் பிறகு முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில்
வத்திக்குச்சி, காலா படத்தில் நடித்த திலீபன் முக்கிய கதாப்பாத்திரம்
ஏற்றிருக்கிறார்.

மேலும் சைத்தான் படப் புகழ் அருந்ததி நாயர் கதை நாயகியாக நடிக்க,
ஷரவணசக்தி, ராஜசிம்மன், நிழல்கள் ரவி, சச்சு, தாமு, முத்துராமன், முத்துக்காளை, திருமுருகன் உள்ளிபட பலர் நடிக்கின்றனர்.

கடலும் கடல் சார்ந்த பகுதிகளில் நடக்கும் கதை என்பதால், இதன் படப்பிடிப்பு இராமேஸ்வரம், வேதாரண்யம், நாகப்பட்டிணம் ஆகிய கடற்கரைப் பகுதியில் நடக்க இருக்கிறது.

தமிழ் சினிமாவில் இதுவரை கண்டிராத அளவிற்கு ஆழ்கடல் சண்டைக் காட்சிகளை புதிய தொழில்நுட்பத்துடன் வித்தியாசமான முறையில் படமாக்குவதற்கு படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

ஒளிப்பதிவு: A.M.M. கார்த்திகேயன், இசை: M.S.பாண்டியன், கலை: SK, படத்தொகுப்பு: நெல்சன் ஆண்டனி, நடனம்: சிவராக் சங்கர், பாடல்கள்: ப.கருப்பையா, சண்டைக் காட்சிகள் : டைகர் ஜான்மார்க்,
மக்கள் தொடர்பு: S.ப்ரியா, தயாரிப்பு நிர்வாகம்: K.S.வெங்கடேஷ்

அடுத்த ஆண்டு 2022 கோடை விடுமுறையில் ‘கோட்டை முனி’ திரையில் வெளியிடப்படும்.

RK Suresh in next film is titled Kottai Muni

3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்ற பிரதமர் மோடிக்கு கார்த்தி நன்றி

3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்ற பிரதமர் மோடிக்கு கார்த்தி நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2020ல்.. அதிரடியாக அறிவிக்கப்பட்ட 3 வேளாண் சட்டங்கள்…

(1). வேளாண் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிகம் மசோதா, 2020

(2). விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைக்கான விவசாயிகள் ஒப்பந்த மசோதா 2020

(3). அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதா 2020 மத்திய அரசு வேளாண் துறை தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றியது.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த ஓராண்டாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று நவம்பர் 19 நாட்டு மக்களிடையே உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.

அவரது உரையில்…

நாட்டு நலனுக்காக வேளாண் துறையில் பல்வேறு சீர்திருத்தம் கொண்டு வந்தோம். விவசாயிகளின் நலனுக்காக புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளோம்.

சிறு விவசாயிகளை முன்னேற்றவே அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவே இந்த சட்டங்கள் கொண்டு வந்துள்ளோம். அனைத்து விவசாயிகள் சங்கத்தினருடன் ஆலோசித்த பிறகே இந்த சட்டம் கொண்டு வந்தோம்.

ஆனால் சட்டம் தொடர்பாக தவறான தகவல் பரப்பி விடப்பட்டது. இது குறித்து புரிய வைக்க பல முயற்சிகள் எடுத்தோம். இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

ஆனாலும் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை திரும் பெறுகிறோம். வரவிருக்கும் பார்லிமெண்ட் கூட்டத்தொடரில் இந்த சட்ட திரும்ப பெறும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் போராட்டத்தை கைவிடுங்கள்.

என பேசினார் பிரதமர் மோடி.

பிரதமரின் இந்த அறிவிப்புக்கு விவசாயிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறன்றனர்.

இந்நிலையில் நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

”மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக நம் பிரதமர் அறிவித்திருப்பது, தங்கள் உயிரை ஈந்து போராடிய எளிய வேளாண் மக்களின் ஒருவருட இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி. போராடியவர்களுக்கும் புரிந்துகொண்ட அரசுக்கும் அன்பும் நன்றியும்”.

இவ்வாறு கார்த்தி பதிவிட்டுள்ளார்.

Actor Karthi thanked prime minister modi

விஜயகாந்த் பாணியில் தீவிரவாதிகளுடன் மோதும் விஜய்

விஜயகாந்த் பாணியில் தீவிரவாதிகளுடன் மோதும் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜயகாந்த் நடித்த போலீஸ் படங்களை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்கமுடியாது.

கேப்டன் பிரபாகரன், சத்ரியன், சேதுபதி ஐபிஎஸ், புலன் விசாரணை உள்ளிட்ட பல படங்களில் போலீசாக நடித்ததாலே அவரது பெயருடன் ‘கேப்டன்’ என்ற வார்த்தையும் ஒட்டிக் கொண்டது.

இவரது படங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அதிகளவில் காணப்படுவார்கள். அவர்களை எட்டி எட்டி உதைத்து பிடித்து தண்டனை கொடுப்பதில் வல்லவர் இந்த கேப்டன்.

தற்போது விஜயகாந்த் பாணியில் வரவிருக்கிறார் விஜய்.,

நெல்சன் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இந்த படத்தில் ராணுவ அதிகாரியாக நடிக்கிறாராம் தளபதி விஜய்.

அதன்படி காஷ்மீர் தீவிரவாதிகளுடன் அவர் மோதுவதாக காட்சிகள் உள்ளதாம்.

காஷ்மீரில் இதற்கான காட்சியை படமாக்க முடியாத காரணத்தினால் தான் தற்போது ஜார்ஜியா நாட்டில் படமாக்கவிருக்கிறார்களாம்.

‘பீஸ்ட்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்களில் கூட துப்பாக்கி குண்டுகள்.. ராணுவ விமானங்கள் இருந்தன.

முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி படத்திலும் ராணுவ அதிகாரியாக விஜய் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thalapathy Vijay role in beast leaked ?

பண மோசடியில் ஏமாற்றப்பட்ட சினேகா-பிரசன்னா ஜோடி போலீசில் புகார்

பண மோசடியில் ஏமாற்றப்பட்ட சினேகா-பிரசன்னா ஜோடி போலீசில் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் பிரசன்னா மற்றும் நடிகை சினேகா இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர்கள்.

இவர்கள் தற்போது சென்னையில் தங்கள் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர்.

இவர்கள் எம்.எஸ்.கவுரி சிமெண்ட் அண்ட் மினரல் சிமென்ட் கம்பெனியில் ரூபாய் 25 லட்சத்தை முதலீடு செய்து தொழில் செய்து வருகின்றனர்.

சந்தியா மற்றும் சிவராஜ் கவுரி ஆகிய இருவரும் இந்த தொகையை பெற்றுக் கொண்டு மாதந்தோறும் 1,80,000 ரூபாய் தருவதாக ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் கடந்த 6-7 மாதங்களாக மாதந்தோறும் வரும் தொகையை தராமல் அவர்கள் ஏமாற்றி வருவதாக தெரிவித்துள்ளனர்.

சினேகா பிரசன்னா கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதற்கு சம்பந்தப்பட்டவர்கள் மிரட்டல் விடுத்து வருகிறார்ளாம்.

எனவே கானத்தூர் காவல் நிலையத்தில் சினேகா பிரசன்னா தம்பதியினர் புகார் அளித்துள்ளனர்.

இந்த நட்சத்திர ஜோடி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது காவல் துறை.

Sneha and Prasanna file police complaint against two businessmen

More Articles
Follows