ரூ.20 லட்சம் முதல் ரூ.100 கோடி வரை.; தமிழ் சினிமாவுக்கு அவசியமான ’அரோமா ஸ்டுடியோ’ – பேரரசு

ரூ.20 லட்சம் முதல் ரூ.100 கோடி வரை.; தமிழ் சினிமாவுக்கு அவசியமான ’அரோமா ஸ்டுடியோ’ – பேரரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் என்று சொல்லக்கூடிய டப்பிங், சவுண்ட் மிக்ஸிங் போன்றவை திரைப்பட தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதாவது, படப்பிடிப்பில் நடந்த தவறுகளை கூட பின்னணி வேலைகளின் போது சரி செய்துகொள்ளும் வசதி இருப்பதால், இந்த துறை மிக மிக முக்கியமானது.

அதே சமயம், இந்த பணிகளுக்கான கட்டணம் என்பது பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது. அதிநவீன கருவிகள் கொண்ட ஸ்டுடியோக்களில் மிகப்பெரிய கட்டணம் வசூலிக்கப்படுவதால் சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் படப்பிடிப்புக்கு பிறகு இதுபோன்ற பணிகளை முடிப்பதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள்.

அதே போல், குறைவான பட்ஜெட்டில் இந்த பணிகளை செய்து கொடுப்பவர்கள் தரம் அற்ற தொழில்நுட்பங்கள் மூலம் செய்வதால், படத்தின் தரம் குறையும் வாய்ப்புகள் அதிகம்.

இப்படி, அதிக பட்ஜெட் இருந்தால் மட்டுமே தரமான முறையில் பின்னணி வேலைகளை செய்ய முடியும் என்ற நிலை இருக்க, அந்த நிலையை மாற்றியமைக்க கோலிவுட்டில் உதயமாகியிருக்கிறது ‘அரோமோ ஸ்டுடியோ’.

டப்பிங், 5.1 மிக்சிங், பாலி என அனைத்து பின்னணி பணிகளையும் குறைவான பட்ஜெட்டில் தரமான முறையில் செய்துகொடுக்கும் ‘அரோமா ஸ்டுடியோஸ்’-ன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

திறப்பு விழா நிகழ்ச்சியில் இயக்குநர்கள் பேரரசு, சரவண சக்தி, தயாரிப்பாளர் பன்னீர் செல்வம், நடிகர் குமரேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு ‘அரோமா ஸ்டுடியோ’-வை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பேரரசு…

“அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள். சிறப்பான இந்த நாளில் சிறப்பான ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. இன்று தமிழ் சினிமாவில் திரைப்பட பணிகள் மட்டும் இன்றி குறும்படம், இணையத் தொடர், தொலைக்காட்சி தொடர் என ஏகப்பட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

அதனால் சினிமாத்துறை மிக நன்றாக வளர்ந்து வருகிறது. இப்படி ஒரு தருணத்தில் தரமான ஸ்டுடியோக்கள் தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட தரமான ஸ்டுடியோ தான் அரோமா ஸ்டுடியோ.

இன்று ரசிகர்களுக்கு சினிமாத்துறை பற்றி நிறைய விஷயங்கள் தெரிகிறது. ஏதோ படம் பார்த்தோம் ரசித்தோம், என்று இல்லாமல் படத்தில் இடம்பெறும் தொழில்நுட்ப ரீதியான விஷயங்களை ஆராய தொடங்கியிருக்கிறார்கள். அதனால், அந்த பணிகள் தரமானதாக இல்லை என்றால் ரசிகர்கள் நிச்சயம் ரசிக்க மாட்டார்கள், அதை எளிதில் கண்டுபிடித்தும் விடுவார்கள்.

எனவே, அவர்களை திருப்திப்படுத்துவதற்காகவே சவுண்ட் மிக்ஸிங் போன்ற விஷயங்களை தரமாக செய்ய வேண்டும். அந்த பணியை அரோமா ஸ்டுடியோ மிக சிறப்பாக செய்யக்கூடியதாக இருக்கிறது. இங்கு அதிநவீன சாதனங்கள் பயன்படுத்தப்படுகிறது.

அதேபோல், இந்த ஸ்டுடியோவை ஆரம்பித்திக்கும் அருளுக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். பெரிய பட்ஜெட் படங்களுகு நீங்க நிர்ணயித்த கட்டணத்தை வாங்குங்க, ஆனால் சிறு படங்களுக்கு சலுகைகள் வழங்குங்க.

இன்று திரைப்படம் மட்டும் இன்றி குறும்படங்களும் அதிகமாக வருகிறது. அந்த குறும்படங்களை வைத்து தான் பலர் வாய்ப்பும் தேடுகிறார்கள். எங்கள் காலத்தில் கதை சொல்லி வாய்ப்பு வாங்கினோம், ஆனால் இப்போது அந்த முறை இல்லை.

குறும்படம் மூலமாக தான் வாய்ப்பு பெறுகிறார்கள், பெரிய அளவில் வெற்றியும் பெறுகிறார்கள். சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘லவ் டுடே’ படத்தை கூட இயக்குநர் பிரதீப் ரங்கநாத, குறும்படமாக தான் இயக்கியிருந்தார்.

அதை பார்த்து தான் தயாரிப்பாளர்கள் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார்கள், இப்போது அவர் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறார். எனவே குறும்படம் இயக்குபவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் பணிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இயக்குநர்கள் சங்கம் எப்போதும் அரோமா ஸ்டுடியோவுக்கு துணையாக இருக்கும், நீங்களும் இயக்குநர் சங்க உறுப்பினர்களுக்கு துணையாக இருங்க, சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கும் துணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

‘அரோமா ஸ்டுடியோ’ உரிமையாளரும், திரைப்பட இயக்குநருமான அருள் பேசுகையில், “நான் ஒரு இயக்குநராக தான் தமிழ் சினிமாவில் நுழைந்தேன், பிறகு சினிமா துறை சார்ந்த தொழிலில் ஈடுபட முடிவு செய்த போது தான் இந்த ஐடியா வந்தது. இதை ஒரு தொழிலாக செய்தாலும், முழுக்க முழுக்க பணத்தை மட்டுமே எதிர்பார்த்து செய்யவில்லை. படம் முடிக்க முடியாமல் பல இயக்குநர்களும், தயாரிப்பாளர்கள் இறுதி நேரத்தில் கஷ்ட்டப்படுகிறார்கள், அப்படிப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் தான் இந்த தொழிலில் இறங்கினேன்.

பேரரசு சார் பேசும் போது 6 கோடி சிறிய பட்ஜெட் என்று சொன்னார், ஆனால் இங்கே 6 கோடி என்பது மிகப்பெரிய பட்ஜெட் தான். அஜித், விஜய் போன்றவர்களை வைத்து படம் எடுத்ததால் அவருக்கு 6 கோடி ரூபாய் என்பது சிறிய பட்ஜெட்டாக இருக்கலாம்.

ஆனால், இங்கு 20 லட்சம் ரூபாயில் படம் எடுப்பவர்களும், 50 லட்சம் ரூபாயில் படம் எடுப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கான ஒரு தரமான ஸ்டுடியோவாகவும் அரோமா இருக்கும்.

பெரிய படங்களை மட்டுமே போகஸ் பண்ணி இதை நாங்க நடத்தவில்லை, அனைத்து தரப்பினருக்கும் உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தொடங்கினோம். அதே சமயம், குறைவான பட்ஜெட் என்பதால் சாதாரண கருவிகளை பயன்படுத்தவில்லை. அதிநவீன கருவிகளை தான் பயன்படுத்தியிருக்கிறோம்.

சவுண்ட் மிக்ஸிங், டப்பிங், 5.1, பாலி ஆகிய பணிகளை தரமான முறையில் செய்து கொடுக்கிறோம்.

‘பிசாசு 2’. ‘அயோத்தி’ உள்ளிட்ட பல படங்களுக்கு இங்கு தான் பாலி செய்தோம். இன்னும் பல படங்களின் பணிகள் இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பெரிய படங்களுக்கு கட்டணம் உடனே வந்துவிடும் அது பிரச்சனை இல்லை, சிறிய படங்களுக்கு உடனடியாக கட்டணம் கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அவர்களுக்கு சலுகைகள் மட்டும் அல்ல, படத்தை முடிக்க உறுதுணையாக இருப்போம். அதன் பிறகு தான் பணம் எல்லாம். அதனால், அரோமா பணத்தை மட்டுமே நோக்கமாக வைத்து தொடங்கப்படவில்லை, அதனால் அனைத்து விதமான சிறிய பட்ஜெட் படங்களும் இங்கு வரலாம்.

ரூ.20 லட்சம் முதல் ரூ.100 கோடி வரை அனைத்துவிதமான பட்ஜெட் படங்களுக்கும் ஒரே மாதிரியான பணிகளை இங்கே செய்து கொடுப்போம்.” என்றார்.

இயக்குநர் சரவண சக்தி பேசுகையில்…

“இயக்குநராக இருக்கும் அருள் இப்படி ஒரு தொழில்நுட்ப ஸ்டுடியோவை தொடங்கியிருப்பது சிறப்பு வாய்ந்ததாகும். அவர் இயக்குநர் என்பதால் இயக்குநர்களின் வலி தெரியும். அதனால், கஷ்ட்டப்படும் இயக்குநர்களுக்கு நிச்சயம் உதவி செய்வார். அதே சமயம் தரமாகவும் செய்து கொடுப்பார். அவருக்கு என் வாழ்த்துகள்.” என்றார்.

தயாரிப்பாளர் பன்னீர் செல்வம் பேசுகையில்…

“இயக்குநர் அருள் அரோமா ஸ்டுடியோ தொடங்கியிருக்கிறார், அவருக்கு வாழ்த்துகள். தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பிலும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். தயாரிப்பாளர் தேர்தல் முடிந்து முரளி சாரின் அணி வெற்றி பெற்றிருக்கிறது. தலைவர் இங்கு வரவேண்டியது, ஆனால் இந்த நிகழ்ச்சியை அருள் திடீரென்று வைத்ததால் தலைவரால் வர முடியவில்லை.

தயாரிப்பாளர் சங்கத்தின் துணை அருளுக்கு எப்போதும் உண்டு. இன்று தொடங்கப்பட்டிருக்கும் அரோமா ஸ்டுடியோ பெரிய முன்னேற்றம் அடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

நடிகரும், டப்பிங் யூனியனின் இணை செயலாளருமான குமரேசன் பேசுகையில்…

“முருகனின் வெற்றி மந்திரம் அரோகரா. அதில் முக்கால்வாசியை கொண்டிருக்கிறது இந்த அரோமா. அரோகரா வெற்றியான சொல், அரோமா அழகான சொல். அந்த சொல் மூலம் தொடங்கப்பட்டிருக்கும் இந்த ஸ்டுடியோ பெரிய வெற்றியடைய வேண்டும்.

டப்பிங் யூனியன் இணை செயலாளர் என்பதால், இங்கு டப்பிங் பேச வரும் கலைஞரக்ள் டப்பிங் யூனியனில் உறுப்பினர்களாக இருக்கிறார்களா? என்பதை அறிந்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதேபோல், டப்பிங் யூனியனை சேர்ந்தவர்களுக்கு மட்டும் வாய்ப்பளிக்க் வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

அரோமா ஸ்டுடியோஸ் முகவரி:

எண் 17, பாவேந்தர் சாலை, ஸ்வர்ணாம்பிகை நகர்,
(தேவி கருமாரி திரையரங்கத்தின் பின்பக்கம்)
விருகம்பாக்கம்
சென்னை

Aromaa studios launched by Director Perarasu and R v Udayakumar

தேவலோகத்தில் நகைச்சுவை செய்ய அழைத்தார்களோ?; அனுமோகன் ஆதங்கம்

தேவலோகத்தில் நகைச்சுவை செய்ய அழைத்தார்களோ?; அனுமோகன் ஆதங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மனோபாலா, டிபி.கஜேந்திரன், மயில்சாமி ஆகியோருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் அனுமோகன் பேசும்போது…

“இந்த மூவருடன் எனக்கு 40 ஆண்டுகால நட்பு உள்ளது. மனோபாலாவும் நானும் வாடா போட நண்பர்கள். உதவி இயக்குனர்களாக ஒன்றாக வாய்ப்பு தேடியவர்கள். அதேபோல திருவண்ணாமலை என்றாலே மயில்சாமி தான் ஞாபகத்துக்கு வருவார்.

தீபம் ஏற்றும் முதல் ஆளாக அங்கே இருப்பார். பூலோகத்தில் நீங்கள் நகைச்சுவை செய்தது போதும், தேவலோகத்திற்கு வந்து எங்களையும் மகிழ்வியுங்கள் என்று கூறி அழைத்துக் கொண்டார்களோ என்று தான் எந்த தோன்றுகிறது” என்று கூறினார்.

actor Anu Mohan speech at late actors Memorial meeting

‘சதுரங்க வேட்டை 2’ படத்தை திரையுலகத்தினர் ரிலீஸ் செய்யனும்.. – உதயா

‘சதுரங்க வேட்டை 2’ படத்தை திரையுலகத்தினர் ரிலீஸ் செய்யனும்.. – உதயா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மனோபாலா, டிபி.கஜேந்திரன், மயில்சாமி ஆகியோருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் உதயா பேசும்போது…

“டி.பி கஜேந்திரன் என்னை தனது சொந்த தம்பி மகன் மாதிரி தான் நடத்துவார். மயில்சாமியை மாமா என்று உரிமையாக அழைப்பேன். அவரும் என்னை அப்படித்தான் அழைப்பார். மற்றவர்களுக்காக கல்வி உதவி கேட்பார். மனோபாலா எப்போதுமே என்னை உற்சாகத் தூண்டுதல் செய்யும் நபராகவே இருந்துள்ளார். அவர் கடைசியாக இயக்கிய குறும்படத்தில் நான் நடித்துள்ளேன் என்கிற பெருமையை எனக்கு கொடுத்துள்ளார்.

சதுரங்க வேட்டை இரண்டாம் பாகத்தை திரையுலகம் சேர்ந்து ரிலீஸ் பண்ண வேண்டும். அதேபோல அவர் நடத்தி வந்த யூட்யூப் சேனலையும் தொடர்ந்து நடத்த உதவி செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்வில், மறைந்த இந்த கலைஞர்களுக்கு இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

actor udhaya speech at late actors Memorial meeting

மனோபாலா – டிபி.கஜேந்திரன் – மயில்சாமி ஆகியோரின் நினைவுகளை பகிர்ந்த வையாபுரி

மனோபாலா – டிபி.கஜேந்திரன் – மயில்சாமி ஆகியோரின் நினைவுகளை பகிர்ந்த வையாபுரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மனோபாலா, டிபி.கஜேந்திரன், மயில்சாமி ஆகியோருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் வையாபுரி பேசும்போது…

“டிபி கஜேந்திரனுடன் பம்மல் கே சம்பந்தம் படத்தில் முதல் முதலாக இணைந்து நடித்தேன். அதன்பிறகு அவருடன் பல படங்களில் நடித்துள்ளேன்.

மனோபாலாவின் இயக்கத்தில் வெளியான நைனா என்கிற படத்திலும் நடித்துள்ளேன். பின்னர் அவருடன் இணைந்தும் நடித்திருக்கிறேன்.

வாரம் ஒரு நாளாவது நம்மிடம் பேசாமல் இருக்க மாட்டார். ஷூட்டிங் ஸ்பாட்டை எப்போதுமே கலகலப்பாக வைத்திருப்பார். அவர் ஒரு நல்ல சமையல் கலைஞரும் கூட.

அதே போல மயில்சாமி வீட்டிற்கு எங்களது குடும்பத்துடன் வாராவாரம் சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்தேன்.

அவர் இறப்பதற்கு முதல் வாரம் சென்றபோது அனைவரும் முதல்முறையாக ஒன்றாக இணைந்து செல்பி எடுத்துக் கொண்டோம். அதற்கு பிறகு அவரை சந்திக்க முடியாது என்பதை இது முன்கூட்டியே உணர்த்தியது போல இருந்தது” என்று கூறினார்.

Vaiyapuri shared memories of Manobala – Mayilswamy – TP Gajendran

பாசிட்டிவாக இருங்கன்னு டிபி.கஜேந்திரன் – மயில்சாமி – மனோபாலா சொல்றாங்க – தேவயாணி

பாசிட்டிவாக இருங்கன்னு டிபி.கஜேந்திரன் – மயில்சாமி – மனோபாலா சொல்றாங்க – தேவயாணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மனோபாலா, டிபி.கஜேந்திரன், மயில்சாமி ஆகியோருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நடிகை தேவயானி பேசும்போது…

‘இங்கே போட்டோவில் இருக்கும் இவர்கள் மூவரையும் பார்க்கும்போது சந்தோசமாக இருங்க, ஒற்றுமையாக இருங்க, பாசிட்டிவாக இருங்க என்று நமக்கு சொல்வது போல தோன்றுகிறது” என்று கூறினார்.

திரைப்பட கல்லூரி தலைவர் நடிகர் ராஜேஷ் பேசும்போது…

“இவர்கள் மூவரும் இறந்தது போலவே தோன்றவில்லை. நானும் மயில்சாமி போல நன்றாக மிமிக்கிரி பண்ணுவேன். மனோபாலா இயக்கத்திலும் நான் நடித்துள்ளேன். மனோபாலா எப்போதுமே இதயத்தில் இருந்து பேசுவார்.

டி.பி கஜேந்திரன் நம்முடன் பேசும்போது நம் மனதை காயப்படுத்தாமல் நாகரீகமாக பேசக்கூடியவர். ஒரு முறை எனது உடல்நிலை சரியில்லாத நிலையில் அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது அதுகுறித்து விசாரித்து என் மனதை கஷ்டப்படுத்தாமல் பேசியதை மறக்க முடியாது” என்றார்.

TP Gajendran – Mayilswamy – Manobala says to be positive – Devayani

கடைசியா ஒரு படமெடுத்து மன உளைச்சலுக்கு மனோபாலா ஆளானார் – ஆர்.வி உதயகுமார்

கடைசியா ஒரு படமெடுத்து மன உளைச்சலுக்கு மனோபாலா ஆளானார் – ஆர்.வி உதயகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மனோபாலா, டிபி.கஜேந்திரன், மயில்சாமி ஆகியோருக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ஆர்.வி உதயகுமார் பேசும்போது…

“இந்த இரங்கல் கூட்டம் மூலமாக கலைக்குடும்பத்தை ஒன்று சேர்க்கும் பணியை இந்த மூவரும் செய்திருக்கிறார்கள். மயில்சாமி என்னுடைய படங்களில் வாய்ப்பு கேட்டு வந்தபோது என்னுடைய முதல் படத்தின் சண்டைக் காட்சிகளில் அவரது குரலை பயன்படுத்தி டப்பிங் கொடுக்க செய்தேன்.

டிபி கஜேந்திரன் எப்போதுமே தன்னை எழுத்தாளர் என்கிற மைண்ட்செட்டிலேயே வைத்திருப்பார். மனோபாலா சோகமாக இருந்து நான் பார்த்ததில்லை.

இயக்குனர் சங்கத்திற்கும் நடிகர் சங்கத்திற்கும் பாலமாக இருந்தார் மனோபாலா. சிகிச்சையில் இருந்தபோது நான் சீக்கிரம் வந்து விடுவேன் என கூறினார். கடைசியாக அவர் ஒரு படம் எடுத்து மிகுந்த துன்பத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகி இருந்தார்” என்றார்.

பெப்சி துணைத் தலைவர் சுவாமிநாதன் பேசும்போது…

“தலைவர் ஆர்.கே.செல்வமணி இங்கே வந்திருந்தால் இவர்கள் பற்றி இன்னும் அதிகமான விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருப்பார். மனோபாலா என்னை எப்பொழுது பார்த்தாலும் ‘டே சுவாமிநாதா’ என உரிமையாக அழைப்பார்.

நானும் மயில்சாமியும் ஒரே ஏரியா என்பதால் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். சுதந்திர தினத்தன்று தன் வீட்டு வழியாக செல்லும் குழந்தைகளை அழைத்து நோட்டு புத்தகங்களை தந்து மகிழ்வார். அந்த காட்சிகளை இனி காண முடியாது என்பது வருத்தம் தருகிறது” என்று பேசினார்.

Manobala suffered mental issues after producing a film – RV Udhayakumar

More Articles
Follows