அர்ஜுன் அறிமுகப்படுத்திய டியூன்ஸ்மேஷ்; உங்களுக்கும் வாய்ப்பிருக்கு.!

அர்ஜுன் அறிமுகப்படுத்திய டியூன்ஸ்மேஷ்; உங்களுக்கும் வாய்ப்பிருக்கு.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arjun introduced TuneSmash for his Sollividava You too can Participateநடிகர் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் விஷால் ஜோடியாக “பட்டத்து யானை” படத்தில் நடித்திருந்தார்.

ஆனால் அதன்பின்னர் சரியான வாய்ப்புகள் இவருக்கு அமையவில்லை என கூறப்படுகிறது.

எனவே, தன் மகளுக்காக ‘சொல்லி விடவா’ என்ற ஒரு படத்தை தயாரித்து இயக்கியுள்ளார் அர்ஜுன்.

இப்படத்தில் கன்னட நடிகர் சந்தன்குமார் ஹீரோவாக நடிக்க பிரகாஷ்ராஜ், சுஹாசினி, கே.விஸ்வநாத், மொட்டை ராஜேந்திரன், சதீஷ், யோகி பாபு ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஜெஸ்சி கிப்ட் இசையமைத்துள்ள இப்படத்தை தீபாவளி அன்று வெளியிடவுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்திற்காக டப்ஸ்மேஷ் போன்ற டியூன்ஸ்மேஷ் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.

அதில் வெறும் டியூன் மட்டும் வருகிறது. அதற்கு பொருந்திற போல வரிகளை நீங்கள் எழுத வேண்டும் எனவும் அதற்கான சூழ்நிலையும் அவர் தெரிவித்துள்ளார்.

Arjun introduced TuneSmash for his Sollividava  You too can Participate

இதோ அந்த டியூன் வீடியோ உங்களுக்காக….

ஆரவ் காதல் முறிவு; ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த ஓவியா

ஆரவ் காதல் முறிவு; ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த ஓவியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Oviya breaks her relationship with Bigg Boss Aaravதமிழில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சிக்கே சென்றவர் நடிகை ஓவியா.

இந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றபோது நடிகர் ஆரவ் அவர்களை காதலிப்பதாக கூறினார்.

அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னரும் தான் ஆரவ்வை காதலிப்பதாகவும் அவருக்காக காத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் தன் ரசிகர்களுக்கு ஷாக் அளிக்கும் விதமாக புதிய ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் ரிலேஷன்ஷிப்பில், சிங்கிள் எனவும் இதுவே திருப்தியளிப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

இதனை ஆயிரக்கணக்கானோர் லைக்கும் ரீட்வீட்டும் செய்துள்ளனர்.

இது நிச்சயம் ஓவியா ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றமாக இருக்கும் என நம்பலாம்.

Oviya breaks her relationship with Bigg Boss Aarav

ஒரு காதல் ஜோடிக்காக ஊரையே காலி செய்த மக்கள்

ஒரு காதல் ஜோடிக்காக ஊரையே காலி செய்த மக்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Master Mahendran Supraja starring Nadodi Kanavuஆர்.ஆர்.ஆர். புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கே.ராஜேந்திரன் தயாரித்திருக்கும் படம் ‘நாடோடி கனவு’.

இதில் நாயகனாக மாஸ்டர் மகேந்திரன் நடித்துள்ளார். நாயகியாக சுப்ரஜா நடித்துள்ளார்.

மேலும் கிரேன் மனோகர், விஜய் கணேஷ் மற்றும் கே.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

சபேஷ் முரளி இசையமைத்துள்ள இப்படத்தை வீர செல்வா இயக்கியுள்ளார். ராகுல் இணை தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிஜு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பொதுவாக ஒரு கிராமத்தில் தவறு செய்தவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பார்கள். அதுபோல் காதலர்களையும் ஊர் மக்கள் ஒதுக்கி வைப்பார்கள்.

ஆனால், இந்த படத்தில் காதலர்களை ஊரை விட்டு ஒதுக்கிவைக்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதால், ஊர் மக்கள் அனைவரும் ஊரை காலி செய்கிறார்கள்.

எதற்காக இப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டது என்பதை வித்தியாசமான திரைக்கதை மூலம் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள் படக்குழுவினர்.

இப்படத்தில் இடம்பெறும் ‘கருத்த மச்சான்’ என்ற பாடல் படப்பிடிப்பின் போது, கதாநாயகி சுப்ரஜாவிற்கு விஷப்பூச்சி ஒன்று கடித்து உடல் முழுவதும் அலர்ஜி ஏற்பட்டிருக்கிறது.

உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவமனையில் இருந்து திரும்பிய உடனே ஓய்வெடுக்காமல், மீண்டும் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டு படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் நாயகி சுப்ரஜா.

இப்படத்தின் படப்பிடிப்பு பரமக்குடி, சிவகங்கை மற்றும் சென்னையில் நடைபெற்றுள்ளது. செப்டம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு – ஆர்.ஆர்.ஆர். புரொடக்‌ஷன்ஸ்
தயாரிப்பாளர் – கே.ராஜேந்திரன்
இணை தயாரிப்பு – ஆர்.ராகுல்
தயாரிப்பு மேற்பார்வை – ஏ.வி.பழனிச்சாமி
இயக்கும் – வீர செல்வா
இசை – சபேஷ் முரளி
ஒளிப்பதிவு – ஜிஜு
பாடல்கள் – சீர்காழி சிற்பி, அண்ணாமலை
எடிட்டிங் – கிரேசன்
கலை – ராம்ஜி
நடனம் – சிவசங்கர், அஜய், சதீஸ், செல்வி
மக்கள் தொடர்பு – சரவணன். N

Master Mahendran Supraja starring Nadodi Kanavu

nadodi kanavu movie stills

தயாரிப்பாளர் சங்கம்-பெப்சி இடையே உடன்பாடு; ஸ்டிரைக் வாபஸ்

தயாரிப்பாளர் சங்கம்-பெப்சி இடையே உடன்பாடு; ஸ்டிரைக் வாபஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer Council willing to work with FEFSI team Strike cancelledகடந்த சில மாதங்களாகவே தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் பெப்சி சங்கம் இடையே மோதல் இருந்து வருகிறது.

எனவே பெப்சி அமைப்பினர் இல்லாமலும் சூட்டிங்கை நடத்திக் கொள்ளுங்கள் என அறிவித்தார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால்.

இதனால் பெப்சி அமைப்பினர் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர்.

இதனால் கடந்த சில நாட்களாக எந்த விதமான சூட்டிங்கும் நடைபெறவில்லை.

இந்நிலையில் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில், சங்கத் தலைவர் விஷால் மற்றும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், பெப்சி அமைப்பினர் போராட்டத்தை திரும்ப பெற்றுள்ளனர்.

Producer Council willing to work with FEFSI team Strike cancelled

அஜித் பெயரில் ஓர் அரசியல் படம்; விஜய்சேதுபதிக்கு பதிலாக பர்மா நடிகர்

அஜித் பெயரில் ஓர் அரசியல் படம்; விஜய்சேதுபதிக்கு பதிலாக பர்மா நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Burma hero Michael starring in Pathungi Paayanum Thalaஅஜித்தை அவரது ரசிகர்கள் அன்பாக தல என்று அழைப்பது வழக்கம்.

தற்போது அவரது பெயரில் ஒரு படம் தயாராகிவருகிறது.

‘பதுங்கி பாயனும் தல’ என்று பெயரிடப்பட்ட இப்படத்தில் மைக்கேல் நாயகனாக நடித்துள்ளார்.

இவர் பர்மா படத்தில் நாயகனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் அரசியல்வாதி வேடத்தில் வேல ராமமூர்த்தி நடித்துள்ளார்.

இவர் தொடர்ந்து தேர்தலில் தோல்வியை தழுவும் அரசியல்வாதியாக நடித்திருக்கிறாராம்.

இப்படம் குறித்து இதன் இயக்குநர் மோசஸ் முத்துப்பாண்டி கூறியதாவது…

“இந்தக் கதையை விஜய்சேதுபதிக்காக எழுதினேன். ஆனால், படத்திற்கு அவ்வளவு பட்ஜெட் இல்லை என்பதால் மைக்கேலை நடிக்க வைத்தேன்’ என கூறினார்.

Burma hero Michael starring in Pathungi Paayanum Thala

கேஎஸ். ரவிக்குமார்-நயன்தாரா கூட்டணியில் மற்றொரு மலையாள நடிகை

கேஎஸ். ரவிக்குமார்-நயன்தாரா கூட்டணியில் மற்றொரு மலையாள நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

natasha doshi in ksravikumar movieதெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் 102வது படத்தை கே.எஸ். ரவிக்குமார் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் நாயகியான நயன்தாரா நடித்து வருகிறார் என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் இப்படத்தில் மற்றொரு நாயகியாக நடாஷா தோஷி இணைந்திருக்கிறார்.

இவரும் மலையாள நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் நடிக்கும் காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறார் இயக்குனர் கேஎஸ். ரவிக்குமார்.

Natasha doshi joins with KS Ravikumar Balakrishnas combo movie

More Articles
Follows