டீன் ஏஜ் பசங்களின் உலகம்.; முதல் வெப் சீரிஸ் குறித்து நடிகை அபிராமி

டீன் ஏஜ் பசங்களின் உலகம்.; முதல் வெப் சீரிஸ் குறித்து நடிகை அபிராமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ZEE5 தளத்தின் அடுத்த வெளியீடாக, ‘ஒரு கோடை Murder Mystery’ திரில்லர் வெப் சீரிஸ் ஏப்ரல் 21 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது.

இதனையொட்டி படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

இதில் இயக்குநர் விஷால் வெங்கட் பேசியதாவது…

“சில நேரங்களில் சில மனிதர்கள் படத்திற்கு நீங்கள் மிகப்பெரிய ஆதரவைத் தந்தீர்கள் அதற்கு மிகப்பெரிய நன்றி. இந்த வெப் சீரிஸ் இயக்கச் சொல்லி ஜீ5 யிலிருந்து கால் வந்தது. Sol Production Pvt.Ltd உடன் முன்னதாகவே அஸிஸ்டெண்டாக வேலை பார்த்துள்ளேன்.

இந்த சீரிஸ் மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. மிகக்குறைந்த காலகட்டத்தில், இந்த வெப் சீரிஸை எடுத்தோம். அதற்கு ஒளிப்பதிவாளர், எடிட்டர், குழுவினர் அனைவரும் மிகப்பெரும் தூணாக இருந்தார்கள்.

அபிராமி மேடம், லிசி மேடமுடன் வேலை பார்த்ததில் நான் நிறையக் கற்றுக்கொண்டேன். இந்த சீரிஸில் நடித்த டீன் பசங்க அனைவருமே பிரமிக்க வைத்தார்கள். திரைக்கதை வசனத்தை எழுதிய N பத்மகுமார் மற்றும் ரோஹித் நந்தகுமாருக்கு நன்றி. கதை எழுதிய அனிதா மேடத்துக்கு நன்றி. முக்கியமாக இந்த வாய்ப்பை அளித்த ZEE5 க்கு நன்றி. ஒவ்வொரு வேலையுமே கற்றுக்கொள்ளும் நல்ல அனுபவமே. இந்த சீரிஸ் நன்றாக வந்துள்ளது. உங்கள் ஆதரவைத் தருவீர்கள் என்று நம்புகிறேன் நன்றி.

நடிகை அபிராமி பேசியதாவது…

“இந்த மாதிரி பிரஸ் மீட் எனக்கு புது அனுபவம். முதலில் எனக்கு வாய்ப்பளித்த ZEE5 க்கு நன்றி. இது எனது முதல் வெப் சீரிஸ்.

இந்த வெப் சீரிஸ்க்கு அணுகும்போதே முழு திரைக்கதையும் தந்தார்கள். எனக்கு மர்டர் மிஸ்டரி ரொம்ப பிடிக்கும். இதன் திரைக்கதை மிகவும் பிடித்தது.

இதில் வேலை பார்த்த அனைத்து கலைஞர்களும் மிகச்சிறந்த திறமைசாலிகள், அவர்களின் திறமையால் அழகாக இதனை உருவாக்கியுள்ளார்கள்.

பொதுவாக ஒரு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் நடிக்கும் போது, டைட்டில் கேரக்டர் நடிப்பார்கள். ஆனால் நான் இந்த வெப் சீரிஸ் நடிக்க காரணம் இதன் திரைக்கதை தான், அவ்வளவு அற்புதமாக இருந்தது. டீன்ஏஜ் பசங்களின் உலகை அவ்வளவு தத்ரூபமாக எழுதியிருந்தார்கள்.

அதே போல் என் கதாபாத்திரம் அம்மா பாத்திரம் அத்தனை அழகாக வந்துள்ளது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

Sol Production Pvt.Ltd சார்பில் ஃபாசிலா அல்லானா, கம்னா மெனேசஸ் தயாரித்துள்ள இந்த வெப்சீரிஸை, இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கியுள்ளார். திரைக்கதை வசனத்தை N பத்மகுமார் மற்றும் ரோஹித் நந்தகுமார் எழுதியுள்ளனர்.

நடிகை அபிராமி, ஆகாஷ், ஐஸ்வர்யா, ராகவ், ஜான், நம்ரிதா, அபிதா, பிராங்கின், சில்வன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Abirami talks about her first web series Oru Kodai Murder Mystery

சார்மிங் & வயலண்ட் கலந்த கலவை நான்.. கே. பாலசந்தர் ஓகே சொன்னதும் அதுக்குதான் – ராகவ்

சார்மிங் & வயலண்ட் கலந்த கலவை நான்.. கே. பாலசந்தர் ஓகே சொன்னதும் அதுக்குதான் – ராகவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒவ்வொரு மாதமும் தமிழ் பார்வையாளர்களுக்கென்றே பிரத்தியேகமான விருந்தளித்து வரும், இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5 தளத்தின் அடுத்த வெளியீடாக, “ஒரு கோடை Murder Mystery” திரில்லர் வெப் சீரிஸ் ஏப்ரல் 21 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது.

இதனையொட்டி படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

இந்நிகழ்வினில் நடிகர் ராகவ் பேசியதாவது…

இந்த சீரிஸ் பாம்பே நிறுவனத்தின் தயாரிப்பு, எழுத்தாளரும் மும்பையை சேர்ந்தவர். ஆன்லைனில் ஆடிசன் கேட்டிருந்தபோது, நான் இதில் வாய்ப்புக் கேட்டேன்.

அவர்கள் சார்மிங்காகவும் இருக்கனும் வயலண்டாகவும் இருக்கனும் அப்படி ஒரு ஆள் தேவை என்றார்கள். இதே காரணத்திற்காக தான் பாலசந்தர் சார் என்னை நடிக்க வைத்தார்.

என்னைப்பற்றி அவர்களுக்கு தெரியாது என்பதால், நான் ஒரு காட்சி நடித்து அனுப்பினேன். அவர்களுக்கு பிடித்து என்னை நடிக்க வைத்தார்கள்.

கௌஷிக் உடன் முன்பாகவே இணைந்து ஒரு சீரிஸ் வேலை பார்த்தோம் அது வெளியாகவில்லை, ஆனால் இந்த சீரிஸில் பங்கு கொண்டது மகிழ்ச்சி. படக்குழுவினர் அனைவருமே மிகச்சிறந்த திறமைசாலிகள் இந்த சீரிஸ் சிறப்பாக வர வேண்டும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

நடிகை லிசி ஆண்டனி பேசியதாவது…

ZEE5 உடன் எனது ஆறாவது சீரிஸ் இது. என் முதல் படத்திலிருந்து எனக்குப் பெரிய ஆதரவு தந்து வருகிறீர்கள் அதற்கு நன்றி. இந்த சீரிஸில் நடிகை அபிராமி, மிகச்சிறந்த நண்பராகக் கிடைத்துள்ளார்.

இந்த சீரிஸ் மிக நன்றாக வந்துள்ளது. உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

Raghav speech at oru kodai murder mystery event

குடும்பத்தை காக்க போராட்டம்.; அமானுஷ்ய சம்பவங்கள் நிறைந்த ‘ஜெனி’

குடும்பத்தை காக்க போராட்டம்.; அமானுஷ்ய சம்பவங்கள் நிறைந்த ‘ஜெனி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்த் திரையுலகில் வெற்றி எழுத்தாளராக தயாரிப்பாளராக வலம் வந்தவர் திரைப்பட வித்தகர் தூயவன்.

அவரது புதல்வர் பாபு தூயவன் தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் பயின்று ‘கதம் கதம்’ என்ற படத்தை தயாரித்து இயக்கியிருந்தார்.

‘இட்லி’ என்ற படத்தையும் தயாரித்திருக்கிறார். அவரது மேற்பார்வையில் அவரது துணைவியார் A. முஸ்தரி தயாரித்திருக்கும் திகில் படம் தான் ‘ஜெனி’.

திரைப்படக் கல்லூரியில் பயின்று சில படங்களையும் ஏராளமான தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியிருக்கும் நித்தியானந்தம் இயக்கத்தில் இந்தப்படம் உருவாகி இருக்கிறது.

ஜெனி

பாரீஸ் ஜெயராஜ் படத்தின் முக்கிய வேடத்தில் நடித்த விவாந்த் நாயகனாக நடித்துள்ளார்.

‘மைடியர் பூதம்’ திரைப் படத்தில் குழந்தை நாயகனாக மிரட்டிய பரம் விக்னேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர்களோடு மைதிலி, பிஜாய் மேனன், ஆக்க்ஷன் பிரகாஷ் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

ஜெனி

துஷ்ட ஆவி ஒன்று சிறுவனை ஆக்ரமிக்க முயல அதிலிருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் காக்க அந்த சிறுவனும் அவர் தந்தையும் போராடும் திகிலூட்டும் அமானுஷ்ய சம்பவங்கள் நிறைந்த இந்தப் படத்தின் கதை, திரைக் கதையை அறிவாற்றல் பிதா எழுத வசனத்தை பாஸ்கர் ராஜ் எழுதியிருக்கிறார்.

யுதீஷ் இசையமைத்துள்ளார். திரைப் படக் கல்லூரி மாணவர்களான கீதாகரன் ஒளிப்பதிவு செய்துள்ளார் ஹரிகுமரன் படத்தொகுப்பு செய்துள்ளார். இணை தயாரிப்பு – A.M.சயீஃப், நிர்வாக தயாரிப்பு – K. தங்கராஜ்.

ஜெனி

இரசிகர்களை இருக்கை நுனியில் பதைபதைப்போடு பார்க்க வைக்கும் திரைப்பட உலகம் பிரமாண்டமாய் பிரபஞ்ச அளவுக்கு விரிந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் குறுகிய முதலீட்டில் குறுகிய கால அளவில் நல்ல படைப்பாளிகளை மட்டுமே வைத்து அழுத்தமான படைப்பாக இந்த படம் உருவாகி இருக்கிறது.

இரசிகர்கள் நல்ல உணர்வு பூர்வமான படங்களுக்கு என்றென்றும் ஆதரவு தந்து கொண்டிருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் பாபு தூயவன் – A. முஸ்தரி தயாரித்திருக்கும் ‘ஜெனி’ திரைப்படம் விரைவில் வெள்ளித் திரையில் உங்களை பரவசப்படுத்த வருகிறது.

இது ஒரு திரைப்படக் கல்லூரி மாணவர்களின் மாறுபட்ட படைப்பு.

ஜெனி

Horror Thriller movie Jeni updates

விவசாயிகளுக்கு எதிரான நவீன கயவர்களை அழிக்கும் படம்.; பாலாஜிக்கு ‘ஜம்பு மஹாரிஷி’ பேரவை பாராட்டு

விவசாயிகளுக்கு எதிரான நவீன கயவர்களை அழிக்கும் படம்.; பாலாஜிக்கு ‘ஜம்பு மஹாரிஷி’ பேரவை பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று ஏப்ரல் 21.. திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் பாலாஜி அவர்கள் திரைக்கதை, வசனம் எழுதி, நடித்து, இயக்கி, தயாரித்த ஜம்பு மஹாரிஷி திரைப்படம் வெளியிடப்பட்டது.

முதல் காட்சியை ஜம்பு மஹாரிஷி பேரவை நிர்வாகிகளோடு பல்வேறு சமூதாய சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் C.R பாஸ்கரன் & P.அன்பரசன் ஆகியோர்கள் பார்வையிட்டனர்.

பொதுவாக நாங்கள் திரைப்படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த படத்தை பாருங்கள், இந்த படத்தை பாருங்கள் என்று விளம்பரப்படுத்துவதில்லை.

ஏதோ ஒரு போட்டோவை படத்தில் காண்பித்து அதை வாம்மா மின்னல்… என்று படத்தில் வரவைத்து, இது சமூதாய படம் என்று பிரச்சாரம் செய்து, மேலும் பல்வேறு சமூதாயங்க ளிடையே பீதியையும், பரபரப்பை உறுவாக்கி, பூதாகாரப்படுத்தி, பல்வேறு குழுக்களை தயார் செய்து சமூதாய மக்களிடையே நிதிகொடு, பேனர் வை, படத்தைப்பார், போஸ்டர் ஒட்டுனு பிரச்சாரம் செய்து வணிகமாக்கி பணம் கொழிக்கும் தயாரிப்பாளர் /இயக்குநர் இருக்கும் சமுதாயத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, விவசாயியாக வாழ்ந்து யாரிடமும் கையேந்தாமல், 14 வருடங்களாக போராடி, யாரின் உதவியில்லாமல், சமுதாய மக்களிடையே சுயவிளம்பரம் செய்யாமல், யாரின் ஆதர மற்றும் தயவுமில்லாமல், சமூதாயத்தை பெருமை படுத்தும் வகையில் ஜம்பு மஹாரிஷியின் வரலாற்றை திரைப்படமாக எடுத்து வெளியிட்ட பாலாஜியை பாராட்டவேண்டும்.

படத்தின் முதல் பாகம் விவசாயத்தின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையிலும் இந்திய விவசாயத்தை கெடுக்க நினைக்கும் வெள்ளையரோடு இணைந்து செயல்படுகின்றவரை அழித்து இந்திய விளைநிலங்களை காப்பதாக படம் அமைந்துள்ளது.

இரண்டாவது பாதி ஜம்பு மஹாரிஷி வரலாறு, யாகம் செய்தல், அதில் தோன்றிய ருத்ரவீரன், வாதாபியை அழித்து இந்த உலகத்தை காப்பதாக எடுக்கப்பட்டுள்ளது.

கடைசியாக இரண்டையும் இணைத்து ஜம்பு மஹாரிஷியின் ஆசியோடு விவசாயிகளுக்கு எதிரான நவீன கயவர்களை அழிப்பதாக படம் அமைந்துள்ளது.

சுயவிளம்பரமில்லாத பாலாஜியை பாராட்டுகிறோம்.

ஜம்புமஹாரிஷி படம் வெற்றியடைய வேண்டும் என வாழ்த்துகிறோம்.

இங்ஙனம்
ஜம்பு மஹாரிஷி பேரவை

Jambu Maharishi association appreciates Director Balaji

ரஜினி – சிம்பு பாராட்டு.. ஒரு நல்ல படம் என்ன செய்யும் என்பதை ‘அயோத்தி’ காட்டியுள்ளது.. – சசிகுமார்

ரஜினி – சிம்பு பாராட்டு.. ஒரு நல்ல படம் என்ன செய்யும் என்பதை ‘அயோத்தி’ காட்டியுள்ளது.. – சசிகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்து வெளியான படம் ‘அயோத்தி’.

முதலில் தியேட்டரில் வெளியாகி பின்பு ஓடிடியில் வெளியாகி தற்போது 50 நாட்களைக் கடந்துள்ள நிலையில் பட குழுவினர் வெற்றி விழா கொண்டாடினர்.

இந்த விழாவில் *நடிகர்-இயக்குநர் சசிகுமார் பேசியதாவது…*

இந்தப்படம் ஓடிடிக்கு விற்றதால் அவசரமாக வெளியிட வேண்டிய சூழ்நிலை. எந்த புரமோசனும் செய்யவில்லை. ஆனால் ரவீந்திரன் சார் முடிந்த அளவு நிறைய தியேட்டர்கள் போடுகிறேன் என்று அவரால் முடிந்த அத்தனையும் செய்தார்.

படம் வெளியானதே நிறைய பேருக்கு தெரியவில்லை. ஆனால் பத்திரிகை நண்பர்கள் பாராட்டி எழுத ஆரம்பித்த பிறகு பலர் கவனிக்க ஆரம்பித்தார்கள்.

மக்கள் தங்கள் படமாக கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். இந்தப்படம் குறித்து மந்திரமூர்த்தி சொன்னபோதே இதன் ஆழம் எனக்கு புரிந்தது. இந்தப்படத்தை மகேந்திரன் சாருக்கும், பாலு மகேந்திரா சாருக்கும் போட்டுக்காட்ட எனக்கு ஆசை. அவர்கள் இருந்திருந்தால் கண்டிப்பாக காட்டியிருப்பேன்.

மகேந்திரன் சார் நண்டு என ஒரு படம் எடுத்தார். அதில் இதே போல் இந்தி கதாப்பாத்திரங்கள் இந்தியில் பேசுவார்கள். அப்போதே அதைச் செய்து விட்டார்.

ஆனால் தயாரிப்பாளர் ஒத்துக் கொள்ளாததால் அது படத்தில் வரவில்லை. இந்தப்படம் மூலம் அவர் ஆத்மா சாந்தியடையும். படம் பார்த்துவிட்டு நிறைய பிரபலங்கள் பாராட்டினார்கள்.

ரஜினி சார் போன் செய்து பாராட்டினார். நண்பர் சிம்பு பாராட்டினார். ஒரு நல்ல படம் என்ன செய்யும் என்பதை இந்தப்படம் காட்டியுள்ளது. நான் இனிமேல் எந்த மாதிரி படம் செய்ய வேண்டும் என்று சொல்லியுள்ளீர்கள். எல்லோருக்கும் நன்றி.

sasikumar speech in ayothi 50 days celebration

சினிமா இருக்கும்வரை ‘அயோத்தி’ படம் பேசப்படும் – சமுத்திரக்கனி

சினிமா இருக்கும்வரை ‘அயோத்தி’ படம் பேசப்படும் – சமுத்திரக்கனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்து வெளியான படம் ‘அயோத்தி’.

முதலில் தியேட்டரில் வெளியாகி பின்பு ஓடிடியில் வெளியாகி தற்போது 50 நாட்களைக் கடந்துள்ள நிலையில் பட குழுவினர் வெற்றி விழா கொண்டாடினர்.

இந்த விழாவில் *இயக்குநர் – நடிகர் சமுத்திரகனி பேசியதாவது…*

சமீபமாக நானும் சசியும் அடிக்கடி சந்தித்துகொள்ள முடிவதில்லை. எப்படியும் பார்த்து விடுவோம், அப்போது நாங்கள் செய்யும் படங்கள் பற்றி பேசிக்கொள்வோம். அப்போதே இந்தப்படம் பற்றி மிக நம்பிக்கையோடு சொன்னார்.

ஒரு படம் 10 வருடம் 20 வருடம் 50 வருடம் கடந்தும் பேசப்படும். இந்தப்படம் திரைத்துறை இருக்கும் வரை பேசப்படும்.

இந்தப்படம் பற்றி தெலுங்கில் என்னிடம் கேட்டார்கள் இப்படி ஒரு படம் வந்திருக்கிறது நீங்கள் பாருங்கள் தெலுங்கில் நீங்கள் செய்ய முடியுமா? அது என் தம்பி படம் என் சகோதரர் தான் தயாரிப்பாளர் என பெருமையோடு சொன்னேன்.

இந்தப்படம் மொழி தாண்டி பலரை ஈர்த்திருக்கிறது அது தான் உண்மையான வெற்றி. இந்தப்படத்தை இந்தியில் அப்படியே வெளியிட வேண்டும். அங்கும் இது ஜெயிக்கும். மந்திரமூர்த்தி முதல் படத்திலேயே தன்னை நிரூபித்து விட்டான்.

சசி நிஜ வாழ்க்கையிலேயே எல்லோருக்கும் ஓடி உதவும் மனிதன். யாஷ்பால் சர்மா, ப்ரீத்தி நடிப்பு அற்புதம். இன்னும் இந்தப்படம் ஓடும். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

Samuthirakani speech in ayothi 50 days celebration

More Articles
Follows