ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணையும் விக்ரம்பிரபு

ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணையும் விக்ரம்பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikram prabhu and Murugadossவிக்ரம்பிரபு நடிப்பில் ‘வாகா’ மற்றும் ‘வீரசிவாஜி’ ஆகிய இரண்டு படங்கள் வெளியீட்டுக்கு தயாராகியுள்ன.

இதில் வீரசிவாஜி படத்தை கணேஷ் விநாயக் இயக்கியிருக்கிறார்.

இமான் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் ஷாலினி அஜித்தின் தங்கை ஷாமிலி நாயகியாக நடித்துள்ளார்.

இவர்களுடன் ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன், ரோபோ சங்கர், யோகிபாபு, உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

எஸ்.நந்தகோபால் தயாரித்துள்ள இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் டீசரை இன்று இரவு 7 மணிக்கு வெளியிடுகிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.

‘வடசென்னை’க்காக தனுஷ் ஆடும் ஆட்டம்..!

‘வடசென்னை’க்காக தனுஷ் ஆடும் ஆட்டம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush new stillsதனுஷின் வுண்டர்பார் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் வடசென்னை.

மூன்று பாகங்களாக உருவாகவுள்ள இதன் முதல் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.

இதற்காக சென்னையில் மிக பிரமாண்டமாக ஜெயில் செட் ஒன்று போடப்பட்டு அங்கு அதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

வெற்றிமாறனின் கனவுப்படம் என கூறப்படும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இதில் தனுஷுடன் சமந்தா, ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இதில் தனுஷ் கேரம் விளையாட்டு ஆடுபவராக நடிக்கிறாராம். இதற்காக கேரம் விளையாட்டு வீரர் உதவியுடன் பயிற்சி எடுத்து வருகிறார்.

வட சென்னை மக்களுக்கும் கேரம் விளையாட்டிற்கும் மிகப்பெரிய தொடர்பு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பி. வாசு இயக்கத்தில் ஜோடி சேரும் லாரன்ஸ்-ரித்திகா சிங்..!

பி. வாசு இயக்கத்தில் ஜோடி சேரும் லாரன்ஸ்-ரித்திகா சிங்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raghava Lawrence and Ritika Singhகன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த சிவலிங்கா படத்தை தமிழில் பி.வாசு இயக்கவிருக்கிறார்.

தமிழிலும் சிவலிங்கா என்ற பெயரையே தலைப்பாக வைத்துள்ளனர்.

வெற்றிவேல் படத்தை தொடர்ந்து டிரைடன்ட் ஆர்ட்ஸ் சார்பாக ஆர்.ரவீந்திரன் இப்படத்தை தயாரிக்கிறார்.

நாயகனாக லாரன்ஸ் நடிக்க, அவருக்கு ஜோடியாக ‘இறுதிச்சுற்று’ ரித்திகா சிங் நடிக்கிறார்.

முக்கிய வேடத்தில் பி. வாசுவின் மகன் ஷக்திவேல் வாசு நடிக்கிறார். மேலும் நடிகர் வடிவேலு நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் படப்பிடிப்பு ஜூலை 14 ம் தேதி பெங்களூரில் துவங்குகிறது. சென்னை, மைசூர், மும்பை ஆகிய பகுதிகளிலும் இதன் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

உலகளவில் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் ரஜினி..!

உலகளவில் தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் ரஜினி..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabali stillsரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படத்தின் டீசர், பாடல்கள் பட்டைய கிளப்பி கொண்டிருக்கிறது.

எனவே கோடானு கோடி ரசிகர்கள் இப்படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

ஜுலை 1ஆம் தேதி இப்படத்தை சென்சாருக்கு அனுப்பவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், புகழ் பெற்ற பிரான்ஸ் நாட்டில் உள்ள ‛ரெக்ஸ் சினிமாஸ் திரையரங்கில் ‛கபாலி படம் திரையிடப்பட உள்ளதாம்.

இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரு படம் அங்கு திரையிடப்படுவது இதுவே முதன்முறையாகும்.

ஜுலை மாதம் 14ஆம் தேதியன்று படத்தின் பிரிமீயர் காட்சி அங்கு நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதில் கலந்துகொள்ள ரஜினிக்கு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

எனவே இந்த காட்சியில் ரஜினி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்குள் ஒருமுறை இந்தியா வந்து செல்வாரா?. அல்லது அமெரிக்காவில் இருந்து அப்படியே அங்கு செல்வாரா ரஜினி? என்பது குறித்த தகவல்கள் இல்லை.

குப்பை பொறுக்கி ‘பைசா’வை எடுத்த விஜய் பட இயக்குனர்..!

குப்பை பொறுக்கி ‘பைசா’வை எடுத்த விஜய் பட இயக்குனர்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Paisa Movie Stillsவிஜய், முன்னாள் உலக அழகி ப்ரியங்கா சோப்ரா நடித்த தமிழன் படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் அப்துல் மஜீத்.

இப்படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தை தொடர்ந்து ஓரிரு படங்களை எடுத்திருந்தார்.

தற்போது இவரே தயாரிப்பாளராக அவதாரமெடுத்து இயக்கியுள்ள படம் பைசா.

இப்படத்தை Confident Film Cafe நிறுவனம் சார்பாக தயாரிக்கிறார்.

இப்படத்தில் பசங்க, கோலி சோடா புகழ் ஸ்ரீராம் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக ஆரா, தீபிகா நடித்துள்ளனர்.

இவர்களுடன் நாசர், மயில்சாமி, சென்ட்ராயன், மதுசூதன் ராவ், ராம்ராஜ் உள்ளிட்டோர் நடிக்க ஜே.வி. இசையமைத்துள்ளார்.

இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இப்படம் குறித்து இயக்குநர் மஜீத் கூறியதாவது…

“இப்படம் குப்பை பொறுக்கி வாழும் மனிதர்களை பற்றியதுதான். நாம் குப்பை போடுபவர்களை விட, அதை பொறுக்குபவர்களைத்தான் கேவலமாக பார்க்கிறோம்.

அவர்கள் ஒரு நாளில் மட்டும் ரூ. 500-700 வரை சம்பாதிக்கிறார்கள். காலை 6 மணி முதல் 10 மணிவரை. பின்னர் மாலை 3 முதல் 6 மணி வரை மட்டுமே வேலை செய்கிறார்கள்.

இதில் துய்மை இந்தியா பற்றிய ஒரு நல்ல கருத்தும் உள்ளது. படம் பார்த்தபின் நாமும் நம்மை சுற்றியுள்ள இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வரும்.” என்று பேசினார்.

மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் ஸ்ரீதிவ்யா..!

மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் ஸ்ரீதிவ்யா..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sridivyas Special Appearance in Remoவருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் ஸ்ரீதிவ்யா.

இப்படத்தின் மெகா வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் காக்கி சட்டை படத்தில் இணைந்தார்.

இப்படமும் வெற்றிப் பெறவே, இந்த ஜோடி ராசியான என கூறப்பட்டது.

தற்போது மீண்டும் 3வது முறையாக இவர்கள் இணையவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

அதாவது சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறாராம்.

காக்கி சட்டை படத்தில் இவர் நர்ஸாக நடித்திருந்தார்.

எனவே இதிலும் சில காட்சிகளில் நர்ஸ் ஆக சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி ஜோடியுடன் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

More Articles
Follows