விக்ரம் பிரபுவின் ‘வீரசிவாஜி’ ரிலீஸ் தேதி உறுதியானது

விக்ரம் பிரபுவின் ‘வீரசிவாஜி’ ரிலீஸ் தேதி உறுதியானது

veera sivaji movie stillsவருகிற டிசம்பர் 16ஆம் தேதி விக்ரம் பிரபு நடித்துள்ள வீர சிவாஜி படமும் ரிலீஸ் ஆகும் என சற்றுமுன் அறிவித்துள்ளனர்.

ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பாக எஸ். நந்தகோபால் இப்படத்தை தயாரித்துள்ளார்.

கணேஷ் விநாயக் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம் பிரபு, ஷாம்லி, ஜான்விஜய், ரோபோசங்கர், யோகி பாபு, நான்கடவுள் ராஜேந்திரன், மனிஷாஸ்ரீ, வினோதினி, ஸ்ரீரஞ்சனி, இயக்குனர் மாரிமுத்து, சாதன்யா, குட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவை எம்.சுகுமார் கவனிக்க, இமான் இசையமைத்துள்ளார். ஞானகிரி மற்றும் சசி ஆகிய இருவரும் வசனங்களை எழுதியுள்ளனர்.

இதே நாளில்தான் நட்ராஜ் நடித்துள்ள போங்கு படமும் வெளியாகிறது என்பதை முன்பே பார்த்தோம்.

சிவகார்த்திகேயனை பாராட்டிய இரண்டு சூப்பர் ஸ்டார்கள்

சிவகார்த்திகேயனை பாராட்டிய இரண்டு சூப்பர் ஸ்டார்கள்

sivakarthikeyanரெமோ படத்தை பார்த்த ரஜினிகாந்த், தன் பாராட்டை சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ரெமோ படம் தெலுங்கிலும் வெளியானது.

இதன் வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் பேசும்போது…

“இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்களை கேட்ட மெகா ஸ்டார் சிரஞ்சீவி பாராட்டியிருந்தார்.

மேலும் அவர் படத்தை பார்க்க ஆவலாக இருப்பதாக கூறியிருக்கிறார். அவருக்கு என் நன்றி.

இப்படத்தை இங்கே மாபெரும் வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கும், தில் ராஜீ அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி” என்று பேசினார்.

தன் ஒரே படத்தில் இரண்டு சூப்பர் ஸ்டார்களின் பாராட்டை சிவகார்த்திகேயன் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா விலகிய கேப்பில் உள்ளே நுழையும் ‘போங்கு’ நட்ராஜ்

சூர்யா விலகிய கேப்பில் உள்ளே நுழையும் ‘போங்கு’ நட்ராஜ்

bongu movie stillsசூர்யாவின் சி-3 திரைப்படம் டிசம்பர் 16ஆம் தேதி ரிலீஸ் தேதியிலிருந்து, தற்போது 23ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதனால் 16ஆம் தேதி தன்னுடைய போங்கு படத்தை வெளியிட இருக்கிறாராம் நட்ராஜ்.

இப்படத்தை ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் சார்பாக ரகுகுமார் என்கிற ராஜரத்தினம், ஸ்ரீதரன் இணைத்து தயாரித்துள்ளனர்.

இதில் சதுரங்க வேட்டை நாயகன் நட்டி என்ற நட்ராஜ் நாயகனாக நடிக்க, முன்னாள் உலக அழகி ருஹிசிங் நாயகியாக நடிக்கிறார்.

இவர்களுடன் அதுல் குல்கர்னி, முண்டாசு பட்டி ராம்தாஸ், அர்ஜுன், வில்லன் ஷரத் லோகித்தஷ்வா, ராஜன், பாவா லட்சுமணன், மயில்சாமி, சாம்ஸ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

தாஜ் இயக்கியுள்ள இப்படத்தில் சாபுசிரில் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

இப்படம் ஹைடெக்காக கார் திருடும் நால்வரின் கதையாம்.

இப்படத்தின் முக்கிய பாத்திரமாக காஸ்ட்லியான ரோல்ஸ் ராய்ஸ் கார் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக அஹமதாபாத்தில் உள்ள ஒரு ஷோரூமில் அனுமதி பெற்று படப்பிடிப்பை நடத்தி உள்ளனர்.

மூன்றாவது முறையாக பெண் இயக்குநர் படத்தில் தனுஷ்

மூன்றாவது முறையாக பெண் இயக்குநர் படத்தில் தனுஷ்

dhanush gayathri raghuramதனுஷ் நடிப்பில் 30க்கும் மேற்பட்ட படங்கள் வந்துவிட்டன. இதில் பெண் இயக்குனர் இயக்கிய படங்களிலும் நடித்துள்ளார்.

தன் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் 3 படத்தில் நடித்தார் தனுஷ்.

இதனையடுத்து விரைவில் சௌந்தர்யா ரஜினி இயக்கும் வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் 3வதாக மற்றொரு பெண் இயக்குனர் படத்தில் இணைந்துள்ளார்.

இதில் அவர் நடிக்கவில்லை என்றாலும் அப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.

பிரபல டான்ஸ் மாஸ்டர் காயத்ரி ரகுராம் இயக்கிவரும் யாதுமாகின்நின்றாய் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் ”எனது ஆல் டைம் ஃபேவரிட் சிங்கர் தனுஷ் என் படத்தில் பாடியுள்ளார். மிக்க மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார் காயத்ரி ரகுராம்.

Gayathri Raguramm ‏@gayathriraguram
My all time Favorite talented loving @dhanushkraja sir sang a song in my movie #YaadhumaaginNindrai very happy thank you so much

Dhanush sung song in Gayathri Raguram’s Yaadhumaagin Nindrai

பைரவா ஆடியோ வெளியீட்டு தேதி தகவல்கள்

பைரவா ஆடியோ வெளியீட்டு தேதி தகவல்கள்

bairavaa fan artபரதன் இயக்கத்தில் விஜயா புரொடக்ஷன்ஸ் சார்ப்பில் உருவாகியுள்ள படம் பைரவா.

இதில் விஜய்யுடன் ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

ஓரிரு தினங்களுக்கு இதன் சூட்டிங் பூசணிக்காய் உடைத்து நிறைவு பெற்றது.

இப்படத்தின் பாடல்கள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர்.

இந்நிலையில் இதன் ஆடியோவை டிசம்பர் 20ஆம் தேதி (அந்த வாரத்தில்) வெளியிட வாய்ப்புள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

சூர்யா செய்த காரியத்தால் குழப்பத்தில் ஜெயம் ரவி?

சூர்யா செய்த காரியத்தால் குழப்பத்தில் ஜெயம் ரவி?

suirya jayamraviஹரி-சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள சி3 படத்திற்கு மாஸ் ஓப்பனிங் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் அந்தளவு வரவேற்பை பெற்றுள்ளதே காரணம் என சொல்லப்படுகிறது.

இது டிசம்பர் 16ஆம் தேதி வெளியாகும் என முன்பே அறிவிக்கபட்டது.

தற்போது கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக டிசம்பர் 23ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த நாளில் வெளியாக இருந்த ஜெயம் ரவியின் போகன் படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் எனத் தெரிகிறது.

இவையில்லாமல் சசிகுமாரின் பலே வெள்ளையத் தேவா மற்றும் பார்த்திபனின் கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட படங்களும் இதே நாளில் ரீலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதால் சில படங்கள் முந்திக் கொள்ளவோ, தள்ளிப் போகவோ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

More Articles
Follows