9 வயது சாதன்யாவுக்கு குறும்படம் இயக்கி சாதனை புரிய ஆசையாம்.!

9 வயது சாதன்யாவுக்கு குறும்படம் இயக்கி சாதனை புரிய ஆசையாம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sadhana babyபேபி படத்தில் நடித்து முத்திரை பதித்தவர் பேபி சாதனா.

4ஆம் வகுப்பு படிக்கும் இந்த குழந்தை நட்சத்திரற்கு தற்போது 9 வயது ஆகிறது.

இவரின் வயதை விட அதிக எண்ணிக்கையிலான படங்களில் நடித்து வருகிறார்.

த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் சிறுவயது கயல் ஆனந்தியாக நடித்தார்.

தற்போது நிசப்தம், காத்தாடி, வீரசிவாஜி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தற்போது ஒரு குறும்படத்திற்கு கதை எழுதி வருகிறார். அப்படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட இருக்கிறாராம்.

அதுபோல் ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகியோருடன் நடிக்க ஆசை இருக்கிறது என்கிறார்.

மேலும் பிரபல இயக்குனர்கள் மணிரத்னம், ஷங்கர், முருகதாஸ் ஆகியோர் இயக்கத்தில் நடிக்கவும் இவருக்கு ஆசை இருக்கிறதாம்.

சாதன்யா சிறுவயதிலேயே சாதனை பல படைக்க வாழ்த்துவோம்.

கபாலி ரிலீஸ்: ‘தெறி’க்கவிட ரெடியாகும் விஜய் ரசிகர்கள்

கபாலி ரிலீஸ்: ‘தெறி’க்கவிட ரெடியாகும் விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay stillsகபாலி ரிலீஸிற்கு இன்னும் ஒரு வாரம் கூட இல்லாத நிலையில் இப்படம் பற்றிய செய்திகள் திரையுலகை திக்குமுக்காட செய்து வருகிறது.

இப்படத்தை தயாரித்த கலைப்புலி தாணு விஜய் நடித்த தெறி படத்தையும் தயாரித்திருந்தார்.

தெறி கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளியானது.

வருகிற ஜீலை 22ஆம் தேதியன்று (கபாலி ரிலீஸ்) தெறியின் 100வது நாள் முழுமையடைகிறது.
எனவே இதனை கொண்டாட விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ஒரே நாளில் ரஜினி படத்தையும் விஜய் படத்தையும் அவரவர் ரசிகர்கள் கொண்டாடவுள்ள நிலையில் கோலிவுட் தாங்குமா? என்பதுதான் தெரியவில்லை.

கபாலியில் மூன்று மொழி பேசி அசத்தும் ரஜினிகாந்த்

கபாலியில் மூன்று மொழி பேசி அசத்தும் ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini stills in kabaliகபாலி ரிலீஸை எதிர்நோக்கி வருடங்கள், மாதங்கள், வாரங்கள் என ஒவ்வொன்றாய் கரைந்து தற்போது நாள்களை எண்ணிக் கொண்டிருக்கிறோம்.

இப்படம் தொடர்பாக ஒவ்வொரு சுவாரஸ்ய தகவல்கள் கசிந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் ரஜினிகாந்த், மூன்று மொழி பேசி நடித்திருக்கிறாராம்.

தமிழ், மலாய் மற்றும் சீன மொழி பேசி நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் மலாய் வில்லன், சீன வில்லன் உள்ளிட்ட கலைஞர்கள் நடித்திருப்பதால் அவர்களுடன் மோதும் காட்சிகளில் இம்மொழிகளை பேசியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சூப்பர் ஹிட் டைரக்டருடன் இணையும் சந்தானம்.!

சூப்பர் ஹிட் டைரக்டருடன் இணையும் சந்தானம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

santhanam and selvaஎன்னதான் பல படங்களில் நடித்தாலும் ஒரு சில இயக்குனர்களின் படங்களில் நடித்தால் தான் தன் நடிப்புக்கு சரியான சான்றிதழ் கிடைக்கும் என்பதை நிறைய கலைஞர்கள் உணர்ந்துள்ளனர்.

அப்படியான ஒரு இயக்குனர்தான் செல்வராகவன். இவரின் இயக்கத்தில் நடிக்க பலரும் காத்திருக்கின்றனர்.

இவர் தற்போது கௌதம் மேனன் தயாரிப்பில், எஸ் ஜே சூர்யா நடிக்க நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இவரின் அடுத்த படத்தில் கதையின் நாயகனாக சந்தானம் நடிக்கவிருக்கிறாராம்.

இதுகுறித்து சந்தானம் கூறியதாவது…

“செல்வராகவன் சார் என்றாலே ‘சீரியஸான மனிதர் தான்’… அவர் படங்கள் உணர்ச்சிகரமாக தான் இருக்கும்… என்ற கருத்துக்கள் மக்கள் மத்தியில் உள்ளது.

ஆனால் செல்வராகவன் சாரிடம் சிறந்த நகைச்சுவை உணர்வுள்ளது” என்றார்.

இந்த வித்தியாச கூட்டணி எப்படி திரையில் விருந்து படைக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

200 வெப்சைட் முடக்கம்… கபாலி வழக்கில் தீர்ப்பு..!

200 வெப்சைட் முடக்கம்… கபாலி வழக்கில் தீர்ப்பு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabali new stillsவிண்னைத் தாண்டும் எதிர்பார்ப்பில் உள்ளது ரஜினியின் கபாலி படம்.

அடுத்த வாரம் ஜூலை 22ஆம் தேதி பிரமாண்டமாக வரவுள்ளது.

முதல் நாள் முதல் காட்சி பார்த்து விட கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இதுபோல் திருட்டு விசிடி எடுப்பவர்களும் படத்தை திருடி முதல் நாளே வெளியிட காத்திருக்கின்றனர்.

எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் தாணு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதை தொடர்ந்து இது தொடர்பான 200க்கும் மேற்பட்ட இணைய தளங்களை உடனடியாக முடக்க வேண்டும் என கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

மீண்டும் வாலி ஸ்டைலில் கலக்கும் அஜித்..!

மீண்டும் வாலி ஸ்டைலில் கலக்கும் அஜித்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith stills in vaaliஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களை அஜித் கடந்திருந்தாலும் அவராலும் அவரது ரசிகர்களாலும் மறக்க முடியாத படம் வாலி.

அப்படத்தில் ஹீரோ வில்லன் என இரு மாறுப்பட்ட நடிப்பை கொடுத்திருப்பார்.

இந்நிலையில் தற்போது நடிக்கவுள்ள தல 57 படத்திலும் அதே போன்று ஹீரோ மற்றும் வில்லன் என இருமுகம் காட்டப் போகிறாராம்.

இதனையறிந்த ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

More Articles
Follows