ரஜினி-கமல்-விஜய்-விஷால் அரசியலுக்கு வரட்டும்.. சீமான் ஓபன்டாக்

ரஜினி-கமல்-விஜய்-விஷால் அரசியலுக்கு வரட்டும்.. சீமான் ஓபன்டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Any actors can come to Politics Says Naam Tamilar Party leader Seemanநடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தங்கள் அரசியல் பிரவேசத்தை உறுதி செய்துள்ளனர்.

இவர்களின் கட்சி அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.

இந்நிலையில் இவர்களின் வருகை குறித்து நாம் தமிழர் கட்சி சீமான் அவர்களிடம் கேட்கப்பட்டது.

இதுகுறித்து அவர் பேசும்போது…

ரஜினிகாந்த் வரட்டும், கமல்ஹாசன் வரட்டும். விஜய், விஷால் கூட வரட்டும்.

நடிகர்கள் யார் வேண்டுமானாலும் வரட்டும்.

அரசியலுக்கு வந்த பின்தான், அவர்களுக்கு நாட்டை ஆள நடிப்பு திறமை மட்டும் போதாது என்பது தெரியும்” என்று பேசினார்.

Any actors can come to Politics Says Naam Tamilar Party leader Seeman

அறிவழகன் இயக்கத்தில் இணையும் ராஜ்கிரண்-நயன்தாரா

அறிவழகன் இயக்கத்தில் இணையும் ராஜ்கிரண்-நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arivazhaganஷங்கர் தயாரித்த ‘ஈரம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அறிவழகன்.

அருண்விஜய் நடிப்பில் உருவான ‘குற்றம் 23’ படத்தை அண்மையில் இயக்கியிருந்தார் அறிவழகன்.

இந்நிலையில் இவரின் அடுத்த படத்தில் மஞ்சு வாரியர் நடிப்பார் என கூறப்பட்டது. அவருடன் முக்கிய வேடத்தில் ராஜ்கிரனும் நடிக்கவிருந்தார்.

தற்போது மஞ்சு வாரியருக்கு பதிலாக நயன்தாரா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் ஓவியாவுடன் நடிக்கும் சரவணா ஸ்டோர் ஓனர்

பிக்பாஸ் ஓவியாவுடன் நடிக்கும் சரவணா ஸ்டோர் ஓனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

oviyaaபிக்பாஸ் நிகழ்ச்சியால் இந்தளவு புகழ் கிடைக்கும் என ஓவியாவே நினைத்திருக்க மாட்டார்.

அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டாலும், இன்னும் அந்த மகிழ்ச்சி கடலில் திளைத்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகிவருகிறார்.

இந்நிலையில் சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் அருள் உடன் அந்த நிறுவனத்தின் விளம்பர படத்தில் நடிக்கவிருக்கிறார்.

அதற்கான ஒப்பந்தமும் உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

சரவணன் ஏற்கெனவே தமன்னா, ஹன்சிகா ஆகியோருடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விவேகம் டீசரால் அகில உலக சாதனை படைத்தார் அஜித்

விவேகம் டீசரால் அகில உலக சாதனை படைத்தார் அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith movie Vivegam teaser set new world recordகடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய் நடிப்பில் விவேகம் படம் வெளியானது.

இப்படத்தின் டீசர் கடந்த மே மாதம் 10-ம் தேதி இணையத்தில் வெளியானது. வெளியானது முதலே இதற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வந்தனர்.

தற்போது 5,73,000 லைக்ஸ் பெற்று உலகளவில் அதிக லைக்ஸ் பெற்ற டீசர் என்ற சாதனையை இது நிகழ்த்தியுள்ளது.

இதற்கு முன்பு ‘ஸ்டார்வார்ஸ் – தி லாஸ்ட் ஜெடி’ என்ற ஹாலிவுட் படத்தின் டீஸர் 5,72,000 லைக்குகளைப் பெற்றிருந்தது. அதனை கடந்துள்ளது ‘விவேகம்’ படத்தின் டீஸர்.

அஜித்தின் இந்த அகில உலக சாதனையை அவரது ரசிகர்கள் ட்விட்டரில் #VivegamTeaserAllSetToNewWR மற்றும் #VIVEGAMTeaserSetsWorldRecord ஆகிய ஹெஷ்டேக்குகளில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Ajith movie Vivegam teaser set new world record

வேலை செய்யாத எம்எல்ஏக்களுக்கும் எச்சரிக்கை விடுங்க.. கோர்ட்டுக்கு கமல் கோரிக்கை

வேலை செய்யாத எம்எல்ஏக்களுக்கும் எச்சரிக்கை விடுங்க.. கோர்ட்டுக்கு கமல் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal speechதமிழக அரசு ஆசிரியர்கள் தற்போது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் அரசு நிர்வாகமே ஸ்தம்பித்துள்ளது.

அவர்கள் வேலைக்கு வரவில்லை என்றால் சம்பளம் கிடையாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையில் கோர்ட்டும் அரசு ஊழியர்களை கண்டித்து உத்தரவிட்டது.

இது தொடர்பாக நடிகர் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…

வேலை செய்யாத அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாதென்றால், குதிரை பேரத்தில் ஈடுபட்டு, சொகுசு விடுதியில் ஓய்வெடுக்கும் அரசியல்வாதிகளுக்கு?.

மதிப்பிற்குரிய நீதிமன்றம், வேலைநிறுத்தம் செய்யும் ஆசிரியர்களை எச்சரிக்கிறது. வேலையை தவிர்த்து வரும் எம்.எல்.ஏக்களுக்கு அத்தகைய எச்சரிக்கையை தருமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொள்கிறேன்
இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

High Court must give warning to Tamilnadu MLAs says Kamalhassan

Kamal Haasan‏Verified account @ikamalhaasan

No work no pay only for Govt. Employees?. How about horse trading politicians languishing in resorts?

The honourable court warns teachers on strike. I beseech the court to issue similar warnings to those MLAs who desist from attending work

புதிய செய்தி… தற்போது நீதிமன்ற தீர்ப்பை அடுத்து போராட்டத்தை தற்காலிமாக வாபஸ் பெறுவதாக ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

பாகுபலி2 ஹிட் சென்டிமெண்ட்னுடன் கனெக்ட்டாகும் காலா ரிலீஸ் தேதி..?

பாகுபலி2 ஹிட் சென்டிமெண்ட்னுடன் கனெக்ட்டாகும் காலா ரிலீஸ் தேதி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaala release date connect with Baahubali2 release dateரஞ்சித் இயக்கிவரும் காலா படத்தில் ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தை தன் வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார் தனுஷ்.

பெப்சி ஸ்டிரைக்கால் நிறுத்தப்பட்ட இதன் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இன்னும் 45 நாட்களில் இதன் முழு சூட்டிங்கும் முடிந்துவிடும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தை அடுத்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 27 தேதி வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தாண்டு 2017 ஏப்ரல் 28ஆம் தேதி பாகுபலி2 வெளியாகி மாபெரும் ஹிட் ஆனது.

எனவே இந்த சென்டிமெண்ட்டும் இத்துடன் கனெக்ட்டாக உள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

Kaala release date connect with Baahubali2 release date

More Articles
Follows