தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த விழாவில் பாடகரும் இந்தப் படத்தின் இசையமைப்பாளருமான அனிருத் மேடை ஏறி பாடல்களை பாடி பேசினார்.
‘தலைவர் அலப்பறை என்ற பாடலை அவர் பாடும் போது அனைவரையும் எழுந்து நிற்கச் சொல்லி தான் பாட பாட ரசிகர்களை பாடச் சொல்லி உற்சாகப்படுத்தினார்.
ஹூக்கும்.. தலைவர் அலப்பறை என்ற பாடல் முடிந்த பின்னர் ரசிகர்கள் மீண்டும் ஒன்ஸ்மோர் கேட்டனர்.. எனவே அனிருத் மீண்டும் ரசிகர்களுக்காக பாடினார்.
அதன் பின்னர் அவர் பேசியதாவது….
தலைவர் மாஸ் ஏறிட்ட்டே இருக்கு.. எனவே பாடல்களிலும் மாஸ் ஏறிக்கிட்டே இருக்கும்.
ஆகஸ்ட் 10ஆம் தேதி தலைவர் அலப்பறை கிளப்புறோம்.. தலைவர் நிரந்தரம்..
காவலா… தலைவர் அலப்பறை… ஜூஜிபி என்ற ஒவ்வொரு பாடலாக வெளியிட்டுக் கொண்டே இருந்தோம்.. எனவே எங்களுக்கு ஓய்வே இல்லை.. இவையெல்லாம் தலைவரின் மீது நாங்கள் கொண்டு அன்பினால் தான்.. லவ் யூ தலைவா..
பின்னர் நெல்சன் குறித்து பேசும்போது..
“நெல்சா இந்த வாட்டி குறி மிஸ் ஆகாது என பொடி வைத்து பேசினார் அனிருத்.
இதற்கு முன்பு நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படம் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
Anirudh mass speech about Rajini at Jailer Audio launch