ஹவுஸ்புல் ரீமேக்..: அமிதாப் கால்ஷீட்டுக்காக பார்த்திபன் வெய்டிங்.?

ஹவுஸ்புல் ரீமேக்..: அமிதாப் கால்ஷீட்டுக்காக பார்த்திபன் வெய்டிங்.?

parthiban amitabh bachanநடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் பார்த்திபன்.

இவர் கடந்த வருடன் இயக்கி நடித்து தயாரித்த ஒத்த செருப்பு படம் அனைத்து தரப்பினரிடையே பெரும் பாராட்டை பெற்றது.

இந்த நிலையில் 20 வருடங்களுக்கு முன் பார்த்திபன் இயக்கி நடித்த ஹவுஸ்புல் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய போகிறாராம்.

இதில் விக்ரம், ரோஜா, சுவலட்சுமி, ஐஸ்வர்யா, சுவாதி, வடிவேலு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இளையராஜா இசையமைத்து இருந்த இந்த படம் சூப்பர் ஹிட்டானது.

ஹிந்தி ரீமேக்கில் அமிதாப்பச்சனை நடிக்க வைக்க திட்டமிட்டு இருக்கிறாராம் பார்த்திபன்.

ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை இல்லை.

அர்ஜூனின் மருமகனும் மேக்னாவின் கணவருமான நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மரணம்

அர்ஜூனின் மருமகனும் மேக்னாவின் கணவருமான நடிகர் சிரஞ்சீவி சர்ஜா மரணம்

தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா படங்களில் நடித்தவர் மேக்னா ராஜ்.

தப்புத்தாளங்கள் படத்தில் நடித்த பிரமிளா ஜோசாய் – சுந்தர்ராஜன் ஆகியோரின் மகள்தான் மேக்னாராஜ். இவருக்கு நயன்தாரா சாயல் இருப்பதாக பலரும் கூறுவர்.

மேலும் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் நாயகியாக நடித்துள்ளார் மேக்னா..

இவர் கன்னட நடிகரான சிரஞ்சீவி சர்ஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சிரஞ்சீவி சர்ஜா (வயது 39) கன்னட திரையுலகின் இளம் ஆக்ஷன் ஹீரோ. நடிகர் அர்ஜூனின் மருமகனும் ஆவார்.

2009-ல் ‘வாயுபுத்திரா’ படம் மூலம் தன் திரை வாழ்க்கையைத் தொடங்கினார் சிரஞ்சீவி சர்ஜா.

கடைசி படம் ‘ஷிவார்ஜுனா’ ஆகும். 21 படங்களில் நடித்திருக்கும் சிரஞ்சீவி சர்ஜா தற்போது ரணம் உட்பட 4 படங்களில் நாயகனாக நடித்து கொண்டிருந்தார்.

இவருடைய தம்பி துருவா சர்ஜாவும் ஹீரோவாக வலம் வருகிறார்.

இந்த நிலையில் இன்று பிற்பகலில் சிரஞ்சீவி சர்ஜாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

உடனடியாக பெங்களூர் ஜெய்நகரில் உள்ள சாகர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை அளித்தும் சிரஞ்சீவி சர்ஜாவின் உயிரை காப்பாற்ற முடியவில்லை.

மாலை 6 மணி அளவில் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இவரின் திடீர் மறைவு கன்னட திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சிரஞ்சீவி சர்ஜாவின் தொண்டை சளி கரோனா தொற்று பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Chiranjeeivi Sarja Dies Of Massive Heart Attack

#Chitraloka #ChiranjeeviSarja

ரஜினி-சிம்பு பட வில்லனுக்கு ஆரத்தி எடுத்த தமிழ் பெண்கள்; ஏன் தெரியுமா?

ரஜினி-சிம்பு பட வில்லனுக்கு ஆரத்தி எடுத்த தமிழ் பெண்கள்; ஏன் தெரியுமா?

Sonu Sood Sends 200 Tamil peoples to their Homes They Show Gratitude by Performing Aartiவிஜயகாந்த் நடித்த கள்ளழகர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சோனு சூட்.

சந்திரமுகி, ஒஸ்தி, தேவி உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

இவர் ஹிந்தி சினிமாவில் உலகில் மிக பிரபலம்.

இந்த நிலையில் இவர் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

குறிப்பாக வெளி மாநிலங்களில் சிக்கிய அந்த தொழிலாளர்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து வருகிறார்.

சயான்கோலி வாடா பகுதியில் சிக்கிய சுமார் 180 தமிழர்களை விமானம் மூலம் அனுப்பி வைக்க முயற்சித்தார். ஆனால் விமான அனுமதி கிடைக்கவில்லையாம்.

எனவே பஸ் மூலம் மும்பையில் சிக்கிய 200 தமிழர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

எனவே அவருக்கு தமிழ் பெண்கள் ஆரத்தி எடுத்து நன்றி கூறினர்.

இது குறித்து சோனு சூட் கூறியதாவது..

நானும் ஒரு காலத்தில் புலம்பெயர் தொழிலாளர் தான். மும்பைக்கு பெரிய கனவோடு வந்தவன்.

பசியால் வாடும் நபர்களை பார்க்கும் போது என்னுடைய ஆரம்ப கால வாழ்க்கை நினைவுக்கு வருகிறது.

பாம்பேக்கு ட்ரெய்னில் வந்தேன். கழிவறைக்கு அருகே படுத்து இருந்தேன். எனக்கு அதன் வலி எனக்கு தெரியும்” என கூறியுள்ளார்.

Sonu Sood Sends 200 Tamil peoples to their Homes They Show Gratitude by Aarti

சிம்பு நயன்தாரா மேரேஜ் நியூஸ்: இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியல…

சிம்பு நயன்தாரா மேரேஜ் நியூஸ்: இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியல…

Simbu and Nayanthara marriage fake news தமிழ் சினிமாவின் சகலகலா வல்லவர் டி.ராஜேந்தர்.

இவரின் இளைய மகன் குறளரசனுக்கு திருமணம் ஆகிவிட்டது.

ஆனால் மூத்த மகனும் நடிகருமான சிம்புவுக்கு கடந்த சில ஆண்டுகளாக திருமண பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

பல இடங்களில் பெண் பார்த்து வருகின்றனர்.

பல காரணங்களால் அவருடைய திருமணம் தள்ளிக் கொண்டே போகிறது.

இந்த நிலையில் சிம்புவின் தூரத்து உறவினர் பெண் ஒருவரை சிம்பு மணக்கவுள்ளதாக சில முன்னணி இணையத்தளங்களிலேயே செய்திகள் வெளியானது. (நம் தளத்தில் அப்படியொரு தவறான செய்தியை பதிவிடவில்லை)

இந்த நிலையில் சிம்புவின் தந்தை டிஆர் அவர்கள் சற்றுமுன் சூடான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்…
எங்கள் மூத்த மகன் சிலம்பரசன் திருமணம் பற்றி பத்திரிக்கைகளிலும் இணையதளங்களிலும் தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. இப்படி வரும் செய்திகள் யாவும் உண்மை தன்மை அற்றவை.

எங்கள் மகன் சிலம்பரசனின் ஜாதகத்திற்கு பொருத்தமான பெண்னை பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெண் அமைந்ததும் சிலம்பரசன் திருமணம் பற்றிய நற்செய்தியை முதலில் பத்திரிக்கை வாயிலாக உங்கள் அனைவருக்கும் சந்தோஷத்துடன் அதிகாரப்பூர்வமாக நாங்களே அறிவிப்போம். அதுவரை வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.
இப்படிக்கு,
டி.ராஜேந்தர் M.A
உஷா ராஜேந்தர்

அதுபோல கொரோனா ஊரடங்கில் வழிபாட்டு தலங்கள் மூடிக்கிடக்க நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கோயிலில் எளிமையாக திருமணம் செய்துவிட்டதாக சில செய்திகள் வெளியானது. (இதையும் நாம் பதிவிட்வில்லை)

இவையாவும் உண்மையல்ல. யார்? எதற்காக இப்படியொரு செய்தியை பதிவிடுகிறார்கள்? என்பதுதான் புதிராகவே உள்ளது.

Simbu and Nayanthara marriage fake news

அரசியலில் ரஜினி KING ஆக இருக்கனும்.. Kingmaker ஆக இருக்கக்கூடாது.. – குஷ்பூ

அரசியலில் ரஜினி KING ஆக இருக்கனும்.. Kingmaker ஆக இருக்கக்கூடாது.. – குஷ்பூ

Khushbu says Rajini should be the king in Politics not the kingmaker மன்னன், அண்ணாமலை, பாண்டியன் உள்ளிட்ட பல படங்களில் ரஜினியுடன் இணைந்து நடித்திருக்கிறார் நடிகை குஷ்பு.

இவர் தற்போது சிவா இயக்கத்தில் உருவாகும் அண்ணாத்த படத்திலும் ரஜினியுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஒரு பிரபல பத்திரிகைக்கு குஷ்பு அளித்துள்ள பேட்டியில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பேசியுள்ளார்.

அதில்…

கருணாநிதி மற்றும் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது உண்மை தான்.

மக்களும் 3வது தலைமையை எதிர்பார்க்கிறார்கள். ரஜினியின் அரசியல் சிந்தனைகள் பற்றி தெரியவில்லை.

அடுத்த வருடம் 2021 வரப்போகிற தேர்தல் நிச்சயமாக வித்தியாசமான ஒன்றாக இருக்கப் போகிறது.

திரைத்துறையினர் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். ரஜினியை போல இளைய தலைமுறையினரும் வரவேண்டும்.

ரஜினி அரசியலில் கிங் மேக்கராக இருக்க கூடாது. அவர் கிங் ஆக இருக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் அவருக்கு ஓட்டு போடுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை படத்தில் என்றுமே ராஜா (கிங்) நீ ரஜினி நீ.. என்று ரஜினியை பார்த்து குஷ்பு பாடியது சரிதான் போல…

Khushbu says Rajini should be the king in Politics not the kingmaker

போதையில் குமரியை கொஞ்சிய கோடீஸ்வரன் குளிக்காமல் கோயிலுக்கு போனால் மரியாதை.; சிவகுமார் மீது திருப்பதி தேவஸ்தானம் வழக்கு (வீடியோ)

போதையில் குமரியை கொஞ்சிய கோடீஸ்வரன் குளிக்காமல் கோயிலுக்கு போனால் மரியாதை.; சிவகுமார் மீது திருப்பதி தேவஸ்தானம் வழக்கு (வீடியோ)

Tirupati Devasthanam filed complaint against Actor Sivakumarஓவியர், நடிகர், மேடை பேச்சாளர் என் பன்முகம் கொண்டவர் சிவகுமார்.

அதே சமயம் சிவகுமாரின் பேச்சுக்களும் நடவடிக்கைகளும் சில நேரம் சர்ச்சையை கிளப்பும்.

அனுமதியில்லாமல் சிவகுமாரை செல்ஃபி எடுத்த ஒருவரின் செல்போனை சிவகுமார் தட்டிவிட்டது சர்ச்சையாகவே பின்னர் மன்னிப்பு கேட்டு புதிய செல்போனை வாங்கி கொடுத்தார்.

அதன்பின்னரும் ஒருமுறை செல்போனை தட்டிவிட்டார்.

இந்த நிலையில் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் பேசிய பேச்சு ஒன்றின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில்…

கோயில்களில் இன்னும் தீண்டாமை இருக்கிறது. ஏழைகள் திருப்பதி கோயிலுக்கு போனால் 4 நாட்கள் தரிசனத்திற்கு காத்திருக்க வேண்டும்.

ஆனால் கோடீஸ்வரன் தண்ணியடித்துவிட்டு கொஞ்சும் குமரியுடன் விடிய விடிய இருந்துவிட்டு குளிக்காமல் கோயிலுக்கு போனால் கூட கும்ப மரியாதை கொடுக்கப்படுகிறது.

இதை சும்மா சொல்லவில்லை. ஆதாரப்பூர்வமாக தெரிவிக்கிறேன் என பேசியிருந்தார்.

தற்போது இந்த பேச்சுதான் அவர் மீது வழக்கு பதிய காரணமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் மாயன் கொடுத்த தகவலின் அடிப்படையில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் திருப்பதி மலையில் உள்ள இரண்டாவது நகர காவல் நிலையத்தில் நடிகர் சிவக்குமார் மீது புகார் செய்யப்பட்டது.

தேவஸ்தானம் அளித்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tirupati Devasthanam filed complaint against Actor Sivakumar

More Articles
Follows