ரசிகர்களுக்காக மீண்டும் ரிஸ்க் எடுக்கும் அஜித்

ரசிகர்களுக்காக மீண்டும் ரிஸ்க் எடுக்கும் அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Ajith Photosசிவா இயக்கும் தல57 படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

இதன் சூட்டிங் தற்போது பல்கேரியா நாட்டில் நடந்து வருகிறது.

இதன் சூட்டிங்கில் உலகின் பிரபல பைக் சண்டை வீர்ர் Jorian Ponomareff கலந்து கொண்டுள்ளார்.

அப்போது அஜித்துடன் நடித்த தன் அனுபவத்தை தன் பேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில்…

இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரம் அஜித். ஆனால் அவ்வளவு எளிமையாக இருக்கிறார்.

என்னுடைய பைக்கை அவர் ஓட்டி, அதில் நிறைய ரிஸ்க்கான சண்டை பயிற்சிகளை எடுத்தார்” என்று தெரிவித்துள்ளார்.

இவர் சொல்வதை பார்த்தால் அஜித் மீண்டும் ரிஸ்க் எடுக்கிறார் போலவே…

தியேட்டரில் குறும்படங்களை பார்க்க சூர்யாவின் சூப்பர் முயற்சி

தியேட்டரில் குறும்படங்களை பார்க்க சூர்யாவின் சூப்பர் முயற்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya new stillsசூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், மூவி பஃப் என்ற நிறுவனமும் இணைந்து குறும்பட போட்டி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஃபர்ஸ்ட் கிளாப் என்று பெயரிடப்பட்டுள்ள இப்போட்டிக்கான அறிமுகவிழா நடைபெற்றது.

இதன் மூலம் குறும்படங்களை தியேட்டரிலும் பார்க்க ஏற்பாடு செய்துள்ளார் சூர்யா.

இவ்விழாவில் சூர்யா, பி.சி.ஸ்ரீராம், கே.வி.ஆனந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது சூர்யா பேசியதாவது…

“மூவி மேக்கிங் சாதாரண விஷயம் அல்ல.

என்னால் அவ்வளவு எளிதாக இயக்க முடியாது. அதான் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிவிட்டேன்.

எல்லோராலும் கதை எளிதாக சொல்ல முடியும்.

படம் எடுக்க கருவி தேவையில்லை. நல்ல கதை தான் தேவை.

தேர்ந்தெடுக்கப்படும் குறும்படங்களை தமிழ்நாட்டில் மட்டும் 70 தியேட்டர்களில் திரையிட இருக்கிறோம்.

இதன் மூலம் நல்ல திறமைசாலிகள் உருவாகலாம் என நம்புகிறேன்.

எனக்கு சினிமாவில் கொஞ்சம் 18 வருட அனுபவம் உள்ளது.

அதை வைத்துக்கொண்டு என்னால் எதை செய்யமுடியுமோ, அதை செய்கிறேன்” என்றார் சூர்யா.

‘விஐபி’ குடும்ப விழாவில் ஐஸ்வர்யா தனுஷ் மிஸ்ஸிங்.. ஏன்?

‘விஐபி’ குடும்ப விழாவில் ஐஸ்வர்யா தனுஷ் மிஸ்ஸிங்.. ஏன்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aishwarya Dhanushசௌந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள விஐபி 2 (வேலையில்லா பட்டதாரி 2) படத்தின் பூஜை மற்றும் துவக்கவிழா இன்று நடைபெற்றது.

இதில் ரஜினியுடன் தனுஷ், சௌந்தர்யா மற்றும் லதா ரஜினிகாந்த் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

விஐபி குடும்பத்தின் இந்த ‘விஐபி2’ விழாவில் ஐஸ்வர்யா கலந்து கொள்ளவில்லை.

இதுகுறித்து சற்றுமுன் தன் ட்விட்டரில் தன் கருத்தை பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா. அதில்…

தான் எழுதி வெளியாகியுள்ள #StandingOnAnAppleBox புத்தகம் தொடர்பாக வெளியூரில் இருப்பதால் அதில் கலந்து கொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

Aishwaryaa.R.Dhanush ‏@ash_r_dhanush 5m5 minutes ago

Aishwaryaa.R.Dhanush Retweeted Rajinikanth

Missed being there today ! #booktour .all the very very best to this fav team of mine #RaghuvaranIsBack #VIP2

முதல்வர் ஓபிஎஸ்ஸை சந்தித்து கோரிக்கை வைத்த விவேக்

முதல்வர் ஓபிஎஸ்ஸை சந்தித்து கோரிக்கை வைத்த விவேக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tamil actor vivekஜெயலலிதா மரணம் அறிவிக்கப்பட்ட உடனே ஓ. பன்னீர் செல்வம் தலைமையிலான அரசு பதவி ஏற்றது.

இதன்பின்னர் சில தினங்களுக்கு முன், வர்தா புயல் சென்னை உள்ளிட்ட பகுதிகளை கடுமையாக தாக்கியது.

இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் வேறோடு சாய்ந்தன.

இதனால் சென்னை சாலைகள் காடுகளை போல காட்சியளித்தன.

இந்நிலையில் முதல்வர் பன்னீர் செல்வம் அவர்களை விவேக் சந்தித்துள்ளார்.

அப்போது சென்னையில் புயலால் சாய்ந்த மரங்களுக்கு மாற்றாக மரங்கள் நட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

சிவா உடன் இணைந்து அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த வெங்கட் பிரபு

சிவா உடன் இணைந்து அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த வெங்கட் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

venkat prabhuவெங்கட் பிரபு தயாரித்து இயக்கிய சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம் கடந்த வாரம் வெளியானது.

முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று தனது 8வது படத்தின் பூஜையை போடுட்டுள்ளார் வெங்கட் பிரபு.

இப்படத்தை அம்மா கிரியேசன்ஸ் சார்பாக டி. சிவா தயாரிக்கிறார்.

சற்றுமுன் நடந்த இப்பட பூஜையில் நடிகர்கள் விஜய் வசந்த், வைபவ், அரவிந்த் ஆகாஷ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

படத்தின் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு பின்னர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பே வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா படத்தை டி. சிவா தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

vp 8

சிவாஜி குடும்ப பேனரில் இணைந்த விஷ்ணு விஷால்

சிவாஜி குடும்ப பேனரில் இணைந்த விஷ்ணு விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishnu vishal muraganandhamசிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் தனது ஈஷான் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் முதல் படைப்பாக மீன் குழம்பும் மண் பானையும் படத்தை தயாரித்தார்.

இதில் பிரபு உடன் காளிதாஸ், ஆஷ்னா சாவேரி நடிக்க, அமுதேஷ்வர் இயக்கியிருந்தார்.

தற்போது தங்களது ஈஷான் புரொடக்ஷன்ஸ் சார்பாக தனது அடுத்த படத்தை தயாரிக்கவிருக்கிறார் துஷ்யந்த்.

இதில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கிறார்.

விஷ்ணு தற்போது நடித்து வரும் கதாநாயகன் படத்தின் இயக்குனர் முருகானந்தமே இப்படத்தையும் இயக்கவிருக்கிறாராம்.

vishnu vishal ‏@iamvishnuvishal

Really happy to sign a new project again wid #kathanayagan drctr Muruganandham for ESHAN productions @dusshyanth @abirami_D 🙂 details soon

More Articles
Follows