தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அங்காடி தெரு படம் மற்றும் சில டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சிந்து.
அவருக்கு கேன்சர் என்றும் சிகிச்சைக்கு போதுமான பணம் இல்லை எனவும் சில தினங்களுக்கு செய்தி பரவியது.
இது தொடர்பாக ஒரு நேர்காணல் பேட்டி கொடுத்துள்ளார்.
அதில்… ’நான்தான் முதலில் ரேணிகுண்டா படத்தில் நடித்த தீப்பெட்டி கணேசனுக்கு உதவி செய்தேன். அஜித் செய்தார் என்று சொல்வதெல்லாம் பொய்.” எனத் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கால் தீப்பெட்டி கணேசன் வேலை இழந்திருந்தார். அப்போது வறுமையில் தவிப்பதால் அஜித் உதவ கோரி ஒரு வீடியோ வெளியிட்டார்.
அவருக்கு அஜித் உதவி செய்ததாக சொல்லப்பட்டது.
ஆனால் நடிகை சிந்து அஜித் உதவி செய்தியை மறுத்திருப்பது கோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
யார் சொல்வது உண்மை?
Ajith didn’t help says Angadi Theru actress Sindhu