மார்பகப் புற்றுநோயால் அவதிப்படும் ‘அங்காடித் தெரு’ சிந்து..; உதவும் உள்ளங்களுக்கு கோரிக்கை!

மார்பகப் புற்றுநோயால் அவதிப்படும் ‘அங்காடித் தெரு’ சிந்து..; உதவும் உள்ளங்களுக்கு கோரிக்கை!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

angadi theru sindhuஎளிய மக்களின் பிரச்சினைகளை பேசிய “அங்காடி தெரு” திரைப்படம் மற்றும் பல பிரபல சின்னத்திரை தொடர்களில் நடித்து மக்கள் மனம் கவர்ந்தவர் நடிகை சிந்து.

ஆரம்ப காலத்தில் இருந்து தன்னைச் சுற்றி இருக்கும் நூற்றுக்கணக்கான எளிய மனிதர்களுக்கு, வறுமையில் வாடும் சக நடிகர் நடிகைகளுக்கு தொழில்நுட்ப கலைஞர்களுக்கு உதவி செய்யும் குணம் கொண்ட சிந்து, கொரோனா தொடக்க காலத்தில் பல ஏழை மக்களுக்கு அரிசி, பருப்பு, முக கவசம் போன்ற அடிப்படை பொருட்களை வாங்கிக் கொடுத்து உதவினார்.

இந்நிலையில் முன்பை போல் எழுந்து நடக்க முடியாத அளவிற்கு கஷ்ட நிலைக்குச் சென்ற சிந்து, தனக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதையும், அதை குணப்படுத்த முடியும் என்ற போதிலும் சிகிச்சைக்கான போதிய பண வசதி இல்லை என்பதையும் கூறி பொதுமக்களிடமும் சக நடிகர் நடிகைகளிடமும் உதவி கோரியிருந்தார்.

அனைத்து இந்திய இந்து மக்கள் பேரவை தலைவர் பாபா ராம்தாஸ் ஜி தலைமையில் ஐந்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தன்னை சந்தித்து நலம் விசாரித்து சிகிச்சைக்கு 25000 ரூபாய் நிதி உதவி வழங்கிய நல் உள்ளங்களுக்கு நன்றி கூறிவிட்டு, அடுத்தவருக்கு கஷ்டம் என்றால் தன்னுடைய நலனை பொருட்படுத்தாமல் ஓடி ஓடி உதவி செய்யும் கலைஞர்களை கண்ணீர் சிந்த விடாமல் சக சின்னத்திரை நடிகர்-நடிகைகளும் முன்னணி வெள்ளித்திரை நடிகர் நடிகைகளும் ரசிகர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து நற்குணம் கொண்ட மனிதரை காப்பாற்ற முன்வாருங்கள் என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.

Angadi theru sindhu requests top stars

உங்க பிள்ளைய ஸ்கூல் சேர்க்க போறீங்களா.? அப்போ அவுங்களுக்கு ‘ஆதார் கார்டு’ அவசியம் எடுத்துடுங்க

உங்க பிள்ளைய ஸ்கூல் சேர்க்க போறீங்களா.? அப்போ அவுங்களுக்கு ‘ஆதார் கார்டு’ அவசியம் எடுத்துடுங்க

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aadhar card for school studentsகொரோனா ஊரடங்கு பிரச்னை மெல்ல மெல்ல குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர்.

எனவே மாணவர் சேர்க்கை குறித்து அறிவிப்புகளை ஒவ்வொரு பள்ளிகளும் வெளியிட தொடங்கியுள்ளனர்.

மாணவர் சேர்க்கைநின் போது, பல பள்ளிகள் குழந்தையின் ஆதார் அட்டை எண்ணை சமர்ப்பிக்க வலியுறுத்த தொடங்கியுள்ளன.

ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு எந்த பயோமெட்ரிஸ் தேவையில்லையாம்.

ஆனாலும் மக்கள்தொகை தகவல் மற்றும் முக புகைப்படத்தின் அடிப்படையில் குழந்தைகளின் யுஐடி அவர்களின் பெற்றோரின் யுஐடியுடன் இணைக்கப்படும் என தெரிய வந்துள்ளது.

5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பயோமெட்ரிக்ஸ் முறை கடைப்பிடிக்கப்படும்.

ஆதார் அட்டை பெற்ற ஒரு குழந்தைக்கு 5 மற்றும் 15 வயதாகும் போது, அவர்களின் பத்து விரல்கள், கருவிழி & முக புகைப்படங்களின் பயோமெட்ரிக்ஸை புதுப்பிக்க வேண்டும்.

உங்கள் குழந்தைக்கு ஆதார் எண்ணுக்கு விண்ணப்பிக்க… குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், பெற்றோரின் ஆதார் அட்டை விவரங்கள், முகவரி மற்றும் அடையாளச் சான்றுகள் தேவை.

Mandatory submission of Aadhar card details for all students

‘சூரரைப் போற்று’ படத்தில் சூர்யாவுடன் இணைந்த ‘பிக்பாஸ்-4’ பாக்ஸர்.: யாருன்னு தெரியுமா?

‘சூரரைப் போற்று’ படத்தில் சூர்யாவுடன் இணைந்த ‘பிக்பாஸ்-4’ பாக்ஸர்.: யாருன்னு தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

som sekar in soorarai pottruசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து தயாரித்துள்ள படம் ‘சூரரைப் போற்று’.

அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் இப்படத்தில் பிக்பாஸ் சீசன் 4-ல் போட்டியாளராக பங்கேற்றிருக்கும் சோம் சேகர் இந்திய விமானத்துறை அதிகாரியாக நடித்திருப்பதாக தகவல் வந்துள்ளது.

அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதற்கான புகைப்படம் வெளியாகியுள்ளது. அட்மின் அந்த படத்தை போஸ்ட் செய்திருக்கலாம்.

சோம் சேகர் குத்துச் சண்டை வீரர். மேலும் மாடலிங்கும் செய்து விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

Bigg Boss 4 tamil som sekar is part of soorarai pottru

‘Kala’ சூட்டிங்கில் விபத்து..; ‘மாரி 2’ பட வில்லன் ஆஸ்பத்திரியில் அனுமதி

‘Kala’ சூட்டிங்கில் விபத்து..; ‘மாரி 2’ பட வில்லன் ஆஸ்பத்திரியில் அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tovino thomas injuryமலையாள சினிமாவில் இளம் நடிகர்களில் பிரபலமானவர் டொவினோ தாமஸ்.

தமிழில் மாரி 2 படத்தில் தனுஷூக்கு வில்லனாக நடித்திருந்தார்.

தற்போது வி.எஸ்.ரோஹித் இயக்கும் ‘கால’ (Kala) என்ற படத்தில் நடித்து வருகிறார் டோவினா தாமஸ்.

இந்தப் படத்தில் திவ்யா பிள்ளை, லால் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இப்பட ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்கும் போது நடிகர் டொவினோ தாமஸூக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டதாம்.

இதனால் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Actor Tovino Thomas critically injured on the sets of Kala

சரக்கா இருந்தாலும் கையா இருந்தாலும்… பல குட்டிகளின் கதை..; பிட்டு பட ரேஞ்சுக்கு ‘இரண்டாம் குத்து’ டீசர்

சரக்கா இருந்தாலும் கையா இருந்தாலும்… பல குட்டிகளின் கதை..; பிட்டு பட ரேஞ்சுக்கு ‘இரண்டாம் குத்து’ டீசர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

irandam kuthu teaserஹர ஹர மஹாதேவகி பட மூலம் தமிழ் இயக்குநராக அறிமுகமானவர் சந்தோஷ்.பி ஜெயக்குமார்.

கடந்த 2018-ம் ஆண்டில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படத்தை இயக்கி பலான பட இயக்குனர் என பெயர் பெற்றார்.

இந்த படத்தில் ஆபாச காட்சி வசனங்கள் இருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன.

ஆனால் படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

தற்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி அதில் நாயகனாகவும் நடித்திருக்கிறார் இயக்குநர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார்.

தற்போது டீசரை ஆர்யா வெளியிட்டுள்ளார்.

டீசரின் தொடக்கத்திலேயே விஜய் & விஜய்சேதுபதி போல குட்டிக் கதை சொல்ல ஆரம்பிக்கிறார் மொட்டை ராஜேந்திரன்.

இது பல குட்டிகளை போட்டவனின் கதை என்கிறார்.

அதற்கு அடுத்து ஒரு கேர்ள் கேரக்டர்.. சரக்கா இருந்தாலும் கையா இருந்தாலும்… ஓவரா அடிக்க கூடாது என்கிறார்.

எங்க கதையில் எப்போதும் ஹாப்பி எண்டிங் தான் என்று டீசர் முடிகிறது.

https://www.youtube.com/watch?v=WiZ7I88h7PM

Irandam Kuthu teaser goes viral in social media

இயக்குனர் சீனு ராமசாமிக்கு திருமணம்..? ட்விட்டரில் ட்விஸ்ட்…

இயக்குனர் சீனு ராமசாமிக்கு திருமணம்..? ட்விட்டரில் ட்விஸ்ட்…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

seenu ramasmyவிஜய்சேதுபதி நாயகனாக அறிமுகமான ’தென்மேற்கு பருவக்காற்று’ படத்தை இயக்கியவர் சீனு ராமசாமி.

இவர் அந்த படத்திற்க தேசிய விருதும் பெற்றார்.

இதனையடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்தார்.

’நீர்ப்பறவை’, ‘தர்மதுரை’ ’கண்ணே கலைமானே’, ’இடம் பொருள் ஏவல்’ ஆகிய படங்களை இயக்கியனார்.

தற்போது விஜய்சேதுபதி நடித்து வரும் ’மாமனிதன்’ என்ற படத்தை இயக்கிவருகிறார்.

இந்த நிலையில் சீனு ராமசாமியின் ட்விட்டர் பக்கத்தில்… அவருக்கு திருமணம் நடந்து விட்டதாக ஒரு தகவல் பதிவு செய்யப்பட்டு பின்னர் நீக்கப்பட்டது.

இதனால் ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர்.

இதுகுறித்து அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார். இது தவறான தகவல். எனக்கு 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. எனது மனைவி மகள்களுடன் மகிழ்வாக வாழ்ந்து வருகிறேன். அப்டேட் டவுன்லோடு செய்ததில் ஏற்பட்ட பிழைக்கு வருந்துகிறோம்’ என தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

Director Seenu Ramasamy clears the rumours about his marriage

More Articles
Follows