மூன்று மொழிகளில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘டிரைவர் ஜமுனா’

Driver Jamunaஜனவரி 10 ஐஸ்வர்யா ராஜேஷின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் அடுத்து நடிக்கும் படம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை ‘வத்திக்குச்சி’ பட இயக்குநர் கின்ஸ்லின் இயக்கவுள்ளார்.

இப்படத்தை 18 ரீல்ஸ் நிறுவனத்தின் சார்பாக, பிரபல குழந்தைகள் நல மருத்துவரும், முன்னணி தயாரிப்பாளருமான எஸ்.பி.செளத்ரி தயாரிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மூன்று மொழிகளில் உருவாகும் இந்தப் படத்திற்கு, ‘டிரைவர் ஜமுனா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் கால் டாக்ஸி டிரைவராக நடிக்கிறார்.

படத்துக்கு இசை ஜிப்ரான்.

கிரைம் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகவுள்ளது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

நடுத்தர குடும்பத்து பெண் கால் டாக்ஸி டிரைவரை, மையமாக கொண்ட கிரைம் திரில்லர் கதை என்பதால் கதையைக் கேட்டதுமே படத்தில் நடிக்க ஓகே சொல்லி விட்டாராம் இந்த ‘டிரைவர் ஜமுனா’ ஐஸ்வர்யா.

Aishwarya Rajesh team up with Vathikuchi director for #DriverJamuna

Overall Rating : Not available

Related News

Latest Post