20 வயது பெண் & 70 வயது பாட்டி.; மீண்டும் டபுள் கேரக்டரில் சமந்தா

20 வயது பெண் & 70 வயது பாட்டி.; மீண்டும் டபுள் கேரக்டரில் சமந்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

After 10 Enradhukulla Again Samantha doing dual roleவிக்ரம் நடிப்பில் வெளியான ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தில் முதன்முறையாக இரு வேடங்களில் நடித்திருந்தார் சமந்தா.

ஒரு வேடத்தில் வில்லியாகவும் நடித்திருந்தார்.

தற்போது மீண்டும் ஒரு புதிய படத்தில் இரு வேடங்களில் நடிக்க உள்ளார்.

தெலுங்கு இயக்குனர் நந்தினி ரெட்டி இயக்கும் புதிய படம் ஒன்றில் 7௦ வயது கிழவியாகவும் 2௦ வயது பெண்ணாகவும் நடிக்கவுள்ளாராம் சமந்தா.

மிஸ் கிரானி என்கிற கொரியன் படத்தின் ரீமேக்காக இந்தப்படம் உருவாகிறது எனவும் கூறப்படுகிறது.

After 10 Enradhukulla Again Samantha doing dual role

ரஜினியை எதிர்த்து போட்டி.; புதிய கட்சி தொடங்கிய கௌதமன் பேட்டி

ரஜினியை எதிர்த்து போட்டி.; புதிய கட்சி தொடங்கிய கௌதமன் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I will oppose Rajini in Public election says New Party leader Gauthamanமுரளி மற்றும் சிம்ரன் இணைந்து நடித்த கனவே கலையாதே என்ற படத்தை 1998ல் இயக்கியவர் கௌதமன்.

அதன் பின்னர் 12 ஆண்டுகளுக்கு பின்னர் மகிழ்ச்சி என்ற திரைப்படத்தை இயக்கி தானே ஹீரோவாக நடித்தார் இவர். இதில் சீமான், அஞ்சலி ஆகியோரும் நடித்திருந்தனர்.

அதன்பின்னர் தமிழகத்தில் நிலவும் ஜல்லிக்கட்டு, நீட் தேர்வு, விவசாய பிரச்சினைகளுக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்தார்.

தற்போது அவர் ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார்.

கட்சியின் பெயர், கொடி, கொள்கைகள் குறித்து 2019 பொங்கல் சமயத்தில் அறிவிக்க இருக்கிறாராம்.

இது குறித்து அவர் கூறியதாவது…

தமிழ் மொழியை, தமிழர் பண்பாட்டை அழிக்க எவர் வந்தாலும் அவர்கள்தான் எங்கள் எதிரிகள். எங்களை பிறர் ஆண்டதெல்லாம் போதும் என்ற நிலைக்கு நாங்கள் வந்துவிட்டோம்.

ரஜினியையும், கமலையும் திரைக்கலைஞர்களாக மிகப்பெரிய அளவில் மதிக்கிறோம். ஆனால் அரசியல் களத்தில் அவர்களை எதிர்ப்போம்.

எங்களைப் போன்று தமிழர்களுக்காக, தமிழர் நலனுக்கு ஆதரவாக காவல்துறை அடக்குமுறையை எதிர்த்து அவர்களால் சிறைக்குச் செல்ல முடியுமா?

ரஜினிகாந்த் தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிட நின்றாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன். எங்கள் இனத்தை, மொழியை காக்கவும், எங்கள் உரிமையை நிலைநாட்டுதற்காகவும் அரசியல் இயக்கம் தொடங்குகிறோம் என்றார் கௌதமன்.

I will oppose Rajini in Public election says New Party leader Gauthaman

2.0 படத்தை வெளியிட தடை.; ரஜினியை எதிர்க்கும் வாட்டாள் நாகராஜ்

2.0 படத்தை வெளியிட தடை.; ரஜினியை எதிர்க்கும் வாட்டாள் நாகராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vatal nagaraj opposes 2pointO movie release in Karnatakaஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.O’ திரைப்படம் இம்மாதம் 29-ம் தேதி வெளியாக உள்ளது.

சுமார் 600 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் உலகளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்நிலையில் கர்நாடகாவில் இப்படத்தை வெளியிடக்கூடாது என கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் போராட்டம் நடத்தினர்.

மற்ற மொழி திரைப்படங்கள் கர்நாடகாவில் அதிக தியேட்டர்களில் வெளியாவதால் கன்னட திரையுலகம் கடுமையாக பாதிக்கப்படுவதாக இவர் தெரிவித்துள்ளார்.

பொதுவாக ரஜினி படங்கள் வெளியாகும் சமயத்தில் காவிரி நீர் பிரச்சினையை இந்த வாட்டாள் நாகராஜ் கையில் எடுப்பார்.

காலா ரிலீஸ் சமயத்தில் கூட காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினிகாந்த் பேசியதை அவர் கண்டித்து தான் போராட்டம் நடத்தினார்.

இந்த முறை அவர் புதிய காரணத்தை கையில் எடுத்துள்ளது கவனிக்கத்தக்கது.

ஆக.. ரஜினி படங்களை எதிர்ப்பது இவருக்கு வாடிக்கையான ஒன்றாகிவிட்டது எனலாம்.

Vatal nagaraj opposes 2.O movie release in Karnataka

*விஸ்வாசம்* சூட்டிங் ஓவர்.; க்ளீனிங் சேவிங்கில் அஜித்

*விஸ்வாசம்* சூட்டிங் ஓவர்.; க்ளீனிங் சேவிங்கில் அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Viswasam shoot wrapped up Ajith in clean shave new lookவீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை தொடர்ந்து நடிகர் அஜித் – இயக்குனர் சிவா கூட்டணி 4வது முறையாக இணைந்துள்ள படம் விஸ்வாசம்.

இதில் அஜித்துடன் நயன்தாரா, தம்பி ராமைய்யா, ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

முதன்முறையாக அஜித் படத்திற்கு இமான் இசையமைக்கிறார். சத்ய ஜோதி பிலிம்ஸ் சார்பில் தியாகராஜன் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத், சென்னை போன்ற இடங்களில் நடந்த நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்தது.

தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக சத்யஜோதி பிலிம்ஸ் டுவிட்டரில் அறிவித்துள்ளது.

இதுநாள் வரை இப்படத்திற்காக நரைத்த தாடி, மீசையுடன் காணப்பட்ட அஜித் தற்போது க்ளீன் சேவிங் செய்துள்ளார்.

படம் 2019 பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

Viswasam shoot wrapped up Ajith in clean shave new look

தென்னிந்தியா முழுவதும் விஜய்யின் *சர்கார்* ஆட்சி

தென்னிந்தியா முழுவதும் விஜய்யின் *சர்கார்* ஆட்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijays Sarkar making good collection in South Indiaசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படம் வெளியீட்டிற்கு முன்பே கதை திருட்டில் சிக்கியது.

இதனால் டைரக்டர் முருகதாஸ் கோர்ட் வரை சென்றார்.

அதன்பின்னர் தற்போது சர்காரில் உள்ள காட்சிகளால் அதிகமுவினர் எதிர்ப்பு தெரிவிக்க சில தியேட்டர்களில் காட்சிகள் நிறுத்தப்பட்டன

தற்போது எல்லா பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு தமிழகத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திராவிலும் வெளியானது.

தெலுங்கில் சுமார் 7 கோடி ரூபாய்க்கு இதன் டப்பிங் உரிமை விற்கப்பட்டது.

தற்போது ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் அந்த வசூலை ஈட்டி விட்டதாக கூறப்படுகிறது.

இப்படத்திற்கு போட்டியாக வெளியான தெலுங்கு படமான ‘அதுகோ படமும் ஹிந்திப் படமான ‘தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்’ ஆகிய படங்களும் எதிர்பார்த்த அளவில் இல்லாமல் போய்விட்டது.

உலகம் முழுவதும் 4 நாட்களில் 150 கோடி வசூலை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

Vijays Sarkar making good collection in South India

தனுஷ் படத்தில் வரலட்சுமியின் *சர்கார்* கேரக்டர்

தனுஷ் படத்தில் வரலட்சுமியின் *சர்கார்* கேரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Maari 2 Varalakshmi character connected with Sarkar movieமாரி படத்தை தொடர்ந்து மாரி 2 படத்தையும் இயக்கியுள்ளார் பாலாஜி மோகன்.

தனுஷ் தயாரித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.

மேலும் வரலட்சுமி, டொவினோ தாமஸ், கிருஷ்ணா, ரோபோ சங்கர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தை டிசம்பர் 21ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

அதன்படி படத்தில் உள்ள ஒவ்வொரு கேரக்டர் போஸ்டரையும் வெளியிட்டு வருகின்றனர்.

ஆட்டோ ஓட்டும் அராத்து ஆனந்தியாக நடித்துள்ளார் சாய்பல்லவி.

தற்போது வரலட்சுமி நடித்துள்ள விஜயா கேரக்டர் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இதில் சட்டம் மற்றும் நீதித்துறையின் இணை செயலாளராக அவர் நடித்துள்ளதாக படக்குழுவினர் அந்த போஸ்டரிலேயே தெரிவித்துள்ளனர்.

Maari 2 Varalakshmi character connected with Sarkar movie

More Articles
Follows