தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மதுரையில இருக்கற பையனுக்கு மத்த பசங்க மாதிரி ஒரு பொண்ணுங்க கூட கடலை போட ஆசை.
சென்னை போனா தன்னோட ஆசை நிறைவேறிடும்னு கிளம்புறான். சென்னை அவனோட ஆசை சென்னையில் ஒர்க் அவுட் ஆச்சா என்ற முடிவுவோடு தயாராகியுள்ள படம் ‘கடலை போட பொண்ணு வேணும்’.
’ரீங்காரம்’ என்ற படத்தை முடித்துவிட்டு இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் சிவகார்த்திக்.
இவர் சமுத்திரகனி, சிஜே.பாஸ்கர், சுரேஷ், மூர்த்தி ஆகிய இயக்குனர்களிடம் பணிபுரிந்தவராம்.
ரீங்காரம் படத்தை தயாரித்த ஆர்ஜி மீடியா- ராபின்சன் இப்படத்தையும் தயாரித்திருக்கிறார்.
ஆதித்யா டிவி தொகுப்பாளர் அஸார் ஹீரோவாக நடிக்க மனீஷா ஹீரோயினாக நடிக்கிறார்.
இவர்களுடன் படவா கோபி, லொள்ளுசபா சுவாமிநாதன், லொள்ளுசபா மனோகர், ஃபைட்டர் தினா ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவை இஎன்ஜே ஹரீஷ் கவனிக்க, இசையமைக்கிறார் சுதர்சன்.
இதனையடுத்து பலசாலி என்ற படத்தை இயக்க ஆரம்பித்து விட்டார் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.