டான்ஸர் சாண்டியை ‘பலசாலி’யாக மாற்றிய சிவகார்த்திக்

டான்ஸர் சாண்டியை ‘பலசாலி’யாக மாற்றிய சிவகார்த்திக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sandi manasaவைஷாலி பிக்சர்ஸ் வெங்கட் தயாரிப்பில் சாண்டி-மானசா ஜோடியாக நடித்துள்ள படம் “பலசாலி”

”ரீங்காரம்” மற்றும் ”கடலை போட பொண்ணு வேணும்” ஆகிய இரண்டு படங்களை இயக்கிய சிவகார்த்திக் இப்படத்தையும் இயக்கியுள்ளார். முந்தைய இரண்டு படங்களும் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன.

பலமே இல்லாத ஒரு ஆள் எப்படி தன்னை விட பலசாலிகளை தனது புத்திசாலித்தனத்தால் வீழ்த்துகிறான் என்பதை வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவையோடு சொல்லும் கதைதான் இந்த ”பலசாலி”.

”சூது கவ்வும்” பாணியிலான ”பிளாக் ஹியூமர்” படமாக இப்படம் உருவாகி இருக்கிறதாம்.

இப்படத்தின் நாயகனுக்காக இயக்குனர் ஆறு மாதங்கள் தேடி அலைந்திருக்கிறார். கடைசியாக இந்த டான்ஸர் சாண்டியை தேர்ந்தெடுத்தாராம்.

இவருக்கு ஜோடியாக சண்டிக்குதிரை படத்தில் கதாநாயகியாக நடித்த மானஸா நடிக்கிறார்.

இவர்களுடன் ஆனந்த ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க, சாம்ஸ்,லொள்ளுசபா சுவாமிநாதன், மனோபாலா, லொள்ளுசபா மனோகர், தினா, நிரோஷா, ஆதித்யா டிவி லோகேஷ், நிஷாந்த் ஆகியோர் இந்த பலசாலிக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு இஎன் ஜே ஹரீஷ். ”பர்மா” படத்திற்கு இசையமைத்த சுதர்சன் இசை. படத்தொகுப்பு வில்சி.

வைஷாலி பிக்சர்ஸ் சார்பாக கோவையைச் சேர்ந்த வெங்கட் தயாரிக்கிறார்.

 

சிவகார்த்திகேயன் செம ஹேப்பி; ‘ரெமோ’ பார்த்த ரஜினி என்ன சொன்னார்?

சிவகார்த்திகேயன் செம ஹேப்பி; ‘ரெமோ’ பார்த்த ரஜினி என்ன சொன்னார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth sivakarthikeyanகுழந்தைகள் மற்றும் தாய்மார்களை வெகுவாக கவர்ந்துள்ளது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரெமோ படம்.

இப்படத்திற்கு சிம்பு உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்தும் படத்தை பார்த்துவிட்டு தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா மற்றும் சிவகார்த்திகேயன் அழைத்து பாராட்டியுள்ளார்.

தற்போது ரஜினி பாராட்டை சிவகார்த்திகேயன் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில்… “ஒரு சிறந்த நட்சத்திரம் பிறந்துள்ளது. வாழ்த்துக்கள் சிவகார்த்திகேயன்” என்று தலைவர் ரஜினி பாராட்டியதாக தெரிவித்துள்ளார்.

Sivakarthikeyan ‏@Siva_Kartikeyan

“A great star is born!Congratulations Sivakarthikeyan”-appreciation from Thalaivar @superstarrajini sir after watching #RemoHumbled&happy

அபிஷேக்-அரவிந்த்சாமி இல்லை; அஜித்தின் வில்லன் முடிவானது!

அபிஷேக்-அரவிந்த்சாமி இல்லை; அஜித்தின் வில்லன் முடிவானது!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith gun actionசிவா இயக்கும் தல 57 படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட பாதி வரை முடிந்துவிட்டது.

ஆனாலும் படத்தின் வில்லன் யார்? என்ற கேள்விக்கு பதில் கிடைக்காமல் ரசிகர்கள் தவித்து வந்தனர்.

இதனிடையில் அபிஷேக் பச்சனுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருதாக கூறப்பட்டது.

மேலும் அரவிந்த் சாமியுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்களாம்.

இந்நிலையில் விவேக் ஓபராய் வில்லனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

bollywood-actor-vivek-oberoi

 

ரஜினியின் ‘2.ஓ’ படத்திற்காக பறவையாக மாறிய ரியாஸ்கான்

ரஜினியின் ‘2.ஓ’ படத்திற்காக பறவையாக மாறிய ரியாஸ்கான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

animatronics birds in rajinis 2pointO movieஷங்கர் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் 2.ஓ படத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரூ. 350 கோடியில் இப்படத்தை தயாரித்து வருகிறது லைக்கா.

இப்படத்தின் சில காட்சிகளை பறவைகளை வைத்து அனிமேட்ரானிக்ஸ் முறையில் படமாக்கி வருகிறார் ஷங்கர்.

ஹாலிவுட் நிறுவனமான ‘Legacy Effects’ என்ற நிறுவனம் இந்த பணிகளை செய்து வருகிறது.

சில மாதங்களுக்கு முன் வெளியான ஒரு புகைப்படத்தில் அக்‌ஷய்குமாரின் முகம் கூட ஒரு பறவையைப் போல் இருந்தது.

தற்போது, ரியாஸ்கானும் பறவை போல் மாறி ரஜினியுடன் சண்டையிட்டு வருகிறாராம்.

இப்படத்திற்காக காகங்களின் குரல்களை பதிவு செய்வது கஷ்டமாக இருக்கிறது என ரசூல் பூக்குட்டி தெரிவித்திருந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

மேலும், திருக்கழுக்குன்றத்திலும் அரிதான பறவைகளை வைத்து சில காட்சிகளை படமாக்கியிருக்கிறார் ஷங்கர்.

நவம்பர் 20ஆம் தேதி ‘2.0’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மும்பையில் வெளியிட திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘தெறி’ போல் அட்லியின் ‘விஜய்-61’ படத்திலும் ரெண்டு ஜோடி

‘தெறி’ போல் அட்லியின் ‘விஜய்-61’ படத்திலும் ரெண்டு ஜோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay atleeராஜா ராணி மற்றும் தெறி ஆகிய இரண்டு படங்களை மட்டுமே இயக்கியுள்ளார் அட்லி.

இந்த இரண்டு படங்களிலும் தலா இரண்டு ஹீரோயின்கள் இருந்தனர்.

ராஜா ராணியில் நயன்தாரா மற்றும் நஸ்ரியா நடிக்க, தெறியில் சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்திருந்தனர்.

இந்நிலையில் விஜய்யின் 61வது படத்தையும் அட்லிதான் இயக்கவிருக்கிறார்.

தற்போது இப்படத்திலும் ரெண்டு ஹீரோயின்கள் இடம் பெறவுள்ளதாக தெரிகிறது.

விஜய்யுடன் நயன்தாரா மற்றும் காஜல் அகர்வால் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

அஜித்தின் ‘தல-57’ படத்திற்கு இதான் டைட்டிலா?

அஜித்தின் ‘தல-57’ படத்திற்கு இதான் டைட்டிலா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajithவீரம், வேதாளம் படங்களை தொடர்ந்து, சிவா இயக்கத்தில் தற்போது 3வது முறையாக நடித்து வருகிறார் அஜித்.

இவர்களது முந்தைய படங்களின் தலைப்பு படத்தின் சூட்டிங் முடிவடையும் நிலையில் வெளியிடப்பட்டது.

எனவே தற்போது உருவாகி படத்திற்கும் இதே நிலைதான் நீடித்து வருகிறது.

அனிருத் இசையமைக்க, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்திற்கு வெற்றி விநாயகம் என தலைப்பிடப்பட உள்ளதாக செய்திகள் உலா வருகின்றன.

இப்படத்தை அடுத்த வருடம் 2017 மே மோதம் வெளியாகவுள்ளது.

More Articles
Follows